கோவை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட நண்பர்கள் அவரிகளின் சுயஅறிமுகம் செய்த போது அவர்களைப்பற்றிய எனது தொகுப்புக்கள் இந்த தொகுப்புற்கு மிக உதவியர் கவிதாயினி சரளா.
தீயா வேலை செய்கிறார்கள்
The Kid with Pike ப்ரஞ்ச் படம்
கோவி அவர்கள் ( முரன்சுவை ) கவிதைகளின் தேவைகளைகளை பற்றி அருமையாக
விளக்கினார் மேலும் வலை ஆரமிக்கும் முன் பின் நிகழ்வுகளை வரிசகரமாக
அடுக்கியது கேட்கவே சுவாரசியமாக இருந்தது .
அடுத்ததாக ஐயா கந்தசாமி அவர்கள் பேசுகையில் நம்
நோக்கம் குறிக்கோள் இவைகளை பதிவுகள் மூலமாக உலகறிய செய்ய வேண்டும் என்று
வலியுறுத்தினார்.
சபாபதி வெற்றிக்கு அருகில் மூலிகைகளை படம் எடுத்து அதன் இயற்பெயர் அறிவியல் பெயர் அதன் பயன் என கலக்கல் பதிகளை தன் வலையில் நிரப்பியிருக்கிறார் .
யோகநாதன்
.பேருந்து நடந்துனராக இருந்துகொண்டு மனித சமூகத்திற்கு இவர் ஆற்றும்
பணி அளவிட முடியாதது .....மரங்களை காக்க இவர் மேற்கொள்ளும் போராட்டங்களும்
அரசை எதிர்த்து அரசு ஊழியனான அவர் செய்யும் செயல்கள் பாராட்ட வைக்கின்றது மனிதனாய் பிறந்தால் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற இவரின்
லட்சிய பயணம் கண்டு வியந்தோம் .
வின்சென்ட் இயற்க்கை மற்றும் சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு
செய்திகளை ஆதாரபூர்வமாக தன்னயுடைய தளத்தில் வெளியிடுகிறார். பல மர வகைகளை எப்போது கேட்டாலும் அதன்
நன்மைகள் தீமைகள் என்று அனைத்தையும் சொல்லக்கூடியவர். மூலிகை பண்ணை வைத்து
நடத்தி வருகிறார்.
நறுமுகை
தேவி முகநூலில் இவருக்கு என்று தனி இடம் பிடித்திருக்கிறார் இலக்கியம்
பல்சுவை கட்டுரைகள், கவிதைகள் என தனி முத்திரை பதிக்கிறார். . ஆண் பெண்ணின் ஆரோக்கியமான உறவையும்
முகநூளில் காணப்படும் நட்பின் பயம் பற்றியும் வெளிப்படையாக விவரித்தார்.
பெருமாள் சக்தி (தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் சங்க கோவை மாவட்ட தலைவர் ) இவரின் கார்கில் பற்றிய இரண்டாயிரம் மீட்டர்
கடிதம் ஒன்றை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார் மேலும் பல நுண் இலக்கியங்களை
வெளியிட்டு இருக்கிறார் இவரின் சாதனை போற்றுதற்குரியது .
விஜி
ராம் இவர் நேசம் என்ற புற்றுநோய் விழிப்புணர்வு மையம் ஒன்றை
நடத்துகிறார் அதை பற்றிய செய்திகளையும் மரகன்றுகளை கொடுத்து அனைவரும் ஆச்சர்யப்படுத்தினார்.
எழில்
.இவர் நிகழ்காலம் என்னும் பெயரில் பல்சுவை நிகழ்வுகளை
பதிவு செய்கிறார். பெரியார் பற்றிய சிந்தனைகளை அதிகம் பகிர்ந்தார்.
சங்கவி இவர் கிராமத்து விருந்து என்ற நோக்கில் அழித்து வரும்
பாரம்பரியங்களை பற்றியும் பல நிகழ்வுகளை பளிச்சிடும் வகையில் பதிவு
செய்கிறார். மற்றும் அரசியல் பதிவுகள் எழுதி வருகிறார்.
கோவை
மு சரளா இவர் பெண் என்னும் புதுமை என்ற தளத்தில் பெண்ணின்
மெல்லிய உணர்வுகளை தனது கவிதைகளின் தொகுத்துள்ளார் .சமூகம் சார்ந்த
பணிகளில் அக்கறை மிக்கவர். இவரின் முள்ளிவாய்க்கால் கவிதைகள் பிரபலம்.
