Showing posts with label கோவை பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label கோவை பதிவர் சந்திப்பு. Show all posts

Tuesday, June 12, 2012

கோவையில் உற்சாகமான உள்ளுர் பதிவர் சந்திப்பு..002

கோவை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட நண்பர்கள் அவரிகளின் சுயஅறிமுகம் செய்த போது அவர்களைப்பற்றிய எனது தொகுப்புக்கள் இந்த தொகுப்புற்கு மிக உதவியர் கவிதாயினி சரளா.
 தீயா வேலை செய்கிறார்கள்
The Kid with Pike ப்ரஞ்ச் படம்

கோவி அவர்கள் ( முரன்சுவை ) கவிதைகளின் தேவைகளைகளை பற்றி அருமையாக விளக்கினார் மேலும் வலை ஆரமிக்கும் முன் பின் நிகழ்வுகளை வரிசகரமாக அடுக்கியது கேட்கவே சுவாரசியமாக இருந்தது .

அடுத்ததாக ஐயா கந்தசாமி அவர்கள் பேசுகையில் நம் நோக்கம் குறிக்கோள் இவைகளை பதிவுகள் மூலமாக உலகறிய செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சபாபதி வெற்றிக்கு அருகில் மூலிகைகளை படம் எடுத்து அதன் இயற்பெயர் அறிவியல் பெயர் அதன் பயன் என கலக்கல் பதிகளை தன் வலையில் நிரப்பியிருக்கிறார் .

 யோகநாதன் .பேருந்து நடந்துனராக இருந்துகொண்டு மனித சமூகத்திற்கு இவர் ஆற்றும் பணி அளவிட முடியாதது .....மரங்களை காக்க இவர் மேற்கொள்ளும் போராட்டங்களும் அரசை எதிர்த்து அரசு ஊழியனான அவர் செய்யும் செயல்கள் பாராட்ட வைக்கின்றது மனிதனாய் பிறந்தால் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற இவரின் லட்சிய பயணம் கண்டு வியந்தோம் .

வின்சென்ட் இயற்க்கை மற்றும் சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு செய்திகளை ஆதாரபூர்வமாக தன்னயுடைய தளத்தில் வெளியிடுகிறார். பல மர வகைகளை எப்போது கேட்டாலும் அதன் நன்மைகள் தீமைகள் என்று அனைத்தையும் சொல்லக்கூடியவர். மூலிகை பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.
நறுமுகை தேவி முகநூலில் இவருக்கு என்று தனி இடம் பிடித்திருக்கிறார் இலக்கியம் பல்சுவை கட்டுரைகள், கவிதைகள் என தனி முத்திரை பதிக்கிறார். . ஆண் பெண்ணின் ஆரோக்கியமான உறவையும் முகநூளில் காணப்படும் நட்பின் பயம் பற்றியும் வெளிப்படையாக விவரித்தார்.
பெருமாள் சக்தி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கோவை மாவட்ட தலைவர் ) இவரின் கார்கில்  பற்றிய இரண்டாயிரம் மீட்டர் கடிதம் ஒன்றை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார் மேலும் பல நுண் இலக்கியங்களை வெளியிட்டு இருக்கிறார் இவரின் சாதனை போற்றுதற்குரியது .

விஜி ராம் இவர் நேசம் என்ற புற்றுநோய் விழிப்புணர்வு மையம் ஒன்றை நடத்துகிறார் அதை பற்றிய செய்திகளையும் மரகன்றுகளை கொடுத்து அனைவரும் ஆச்சர்யப்படுத்தினார்.

எழில் .இவர் நிகழ்காலம் என்னும் பெயரில்   பல்சுவை நிகழ்வுகளை பதிவு செய்கிறார். பெரியார் பற்றிய சிந்தனைகளை அதிகம் பகிர்ந்தார்.


சங்கவி இவர் கிராமத்து விருந்து என்ற நோக்கில் அழித்து வரும் பாரம்பரியங்களை பற்றியும் பல நிகழ்வுகளை பளிச்சிடும் வகையில் பதிவு செய்கிறார். மற்றும் அரசியல் பதிவுகள் எழுதி வருகிறார்.

