Wednesday, January 15, 2014

சோத்துக்கடை - UPM கெடாக்கறி விருந்து



நிறைய தேடித் தேடி சாப்பிடுவேன் வித விதமாக சாப்பிடுவதில் அலாதி பிரியம் எனக்கு ஆனாலும் இது வரை சாப்பாட்டை பற்றியும், மெஸ் பற்றியும் எழுதியதில்லை முகநூலில் நம்ம டைரக்டர் கேபிள் அண்ணன் அவர்கள் தொடங்கிய சாப்பாட்டுக்கடையில் அவ்வப்போது பதிவிடுவேன் அவ்வளவு தான் எனது சோத்துப்பதிவு. நான் கடைகளை பற்றியும், உணவை பற்றியும் பதிவிடாததற்கு மிக முக்கிய காரணம் அங்கு மொபைலில் போட்டோ எடுத்தால் என் ரங்கமணிக்கு பிடிக்காது அதனால் பதிவிடுவதில்லை. 

நான் பதிவிடும் இந்த சோத்துக்கடை ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை பகுதிகளில் மிக பிரபலமானது. ஈரோடு பகுதிகளில் கெடாவிருந்து ஓட்டல்கள் மிக பிரபலம், இன்று இந்த பகுதியில் நிறைய கடைகள் இருக்கிறது அந்த கடைகளுக்கு எல்லாம் முன்னோடி தான் இந்த UPM கெடாவிருந்து சோத்துக்கடை. பெருந்துறையில் இருந்து வரும் போது சீனாபுரத்துக்கு அருகிலும், பெருமாநல்லூரில் இருந்து குன்னத்தூர் வழியாக சீனாபுரம் வரும் போதும் இந்த சோத்துக்கடை இருக்கிறது.

இது கடை அல்ல, ஒரு தோட்டம் இந்த தோட்டத்தின் பெயர் தான் UPM இந்த தோட்டத்தின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் ஒரு பனியாள் ஒருவரோடு நடத்தப்படுகிறது இந்த சோத்துக்கடை மதியம் மட்டும் தான் கெடாவிருந்து காலை, மாலையில் கிடையாது. கெடாவிருந்துக்கு நாம் செல்ல வேண்டும் என்று நினைத்தால் முந்தைய நாள் மாலை அல்லது காலை 10 மணிக்குள் முன்பதிவு செய்யவேண்டும் அப்போது தான் நமக்கு கிடைக்கும் கெடாக்கறி விருந்து.

ஈரோடு மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் ஜவுளி மற்றம் கட்டிட கான்ட்ராக்டர்ஸ் அதிகம் உள்ள பகுதி, திருப்பூரில் ஏற்றுமதியாளர்கள் அதிகம் இருப்பதால் அவர்களும் அதிகம் தங்களது வாடிக்கையார்களுடன் வருவதால் இந்த UPM கெடாவிருந்து தோட்டம் எப்போதும் கெடாக்கறி விருந்திற்காக உணவு ரசிகர்களின் கூட்டம் நிரம்பி இருக்கும்.

அப்படி என்னதான் சோறு போடுகிறார்கள் இந்த கெடாக்கறி விருந்தில் என்று நானும் நண்பர்களோடு சென்றிருந்தோன் சோறு போடுகிறார்கள் என்றால் முதலில் நிற்பது நானாகத்தான் இருக்கும். அன்று கோபியில் இருந்து நண்பர்களோடு குன்னத்தூர் வழியாக UPM கெடாக்கறி விருந்திற்கு தோட்டத்திற்கு சென்றோம். எளிமையான வரவேற்பில் அசத்தினார் தோட்டத்துக்காரர்.

மதியம் 1.30 மணிக்கு சரியாக சாப்பிட அழைத்தார் எங்களை, அதற்கு முன் சாப்பாடு ஒரு ஆளுக்கு 350 ரூபாய் என்று சொன்னாதால் நிறைய சாப்பிடவேண்டும் என்ற எண்ணமும் நிறைய சாப்பிடுவதற்கு ஒரு 60 ML மட்டும் சாப்பிட்டால் போதுமென்று கொஞ்சாமாக தாகசாந்தி அருந்திவிட்டு வெறும் வயிரோடு போருக்கு (சாப்பிட) தயாரானோம்.

