Tuesday, January 28, 2014

சோத்துக்கடை - ஹோட்டல் அன்னலட்சுமி, சத்தியமங்கலம்


ஒரு வருடத்திற்கு முன் சத்தியமங்கலம் வழியாகத்தான் ஒவ்வொரு வாரமும் அந்தியூர், பவானி செல்வேன். இப்போது தேசிய நெடுஞ்சாலை ஒரளவிற்கு சரி செய்ததால் தேசிய செடுஞ்சாலையிலேயே பயணிக்கிறேன். சத்தி வழியாக சென்றாலும் அதிகம் சாப்பிடுவதில்லை வழியில் கிடைக்கும் நொங்கு, பதனீர், கொய்யா என வழியில், சாலையில் விற்கும் பழங்கள் எல்லாம் வாங்கி சாப்பிடுவதுதான் வாகனத்தில் செல்லும் போது உற்சாகமாக இருக்கும்.

ஆசனூர் செல்வதற்காக சத்தியில் கறி வெட்டிக்கொண்டு இருந்தோம், கறிக்கடைக்காரரிடம் இங்கு காலை உணவிற்கு இட்லியும், குடல்கறியும் எங்கே கிடைக்கும் என்று விசாரித்தோம் அவர் அப்படி எல்லாம் இங்கு கிடைக்காதுங்க என்றார், சரி தேடுவோம் என்று ஒவ்வொரு இடமாக விசாரிக்க ஆரம்பித்தோம்.

காலை உணவுகள் அதிகம் இட்லியாகத்தான் இருக்கும் அநேக வீட்டில், ஞாயிறு அன்று மட்டும் அசைவம் வைத்து சாப்பிடுபவர்கள் சிக்கன் அல்லது கறிக்குழம்போடு சாப்பிடுவர், இட்லிக்கு எத்தனையோ குழம்புகள் சுவையாக இருக்கும் என்று சொன்னாலும் இட்லியும், குடல்கறியையும் அடிச்சக்கவே முடியாது, குடல் கறி பிரியர்கள் அநேகம் பேர் இந்த வரியை நிச்சயம் வழி மொழிவார்கள். அதுவும் குடல் பொறியலை விட குடல் குழம்புக்குத்தான் இட்லியுடன் கலந்தடிக்கும் போது சுவை கூடும். இதற்காகவே வெளியூர் சென்றால் இட்லி குடல்கறி எங்கே கிடைக்கும் என்று ஒரு சுத்து சுத்தி வருவேன் அந்த ஊரை.

நிறைய பேருக்கு அவர்கள் ஊரில் ஹோட்டல் இருக்கிறது என்று தெரியும் ஆனால் அங்கு என்ன நன்றாக இருக்கும் என்றும் அதற்காக நிறைய பேர் அங்கே சாப்பிட வருகிறார்கள் என்று தெரியாது. ஊரின் அருமை ஊர்க்காரர்களுக்கே தெரியாது என்று கூட கூறலாம். இந்த ஹோட்டல் படத்திற்காக நண்பர்களை தொடர்பு கொண்ட போது அப்படியா, அங்க இது பேமஸா என்ற எதிர் கேள்வி கேட்கின்றனர்.

சத்தியமங்கலத்தில் ஒரு ஆட்டோ டிரைவரிடம் விசாரிக்கும் போது அன்னலட்சுமிக்கு போங்க இதே ரோட்டில் என்றார். அன்னலட்சுமி ஹோட்டல் வாசல் வந்தததும் பெரிய கடை, முன்னாடி விசாலமான வாகனம் நிறுத்தும் இடம், ப்ளக்ஸ் போர்டில் அன்னலட்சுமி சைவம், அசைவம் என எழுதி இருந்தது, கடையின் உள்ளே சென்றதும் குடல் ரெடியா என கேட்டேன், அண்ணே குடல் ரெடியாக இன்னும் 5 நிமிடம் ஆகும் ஆனா, தலைக்கறி ரெடி என்றனர். என் கூட வந்த உடன்பிறப்புக்கள் அப்படியா தலைக்கறி என்றால் ஒகே என்று உள்ளே வந்தால் உட்கார இடம் இல்லை. பேருந்து நிலையம் பக்கத்தில் இருப்பதால் போக்குவரத்து ஊழியர்கள் தான் அநேகம் பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர் அவர்களின் தினசரி காலை உணவு அங்கேதானாம்.

