Sunday, January 5, 2014

இதற்கு பெயர் தான் விடாமுயற்சியா?


தினமும் பேரூரில் இருந்து வண்டியில் வரும் போது டிவிஎஸ் பெப்பில் அவளை சந்திப்பேன்  என் பின்னே அல்லது முன்னே செல்வாள் சில சமயங்களில் உப்பிலிபாளையம் சிக்னலில் அருகருகே நிற்கும் அதிஷ்டமும் கிடைக்கும். அருகே நிற்கும் போதெல்லாம் திரும்பி திரும்பி பார்ப்பேன். ஒரு முறையேனும் திரும்புவாளா என அவளை பார்க்கது போல் பார்த்து கொண்டே இருப்பேன் ஆனால் எப்போதும் அவள் தரிசனம் கிடைக்காமல் சிக்னல் போட்டதும் முதல் ஆளாக பறப்பது தான் என் தினசரி நடவடிக்கை.

அன்று எதேச்சையாக என் யமஹா மக்கர் செய்ய பின் வண்டியை வேகமெடுத்து அடுத்த சிக்னலில் இருவரும் பக்கத்தில் ஆனாலும் ஏனோ திரும்ப வில்லை திரும்பினாலும் இருவரும் ஹெல்மெட் அணிந்துருப்பதால் கண்கள் மட்டும் தான் பேச முடியும், அதற்கும் வாய்ப்பு இல்லை ஆனால் எனக்கு இது தினசரி பொழுதுபோக்காகிவிட்டது. அலுவலகம் செல்லும் போது கூலாக செல்ல வழிவகுக்கிறது இந்த பைக் சேசிங்.

கரைச்சார் கரைச்சா கல்லும் கரையும் என்பது போல அன்னிக்குத்தான் முதன் முதலாக திரும்பி பார்த்தாள் நான் பார்க்கும் போது எப்பவும் சரியாக விழாத சிக்னல் அன்று சரியாக விழுந்து விட்டது அன்றிலிருந்து தினமும் ஒரு நட்பான பார்வை ஓடிக்கொண்டு இருந்தது ஆனாலும் எந்த வித காத்திருப்பும் இன்றி. சனி ஞாயிறு விடுமுறை ஆதாலால் வெள்ளி வரை மட்டுமே எனது பார்வை படலம் தோன்றும்..

ஏதோ சாமி ஊர்வலம் என்று வண்டியை உக்கடம் வழியாக திருப்பிவிட்டனர் அந்த இடத்தில் வண்டிகள் ஊர்ந்து சென்றது மெதுவாக சென்ற அவளது வண்டி கூட்டத்தில் என் வண்டி மேல் இடிக்க இரண்டு முறை பார்க்கதவன் போல் 3 வது முறை வேகமாக திரும்பினேன் சாரி, சாரி என்று என்னை வாய் திறக்க முடியாமல் செய்தது அவள் குரல். எல்லோரும் போல பரவாயில்லை என்றேன் ( இன்னம் 2 இடி வேனா இடிச்சுக்குங்க என்றது மனது) உக்கடம் வந்ததும் அங்கும் சாலை நெறிசல் எனக்கோ அவளை முன் செல்ல விடாமல் என் பின்னால் வருவது போலவே பார்த்து கொண்டேன் இந்த முறை சற்று பலமாக இடித்தால் என் இன்டிகேட்டர் உடைந்து விட்டது அவளை திட்ட இயலவில்லை ஆனால் இது தான் சாக்கு என்று முதலில் திட்டுவது போல வேகமாக இறங்கினேன் ஆனால் மீண்டும் சொன்னாள் சாரி, அடுத்து திட்ட தோணவில்லை பேச தோண்றியது எனக்கு.

அதற்குள் அவள் நான் மாற்றி கொடுத்துவிடுகிறேன் எவ்வளவு பணம் என்று சொல்லுங்கள் என்றால் ஹெல்மெட்டை கழட்டியவாறு. வாவ் இப்போது தான் பார்த்தேன் அவள் முகத்தை கருப்பு என்றும் சொல்ல இயலாது சிகப்பு என்றும் சொல்ல இயலாது கொஞ்சூண்டு கருப்பு என்றே சொல்லலாம் பட் அவள் மூக்குத்தியில் நான் மூச்சடைத்து தான் போனேன். பரவாயில்லைங்க நான் மாற்றி கொள்கிறேன் சர்வீஸ்க்கு போக போகுது மாத்திக்கிறேன் என்று கிளப்பினேன் என் வாகனத்தை, பார்த்து போங்க என்றால் ( இனி எங்கு பார்த்து போவேன் என்பதை அறியாமல்) அச்சச்சோ பேர் கேட்காம விட்டுட்டமே என்று ஆபிஸ் வந்து தான் அடித்துக்கொண்டேன்..

மீண்டும் தினசரி அதே பார்வை என போய்க்கொண்டு இருந்தது ஒரு நாள் சிக்னலில் வண்டி நிற்கும் போது சிரித்து விட்டு உங்க பேர் என்றாள் சாம் என்றேன் ஐ எம் திவ்யா என்று சொல்லி விட்டு சிக்னலில் சிட்டாக பறந்தாள்.. அப்படியே பட்டாம் பூச்சி பறப்பது போல் இருந்தது. என்றும் 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகாத என் யமஹா அன்று 90ல் பறந்தது அவிநாசி சாலையில்.

அடுத்த நாள் எங்க வேலை பாக்கறீங்க என்ற கேள்வியில் நான் ஐடி கம்பெனி என்றேன், அவள் வங்கி என்றாள் இப்படியாக போய்க்கொண்டு இருந்தது எங்கள் பைக் மெட் ( காலேஜ் மெட், ஸ்கூல் மெட், பஸ் மெட் என்பது போல இது பைக் மெட்).

சிலநாட்கள் கழித்து அவள் வண்டியில் பின் ஒருவர் அமர்ந்திருந்தார் அண்ணாக இருக்கலாம் ஏன் கணவனாக இருக்கலாம் என்று நெற்றியை தேடினேன் ஹெல்மெட் தான் இருந்தது காலைப்பார்த்தால் கவசம் போல் இருந்தது அவள் செருப்பு, சரி யாராக இருந்தா நமக்கென்ன என்ற போது அடுத்த சிக்னலில் இவர் சாம் என்றும் அவர் என்று சொல்லும் போது சிக்னல் விழுந்து விட்டது.

அடுத்த நாள் இருவரும் தான் வந்தனர் ஒரு நிமிடம் பேசமுடியுமா என்றார் அவர் இன்று வண்டியை ஓட்டியது அவர் பின்னால் அவள். ஓ பேசலாமே என்றேன் (என்னடா தீடீர் என பேசுகிறேன் என்கிறார்கள் நாம் சும்மா பார்த்ததோட சரியே அப்படியே வேகமாக போய் வேலை இருக்கிறது என்று ஓடிவிடலாமா இல்லை போன் வந்தது போல் பாவலா செய்யலாமா என்ற பல எண்ண ஓட்டங்கள் மனதில்) சரி என்று வஉசி மைதானம் அருகே வண்டியை நிறுத்த அவர்கள் அறிமுகம் ஆகி அவர் தனது நண்பர் எனவும் இருவரும் வங்கியில் பணிபுரிகிறோம் என்றனர்.

என்னிடம் சம்பிரதாய விசாரிப்புக்கு பின் வங்கியில் நாங்க இன்சூரன்ஸ் ஏஜெண்ட் சார் நீங்க எங்களுக்கு ஒரு பாலிசி போடுங்களேன் என்று இருவரும் தங்கள் பங்குக்கு விலாவாரியாக விளக்க ஆரம்பித்தனர் விம் பார் போட்டாக்கூட அப்படி விளக்கமுடியாது அந்த அளவுக்கு விளக்கினர்.

நான் யோசிக்கிறேன் என்று சொல்லி கிளம்பினேன் என் மொபைல் நெம்பரை அவளிடம் விட்டு விட்டு, இன்று வரை அவர்கள் கண்ணிலும் சிக்கவில்லை... மொபைலில் கூப்பிடும் போது இப்பவேண்டாங்க என்று சொன்னால்  பரவாயில்லைங்க அடுத்த மாதம் முயற்சி செய்யுங்க என்று கூலாக போனை துண்டிக்கின்றனர்.. மாதம் மாதம் போன் வந்து கொண்டு இருக்கிறது அவர்கள் முயற்சியில் பின்வாங்காமல்...