 கோவை மு சரளா இவர் பெண் என்னும் புதுமை என்ற தளத்தில் பெண்ணின் மெல்லிய உணர்வுகளை தனது கவிதைகளின் தொகுத்துள்ளார் .சமூகம் சார்ந்த பணிகளில் அக்கறை மிக்கவர். இவரின் முள்ளிவாய்க்கால் கவிதைகள் பிரபலம்.
கோவை நேரம் ஜீவா கோவையின் புகழ் பரப்பும்  மனிதர். கோவையை சுற்றியும் அதன் கோவைக்குள்ளும் அறிய கிடைக்காத பல விசயங்களை நம்மோடு பகிருகிறார். ( பாண்டியன் ஊறுகாய் என்பதை பற்றி ருசிகரமான ஒரு பதிவை வெளியிட்ட பெருமைக்குரியவர்). 

யோகமணி ராமராஜ் குழந்தைகளின் மேல் அதிக அன்பும் பாசமும் மிக்கவர்.. இவருக்கு மிகவும் பிடித்தமானது ஜோக்ஸ்... ரொம்ப ரொம்ப ரசித்து சொல்கிறார் நினைவுகளை...

 வீடு சுரேஷ் கோவை பதிவர் குழும பேனர் டிசைன் இவரால உருவாக்கப்பட்டது நல்ல திறமைமிக்க தன்னடக்கம் மிகுந்தவர் அவரின் கிராம சூழல் பற்றி கவிதைகள் பதிவுகள் வெளியிடுகிறார். முக்கியமாக அஞ்சலியின் ரசிகர்...

உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் நல்லது எங்கிருந்தாலும் அதை தேடி பிடித்து மற்றவருடன் பகிர்வதில் பெரும் ஆனந்தம் கொள்ளும் அற்புத மனிதர் இவர் வெளியிட்ட ரஷ்ய சினிமா இன்றைக்கு நாம் எல்லோரும் பார்க்க வேண்டிய பொறுப்பான படம் .....
 முழுமையாக பார்க்க முடியாத வருத்தம் இருந்தது ...

 சம்பத்குமார் தமிழ் பேரன்ட்ஸ் என்னும் தளத்தில் குழந்தை வளர்ப்பு பற்றி தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் அருமையான பதிவுகளை வெளியிடுகிறார் தானே முன் வந்து மற்றவருக்கு உதவும் மனிதர் தொழில் நுட்ப சந்தேகங்களை தீர்க்க முனைந்து வந்து உதவினார் .

 சிவசங்கரன் பொள்ளாச்சிய சேர்ந்த இவர் காதல் தோல்வியால் பதிவு எழுதுவதை நிறுத்தியிருக்கிறார் .......மீண்டும் ஒரு காதல் கைகூடினால் பதிவு எழுதுவதாக உறுதி அழித்து சென்றார் ஆகவே அவரின் காதல் கை கூட வாழ்த்துக்கள். இவரின் பொழுது போக்கு மாடு மேய்ப்பது..
கோவை சக்தி மரம் வெட்டுதல் தடுக்கும் பல பதிவுகளையும் ,பங்கு சந்தை நிகழ்வுகளையும் பளிச்சென்று தெரியும் வகையில் பதிவு செய்கிறார் மிகவும் அடக்கமான மனிதர்.

ஸ்ரீதர் இவர் ரியல் எஸ்டேட் பற்றிய தகவல்களையும் அதனால் பாதிக்கப்படும் இயற்கை வளங்களை பற்றியும் சமூக நோக்கில் பேசினார்.

கலாகுமரன் இனியவை கூறல் என்ற தளத்தில் அறிவியல், இயற்கை மற்றும் பல்சுவை பதிவுகளை வெளிடுகிறார் ......சுற்றுசூழல் ஆர்வலர் .....

பாபுராஜ் நகை தொழில் செய்யும் இவர் பங்கு சந்தை பற்றிய பல செய்திகளை பதிவிட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். கல்வி இவருக்கு ஒரு தடையில்லை என்பது ஆச்சர்யமான விஷயம்.