சிறிது நேரத்தில் இடம் கிடைத்தது வரிசையாக உட்கார்ந்து கொண்டு இட்லி தலைக்கறி ஆர்டர் செய்தோம். ஆளுக்கு இரண்டு இட்லி கூடவே ஒரு சிறிய தட்டு நிறைய க்ரேவியுடன் தலைக்கறி. இட்லியை பிச்சு கிரேவியுடன் தொட்டு நாவில் வைத்தவுடன் அளவான காரத்தில் இருந்தது கிரேவி அப்படியே நாவில் கரைந்தது. எதிர்பார்க்கவில்லை நான் அவ்வளவு சுவையை தலைக்கறி வரமிளகாய், தேங்காய் மற்றம் சிறு வெங்காயம் போட்டு வதக்கி கொடுத்திருந்தனர். முக்கியமாக நன்றாக வெந்து இருந்தது. இரண்டு இட்லிக்கு ஒரு ப்ளேட் தலைக்கறியை காலி செய்தேன். நான் மட்டும் தான் காலி செய்தேன் என்று திரும்பி பார்த்தால் என் சகாக்கள் எல்லோம் காலி செய்தனர்.

மீண்டும் அண்ணே குடல் ஆகிவிட்டதா என்றேன், இரண்டு நிமிடம் பொறுங்க தம்பி, இப்பதான் இறக்கி வைத்துள்ளனர் என்றார். அதற்குள் என் சகா இன்னும் இரண்டு இட்லி ஒரு ப்ளேட் தலைக்கறி என சொல்ல, எனக்கு மீண்டும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்தது, எனக்கும் அதே போல என சேர்த்து சொன்னேன். மறுபடியும் இரண்டு இட்லிக்கு அந்த ப்ளேட் தலைக்கறியும் சாப்பிட்டாச்சு, சாப்பிட்டு நிமிரும்போது குடல் ரெடி எத்தனை ப்ளேட் என்றனர், இப்ப ஆளுக்கு ஒன்னு என்று ஆர்டர் சொல்லி காத்திருக்கவில்லை சுடச்சுட உடனே வந்தது, ஒரு ப்ளேட் நிறைய குடல் கறி எங்கள் இலையை பதம் பார்த்தது.

குடல் கறியில் நன்றாக வெந்த பின் அதில் மசாலாவை தூக்கலாக சேர்த்து இருந்தனர் மசலாவும், குடலும் நன்கு பிணைந்திருந்தது. அதன்பின் பெரியவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பில்லை உடன் பெப்பர் கொஞ்சம் கலந்து குடலோடு சேர்த்து கிரேவியாக கொடுத்தனர். இதற்கும் இட்லிக்கும் உண்டான காம்பினேஷனில் மீண்டும் இரண்டு இட்லி உள்ளே போனது. ஆசானூருக்கு சென்று சாப்பிட இடம் இல்லாமல் இங்கேயே வயிறு நிரம்பியது.

நிச்சயம் சத்தியமங்கலம் பக்கம் சென்றால் சாப்பிட்டு பாருங்க தலைக்கறி, மற்றும் குடல் கறியையும் எப்போதும் மறக்காத சுவை. மீண்டும் சாப்பிட தோன்றும் சுவை. சத்தியமங்கலம் என்றலே வீரப்பன் ஞாபகம் வரும் தற்போது எனக்கு தலைக்கறியும், குடல்கறியும் தான் ஞாபகம் வருகிறது.

ஒரு நபர் எட்டு இட்லி 2 ப்ளேட் தலைக்கறி, 2 ப்ளேட் குடல் கறி சாப்பிட்டால் நிச்சயம் நகர்புறத்தில் 300 ரூபாய்க்கு மேல் தான் பில் வரும். ஆனால் இங்கு மிக குறைவான விலையில் அசத்தலான டேஸ்ட்டில் இருந்தது.

பெயர்:  ஹோட்டல் அன்னலட்சுமி ( சைவம், அசைவம்)
இடம்: சத்தியமங்கலம் ( பஸ்நிலையத்தில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் இடப்பக்கம் உள்ளது
விலை: ஒரு ப்ளேட் தலைக்கறி 40 ரூபாய், குடல்கறி 40 ரூபாய் என மிக குறைந்த விலைதான். 

