Monday, January 27, 2014

லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன் எனது பார்வையில்...


லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன் இன்றைய இணையத்திலும், சென்னை புத்தக கண்காட்சியிலும் பரபரப்பாக பேசப்படும் புத்தகம் இந்த புத்தகத்தை நிச்சயம் வாங்க வேண்டும் என்று எண்ணிவர்களின் நானும் ஒருவன். புத்தக கண்காட்சிக்கு செல்லவில்லை என்றாலும் என் இனிய நண்பன் மூலம் இந்த புத்தகம் எனக்கு வந்தது. கையில் கிடைத்த அன்றே வாசித்து முடித்துவிட்டேன் இப்புத்தகத்தை.

லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன் இந்த புத்தகத்தை படித்தால் போதுமா நமக்கு பிடிச்ச நாலுகருத்தை சொல்லவேண்டும் அல்லவா? அதற்காக இது விமர்ச்சனம் என்று எண்ணவேண்டாம் வா.மணிகண்டனை விமர்ச்சிக்கும் தகுதி நிச்சயம் எனக்கில்லை என்று நன்றாக தெரியும். ஆனால் புத்தகத்தை வாசித்து விட்டு சும்மா போகலாமா? போகுற போக்கில் நானும் நாலு கருத்தை பதிவு செய்ய விரும்பிகிறேன்..

மின்னல் கதைகளை படிக்க படிக்க நிச்சயம் அதில் வரும் சம்பவங்களை நாம் கேள்விப்பட்டது போலவும், நமக்கு அருகில் நடந்தது போலவும் இருக்கிறது. இந்த புத்தகத்தில் வரும் பெரும்பாலான ஊர்கள் மற்றும் பள்ளி சம்பந்தப்பட்ட வரிகள், ஆசிரியர் பெயர்கள் எல்லாம் எனக்கு நன்கு பரிச்சமானவை அதனால் இந்த புத்தகத்தோடு நான் வெகு நேரம் பயணித்து கொண்டு இருக்கேன் இதற்கு காரணம் நானும் அதே ஊர்களில் சுற்றியவன், அந்த பள்ளியியே படித்தவன்  என்பதால் கூட இருக்கலாம்.

"சாவதும் ஒரு கலை" என்ற கதையில்

"செக்ஸ் என்றவுடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?" என்கிறாள்.

தூக்கி வாரிப்போட்டது என்ன சொல்லவேண்டும் என்று தெரியவில்லை

"என்னங்க? இப்படி தீடீர்ன்னு கேட்டா?"

"அதான் கேட்டேன்ல. சொல்லுங்க"

"இல்லை.. என்ன சொல்றதுன்னு" தெரியலை

இந்த வரிகள் நிச்சயம் இன்றைய காதலர்கள் பயணித்த வார்த்தைகளாக இருக்கும். இதைப்படிக்கும் போது ஒரு காதலியிடம் காதலன் அல்லது காதலி பேசியவைகள் நிச்சயம் நினைவில் நிழல் ஆடும்.

சரோஜா தேவி, துலுக்கன் இன்னும் பல கதைகள் அவரின் நிசப்தத்தில் முன்னரே படித்ததால் அடுத்து வரிகள் என்னவாக இருக்கும் என்று யூகிக்கமுடிந்தது ஆனால் இணையத்தில் படிப்பதற்கும் புத்தகத்தில் படிப்பதற்குமான ரசனை நன்கு அறியமுடிகிறது. ஜாகீர்நாயக்கன் பாளையம் பற்றி இணையதில் எழுதி இருந்தார் அதையும் கூட சேர்த்திருக்கலாம்.

சக்கிலிப்பையன் என்னும் கதையில் வரும் தலைப்பை மாற்றி இருக்கலாம் என்று தோன்றுகிறது. கதை ஜாதியை பற்றி இல்லை என்றாலும் அதன் தாக்கம் என் வாழ்க்கையிலும் நடந்து உள்ளது, எனக்கு மட்டுமல்ல எங்கள் பகுதியில் நிறைய பேர் இதே சம்பவம் நிச்சயம் நடந்து இருக்கும், நிறைய நண்பர்கள் வீட்டில் வசைபாடி இருப்பர் என்பதில் மாற்று கருத்து இருக்காது.