வழக்கம் போல தலைவாழை இலையும், உப்பும் வைத்துவிட்டு பசியை தூண்டினர். பின் தலைக்கறி வைத்தனர் சும்மா சொல்லக்கூடாது 1 கரண்டி தான் வைத்தனர் நன்கு மசால், கொஞ்சம் பெப்பர் போட்டு தூக்கலான மணத்துடனும், நல்ல காரத்துடனும் இருந்தது அடுத்த நிமிடத்தில் வயிற்றுக்குள் சென்று விட்டது. அதில் இருந்த கிரவி என் ஆட்காட்டி விரலால் வழித்து வழித்து நக்கப்பட்டது.

குடல்கறி என்றதும் குடல் மட்டும் வரவில்லை கூடவே இரத்தமும், இதன் இரண்டுடன் சேர்த்து தேங்காய்ப் பூ போட்டு வைத்தனர். குடல் நன்கு வேகவைக்கப்ட்டு இருந்ததால் மெல்லுவதற்கு இதமாக இருந்தது.

நுரையீரல் வறுவல், எலும்புக்கறி, கறிவருவல், ஆட்டு மூளை, கொத்துக்கறி, கோலா உருண்டை என ஆட்டு வகையும், அப்புறம் வந்தது நாட்டுக்கோழி வறுவல், சில்லி சிக்கன், பள்ளிபாளையம் சிக்கன், பெப்பர் சிக்கன் அப்புறம் முட்டை வைத்தனர். இதை எல்லாம் வைத்த பின்தான் பிரியாணி அளவாக ஒரு கப்பில் வைத்தனர்.

பிரியாணி பொன்னி அரிசியில் தனித்தனியாக நெய்யால் உலர்ந்திருந்தது. மசாலா பிரியாணியுடன் ஒட்டவில்லை ஆனாலும் பிரியாணியின் நாவில் இருக்கும். அடுத்து அரிசி சோறு கூடவே கறிச்சாரோடு சதக்கறியும், இவை இரண்டையும் பிசைந்து ஒரு கவளை வாயில் போடும் போது தான் கையில் அரைச்ச குழம்பின் பக்குவம் தெரியும். குழம்பை மட்டும் நிச்சயம் இரு முறை கேட்டு வாங்கி சாப்பிடத்தோன்றும். அடுத்து சோறு உடன் எழும்பு குழம்பு இது கொஞ்சம் தண்ணி போலத்தான் இருக்கும் இதை எழும்பு ரசம் என்றும் கூறுவர்.

சோறுடன் புளி ரசம், ரசத்தை பொறுத்தவரை ஒவ்வொரு இடத்திலும் ஒரு சுவை இருக்கும் ஒவ்வொன்றும் ரசிச்சு ருசிச்சு சாப்பிடும் படியும் இருக்கும் சாப்பிட்டது ஜீரணம் ஆக புளி ரசம், கடைசியாக எருமத்தயிர் ஒரு கப். இந்த தயிர் சாப்பிட்டால் கொழு கொழு என்று ஆகாலம் என்று சொல்வாங்க, இன்னொன்றும் சொல்வாங்க புல்லா சரக்கடிச்சிட்டு வாந்தி எடுத்து வயிறு, தொண்டை எல்லாம் எரிபவர்கள் ஒரு கப் அடிச்சா போதும் எரிச்சல் பஞ்சா பறந்திடும் என கூட சொல்வாங்க..

முடிவில் வெற்றிலைபாக்கு கொடுத்து விருந்தை முடிச்சிடுவாங்க. 350 ரூபாய்ககு இத்தனை வகையான உணவுகள் நிச்சயம் கிடைக்காது, அப்படியே கிடைச்சாலும் அது குடலை பாதிக்காத வண்ணம் இருக்கவேண்டும் இது எல்லாம் கறிவிருந்தில் இருக்கிறது. இன்னொரு முக்கியமான விசயம் இங்கு செய்யப்படும் மசாலாக்கள் அம்மிக்கல்லில் அரைச்சி குழும்பு வைக்கின்றனர் என்பது தான் இந்த ருசியின் ரகசியம்.

நிச்சயம் அனைவரும் சாப்பிடவேண்டிய உணவகம், இன்று இதே போல் ஈரோட்டைச்சுற்றி நான்கு கடைக்கு மேல் இருக்கு எல்லா இடத்திலும் இதே போல் தான் இந்த கறிசோத்துக்கடை தான் முதலில் ஆரம்பிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு இந்த கடைக்கு நான் சென்று 1 வருடத்திற்கு மேல் இருக்கும் நேற்று நண்பர்களுடன் அளவாடும்போது இங்கு போய் சாப்பிட்டதை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம் அந்த ஞாபகத்தில் எழுதிய கட்டுரை இது.

