Sunday, June 24, 2012

கிராமத்து மனசு.... 1

 
கோழி கூவும் நேரத்தில் எங்கள் ஊரில் தேநீர் கடைகள் எல்லாம் ஒவ்வொன்றாக உயிர்த்தெழும்.. காலை எழுந்த உடன் தேநீர் கடையில் இருந்து பாடும் முருகனின் பக்தி பாடலும் அங்கு தேநீர் போடும் டீக்கடைக்காரரும் அவர் பாடும் பாடலும் இன்றும் நினைவிருக்கிறது அவர் அதிகாலையில் தேநீர் போடும் லாவகமும் அவரின் கைப்பக்குவத்தில் தேநீர் குடிக்க சுத்தது வட்டாரத்தில் உள்ளவர்கள் எல்லாம் அவர் கடையில் கூடியிருப்பர். 
 
காலையில் கறந்த பசும்பாலை கடைக்கு கொண்டு வந்து கொடுத்துவிட்டு காத்திருந்து தேநீர் அருந்திவிட்டு மொத்த கூட்டமும் 6 மணிக்கு வரும் செய்தித்தாளை எதிர்நோக்கி காத்திருக்கும். உள்ளுர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரை அதற்கு முன் படித்த செய்திகள் என வகைவகையான செய்திகளை அள்ளலாம் அந்த தேநீர்கடையில்.
 
சுடுதண்ணீர், டீத்தூள், பால், சர்க்கரை இவை நான்கையும் கலந்தால் அது நேநீர் ஆனால் இதன் சுவை இடத்திற்கு இடம் ஊருக்கு ஊர் ஏன் நபருக்கு நபர் என ஒவ்வொரு இடத்திலும் ஒரு சுவை.  
 
நான் விரும்பி அருந்து கடைக்காரர் காலையில் எழுந்து குளித்து தான் கடை திறப்பார் நெற்றி முழுவதும் விபூதியும், கடையில் டேப்ரெக்கார்டரில் டி.எம்.எஸ்சின் கனீர் குரலும் என மனதுக்கு நிறைவாக இருக்கும் அவர் கடைக்கு செல்வது.

தேநீர் சாப்பிடுகிறாயா என்றெல்லாம் அந்த அதிகாலை நேரத்தில் கேக்கமாட்டார் ஆளைப்பார்த்ததும் டம்ளரை எடுத்து வைத்து அவர் சர்க்கரை அதிகம் சேர்த்துக்கொள்வாரா குறைவாக சேர்த்துக்கொள்வரா என அவரே தீர்மானித்து சர்க்கரையும், பாலும் சேர்க்கும் அந்த இணைப்பை இப்பொழுது பார்த்தாலும் நின்று ரசிக்கத்தோணும். டம்ளரிர் தேநீரை ஊற்றிவிட்டு அதற்கு மேல் ஆளுக்கு ஏற்றபடி டிக்காசன் கலந்து எடுத்துக் கொடுப்பார். காலை நேரத்தில் தண்ணீர் அதிகம் கலக்காத பாலும், டிக்காசனும் கலந்த அந்த தேநீர் இன்று வரை எங்கும் குடித்ததில்லை...
 
அங்கு தேநீர் அருந்தும் போது ஏனோ மனதிற்குள் ஏற்படும் புத்துணர்ச்சி இன்றும் காண்கிறேன். இப்போது ஊருக்கு சென்றாலும் 5 மணிக்கே எழுந்து அந்த குரலைக்கேட்டு தேநீர் சாப்பிடுவதை இன்றும் விரும்புகிறேன்..
 
கிராமத்து மக்களின் அதிகாலை சொர்க்கமே தேநீர் விடுதிகள் தான். அதற்கு அப்புறம் தான் களை எடுப்பவர்களும் நாத்து நடுபவர்களும், தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுபவர்களும் ஒவ்வொருவராக தங்கள் அணியுடன் கலைந்து செல்வர் அன்றைய பொழப்புக்கு..
 

அடுத்து நான் இன்று வரை வியந்த தேநீர் கடை என்றால் அம்மாபேட்டை முருகன் தியேட்டர் கேண்டீன் டீ தான் இது தம் டீ என்று தான் சொல்வார்கள்.. தேநீரில் ஏலக்காய், இஞ்சி போன்றவைகளை சேர்த்து தம் டீயாக போட்டு கேனீல் வைத்து ஒவ்வொன்றாக பிடித்துக் கொடுப்பார்கள் இதன் சுவை இன்று வரை எங்கும் குடித்ததில்லை சரியான அளவில் சர்க்கரை இஞ்சி அனைத்து சேர்த்த அற்புதமான தேநீர் எப்போது இங்கு படம் பார்க்க சென்றாலும் குறைந்த பட்சம் 5 தேநீராவது குடிப்பது என் வழக்கம் அந்த அளவிற்கு என்னை சுண்டி இழுத்தது இந்த தேநீர்.

அடுத்ததாக அந்தியூரில் சந்தைப்பேட்டைக்கு எதிராக இரண்டு தேநீர் கடைகள் உண்டு காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை இங்கு எப்போது தேநீர் குடித்தாலும் அதே சுவையில் இருக்கும். இரண்டு கடைகளிலும் வெவ்வேறு சுவையில் இருக்கும் ஆனால் குடிக்க குடிக்க குடித்துக்கொண்டே இருக்கத் தோணும். காலை வீட்டிலே தேநீர் அருந்தினாலும் எதாவது ஒரு கடையில் தேநீர் அருந்துவது வழக்கம். இங்கு சாப்பிடும் தேநீரும் சுவை மிகுந்ததாக இருக்கும்.