என் கணேசன் வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றும் இவர் பல பயனுள்ள பதிவுகளை கொடுத்து எல்லோரையும் அசத்துகிறார் .தன்னம்பிக்கை பற்றியும் ஆன்மிகம் பற்றியம் ஆனந்த விகடனில் இவரின் கட்டுரைகள் வெளி வந்திருகின்றன .

ஆனந்தன் பத்திரிக்கை நிருபர் அமையான கடலில் புறப்படும் அதிவேக அலைபோல அவரிடம் இருந்து புறப்பட்ட வார்த்தைகள் சமூகத்தின் மீது கொண்ட கோபம் இவை எல்லாம் அவரை ஆச்சர்யம் கொள்ள செய்கிறது.


வினோத் இளைய தலைமுறையின் சக்தியாக இவரை பார்க்க முடிகிறது வார்த்தைகளில் புது வேகம் இயற்கையை பாதுகாக்க இவர் மேற்கொள்ளும் பணி சிறப்புக்குரியது வனத்துறை உதவியுடன் நல்ல மரகன்றுகளை தரிசு நிலங்களில் வளர்க்க உதவுகிறார் .......நீரின் உபயோகம் பற்றி கேள்வி கேட்டு எல்லோரையும் மௌனமாக்கினார்.

ஈரம் மகி மகேந்திரன் உண்மையில் நெஞ்சில் ஈரம் இருக்கும் மனிதர்களில் இவரும் ஒருவர் ஆதவற்ற நிலையில் சாலையோரம் இருக்கும் மனிதர்களை அவர்களின் உறவுகளோடு செய்தும் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்தும் மனித குலத்திற்கு பெருமை சேர்க்கும் மகத்தான மனிதர் இவருக்கு பெரிதும் உதவியது முகநூல் நண்பர்கள் என்று அழுத்தமாக அவர் கூறியது மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.

ராஜா நடராஜன் இவரை போல தன்னடக்கத்துடன் ஒரு உரையை யாராலும் ஆற்ற முடியாது அத்தனை இரத்தின சுருக்கம் .
கோவை சதீஸ் அகிம்சா சோசியல் சர்வீஸ்  மூலம் ஏழைகளுக்கு கண் சிகிச்சை முகாம் மற்றும் மரம் நடுதல் போன்ற பயனுள்ள செயல்களை செய்யும் இளைனர் ......உதவும் மனப்பான்மை மிக்கவர் .
 எஸ்.ஆர். சேகர் டாக்டர் பினாயில் நிறுவன உரிமையாளர். சந்தன சிதறல் வலைதளத்தில் பல சுவைமிக்க கவிதை அரசியல் என பதித்துள்ளார் காட்சிக்கு எளியவர் எதையும் ஆழ்ந்து பார்க்கும் கூர்மையான அறிவு மிக்கவர்.


வா.மு.முரளி கோவையில் உள்ள பத்திரிக்கையில் துணை ஆசிரியராக பணியாற்றுகிறார். சமூக ஆர்வ மிக்கவர் இவரின் கவிதை வரிகளும் எழுத்துக்களும் நெஞ்சில் நிற்கும்.

பாலகணேஷ் கோவையில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரியிம் இவரின் பாலவின் பக்கங்கள் பிரபலம்.. டிவிட்டரில் தனது கருத்துக்களை அதைகம் சொல்பவர்.


பாலாஜி ............இணைய வடிவமைப்பாளர் ,பல இலவச கல்வி சேவைகளை செய்கிறார்.





அடுத்த பதிவில் நில சுவாரஸ்யமா படங்களுடன் நிறைவு பெறப்போகிறது கோவை பதிவர் சந்திப்பு...

கோவையில் உற்சாகமான உள்ளூர் பதிவர் சந்திப்பு.. 001



சிறுவயதில் இருந்து நமக்கு நிறைய நண்பர்கள் இருப்பர் அவர்களில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நண்பர்கள் அது போலத்தான் இணையத்தால் இணைந்த பல புதிய நட்புக்களின் இணைய சந்திப்பு கோவையில்...

நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது ஏன் கோவை பதிவர்கள் எல்லாம் சந்திக்க கூடாது என்று பேசும் போது கோவை பதிவர்கள் குழுமம் என்ற பெயரும் www.kovaibloggers.in என்ற தளத்தையும் முதலில் உருவாக்கி கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், மேட்டுப்பாளையம், உடுமலை போன்ற ஊர்களை உள்ளடக்கி நண்பர்களை சேர்க்க முற்பட்டபோது மிகுந்த வரவேற்பு இரண்டு நாட்களில் 25 பேர் குழுமத்தில் இணைந்தனர் நாட்கள் செல்லச்செல்ல 30, 35, 40, என்று கடைசியாக 52 பேர் குழுமத்தில் இணைந்து நண்பர்களாகினர்.

குழும நண்பர்களுக்கான முதல் சிறு சந்திப்பு 31.05.2012 அன்று நடைபெற்றது அப்போது 16 பேர் வந்திருந்து சிறப்பித்தனர். அடுத்தாக 52 பேரும் சந்திக்க வேண்டும் என்று 10.06.2012 ம்அன்று தேதி முடிவு செய்ததும் குழும உறுப்பினர்களை அனைவரையும் அழைத்தோம். 50 பேர் வருதாக உறுதி அளித்தனர் சந்தோசமாக இருந்தது அனைவரையும் விரைவில் சந்திப்போம் என்று..

சந்திப்பு நடக்கும் இடத்தை ஜீவா புக் செய்ய, சுரேஷ் லோகோ பேனர் டிசைன் செய்தார், நானும் சம்பத்தும் நண்பர்களை அழைக்கும் பொறுப்பையும், விஜி அவர்கள் மரக்கன்று வாங்குவதற்கும், சக்தி நண்பர்களிடம் தகவல் திரட்ட வேண்டும் என ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை எடுத்துக்கொண்டு செயல்பட்டோம்..

முதலில் நிகழ்ச்சி 3 மணிக்கு ஆரம்பித்து 6 மணிக்கு முடிக்க திட்டமிட்ட போது உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் அவர்கள் நான் ஒரு உலக சினிமா திரையிடுகிறேன் என்றார் அப்ப 2 மணி முதல் 3 மணி வரை போட்டுக்குங்க என்றதும் அவர் அந்த படத்தின் அற்புதமான கதைக்கருத்தை பதிவாக்கி எதிர்பார்ப்பை அதிகம் உண்டாக்கி இருந்தார்..

சந்திப்பு நடக்கும் என்று காலையில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது நிறைய புதிய நண்பர்களை சந்திக்க இருக்கிறோம் என்ற ஆவலுடன். நிகழ்ச்சி நடந்த லால்குடி ஹாலுக்கு முதலில் ஜீவாவும், சம்பத்தும் வந்தனர் பின் நானும், சுரேஷ், விளங்காதவன் ஆகியோர் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருக்கம் வேலைகளை முடித்து நண்பர்களை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தோம்...

நிகழ்ச்சியின் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க வருகிறேன் என்று உறுதி அளித்தவர்களில் நிறைய பேர் போன் செய்து இன்று என்னால் வர இயலவில்லை என்று போன் தான் அதிகம் இருந்தது. எதிர்பார்த்தது போல 35 நண்பர்கள் வந்து கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி இதில் பேஸ்புக் நண்பர்களும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி...

தமிழ்தாய் வாழ்த்தை கவிதாயினி சரளா பாடி தொடங்க விஜி அனைவரையும் வரவேற்று பேசினார் பின் இந்த நிகழ்ச்சி எவ்வாறு தொடங்கியது என் நான் பேசி நண்பர்களின் அறிமுக படலம் தொடங்கியது...

தமிழ்தாய் வாழ்த்து


நிகழ்ச்சி தொடக்க உரை


நண்பர்களின் அறிமுகத்திற்குப்பின் யோகநாதன் அவர்களுக்கு நேசம் சார்பாக விஜி அவர்கள் 150 மரக்கன்றுகளையும், மகி மகேந்திரன் அவர்களுக்கு கோவை பதிவர்கள் சார்பாக 50 மரக்கன்றுகளும் இலவசமாக கொடுக்கப்பட்டது.