நாளை காணும் பொங்கல் என்று ஒரு சில பகுதியில் சொல்வாங்க ஆனா எங்க ஊரில் கறி நாள் என்று தான் சொல்வோம் அந்த கறிநாளுக்காக இந்த கெடகறிவிருந்து.

23 comments:

  1. ஆஹா.. பசிக்குதே :)

    ReplyDelete
  2. விருந்துன்னு சொல்லி காசு வாங்கிட்டாங்களா? ஓ! மொய்ன்னு நினைச்சிக்க வேண்டியதுதான்!

    ReplyDelete
    Replies
    1. பேருதான் விருந்துங்க.. ஆனா இது ஹோட்டல் பாஸ்...

      Delete
  3. குடும்பத்தோடு சின்ன குழந்தைகளுடன் சென்றாலும் ஒரே விலை தானா?

    ReplyDelete
    Replies
    1. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பணம் இல்லைங்க.. பட் இப்ப 350க்கு மேல் இருக்கலாமுங்க..

      Delete
  4. சரியான சாப்பாட்டு போர்.... படிச்சு முடிச்சவங்களுக்கு கெடா கறி விருந்து சாப்பிட நாக்கில் எச்சில் ஊறியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை..!

    எனது வலைத்தளத்தில் இன்று: டவுன்லோட் செய்யப்பட்ட Photoshop Brushகளைப் போட்டோஷாப்பில் பயன்படுத்துவது எப்படி?

    ReplyDelete
  5. செம விருந்து தான் போங்க...!

    ReplyDelete
  6. மொபைலில் போட்டோ எடுத்தால் என் ரங்கமணிக்கு பிடிக்காது அதனால் பதிவிடுவதில்லை///
    நீங்கள் சாப்பிடுவதை பார்த்து நாங்கள் கண் போட்டுவிடுவோம் என்ற நல்ல எண்ணத்தில்தான் உங்கள் ரங்கமணி சொல்லியிருப்பார்கள்

    ReplyDelete
  7. What a Narration...padikum pothae naakku neechal adikudhu :)

    ReplyDelete
  8. படிக்கும் போதே நாவூறுதே...

    ReplyDelete
  9. இப்பவே போயி சாப்பிடனும் போல இருக்கிறது மக்கா கட்டுரை...!

    ReplyDelete
  10. ம்ம்... வெட்டுங்க!

    த.ம. +1

    ReplyDelete
  11. // கெடாவிருந்துக்கு நாம் செல்ல வேண்டும் என்று நினைத்தால் முந்தைய நாள் மாலை அல்லது காலை 10 மணிக்குள் முன்பதிவு செய்யவேண்டும் //

    சார், அந்த போன் நம்பரு கொடுந்தீங்கன்னா.... ஒரு நாளைக்குப் போயி மேஞ்சிடலாம்.

    ReplyDelete
  12. ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதும் இந்தக் கடையில் சாப்பிடணும்னு பேசிக்கொள்வோம்... ஆனா இப்பதான் தெரியுது..முன்னாடியே புக் செய்யணுமா.. அப்புறம் தலை கறி, குடல், இரத்தம் , நுரையீரல் இப்படி மற்ற எந்த கறியும் சாப்பிடாத என் போன்றவர்களுக்கு வேஸ்ட்டோ?... தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  13. நான் அந்தப்பக்கம் வரும்போது கூட்டிட்டுப் போங்க....

    ReplyDelete
  14. கெடாவிருந்து-Contact details for booking ? . கெடாவிருந்து -available on all weekdays ?

    ReplyDelete
  15. கெடாவிருந்து -phone number, plz

    ReplyDelete
  16. I am also interested in good food - Definitely once in Good Hotels around Gobichettipalayam - Please inform Sappadukadai link by Cable Annan

    ReplyDelete
  17. I'm also interested in good food - Definitely in search of new good hotel around Gobichettipalayam at least once in a month - Please Inform Sappadukkadai Link by Cable Annan

    ReplyDelete
  18. நல்லவிருந்து.

    ReplyDelete