22 comments:

  1. குடல்கறியா!? அதென்னமோ எனக்கு பிடிக்குறதில்ல

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கம் எல்லாம் பிடிக்காது அல்லவா அது போலத்தானக்கா இதுவும்..

      Delete
  2. நானெல்லாம் இட்லிக்கு சட்னியும், மன்னிக்கவும், சட்னிகளும் சாம்பாரும்தான்! :)))

    ReplyDelete
    Replies
    1. அதற்கான ஓட்டலும் இருக்கிறது.. அத அடுத்த பதிவில் பார்ப்போம் சார்...

      Delete
  3. அடுத்த முறை சோத்துக்கடை போடும்போது படங்கள் போட முயற்சி செய்யவும். இப்பதான் எல்லோர்கிட்டயும் மொபைல்ல கேமரா இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. என்னிடம் இருக்கும் மொபைல் கொஞ்சம் சுமாரான மொபைல் தானக்கா... சோ .. க்ளீரா வராது என்பதால் எடுப்பதில்லை...

      Delete
  4. பிப். முதல் வாரத்தில் சத்தியமங்களம் விஜயம்.கன்டிப்பாக அட்டெனஸ் போட்டு விடுகிறேன்.

    ReplyDelete
  5. ம்ம்ம்ம்ம்ம்...... வாசனை ஆளை தூக்குதே, சரி அடுத்த முறை அங்கே வரும்போது போகலாம் !!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் போகலாம் சுரேஷ்... உங்க பயணதிட்டத்தை மைசூர் வழியா போடுங்க சுவைத்திடுவோம் குடல்கறியை...

      Delete
  6. மரியாதைக்குரியவரே,திரு சதீஷ் சங்கவி அவர்களே வணக்கம். சத்தியமங்கலம் அன்னலட்சுமி ஓட்டலை விளம்பரப்படுத்துவது தங்களுடைய தனிப்பட்ட விருப்பமா?அல்லது !!!!!!!!!!!!!!???????வாழ்த்துக்கள் தங்களுக்கு உண்மையிலேயே அன்னலட்சுமி ஓட்டலில் அனைத்து நேர உணவு வகைகளும் சிறப்பாகவே இருக்கும்.ஏன்னா நாங்களும் அங்கேதாங்க சாப்பிடுவோம்.அதாங்க போக்குவரத்து தொழிலாளிங்க..ஓட்டுனருங்க....

    ReplyDelete
    Replies
    1. அண்ணே வணக்கம்.. எனக்கு அந்த ஓட்டல் சாப்பாடு வகை மிக பிடிச்சிருந்தது நீங்களும் முயற்சித்து பாருங்களேன் என்பதற்காகத்தான் இந்த பதிவு... மற்றபடி விளம்பரம் எல்லாம் இல்லீங்க...

      Delete
  7. நம்பியூரில் இருக்கும் போது ஒரு முறை சென்றுள்ளேன்...

    உவ்வே...!

    ReplyDelete
  8. குடல் கறி குடல் கறின்னு வாசிப்பதோடு சரி, இந்த தடவை ஊர் வந்தும் சாப்பிட கிடைக்கவில்லை, மும்பையில ஒருவேளை எல்லாரும் ராஜி தங்கச்சி கட்சிக்கு மாரிட்டான்களோ என்னமோ.

    ReplyDelete
  9. இட்லியும் சுடச்சுட குடல்கறியும் வாசிக்கவே நாவூறுதே. நீங்கள் கொடுத்து வைத்தவர் தான். அதுவும் இவ்வளவு குறைந்த விலையில் மிக அருமை, சத்தியமங்கலம் பக்கம் போனால், போனால் என்ன கண்டிப்பா ஒருவாட்டி போய் ருசித்துவிட வேண்டும். :))

    ReplyDelete
  10. I am from sathy..Check it in Gounder mess too..!!

    ReplyDelete
  11. ஆ ஒரே ஜொள்ஸா ஊறுதே.. சொல்லி விட்டா கூரியர்ல அனுப்புவாங்களா.. :)

    ReplyDelete
  12. அண்ணே கூடிய சீக்கிரம் போயி சாப்பிட்டுட்டு வந்து சொல்லுறேன்

    ReplyDelete
  13. கூடிய சீக்கிரம் செல்கிறேன்

    ReplyDelete