Monday, January 20, 2014

சோத்துக்கடை - அவிநாசி திருமூர்த்தி டீ ஸ்டால்


சோத்துக்கடை நிறைய எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை அவ்வப்போது இதுவரை யாரும் அறியாத அதாவது அந்த ஊர்க்கராருக்கே அதன் சுவை தெரியாமல் இருப்பது போன்ற கடைகளை எழுதினால், என்னைப்போல தேடி தேடி சாப்பிடுபவர்களுக்கு மிக பயனாக இருக்கும் அவ்வாறு இருக்கும் கடைகளை மட்டும் பதிவாக்கவேண்டும் என்பது என் எண்ணம்.

இன்று நாம் சாப்பிடும் சோத்துக்கடை அவிநாசி திருமூர்த்தி டீ ஸ்டால் & மெஸ் இதன் பெருமை அந்த ஊர்க்கரார்களுக்கே சிலருக்கு தெரியவில்லை என்பது தான் முக்கிய அம்சம். டீ ஸ்டால் என்று தான் அனைவரும் நினைப்பர் ஆனால் உள்ளே என்நேரமும் 20 பேர் உட்கார்ந்து அவர்களின் கையும், வாயும் சண்டை இட்டுக்கொண்டு இருக்கும் என்பதை அறிந்து இருக்கமாட்டார்கள்.

2000ம் வருடம் எனக்கு அறிமுகம் இந்த திருமூர்த்தி டீ ஸ்டால், நண்பர் ஒருவருடன் கோவைக்கு காலையில் நேரத்திலேயே பயணித்துக்கொண்டு இருந்தோம் அவிநாசி வரும் போது காலை உணவை இங்கேயே முடித்துக்கொள்ளலாம் என்றார் சரி என்று இட்லியும், ஆப்பமும் சாப்பிட்டேன் ஏனோ அந்த கடையில் சுவை பிடித்து விட காரில் செல்லும் போது எல்லாம் சாப்பிடும் கடையாகிவிட்டது.

சமீபத்தில் குடும்பத்துடன் சென்றேன், குடும்ப மக்கள் எல்லாம் இந்த கடை அந்த கடை என்று லைட் வெளிச்சம் அதிமாகவும், பளீர் என்று தெரியும் படி உள்ள கடையை கை காண்பித்தனர். கம்முன்னு வாங்க ஒரு நல்ல டீக்கடையை காண்பிக்கிறேன் என்றதும் டீக்கடையா? என்று ஆளாளுக்கு மூஞ்சியை இழுத்தனர்.

அவிநாசி பஸ் நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் டெலிபோன் ஆபிசை தாண்டி அரச மரத்துக்கு பககத்தில் காலை 8 மணிக்கு வண்டியை நிறுத்த இடமில்லாமல் தள்ளி நிறுத்தி இது தான் அந்த கடை என்றேன். இதுவா, என்று ஆளாளுக்கு வாயை பிதுக்கினர். வெளியில் பெஞ்ச் போடப்பட்டு அடுத்து உள்ளே போவதற்கு தயாராக உட்கார்ந்திருந்தனர் சில குடும்பங்கள் அடுத்து நாங்கள் போய் நின்றதும் எங்க குடும்ப மக்கள் எல்லாத்துக்கும் என் மேல அம்மூட்டு கோபம்.

அப்போது ஒரு குடும்பம் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து அவர்களின் BMW காரில் ஏறி அமர்ந்தனர். அப்போது தான் வீட்டு மக்களிடம் சொன்னேன் பாருங்க இந்த கடை வாடிக்கையார்களை என்று. அடுத்து எங்களுக்கு இடம் கிடைக்க ஆள் ஆளுக்கு கிடைத்த இடத்தில் உட்கார்ந்தோம் இலை வைத்து தண்ணீர் வைத்த உடன் இட்லி ஆர்டர் செய்தோம். (நிற்க கவனிக்க இட்லிக்கா எங்களை இவ்வளவு தூரம் படிக்க வைத்தாய் என்று தோணிருக்குமே ) இட்லி என்றால் குஷ்பு இட்லியான்னு தான் நம்மாளுக கேப்பாங்க ஆனா அது இல்லீங்க நன்றாக சுடச் சுட நல்ல வெளீர் நிறத்தில் பஞ்சு போல இட்லியை வைத்தனர் கூடவே சட்னியும், சாம்பார் மற்றும் காரச்சட்டினி அட அட இட்லியை எடுத்து சட்னியில் தொட்டு, சாம்பாரில் தொட்டு சாப்பிட்டால் லபுக்கு என்று உள்ளே போகும், போகும் போது அடுத்த துண்டு எப்ப நாக்கிற்கு வரும் என்று நாக்கு நிச்சயம் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்கும். நான் எப்பவும் இட்லி சட்னி, சாம்பார் மூன்றையும் நன்கு பிசைந்து சாம்பாரை நிறைய ஊற்றி குடுக்கும் ஆள் அதனால் நான் எப்பவும் 7 இட்லிக்கும் குறையாமல் சாப்பிடுவேன்.