கோவை
நேரம் ஜீவா கோவையின் புகழ் பரப்பும் மனிதர். கோவையை சுற்றியும்
அதன் கோவைக்குள்ளும் அறிய கிடைக்காத பல விசயங்களை நம்மோடு பகிருகிறார். (
பாண்டியன் ஊறுகாய் என்பதை பற்றி ருசிகரமான ஒரு பதிவை வெளியிட்ட
பெருமைக்குரியவர்).
யோகமணி
ராமராஜ் குழந்தைகளின் மேல் அதிக அன்பும் பாசமும் மிக்கவர்.. இவருக்கு மிகவும் பிடித்தமானது ஜோக்ஸ்... ரொம்ப ரொம்ப ரசித்து சொல்கிறார் நினைவுகளை...
வீடு சுரேஷ் கோவை பதிவர் குழும பேனர்
டிசைன் இவரால உருவாக்கப்பட்டது நல்ல திறமைமிக்க தன்னடக்கம் மிகுந்தவர்
அவரின் கிராம சூழல் பற்றி கவிதைகள் பதிவுகள் வெளியிடுகிறார். முக்கியமாக அஞ்சலியின் ரசிகர்...
உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் நல்லது எங்கிருந்தாலும் அதை தேடி
பிடித்து மற்றவருடன் பகிர்வதில் பெரும் ஆனந்தம் கொள்ளும் அற்புத மனிதர்
இவர் வெளியிட்ட ரஷ்ய சினிமா இன்றைக்கு நாம் எல்லோரும் பார்க்க வேண்டிய
பொறுப்பான படம் .....
முழுமையாக பார்க்க முடியாத வருத்தம் இருந்தது ...
முழுமையாக பார்க்க முடியாத வருத்தம் இருந்தது ...
சம்பத்குமார் தமிழ் பேரன்ட்ஸ் என்னும் தளத்தில் குழந்தை வளர்ப்பு பற்றி தமிழ் ஆங்கிலம் இரண்டு
மொழிகளிலும் அருமையான பதிவுகளை வெளியிடுகிறார் தானே முன் வந்து மற்றவருக்கு
உதவும் மனிதர் தொழில் நுட்ப சந்தேகங்களை தீர்க்க முனைந்து வந்து
உதவினார் .
சிவசங்கரன் பொள்ளாச்சிய சேர்ந்த
இவர் காதல் தோல்வியால் பதிவு எழுதுவதை நிறுத்தியிருக்கிறார்
.......மீண்டும் ஒரு காதல் கைகூடினால் பதிவு எழுதுவதாக உறுதி அழித்து
சென்றார் ஆகவே அவரின் காதல் கை கூட வாழ்த்துக்கள். இவரின் பொழுது போக்கு மாடு மேய்ப்பது..
கோவை சக்தி மரம் வெட்டுதல் தடுக்கும் பல
பதிவுகளையும் ,பங்கு சந்தை நிகழ்வுகளையும் பளிச்சென்று தெரியும் வகையில்
பதிவு செய்கிறார் மிகவும் அடக்கமான மனிதர்.
ஸ்ரீதர் இவர் ரியல் எஸ்டேட் பற்றிய தகவல்களையும் அதனால்
பாதிக்கப்படும் இயற்கை வளங்களை பற்றியும் சமூக நோக்கில் பேசினார்.
கலாகுமரன் இனியவை கூறல் என்ற
தளத்தில் அறிவியல், இயற்கை மற்றும் பல்சுவை பதிவுகளை வெளிடுகிறார்
......சுற்றுசூழல் ஆர்வலர் .....
பாபுராஜ் நகை தொழில் செய்யும் இவர் பங்கு சந்தை பற்றிய பல செய்திகளை பதிவிட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். கல்வி இவருக்கு ஒரு தடையில்லை என்பது ஆச்சர்யமான விஷயம்.
என் கணேசன் வங்கி ஒன்றில் ஊழியராக
பணியாற்றும் இவர் பல பயனுள்ள பதிவுகளை கொடுத்து எல்லோரையும் அசத்துகிறார்
.தன்னம்பிக்கை பற்றியும் ஆன்மிகம் பற்றியம் ஆனந்த விகடனில் இவரின்
கட்டுரைகள் வெளி வந்திருகின்றன .
ஆனந்தன் பத்திரிக்கை நிருபர் அமையான
கடலில் புறப்படும் அதிவேக அலைபோல அவரிடம் இருந்து புறப்பட்ட வார்த்தைகள்
சமூகத்தின் மீது கொண்ட கோபம் இவை எல்லாம் அவரை ஆச்சர்யம் கொள்ள செய்கிறது.