சங்கவி,யோகநாதன், நேசம் விஜி, ஜீவா

மகிமகேந்திரன், சங்கவி,யோகநாதன், ஜீவா, சம்பத், கோவை சக்தி

வந்திருந்த நண்பர்களுக்கு ஸ்வீட், காரம், காபியும் இனிதே இவ்விழா நிறைவு பெற்றது.

வந்திருந்த அனைத்து நண்பர்களுக்கும், இந்நிகழ்ச்சிகளுக்காக தீயாக வேலை செய்த குழும நண்பர்களுக்கும், இச்சந்திப்பிற்காக தங்கள் பங்களிப்பை பகிர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி... நன்றி... நன்றி....


பதிவர்களின் அறிமுகம்
புகைப்படங்கள்
அடுத்த பவர்ஸ்டார் யார் என்று போட்டி போட்ட இரு பதிவர்கள்

என பல சுவாரஸ்யங்களோடு பதிவுகள் காத்திருக்கின்றன....

Thursday, June 7, 2012

கோவை பதிவர் சந்திப்பு

 
 
கோவை பதிவர்களின் முதல் சந்திப்பு வருகிற 10.06.2012 அன்று நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். அது சமயம் கோவையைச் சேர்ந்த பதிவர்கள், முகநூல் நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்..

கோவை பதிவர்கள் சந்திப்பு

நாள்   : 10.06.2012 ஞாயிறு
நேரம்: 2 மணி முதல் 6 மணி வரை
இடம் : ஹோட்டல் ஒரியன் A/c,
262 கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், கோவை.


நிகழ்ச்சி நிரல்

மதியம் 2 - 3 மணி வரை  - உலக சினிமா உலக சினிமா ரசிகன் பாஸ்கரன்

3 - 3.05 தமிழ்த்தாய் வாழ்த்து (கோவை.மு.சரளா)

3.10 வரவேற்புரை (விஜிராம்)

3.15 பதிவர் சந்திப்பு பற்றிய அறிமுக உரை (சங்கவி சதீஷ்)

3.30 பதிவர்கள் அறிமுகம்

4.00 சிறப்பு அழைப்பாளர்களுக்கு மரக்கன்று வழங்குதல் ( நேசம் சார்பாக விஜி, கோவை குழுமத்திற்காக ஜீவா, சக்தி)

4.30 பதிவு பற்றிய தொழில்நுட்பம் (வீடு சுரேஷ், சம்பத்)

5.30 கலந்துரையாடல்

5.59 நன்றியுரை (இரவு வானம் சுரேஷ்)



இதுவரை வருவதாக உறுதி அளித்த கோவை பதிவர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள்...


1. உலக சினிமா ரசிகன் பாஸ்கர்
2. பத்திரிக்கை ரகு
3. இளங்கோ
4. கோவிந்தராஸ் பிஎஸ்சி காலேஜ்
5. உடுமலை சதாசிவம்
6. தாரணி பிரியா
7. கோவை சரளா
8. தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்
9. விஜிராம்
10. கோவை சக்தி
11. கலாக்குமரன்
12. வின்சென்ட்
13. மூளிகை வளம் குப்புசாமி
14. எஸ்.ஆர் சேகர்
15. வீடு சுரேஷ்
16. பழனி.கந்தசாமி
17. இரவு வானம் சுரேஷ்
18. கோவை நேரம் ஜீவா
19. கோவை ராமநாதன்
20. மனசாட்சி
21. வாமு.முரளி
22. பத்திரிக்கை வேலுச்சாமி
23. பத்திரிக்கை நெல்லை பொடியன்
24. ஓட்டக்கூத்தன்
25. சாமக்கோடங்கி பிரகாஷ்
26. சக்திசெல்வி
27. ஈரம் மகி
28. ராஜ நடராஜன் நதிக்கரை
29. என் கணேசன்
30. மதுரை அழகு...
31. கோவைக்காற்று வெங்கடபதி
32. திருப்பூர் ராஜேஸ்
33. மகுடேஸ்வரன் திருப்பூர்
34. அவை நாயகன் ஓசை
35. சத்தியமூர்த்தி
36. எழில் அருள்
37 கௌதமன்
38. ராஜேஸ் சங்கர்
39. ஃபிர்தவ்ஸ்  ராஜகுமாரன்
40. சிவசங்கர்
41. கோவை தங்கவேல்
42. ஒட்டக்கூத்தன்
43. மயூரா ரத்தினசாமி
44. பாபுராஜ் பாபு
45. வெங்கடேச முரளி
46. சங்கவி
47. கோவை ஜீவா
48. பிரசாத்
49. நறுமுகை தேவி
50. முரளி




நிகழ்ச்சிக்கு வரும் நண்பர்கள் தொடர்புகொள்ள


சம்பத் 9965577404
ஜீவா 9894401474
சங்கவி சதீஸ் 9843060707
வீடு சுரேஷ் 9843941916

Thursday, May 31, 2012

கோவை மினி பதிவர் சந்திப்பு 31.05.2012

பதிவர் சந்திப்பு கோவையில் தான் முதன் முதலாக நடைபெற்றது என்று படித்துள்ளேன். கோவை பதிவுலக முன்னோடிகள்  பலர் தற்போது அதிகம் எழுதுவதில்லை புதிதாக எழுதும் நண்பர்கள் எல்லாம் ஒன்றினைவோம் என்று நான், கோவை நேரம் ஜீவா, தமிழ்பேரண்ட் சம்பத் ஆகியோர் பேசும் போது இந்த உரையாடலும் வந்தது. உடனே சம்பத் கோவை பதிவர்களுக்கு என் www.kovaibloggers.in என்ற வெப்சைட்டை உருவாக்கினார். மேலும் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் உடுமலை போன்ற பகுதியில் உள்ள நண்பர்கள் எல்லாம் ஒன்றினைந்து ஒரு பதிவர் குழுமம் ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்து ஆரம்பித்தோம். அதில் வெற்றியும் கண்டோம்.

இரண்டு நாட்களில் 40 நண்பர்கள் இணைந்தனர் இதில் பேஸ்புக் நண்பர்களையும் அழைத்தோம் ஆனால் அவர்கள் யாரும் இணையவில்லை. இன்றும் நிறைய பதிவர்கள் இணையாமல் உள்ளனர் அவர்களும் இணைவார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம். தற்போது கிட்டத்தட்ட 50 பதிவர்கள் நண்பர்களாக எங்கள் வட்டத்தில் இணைந்துள்ளனர் இது மகிழ்ச்சியான ஒன்று தான்...

குழும பதிவர்கள் எல்லாம் பரஸ்பர அறிமுகம் வேண்டும் என்பதற்காக சிறு பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்று கலந்து ஆலோசிக்கும் போது இரண்டு மூன்று தேதிகள் தள்ளிப்போய்கொண்டே இருந்தது ஆனால் சந்திதித்த பாடில்லை இதனால் முதலில் பல தேதிகள் அறிவித்து தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஒரு மினி பதிவர் சந்திப்பு வேண்டும் என்று வாரநாட்கள் அல்லாமல் இடைப்பட்ட நாளில் வைக்கலாம் என்று முடிவெடுத்து மே 31 அன்று வைக்கலாம் என்று வைத்தோம். இச்சந்திப்பில் நாங்கள் எதிர்பார்த்தது 10 பேர் தான் என்று நினைத்தோம் ஆனால் வந்தது இருந்தது 17 பேர் இது மிக்க மகிழ்ச்சியான ஒன்று. 

இந்நிகழ்ச்சிக்கு முடிந்தவர்கள் வரவும் வர இயலாதவர்கள் அடுத்த சந்திப்பில் நிச்சயம் சந்திக்கலாம் என்று அறிவித்திருந்தோம் அதே போல் அடுத்த கோவை குழும நண்பர்கள் சந்திப்பு விரைவில் நடக்க உள்ளது அதில் கலந்து கொள்ள கோவையைச் சேர்ந்த பதிவர்களை அன்புடன் வரவேற்கிறோம். இது வரை உறுப்பினர் ஆகாத நண்பர்கள் kovaibloggers@gmail என்னும் முகவரிக்கு மின் அஞ்சல் செய்யவும்...