அடுத்து தோசை, ஆப்பம் என சிம்பிளான உணவு வகைகள் தான் அவ்வப்போது பொங்கல் இருக்கும் இவை அனைத்துக்கும் அவர்கள் கொடுக்கும் சட்னி சாம்பாரின் ருசியில் நிச்சயம் மனம் குளிர்ந்து தான் போகவேண்டும். அன்று சாப்பிட்டுவிட்டு என் குடும்பத்தினர் இனி ஊருக்கு வரும் போது எல்லாம் வண்டி அவிநாசி போய்ட்டுத்தான் வரனும் என்று அன்பு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

காலை தான் இப்படி என்றால் இரவு இடம் கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழிச்சுத்தான் இடமே கிடைக்கும் அந்த அளவிற்கு கூட்டம் நிற்கும். இரவு மெனுவும் ஒன்றும் பெரியதாக இல்லை இட்லி, தோசை, பொடி தோசை, ஆப்பம், சப்பாத்தி என்று சிம்பிளாகத்தான் இருக்கும் ஆனால் சுவைதான் மீண்டும் அங்கு வரத்தோணும். சின்ன இடம் என்றாலும் சுவையானது என்றால் தேடிப்போவதில் ஒன்றும் தவறில்லை..

பெயர்:  திருமூர்த்தி டீ ஸ்டால்

இடம்: அவிநாசி (புது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் நடக்கும் தூரத்தில் உள்ளது)

விலை: மிக மிக குறைவுதான்

படம் நெட்டில் சுட்டது...

12 comments:

  1. நல்ல தகவல், அடுத்த முறை அங்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது !

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் போக வேண்டிய இடம் தான் சுரேஷ்..

      Delete
  2. இனி கோவை செல்லும் போது வண்டியை அவிநாசிக்கு திருப்பிட வேண்டியது தான்... தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வண்டிய திருப்புங்க அதிக தூரம் வந்தாலும், சாப்பிட்ட திருப்தி இருக்கும்..

      Delete
  3. ஈரோடுல பதிவர் சந்திப்பு நடக்கும்போது அந்தக் கடைக்கு போகலாம் சகோ! என்னை கூட்டிப் போங்க!

    ReplyDelete
    Replies
    1. பதிவர் சந்திப்பா?? சரி நடந்தா போகலாம் சகோ !!

      Delete
  4. பயனுள்ள தகவல்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ஆதி.. கோவை வரும் போது முயற்சி செய்யுங்க...

      Delete
  5. ஆலமரத்துக்கடை என்று சொல்வார்கள்..
    சமையல் நடக்கும் இடத்தை சென்று பார்த்தோம் ..
    சிறிய வீட்டை தூய்மையாக பராமரித்து வைத்து சமைக்கிறார்கள்..குடும்பமே சேர்ந்து உழைப்பது மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அளித்தது..!

    ReplyDelete
  6. சங்கவி, கண்டிப்பாக நீங்கள் சோத்துக் கடை பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள். நானும் கோவைப் பக்கம்தான். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வரும் போது கோவையிலிருந்து சேலம் மற்றும் திருச்சிக்கு பலமுறை பயணங்கள் இருக்கும். அப்போது நல்ல சாப்பாட்டு கடைகளை தேடுவேன். கூட வரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பெரிய/பிரபல கடைகள் மட்டுமே தெரியும். அங்கு சூழல் மட்டும் நன்றாக இருக்கும், சுவை சில சமயங்களில் மட்டும் நன்றாக இருக்கும். இந்த வருடக் கடைசியில் ஊருக்கு வரும் போது உங்கள் சோத்துக் கடை பதிவுகளில் இருந்து கோவை/ஈரோடு பகுதியில் ஒரு பத்து கடைகள் தெரிந்து கொண்டால் மிகவும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  7. உண்மையாகவே நன்றாக இருக்கும்

    ReplyDelete