வினோத் இளைய தலைமுறையின் சக்தியாக இவரை
பார்க்க முடிகிறது வார்த்தைகளில் புது வேகம் இயற்கையை பாதுகாக்க இவர்
மேற்கொள்ளும் பணி சிறப்புக்குரியது வனத்துறை உதவியுடன் நல்ல மரகன்றுகளை
தரிசு நிலங்களில் வளர்க்க உதவுகிறார் .......நீரின் உபயோகம் பற்றி கேள்வி
கேட்டு எல்லோரையும் மௌனமாக்கினார்.
ஈரம் மகி மகேந்திரன் உண்மையில்
நெஞ்சில் ஈரம் இருக்கும் மனிதர்களில் இவரும் ஒருவர் ஆதவற்ற நிலையில்
சாலையோரம் இருக்கும் மனிதர்களை அவர்களின் உறவுகளோடு செய்தும் அவர்களுக்கு
மருத்துவ உதவி செய்தும் மனித குலத்திற்கு பெருமை சேர்க்கும் மகத்தான மனிதர்
இவருக்கு பெரிதும் உதவியது முகநூல் நண்பர்கள் என்று அழுத்தமாக அவர் கூறியது
மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.
ராஜா நடராஜன் இவரை போல தன்னடக்கத்துடன் ஒரு உரையை யாராலும் ஆற்ற முடியாது அத்தனை இரத்தின சுருக்கம் .
கோவை
சதீஸ் அகிம்சா சோசியல் சர்வீஸ் மூலம்
ஏழைகளுக்கு கண் சிகிச்சை முகாம் மற்றும் மரம் நடுதல் போன்ற பயனுள்ள
செயல்களை செய்யும் இளைனர் ......உதவும் மனப்பான்மை மிக்கவர் .
எஸ்.ஆர்.
சேகர் டாக்டர் பினாயில் நிறுவன உரிமையாளர். சந்தன சிதறல்
வலைதளத்தில் பல சுவைமிக்க கவிதை அரசியல் என பதித்துள்ளார் காட்சிக்கு எளியவர்
எதையும் ஆழ்ந்து பார்க்கும் கூர்மையான அறிவு மிக்கவர்.


பாலாஜி ............இணைய வடிவமைப்பாளர் ,பல இலவச கல்வி சேவைகளை செய்கிறார்.
அடுத்த பதிவில் நில சுவாரஸ்யமா படங்களுடன் நிறைவு பெறப்போகிறது கோவை பதிவர் சந்திப்பு...
நல்ல அறிமுகங்கள் சார்
ReplyDeleteதெரிந்து கொண்டேன் - பகிர்வுக்கு நன்றி தல
ReplyDelete// வீடு சுரேஷ் - நல்ல தன்னடக்கம் மிகுந்தவர் //
ReplyDeleteஅட கர்த்தரே..கர்த்தரே!! இதை நான் என்னன்னு சொல்லுவேன்.
உலக சினிமா ரசிகன் கடையில் 95% தள்ளுபடியில் தரமான டி.வி.டி.க்கள் அடுத்த மூன்று மாதத்திற்கு வழங்கப்படும். பதிவர்களுக்கான சிறப்பு சலுகை. முண்டியடித்து முந்துக!!
ReplyDeleteசங்கவி அ. தி.மு. க ஆதரவு அரசியல் பதிவு மட்டும் எழுதுவார் என சொல்லலையா?
ReplyDeleteஎன். கணேசன், மகேந்திரன் இருவரும் வி.ஐ.பி கள் சார் !
அனைவர் பற்றியும் எழுதியது அருமை
கோவை நேரம் எழுத்தை வைத்து வயதானவர் என நினைதேன். செமையா இருக்கார்
குழுமம் தொடர்ந்து நல்வழியில் இயங்க வாழ்த்துகள் பல!!
ReplyDeleteஎனது அறிமுகத்திற்கு மிக்க நன்றி சங்கவி :) எனது வலைப்பதிவின் பெயர் அன்பே சிவம் - பாலாவின் பக்கங்கள் அல்ல :) www.balavin.wordpress.com
அடுத்த சந்திப்பிற்கு ஆவலுடன்..
ReplyDeleteSangavi,
ReplyDeleteIt would be great if you can give the hyperlinks of their blogs to the respective names to know them in detail. I wish to know yoganathan's website pls.
ஓ இங்க தான் குழுமத்தின் மெயின் பதிவு ஓடுது போல.நல்லா புரபஷனல் அப்ரோச்.வாழ்த்துக்கள்!
ReplyDeleteபக்காவா கான்பெரன்ஸ் ஹால் எல்லாம் போட்டு இருக்கிங்க. ஆடியோ/வீடியோ சொதப்பிடுச்சு போல.