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

சங்கவி சதீஸ் 9843060707
சம்பத் 9965577404
ஜீவா 9894401474

31.05.2012 அன்று மினி பதிவர் சந்திப்புக்கு வந்திருந்த பதிவர்கள்

1. பழனி.கந்தசாமி
2. வின்சென்ட்
3. மூளிகை வளம் குப்புசாமி
4. எஸ்ஆர் சேகர்
5. கோவை சக்தி
6. மனசாட்சி
7. தமிழ் பேரண்ட்ஸ் சம்பத்
8. வீடு சுரேஷ்
9. கலாக்குமரன் செந்தில்
10. உலக சினிமா ரசிகன் பாஸ்கரன்
11.விஜிராம்
12.அகிலா
13.கோவை. மு. சரளா
14.ராமநாதன்
15.கோவை நேரம் ஜீவா
16.சங்கவி
17.இரவு வானம் சுரேஷ்

அடுத்து வரும் சந்திப்பில் கோவையைச் சேர்ந்த 50 பதிவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்...

கோவை பதிவர் மினி சந்திப்பு புகைப்படங்கள்..

  எஸ்.ஆர் சேகர், வின்சென்ட் இவர்களுடன் சங்கவி சதீஸ்
கோவை சக்தி, எஸ்.ஆர் சேகர், கலாக்குமரன், பழனி.கந்தசாமி
கலாக்குமரன்


முகம் தெரியாதவர் நண்பர் மனசாட்சி.

கோவை நண்பர்களே மீண்டும் சந்திப்போம் விரைவில்... அடுத்து அனைத்து ஊர் நண்பர்களும் விரைவில் சந்திப்போம் மெகா பதிவர் சந்திப்பில்.....

Thursday, May 17, 2012

கோவை பதிவர்களே வாருங்கள் இணைவோம்....


அன்பிற்கினிய நண்பர்களுக்கு வணக்கம்,


கோவை மற்றும் கோவையைச்சுற்றி உள்ள இடங்களில் இருந்து வலைப்பதிவு, முகநூல் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களை தடம்பதித்து வரும் நண்பர்களை ஒன்று சேர்த்து கோவையில் ஓர் பதிவர் சந்திப்பு நடத்த ஏதுவாக முதலில் இங்குள்ள நண்பர்களை ஒன்று சேர்த்து ஒரு சந்திப்பு விரைவில் நடத்தாலாம்

ஆதலால் கோவையைச் சேர்ந்த நண்பர்கள் தங்களது பெயர் ,மொபைல் எண், வலைதள முகவரி, முகநூல் மற்றும் டிவிட்டர் ஐடிக்களை kovaibloggers@gmail.com என்ற முகவரிக்கு மறக்காமல் அனுப்பிவைக்கவும். தங்களுக்கு கோவைப்ளாக்கர்ஸ்  குழுமத்திலிருந்து வரும் அழைப்பிதழை ஏற்று குழுமத்தில் இணைந்து கொள்ளவும்.

இந்த குழு மென்மேலும் வளர தங்களது ஆலோசனைகள் தாராளமாக கூறவும். இதுவரை 25 நண்பர்களை சேர்த்திருக்கிறோம் அவர்களும் சிறு சந்திப்பிற்கு வருவதாக கூறிஉள்ளனர். 
விரைவில் கோவையில் ஓர் பிரமாண்ட பதிவர் குடும்ப சந்திப்பு நடக்க உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்..
கோவை மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த பதிவர்கள் விரைவில் குழுமத்தில் இணையும் படி அன்புடன் வேண்டுகிறோம்...

மேலதிக தகவல்கள் வேண்டுவோர்..

சங்கவி - 9843060707
 
சம்பத்குமார் - 9965577404

சுரேஷ் - 9843941916

ஜீவா - 9894401474