Tuesday, June 12, 2012

கோவையில் உற்சாகமான உள்ளூர் பதிவர் சந்திப்பு.. 001



சிறுவயதில் இருந்து நமக்கு நிறைய நண்பர்கள் இருப்பர் அவர்களில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நண்பர்கள் அது போலத்தான் இணையத்தால் இணைந்த பல புதிய நட்புக்களின் இணைய சந்திப்பு கோவையில்...

நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது ஏன் கோவை பதிவர்கள் எல்லாம் சந்திக்க கூடாது என்று பேசும் போது கோவை பதிவர்கள் குழுமம் என்ற பெயரும் www.kovaibloggers.in என்ற தளத்தையும் முதலில் உருவாக்கி கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், மேட்டுப்பாளையம், உடுமலை போன்ற ஊர்களை உள்ளடக்கி நண்பர்களை சேர்க்க முற்பட்டபோது மிகுந்த வரவேற்பு இரண்டு நாட்களில் 25 பேர் குழுமத்தில் இணைந்தனர் நாட்கள் செல்லச்செல்ல 30, 35, 40, என்று கடைசியாக 52 பேர் குழுமத்தில் இணைந்து நண்பர்களாகினர்.

குழும நண்பர்களுக்கான முதல் சிறு சந்திப்பு 31.05.2012 அன்று நடைபெற்றது அப்போது 16 பேர் வந்திருந்து சிறப்பித்தனர். அடுத்தாக 52 பேரும் சந்திக்க வேண்டும் என்று 10.06.2012 ம்அன்று தேதி முடிவு செய்ததும் குழும உறுப்பினர்களை அனைவரையும் அழைத்தோம். 50 பேர் வருதாக உறுதி அளித்தனர் சந்தோசமாக இருந்தது அனைவரையும் விரைவில் சந்திப்போம் என்று..

சந்திப்பு நடக்கும் இடத்தை ஜீவா புக் செய்ய, சுரேஷ் லோகோ பேனர் டிசைன் செய்தார், நானும் சம்பத்தும் நண்பர்களை அழைக்கும் பொறுப்பையும், விஜி அவர்கள் மரக்கன்று வாங்குவதற்கும், சக்தி நண்பர்களிடம் தகவல் திரட்ட வேண்டும் என ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை எடுத்துக்கொண்டு செயல்பட்டோம்..

முதலில் நிகழ்ச்சி 3 மணிக்கு ஆரம்பித்து 6 மணிக்கு முடிக்க திட்டமிட்ட போது உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் அவர்கள் நான் ஒரு உலக சினிமா திரையிடுகிறேன் என்றார் அப்ப 2 மணி முதல் 3 மணி வரை போட்டுக்குங்க என்றதும் அவர் அந்த படத்தின் அற்புதமான கதைக்கருத்தை பதிவாக்கி எதிர்பார்ப்பை அதிகம் உண்டாக்கி இருந்தார்..

சந்திப்பு நடக்கும் என்று காலையில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது நிறைய புதிய நண்பர்களை சந்திக்க இருக்கிறோம் என்ற ஆவலுடன். நிகழ்ச்சி நடந்த லால்குடி ஹாலுக்கு முதலில் ஜீவாவும், சம்பத்தும் வந்தனர் பின் நானும், சுரேஷ், விளங்காதவன் ஆகியோர் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருக்கம் வேலைகளை முடித்து நண்பர்களை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தோம்...

நிகழ்ச்சியின் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க வருகிறேன் என்று உறுதி அளித்தவர்களில் நிறைய பேர் போன் செய்து இன்று என்னால் வர இயலவில்லை என்று போன் தான் அதிகம் இருந்தது. எதிர்பார்த்தது போல 35 நண்பர்கள் வந்து கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி இதில் பேஸ்புக் நண்பர்களும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி...

தமிழ்தாய் வாழ்த்தை கவிதாயினி சரளா பாடி தொடங்க விஜி அனைவரையும் வரவேற்று பேசினார் பின் இந்த நிகழ்ச்சி எவ்வாறு தொடங்கியது என் நான் பேசி நண்பர்களின் அறிமுக படலம் தொடங்கியது...

தமிழ்தாய் வாழ்த்து


நிகழ்ச்சி தொடக்க உரை


நண்பர்களின் அறிமுகத்திற்குப்பின் யோகநாதன் அவர்களுக்கு நேசம் சார்பாக விஜி அவர்கள் 150 மரக்கன்றுகளையும், மகி மகேந்திரன் அவர்களுக்கு கோவை பதிவர்கள் சார்பாக 50 மரக்கன்றுகளும் இலவசமாக கொடுக்கப்பட்டது.