28 comments:

  1. Replies
    1. என்ன மச்சி ரொம்ப மொக்கை போட்டுட்டேனோ...

      Delete
  2. ஒரு பாலிசிக்கு தான் இவ்வளவு அலப்பறையா...? நல்லவேளை டிவிஎஸ் பெப் தப்பித்தா(தீ)ர்கள்...!

    ReplyDelete
    Replies
    1. அலப்பறை இல்லை என்றால் எப்படி கரையேறுவதுங்க...

      Delete
  3. ஹா..ஹா..சூப்பர்யா..ஆரம்பத்தில் இருந்து செம ஃப்ளோ..கிளைமாக்ஸ் பல்பு கலக்கல்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே...

      Delete
  4. ஆமா, இது புனைவு தானா?

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா... இது உண்மை நிச்சயமாக இல்லைங்கோ...

      Delete
    2. இந்த பதில் வீட்டுல இருந்து எஸ்கேப்பாக ஆவதற்கு போட்டதா? tha.ma 6

      Delete
  5. குறும்படத்திற்கு அருமையான கதை!

    ReplyDelete
  6. சொல்லிப் போனவிதம்
    மிக மிக அருமை
    முடிவை மிகவும் ரசித்துப் படித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் (பதிவை )
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா.,.. வாரத்துக்கு 5 பதிவு எழுத முடிவு செய்திருக்கிறேன்...

      Delete
  7. அண்ணா அன்னிக்குமட்டும் இது தெரிஞ்சிது அவ்வளவுதான்.வண்டியை ரோட்டுல ஓட்ட சொன்னா சிக்னல் போட்டுட்டே போறீங்களா.
    சிக்னல்
    சாலை விதிகளை மதித்து
    சிக்னலுக்காக
    காத்திருக்கும்போது
    சாலையோரத்தில் நிற்கும்
    நான் உனக்காக கொடுக்கும்
    சிக்னலையும் கொஞ்சம் கவனியேன்

    ReplyDelete
    Replies
    1. இது கதைங்க... ஒரிஜினல் இல்லை...

      Delete
  8. அண்ணா அருமையா சொன்னீங்க.ஆனா அன்னிக்கு மட்டும் உங்க சேட்டை தெரிஞ்சுது அவ்வளவுதான்.வண்டியை ஓட்ட சொன்னா சிக்னல் போடுறீங்களா சிக்னல் .
    சாலை விதியை மதித்து
    சிக்னலில் நிற்கும் நீ
    சாலயோரத்திலிருந்து
    உனக்காக நான் கொடுக்கும்
    சிக்னலையும் கொம்சம் கவனி

    ReplyDelete

  9. இந்த பதிவை உங்க வீட்டுல படிக்கலையா என்ன? படிக்காத வரை உங்களுக்கு நல்லது படிச்சா இப்படியா தினமும் ஆபீஸ் போகும் போது நம்ம வீட்டுகாரர் பொண்ணுகளை பார்த்து வழியுறாருன்னு நல்ல பூஜை கிடைக்க போகுதுங்க...

    ReplyDelete
    Replies
    1. படிச்சாலும் பிரச்சனை இல்லை பாஸ்... என்னைய யாரும் பார்க்கமாட்டாங்கன்னு அவுங்களுக்கு தெரியும்...

      Delete
  10. சரி இப்ப வேற எந்த பொண்ணை ப்லோ பண்ணுறீங்க என்று சொல்லவில்லையே?

    ReplyDelete
  11. கலக்கல் கதை! கொஞ்சம் சுருக்கியிருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்! நன்றி!

    ReplyDelete
  12. சோக்கா கீதுபா...
    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. போட்டாச்சா... நன்றி தல...

      Delete
  13. Replies
    1. அப்படி எல்லாம் இல்லைண்ணே...

      Delete
  14. எடிட் பண்ண கதைப் போலவே இருக்கே!

    ReplyDelete
  15. ஆமாங்க்கா... எழுதியதும் படிக்கும் பழக்கம் எல்லாம் இல்லை முன்னே.. இப்ப அப்படி இல்லை படிச்சு பிழை திருத்தி கொஞ்சம் மாற்றித்தான் போஸ்ட் போடுகிறேன்..

    ReplyDelete