நீதானே என் பொன்வசந்தம் என்னும் கதையில் எதார்த்ததையும் தாண்டி அவரின் கற்பனை கலந்து அற்புதமான கதையாக வந்துள்ளது. இன்றும் பல இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் இப்படித்தான் நடைமுறையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை கூறி உள்ளார் அதுவும் எல்லீஸ்பேட்டை என்றதும் அவன் அம்மாவின் பேச்சு வேறு விதமாக இருந்தது என்பதை நன்றாக சுட்டிக்காட்டி உள்ளார்.

பல கதைகள் உண்மையை அடிப்படியாக கொண்டு கொஞ்சம் கற்பனை கலந்து நமக்கு மின்னலாக நம் நினைவுகள் வந்து போகக்கூடிய அளவிற்கு கொடுத்துள்ளார் என்பதில் மகிழ்ச்சேயே அதுவும் பறவளவு என்ற கதை நம்பியூர் ஏரியாவில் பெரும் பரபரப்பை எற்படுத்திய நிகழ்வு என்பதை மறுக்க மறக்க இயலாது.

வா.மணிகண்டனின் நிசப்தத்தை வாசிப்பவர்கள் அனைவரும் நிச்சயம் விரும்பி படிப்பார்கள் இந்த புத்தகத்தை. வாசிப்பனுபவம் அதிகம் உள்ளவர்கள் நிச்சயம் படிக்கவேண்டிய ஒன்று. ஈரோடு, கோவை, சேலம் பகுதியில் உள்ளவர்கள் அவர்களின் வட்டார வழக்கிலேயே இவரின் எழுத்து நடை இருப்பதால் படிக்க படிக்க புத்தகத்துடனே பயணித்தது போல நிச்சயம் இருக்கும். அவரின் நிசப்தத்தில் இன்னும் பல சுவாரஸ்யமான கதைகள் இருக்கின்றன அதையும் ஏன் சேர்க்கவில்லை என்று தெரியவில்லை. அடுத்த புத்தகத்தில் எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

17 comments:

  1. கண்ணில் பட்டால் புத்தகம் வாங்குடுறேன். பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. மறக்காம வாங்குங்கோ அக்கா...

      Delete
  2. நிசப்தம் தொடர்ந்து வாசித்து வருகிறேன், புத்தக வெளியீடு அன்றே புத்தகத்தையும் வாங்கிவிட்டேன், விரைவில் வாசிக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. 2 மணி நேரம் போதும் சீனு...

      Delete
  3. நானும் இந்த புத்தகத்தை வாங்கி படிச்சாச்சு.நிசப்தம் மிகவும் பிடிக்கும்.ஒரு விமர்சனம் எழுதிட வேண்டியது தான்.

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம் சதீஷ்.... படிக்க தூண்டுகிறது !

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் படிங்க சுரேஷ்... படித்து முடிப்பதே தெரியாது...

      Delete
  5. அடடா! புத்தக காட்சிக்கு வந்தும் வாங்காமல் விட்டுவிட்டேனே? பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நம்ம வேடியப்பனை புடியுங்க உடனே கிடைக்கும்...

      Delete
  6. I got two books,somebody want means contact me...


    sathish
    Bangalore

    ReplyDelete
  7. I got two books,if anybody needs contact me..

    Sathish
    Bangalore

    ReplyDelete
  8. புத்தகம் வாங்கி வாசிக்க தூண்டும் விமர்சனம்...!

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு. வாங்க வேண்டிய புத்தகப் பட்டியலில் சேர்த்து விடுகிறேன்.....

    ReplyDelete
  10. http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D-w%7B47%7Do-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D

    ReplyDelete