கிராம புறத்தில் தேநீர் சாப்பிடும் போது நிச்சயம் ரவுண்டு பன்னு அல்லது வருக்கி சாப்பிடுவது வழக்கம் காலை 6 மணிக்கே தேநீருடன் இரண்டு வருக்கி சாப்பிடும் போது காலை உணவு உண்டது போல் இருக்கும் தேநீர் வாங்கி அதில் இந்த வருக்கியை முக்கி ஊறவைத்து சாப்பிடுவது ஒரு வகையான சுவை. அந்த கால கட்டத்தில் இது மிக பிடித்திருந்தது ஆனால் இன்று அவ்வாறு சாப்பிட நேரம் குறைவு. இப்போது வருக்கிகளை அதிகம் கடையில் பார்ப்பது மிக கடினமாகிவிட்டது.
எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் நிச்சயம் தேநீர் அருந்தாமல் இருக்கமாட்டேன். தேநீர் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சுவை இருக்கும் அதற்கு காரணம் அந்த ஊர் தண்ணீர் மற்றும் தேநீர் போட்டுத்தருபவர்களின் கைப்பக்குவம் தான் இதற்க காரணம். தேநீர் அருந்துவது ஒரு சிலர் உடல் நலத்துக்கு கேடு என்பர் ஒரு சிலர் உடலுக்கு மிக நல்லது என்பர். எது எப்படி இருந்தாலும் காலையில் சூடான அரை டம்ளர் தேநீர் சாப்பிட்டுவிட்டு செய்தித்தாள் படிப்பது அன்று தினத்துக்கும் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியாக இருக்கும் என்றால் அது மிகையாகது...

தேநீர் நிறைய பேருக்கு மிகவும் பிடித்த ஒன்று அது போலத்தான் நாம் ரசிக்கும் தேநீர் கடைகளும் அந்த நிகழ்வுகளும் மறக்கா ஒன்று... இதே போல் என் மனதில் உள்ள மறக்க முடியா நிகழ்வு, மனிதர்களை அவ்வப்போது கிராமத்து மனசு என்ற பெயரில் இனி அடிக்கடி சந்திக்கலாம் நினைவுகளோடு...

படங்கள் உதவி: கூகுள்...

14 comments:

  1. //இதே போல் என் மனதில் உள்ள மறக்க முடியா நிகழ்வு, மனிதர்களை அவ்வப்போது கிராமத்து மனசு என்ற பெயரில் இனி அடிக்கடி சந்திக்கலாம் நினைவுகளோடு...//

    தொடங்குங்கள், நாங்கள் தொடர்கிறோம்...

    ReplyDelete
  2. கலக்குங்கள் சங்கவி

    ReplyDelete
  3. //கிராம புறத்தில் தேநீர் சாப்பிடும் போது நிச்சயம் ரவுண்டு பன்னு அல்லது வருக்கி சாப்பிடுவது வழக்கம் //

    வடைய மறந்துட்டீங்க..

    ReplyDelete
  4. இன்னைக்கு டீ கடைல டீ, காபி குடிக்கிறது ஏதோ கவுரவக் குறைச்சல்னு நெனைக்கிறாங்க.. அதுக்கு தான் cofee barக்கு போறாங்க.. அதுல கூட ஸ்டைல் போல.

    ReplyDelete
  5. இப்பவும் ஊருக்கு செல்லும் போது வழியில் ஏதாவது கிராமத்துக் கடையில்தான் டீ குடிப்போம் . நகரத்தில் அதிக விலை போட்டு வாங்கி குடிக்கும் டீ அதனருகில் நிற்க முடியாது. அந்த வாசனை தனி. இங்கு நகரத்தில் பயன்படுத்தும் பால் பாக்கெட் பால் என்பதாலோ?

    ReplyDelete
  6. அட... மலரும் நினைவுகள்

    தொடரவும் தொடர்கிறேன்

    ReplyDelete
  7. நாங்களும் தேனீர் கடை வைத்திருந்தோம் .. நீங்கள் சொன்னது உண்மைதான் . அதிகாலை எண்கள் தேனீர் குடிக்க வாடிக்கையாகவே பலர் வருவார்கள் . தீபாவளி , பொங்கல் என்றாலும் அவர்களுக்கு தேனீர் வேண்டும்

    ReplyDelete
  8. கிராமத்து மனசு ரொம்ப நல்லாயிருக்கு... தொடருங்கள்...

    ReplyDelete
  9. கிராமத்து மனசு ரொம்ப நல்லாயிருக்கு... தொடருங்கள்...

    ReplyDelete
  10. மீண்டும் கிராமத்தில் வாழ்ந்த உணர்வு..

    ReplyDelete
  11. மனசு இப்ப டீ கடைய தேடுது சங்கவி.

    ReplyDelete
  12. எந்த விஷயத்தையும் சொல்லும் முறையில் சொன்னால் ருசியாகத் தான் இருக்கும்.
    தேநீர்க்கடை பதிவு சுவையாக இருந்தது.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. இனிப்பான பதிவு .

    ReplyDelete