----
மோகன்,
//கோவை நேரம் எழுத்தை வைத்து வயதானவர் என நினைதேன். செமையா இருக்கார்//
என்னமோ செமைக்கட்டைனு சொல்லுறாப்போல சொல்லுறிங்க ;-))
(கோவை நேரம் தப்பா எடுத்துக்க மாட்டார்னு நினைக்கிறேன்)
// ! சிவகுமார் ! said...
ReplyDeleteஉலக சினிமா ரசிகன் கடையில் 95% தள்ளுபடியில் தரமான டி.வி.டி.க்கள் அடுத்த மூன்று மாதத்திற்கு வழங்கப்படும். பதிவர்களுக்கான சிறப்பு சலுகை. முண்டியடித்து முந்துக!!//
இந்த கொளுத்தி போடுறத விடுறதா இல்லையா சிவகுமார் சார்வாள்!
பாவம் அவர் வியாபாரத்தை ஊத்தி மூட வைக்க ஏற்பாடு செய்யுறிங்களே!
@சிவக்குமார்
ReplyDelete//உலக சினிமா ரசிகன் கடையில் 95% தள்ளுபடியில் தரமான டி.வி.டி.க்கள்
அடுத்த மூன்று மாதத்திற்கு வழங்கப்படும். பதிவர்களுக்கான சிறப்பு சலுகை. முண்டியடித்து முந்துக!!//
நாரதா...இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்யா?
புகைப்படங்களை போல மனதில் நிற்கும் பளிச் அறிமுகங்கள்...நினைவில் நிற்கும் நீங்கா நினைவுகள் தந்த...நண்பர் சங்கவிக்கு நன்றி
ReplyDeleteபடங்களும் அவகள் பற்றிய குறிப்பு
ReplyDeleteகளும் அருமை!
அடுத்தது காண ஆவல்!
புலவர் சா இராமாநுசம்
COngrats Sangavi for 600 + followers
ReplyDeleteமிக உபயோகமான அறிமுகங்கள். பதிவர்களை நன்றாக அடையாளம் காண உதவிற்று.
ReplyDeleteஒரு சில பதிவர்களை எனக்குத் தெரியாது. அவங்கவங்களோட தளங்களின் லிங்க் குடுத்திருந்தா பார்த்திருப்பேன்.
ReplyDelete//சங்கவி இவர் கிராமத்து விருந்து என்ற நோக்கில் அழித்து வரும் பாரம்பரியங்களை பற்றியும் பல நிகழ்வுகளை பளிச்சிடும் வகையில் பதிவு செய்கிறார். மற்றும் அரசியல் பதிவுகள் எழுதி வருகிறார்.
ReplyDelete//
ஓஓஓஓ அப்படியா??
நல்லதுங்க.
அருமையான அறிமுகம் .சங்கவி சார் .
ReplyDeleteஅனைவரைப் பற்றியும் மிகச் சுருக்கமாகவும்
ReplyDeleteஅருமையாகவும் அறிமுகம் செய்துள்ளதுசிறப்பாக உள்ளது
வழ்த்துக்கள்
வடகரை வேலன், செல்வேந்திரன், சுப்பையா வாத்தியார், குப்புசாமி, சக்தி செல்வி, தாரணி பிரியா, சஞ்சய் என இன்னும் பல பதிவர்கள் மிஸ்ஸிங்..
ReplyDeleteஒவ்வொருத்தர் பற்றிய அறிமுகத்துடன் புகைப்பட இணைப்புடன் பதிவு அருமை...
ReplyDeleteasdfgf
ReplyDeletePlease enable Comment Moderation Here.
ReplyDelete"மூபென்றுமுண்டோ" வாட் மீனிங்..?
ReplyDeleteVery good introduction about all.
ReplyDeleteOur next meeting can be at Jungle area. Anaikatti or Sholaiyur.
வாழ்த்துக்கள்...படங்களுடன் நல்ல அறிமுகங்களை அளித்ததுக்கு நன்றிகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் விழாவுக்கு வர இயலவில்லை. மிக்க நன்றி.
ReplyDeleteயோகமணி ராமராஜ் அவர்களுக்கு ஜோக்ஸ் ரொம்பப் பிடிக்கும் என்பதால்தான், அவரைப் பற்றிய குறிப்புக்கு அருகில் அவர் படத்தைப் போடாமல் வேறு ஒருவர் படம் உள்ளதோ???
ReplyDeleteஎன்னால் பங்கேற்க முடியாமல் போனது வருத்தம்தான்....பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான தொகுப்பு சங்கவி..
ReplyDeleteவாழ்த்துக்கள்..