சங்கவி,யோகநாதன், நேசம் விஜி, ஜீவா

மகிமகேந்திரன், சங்கவி,யோகநாதன், ஜீவா, சம்பத், கோவை சக்தி

வந்திருந்த நண்பர்களுக்கு ஸ்வீட், காரம், காபியும் இனிதே இவ்விழா நிறைவு பெற்றது.

வந்திருந்த அனைத்து நண்பர்களுக்கும், இந்நிகழ்ச்சிகளுக்காக தீயாக வேலை செய்த குழும நண்பர்களுக்கும், இச்சந்திப்பிற்காக தங்கள் பங்களிப்பை பகிர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி... நன்றி... நன்றி....


பதிவர்களின் அறிமுகம்
புகைப்படங்கள்
அடுத்த பவர்ஸ்டார் யார் என்று போட்டி போட்ட இரு பதிவர்கள்

என பல சுவாரஸ்யங்களோடு பதிவுகள் காத்திருக்கின்றன....

22 comments:

  1. கோவை வட்டார பதிவர்களால் நல்லதொரு துவக்கம்... வாழ்த்துக்கள்.

    தொடருங்கள் சங்கவி

    ReplyDelete
  2. படங்களுடன் அறிமுகப் பதிவு அருமை
    அடுத்த படத்தை ஆவலுடன்
    எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

    ReplyDelete
  3. வலை உறவுகளின் சந்திப்பு
    இனிதே அரங்கேறியதில் மகிழ்ச்சி

    மரக் கன்று நடல்
    உண்மையிலையே பாராட்டக்கூடிய விஷயம்
    நாளை நட்பின் நினைவுச் சின்னமும் கூட

    அன்பின்
    கோவை உறவுகளுக்கு என் பாராட்டுக்கள்

    புகைப்படத்தில்
    எல்லாரையும் காண முடியவில்லை என்றாலும்
    சில நண்பர்களை கண்டத்தில் மகிச்சி

    மனசாட்சி ( எஸ்கேப்பா ) காணவில்லை
    ஒ... அவர் விடுமுறை முடிந்து வந்துவிட்டார்களோ

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. //வந்திருந்த நண்பர்களுக்கு ஸ்வீட், காரம், காபி//

    ச்சே.. இப்டினா நானும் வந்திருப்பேனே..

    ReplyDelete
  6. பதிவர் சந்திப்பு பற்றி பதிவுகளில் இருக்கும் ஸ்வாரஸ்யமே தனிதான் சதிஷ். பெயர்கள் மட்டுமே தெரிந்த பதிவர்களின் முகங்களைப் பார்க்கும் அர்வமும் அதற்கு ஒரு காரணம். பகிர்ந்தமைக்கும் புகைப்படங்களுக்கும் நன்றிகள்.
    அடுத்து வரப்போகும் பதிவுகளுக்குக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  7. கோவை பதிவர் சந்திப்பு செய்திகள் கண்டு மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. தல, சந்திப்பு சிறப்பாக நடந்தது குறித்து தொலைபேசி வாயிலாக அறிந்தேன் - மனம் பூரித்தேன்.

    எதிர்பார்ப்பிலும் ஒரு சுகம் இருக்கும் போல - அடுத்தடுத்த பதிவுக்காக ஏக்கத்துடன் எதிர்பார்கிறேன்

    ReplyDelete
  9. Nice. All the best.

    Veshti... arasiyal???

    ReplyDelete
  10. வாழ்க வாழ்க வாழ்த்துகள்....

    ReplyDelete
  11. இணையத்தில் இருப்பவர்களை இதயங்களால் இணைக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்களை போல உள்ளவர்களின் முயற்சியை இணைய வாயிலாக பார்க்கும் போது நாம் இந்தியாவில் வசிக்காமல் போய்விட்டோமே என்ற வருத்தம் தோன்றுகிறது

    ReplyDelete
  12. கடின உழைப்பிற்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  13. நம் குழுமம் மென் மேலும் உயர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  14. நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  15. குழும நிர்வாகிகளைத் தேர்வு செய்து விட்டீர்களா? குழுமத்தின் நோக்கங்களை வரையறுத்து விட்டீர்களா?

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் சங்கவி.

    ReplyDelete
  18. அந்த பவர் ஸ்டார் யாருங்க...சீக்கிரம் சொல்லுங்க...தலை வெடிச்சுடும் போல இருக்கு..

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்..

    #ngoyaale, இதுல நான் எங்க இருந்து வந்தேன்?

    ReplyDelete
  20. ஏனுங்கோ! நம்ம தலிவர் "குறும்பு குப்புசாமி," சாரி மன்னினக்னும், குறும்பு கந்தசாமி படம் இல்லீன்களோ?

    அதான்கோ நம்ம டாக்டர் கந்தசாமி ஐயா முழு நீள கலர் படம் இருந்தா போடுங்கோ!

    ReplyDelete
  21. பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த
    அனைவருக்கும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete