Showing posts with label சோத்துக்கடை. Show all posts
Showing posts with label சோத்துக்கடை. Show all posts

Thursday, April 4, 2019

சோறு முக்கியம் பாஸ்... (ஓட்டல்களின் தொகுப்பு)

விகடனில் வெளி வந்த சோறு முக்கியம் பாஸ் என்ற கட்டுரையில் தமிழகத்தில் உள்ள பல ஓட்டல்களின் தொகுப்பில் ஓட்டல் பேரை மட்டும் தொகுத்து ஒரு லிஸ்ட் நண்பர் சுரேஸ் அவர்களால் பகிரப்பட்டது. அவரிடம் இருந்து அந்த தொகுப்பு உங்களுக்காக....

56    Shivanyas Kumbakonam kitchen restaurant    Anna nagar, Shanthi colony, 5th cross, Chennai    Uppukari, non veg, meals

55    Ponnaiya mess    Madurai - Mandabam road, Paramakudi    மீன் சாப்பாடு, காடை சாப்பாடு, கோழி சாப்பாடு,  மட்டன் சாப்பாடு, குடல் சாப்பாடு, மட்டன் முட்டைக்கறி சாப்பாடு

54    Akka Kadai Chennai- Trichy NH, Tholuthur @252kms, Before bridge    காலை 7.30-க்கெல்லாம் உணவகத்தைத் திறந்துவிடுகிறார்கள். இட்லி, பூரி, கட்டதோசை... கல் தோசையைத்தான்

‘கட்டதோசை’ என்கிறார்கள். தொட்டுக்கொள்ள எலும்புக் குழம்பு. முதல்நாள் வைத்து மிஞ்சுகிற மீன் குழம்பையும் கருவாட்டுக் குழம்பையும் அடுப்புத் தணலில் வைத்து மூடிவிடுகிறார்கள்.  11

மணிக்கெல்லாம் சாப்பாடு தயாராகிவிடும். 70 ரூபாய். சாதத்தோடு மீன்குழம்பு, நாட்டுக்கோழிக்குழம்பு, மட்டன் குழம்பு, கருவாட்டுக்குழம்பு, ரசம், மோர்... தொடுகறிகளாக கூட்டு, பொரியல்.

53    Keerthika A-1 Restaurant Tiruppattur road, Aandavar shed nearby, Devakottai    `நாட்டுக்கோழி உப்புக்கறி’, இறால் கிரேவி, நண்டு கிரேவி, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு,

மீன்குழம்பு, ரசம், தயிர்

52    Ganesh Mess Sivagangai - Tiruppattur road, Madagupatti    7 மணிக்குக் காலைச் சிற்றுண்டி. இட்லியும் பொங்கலும் கிடைக்கும். அதற்கும் நிறைய டிமாண்டு. மதியம் 12.30-க்கு

சாப்பாடு. செட்டிநாட்டுக்கே உரிய மண்டி, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, சாம்பார், வற்றல் குழம்பு, ரசம், மோர்.

51    Kovai alangar mess anna nagar east, near iyappan temple, Chennai    கொங்கு உணவு, கோவை அலங்கார் விலாஸின் சிறப்பே பிரியாணி வகைகள்தாம். அதுவும் கொங்கு

ஸ்டைல்தான். கீமா ரைஸ் என்று ஒன்று வைத்திருக்கிறார்கள். பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது. கோழி வடை, ‘கொங்கனாபுரம் பிச்சுப்போட்ட கோழி’, பொள்ளாச்சி மிளகு லெக்பீஸ் 

வறுவல், பள்ளிப்பாளையம் சிக்கன், காங்கேயம் சிக்கன் சுக்கா

50    Alagappan grama hotel - hut type Omalur - Salem Dharamangalam road, indira nagar, near salem    காலை 8 மணிக்கெல்லாம் சுடச்சுட உணவுகள் தயாராகிவிடுகின்றன. களி,

சாமைச்சோறு, பொங்கச்சோறு, முட்டைப்பணியாரம். சுடச்சுடச் சாப்பிடலாம். பெரிய களி உருண்டை 25 ரூபாய். நாட்டுக்கோழிக் குழம்பு, கருவாட்டுக் குழம்பு, தலைக்கறிக் குழம்பு, மீன் குழம்பு...சைவ

விரும்பிகளுக்காகக் கீரைக்குழம்பு, சாம்பார், தக்காளிச் சட்னியும் வைத்திருக்கிறார்கள். நாட்டுக்கோழிக்குழம்பு அல்லது கருவாட்டுக் குழம்பு... களிக்கு அற்புதமான பக்கத்துணை.

49    Maya Bazaar restaurant    Bhavani road, near police station, Sangagiri    காலை 7.30-க்கு உணவகத்தைத் திறக்கிறார்கள். இட்லி, தோசை, அசைவத் தொடுகறிகள் அந்த

நேரத்திலேயே களைகட்டுகின்றன. மதிய உணவு 11.30-க்கெல்லாம் தயாராகிவிடுகிறது. 5 மணி வரை சாப்பாடு சாப்பிடலாம். அதன்பிறகு இரவு 9 மணி வரை சிற்றுண்டிகள். சைக்கிள் சுக்கா, மோட்டார்

வறுவல், ஹெல்மெட் வறுவல், ராக்கெட் ரோஸ்ட், ஏரோப்ளேன் வறுவல், அணுகுண்டு சிப்ஸ், கம்ப்யூட்டர் ஃப்ரை

48    Sethuram mess    Fathima high school nearby, Puthur, Trichy    1 மணிக்குத் திறந்து 4 மணிக்கெல்லாம் மூடிவிடுகிறார்கள், சிக்கன் தொக்கு, காடைத்தொக்கு, இறால்தொக்கு,

நண்டு மசாலா, மட்டன்குழம்பு, மீன்குழம்பு. கோழிப்பிரட்டல், காடை வறுவல், நண்டுவறுவல், இறால்வறுவல், மீன்வறுவல்

47    Prem's grama Bojanam    Sardar patel road, adayar, Chennai    12 மணிக்கு உணவகம் திறக்கிறார்கள். 3 மணி வரை சாப்பாடு, கிராம போஜனம் உணவகத்தின் சிறப்பு, ரொட்டி

வகைகள். கிராமத்தில், புகைகிற அடுப்பை ஊதிவிட்டுக்கொண்டே விரல் ரேகைகள் பதியப் பதிய பாட்டி சுட்டுத்தரும் அந்த நினைவுகளை மீட்கிறது. சோள ரொட்டி, ராகி ரொட்டி, கம்பு ரொட்டி, சாமை

ரொட்டி...கர்நாடகத்துத் தட்டே இட்லி, பெண்ணா தோசை,  நீர்தோசை, ஆந்திர பெசரட்டு... எல்லாம் சிறுதானியங்களில் செய்தவை

46    Palaniyappa mess South 4th street,Near dhandayuthapani temple, Tamil Nadu 622001    சாதம், ஒரு பொரியல், சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, சாம்பார், ரசம்,

மோர். கேட்பவர்களுக்கு நாட்டுக்கோழிக் குழம்பும், காரக்குழம்பும் தருகிறார்கள். பழனியப்பா மெஸ்ஸின் ஸ்பெஷல், பிரியாணி வகைகள். மட்டன் பிரியாணி, கோழி லெக்பீஸ் பிரியாணி இரண்டும்

சிறப்பு. காலை 7 மணிக்கெல்லாம் மெஸ்ஸைத் திறந்து விடுகிறார்கள். திறந்தவுடன் சுடச்சுட ஆட்டுக்கால் சூப் தருகிறார்கள்.  வெறும் சூப் 5 ரூபாய்தான். 11 மணியிலிருந்து இரவு 10 மணிவரை சாப்பாடு,

தொடுகறி வகைகள் சாப்பிடலாம். இரவு, இடியாப்பம், ஆப்பம், தோசை வகைகள் சாப்பிடலாம்.

45    Donnai Biriyani house சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில், ஒக்கியம்பேட்டை, துரைப்பாக்கத்தில் மூட்டக்காரன்சாவடி என்ற இடத்தில் இருக்கிறது தொன்னை பிரியாணி ஹவுஸ்.    

உணவகத்தை அதிகாலை 3 மணிக்குத் திறக்கிறார்கள். திறந்தவுடன் சுடச்சுட சிக்கன் பிரியாணி சாப்பிடலாம். 5 மணிக்கு மூடிவிடுகிறார்கள். மீண்டும் 12 மணிக்குத் திறந்து  2 மணிக்கு மூடுகிறார்கள்.

அசைவ மிலிட்டரி சாப்பாடு விரும்புபவர்கள் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் செல்லவேண்டும். இரவு 7 மணிக்குச் சிற்றுண்டி. கறிதோசை, கறிவேப்பிலைப் பொடி தோசை சாப்பிடலாம். மட்டன்

பிரியாணியும் கிடைக்கும்.

44    Sree Konar vilas புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில், ஜி.கே.எம்.மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ஸ்ரீ கோனார் விலாஸ் மதியம் 11 முதல் இரவு 11 மணி வரை, பொன்னி

அரிசிச் சாதம், சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, சிக்கன் 65  நான்கு பீஸ், முட்டைத் தொக்கு, ரசம், மோர். நிறைவான மதுரைச் சாப்பாடு. சிக்கன் குழம்பும், மட்டன் குழம்பும் அமோகமாக

இருக்கின்றன. சிக்கன் 65, முட்டைத் தொக்கு, மட்டன் பிரியாணிதான் ஸ்ரீ கோனார் விலாஸின் அடையாளம். மிகச்சிறப்பு. சிக்கன் ரோஸ்டட் பிரியாணி என்று ஒருவகை இருக்கிறது. மதுரை மட்டன்

குழம்பு, சிக்கன் செட்டிநாடு குழம்பு, சிக்கன் முந்திரி கிரேவி, வஞ்சிரம் மீன் குழம்பு, விரால் மீன் குழம்பு

43    Manna Mess அச்சிறுப்பாக்கம் லூப் சாலையில், காவல் நிலையத்துக்கு அருகில் இருக்கும் மன்னா மெஸ்    காலை 11.30க்குத் தொடங்கி 3.30-க்கெல்லாம், வெள்ளிக்கிழமை செல்பவர்களுக்கு

நெய்ச்சோறும் மட்டன் நிஹாரியும் கிடைக்கும். கானாங் கெளுத்தி மீன் போட்டு சரிக்குச் சரியாக மாங்காய் போட்டிருக்கிறார்கள்

42    Selviyammal Grama hotel    சென்னை, ராமாவரம், கற்பகாம்பாள் நகர் முதல் தெருவில் உள்ள செல்வியம்மாள் கிராமிய உணவகம்     மதியம் 12 மணி முதல் 3 மணி வரை, கிளிச்சை மீன்,

சங்கரா மீன் வறுவல்கள், காடைப் பிரட்டல், நாட்டுக்கோழி வறுவல், மட்டன் மசாலா,  ஈரல் கிரேவி…இரவுச் சிற்றுண்டி ரொம்பவே ஸ்பெஷல். வாத்து கிரேவி, ஆட்டுக்கால் பாயா, கணவாய் மீன் தொக்கு,

சுறாப் புட்டு, தலைக்கறி என அசத்தலான அசைவத் தொடுகறிகளைச் சாப்பிடலாம். கூடவே, சிறுதானியச் சிற்றுண்டிகள். மூங்கிலரிசி தோசை, பனைவெல்ல இனிப்பு தோசை, நாட்டுச்சோளம்,

பச்சைப்பயறு, குதிரைவாலி தோசைகள், இடியாப்பம் - நாட்டுச்சர்க்கரை - தேங்காய்ப்பால், கல்யாண முருங்கை, கரிசலாங்கண்ணி என மூலிகைத் தோசைகள், கறி சப்பாத்தி

41    Hot pot hotel    ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை சாலையில்  இருக்கும் ‘ஹாட் பாட்’ உணவகம்.    1.30-க்கு உணவகம் தொடங்குகிறது. மண்பானை சாப்பாடு 80 ரூபாய். பொன்னியரிசி சாதம்,

கூட்டு, பொரியல், மீன் குழம்பு, மட்டன் குழம்பு, கோழிக் குழம்பு, சாம்பார், வற்றல் குழம்பு, ரசம், மோர், பாயசம். குழம்பு வகைகள், கூட்டு, பொரியலெல்லாம் மண்பாண்டத்தில் செய்தவை. ஹாட் பாட்

உணவகத்தின் சிறப்பு, பிரியாணி வகைகளும் தொடுகறிகளும்தான்.

40    Kooraikadai    ராஜபாளையம், ரயில்நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘கூரைக்கடை கூரைக்கடையின் ஸ்பெஷல், மட்டன் சாப்பாடு. அயிரை மீன் குழம்பு அசத்தலாக இருக்கிறது.

39    Madurai sree Devar hotel    சென்னை, பாரிமுனையில் உயர்நீதிமன்றத்துக்கு எதிரே, சுக்குராமத் தெருவில்    பிரியாணியில் மட்டும் சிக்கன், மட்டன், காடை, வான்கோழி,

முயல், நாட்டுக்கோழி, இறால், சிக்கன் 65, வஞ்சிர மீன், வாத்து என 10 வகைகளை வைத்திருக்கிறார்கள். நண்டு ஃப்ரை, வான்கோழி ஃப்ரை, சிக்கன் சுக்கா, வஞ்சிர மீன் வறுவல், வஞ்சிர மீன் கிரேவி,

நெத்திலி வறுவல், முயல் ஃப்ரை, மட்டன் கோலா, வாத்து ஃப்ரை, நாட்டுக்கோழி ஃப்ரை, கடம்பா மீன் ஃப்ரை, மட்டன் சுக்கா, இறால், தலைக்கறி

38    Nelveli veg restaurant    சென்னை, பெசன்ட் நகர், முதல் பிரதான சாலையில், மின்சார வாரிய அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் நெல்வேலி சைவ உணவகம்    ‘நெல்வேலி ஸ்பெஷல்

தென்னிந்திய விருந்து’,திருநெல்வேலியின் உன்னதமான சைவ உணவை அசலாகத் தருகிறார்கள் ‘நெல்வேலி’யில், 4 மணிக்கு ஸ்நாக்ஸ் தயாராகிவிடும். வாழைப்பூ வடை, கீரை வடை, பஜ்ஜி,

பக்கோடா வகையறாக்கள்...  மாலை சிற்றுண்டி... கம்பு தோசை, கொள்ளு தோசை, பச்சைப்பயறு தோசை, ஆப்பம்-தேங்காய்ப்பால், ஸ்பிரிங்ரோல் தோசை, தக்காளி தோசை, பொடி தோசை

37    Guruma hotel    சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், காவேரிபாக்கம் என்ற இடத்தில் உள்ள ‘குருமா ஹோட்டல்’, பேருந்து நிறுத்தத்துக்கு எதிரில் சற்று

உள்ளடங்கியிருக்கிறது இந்த உணவகம்    குருமா ஹோட்டலின் ஸ்பெஷல், இடியாப்பம்- ஆட்டுக்கால் பாயா. ஆனால், காலை ஏழு மணியிலிருந்து எட்டு மணிக்குள் சென்றால் மட்டுமே கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் சிக்கன் பிரியாணி போடுகிறார்கள். மற்ற நாள்களில் மட்டன் பிரியாணிதான்

36    99 kilometer coffee stop சென்னையிலிருந்து சரியாக 99 கிலோ மீட்டர்... அச்சிறுப்பாக்கத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, ‘99 கிலோமீட்டர் காபி ஸ்டாப்’   

`சிறப்புச் சிறுதானிய மதிய உணவு’ காம்போ 190 ரூபாய்., காலை 5.40-க்கு உணவகத்தைத் திறக்கிறார்கள். 6.30 மணியிலிருந்து டிபன் கிடைக்கும். எல்லாம் நம் பாரம்பர்யச் சிற்றுண்டிகள். மாப்பிள்ளைச்

சம்பா அவல் உப்புமா, கொள்ளுக் கஞ்சி, வெங்காய ராகி ரவா தோசை, முளைக்கட்டிய பயிர் இட்லி, சீரக இட்லி, முடக்கத்தான் தோசை, வல்லாரைத் தோசை, தூதுவளைத் தோசை, பிரண்டைத் தோசை

33    Naidu mess திருவள்ளூர்ப் பேருந்து நிலையத்துக்கு எதிரில், ராஜாஜி சாலையில் சிறு சந்துக்குள் இருக்கிற நாயுடு மெஸ் நாயுடு மெஸ்ஸின் சிறப்பு, வஞ்சிர மீன் வறுவல், சுறாப்புட்டு, நாயுடு

மெஸ்ஸில் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒன்று. நெத்திலிக் கருவாட்டு ஃப்ரை

32    Arusuvai restaurant சிதம்பரம், கீழவீதியில் உள்ள ஆறாம் திணை உணவகம், தூய அறுசுவை உணவை வழங்குகிறது இளநீர் பாயசம், புளிப்புக்கு மாங்காய் சாம்பார், கசப்புக்கு

முடக்கத்தான் ரசம், கார்ப்புக்கு சுண்டைக்காய் வற்றல் குழம்பு, துவர்ப்புக்குக் கோவைக்காய் பொரியல், உவர்ப்புக்கு கிடாரங்காய் ஊறுகாய். இவைதவிர, கீரைக்கூட்டு, உருளைக்கிழங்கு அவியல் கறி,

முளைக்கட்டிய பயறு சாலட், கருப்பட்டியில் செய்த சந்திரகலா, செக்கெண்ணையில் பொரித்த அப்பளம், மிளகாய் வற்றல், மண்பானைத் தயிரில் தாளித்த மோர்.

31    Ashoka mess அறந்தாங்கியில், புதுக்கோட்டைச் சாலையில் இருக்கும் அசோகா மெஸ்ஸில் 2 மணிக்கு மெஸ் தொடங்கிவிடுகிறது.  அன்லிமிடெட் சாப்பாடு 60 ரூபாய். மட்டன் குழம்பு, சிக்கன்

குழம்பு, மீன் குழம்பு, இறால் கிரேவி, வற்றல் குழம்பு, ரசம், மோர்... கூட ஒரு கூட்டு, ஒரு பொரியல். அசோகா மெஸ்ஸின் ஸ்பெஷலே சைடிஷ்தான்.  இறால், சிக்கன் , மட்டன், நண்டு. அளவெல்லாம் இல்லை.

கரண்டியில் அள்ளி வைப்பதுதான். போதுமென்று சொல்லும் வரைக்கும் அள்ளி வைக்கிறார்கள். இறால், மட்டன், நண்டு மூன்றும் தலா 120 ரூபாய்

30    Nilasoru restaurant புதுக்கோட்டை, வடக்குராஜ வீதியில் பிருந்தாவனத்துக்கு அருகில் இருக்கிற ‘நிலாச்சோறு உணவக    ஏழரை மணிக்கு டிபன் ரெடியாகிவிடுகிறது. சிறுதானிய இட்லி,

கேழ்வரகு தோசை,  கேழ்வரகுக்கூழ், கம்மங்கூழ், வரகுப் பொங்கல், கம்பு பூரி சாப்பிடலாம். தேங்காய்ச் சட்னி, மல்லிச் சட்னி, பிரண்டைச் சட்னி, கடலைச் சட்னி...மதியம், இயற்கைச் சாப்பாடு. 80

ரூபாய்...மாலை, இயற்கை தானியங்களில் செய்யப்படும் பலகாரங்கள்; இரவு, தானியப் பொடி தோசை வகைகள், இடியாப்பம் - தேங்காய்ப்பால், நவதானிய அடை சாப்பிடலாம்.

29    Amma Restaurant    வேலூர், பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரில் இருக்கிற `அம்மா ரெஸ்டாரன்ட்    சிக்கன் பிரியாணியும் மட்டன் பிரியாணியும் மட்டும்தான். தொடுகறியாக

வெங்காயப் பச்சடியும், எண்ணெய்க் கத்திரிக்காயும் தருகிறார்கள். வேறெந்த சைடிஷும் கிடையாது.  அரை பிளேட் பிரியாணி 100 ரூபாய். தேவைப்பட்டால் கால் பிளேட்டோ, அரை பிளேட்டோ குஸ்கா

வாங்கிக்கொள்ளலாம். கால் பிளேட் 20 ரூபாய்.

28    OK Burma atho shop மூலக்கடை, மேம்பாலத்துக்குக் கீழே, ஜி.என்.டி சாலையில் உள்ள ‘ஓ.கே. பர்மா அத்தோ கடை’     ஓ.கே. அத்தோ கடையின் ஸ்பெஷல் என்றால், பாங்கா அத்தோ,

சிக்கன் அத்தோ, முட்டை சீஜோ, பேஜோ மசாலா, பேஜோ மொய்ங்கா, முட்டை பேஜோ அத்தோ, இறால் வடை. அத்தோ, சீஜோ, மொய்ங்கா. மூன்றுமே நூடுல்ஸ் வகையறாக்கள்தான்.  அத்தோவுக்கு

ஆரஞ்சு நிற நூடுல்ஸ். சீஜோவுக்கு பிரௌன் கலர். மொய்ங்காவுக்கு வெள்ளை. பேஜோ குழம்பு, முட்டை மசாலா, பாங்கோ அத்தோ  வித்தியாசமான உணவு. முட்டைக்கோஸ், முட்டை, பேஜோ

மூன்றையும் சேர்த்து பர்மிய மசாலாவைத் தூவி நன்கு கிளறி அள்ளித்தருகிறார்கள், பேஜோ மசாலாவின் வடிவமே அழகு. உடைக்கப்படாத முழு பேஜோவின் நடுவில் புளித்தண்ணீர் விட்டு, பொரித்த

வெங்காயம், பூண்டு, கொத்தமல்லித்தழை, எண்ணெய் விட்டு, நடுவில் கொஞ்சம் கடலை மாவைத் தூவி, அகன்ற தட்டில் வைத்துத் தருகிறார்கள்.

27    Karaikudi Aachi mess திருவண்ணாமலை சந்நிதித் தெருவில் உள்ள காரைக்குடி ஆச்சி மெஸ்ஸில்    லஞ்ச் மட்டும்தான். 12 மணிக்குத் தொடங்கி 4 மணிக்கு நிறைவடைந்துவிடும்.

ஸ்பெஷல் சாப்பாடு 170 ரூபாய். ஒரு கப் சிக்கன், ஒரு கப் மட்டன், ஒரு துண்டு மீன்,  ஒரு முட்டை, கூட்டு, பொரியல், சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன்குழம்பு, சாம்பார், ரசம், மோர், தயிர்.

26    Carnival family restaurant சென்னை, பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள கார்னிவல் ஃபேமிலி ரெஸ்டாரன்டில்    `ராஜபோக விருந்தி’ல் மொத்தம் 25 டிஷ்கள். சிக்கன்,

மட்டன், இறால், காடை தொடங்கி தேன்மிட்டாய், கடலை மிட்டாய், இளநீர்ப் பாயசம். `மெகா ராஜபோக விருந்து’ம் இருக்கிறது. அதன் விலை 699 ரூபாய். மேற்கண்ட டிஷ்கள் தவிர்த்து, நண்டு ஃப்ரை,

தலைக்கறி, குடல் வறுவல் கூடுதலாக வரும். மாலையில், `ராஜபோகச் சிற்றுண்டி’ சாப்பிடலாம். அதுவும் 599 ரூபாய். சைடிஷ்கள் எல்லாம் ஒன்றுதான். சாதத்துக்குப் பதில் கொத்துப்பரோட்டா,

இடியாப்பம், கறிதோசை தருகிறார்கள்.

25    New President hotel செக்காலை ரோட்டில், பாண்டியன் தியேட்டருக்கு எதிரில் இருக்கிற, ‘நியூ பிரசிடென்ட்’ ஹோட்டல்    காலை 7 மணி முதல் 11.30 வரை வழக்கமான டிபன் வகைகள்.

11.30 முதல் 3 மணி வரை கட்டுச் சாதங்கள். லெமன் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், புளி சாதம்,  தேங்காய் சாதம், சாம்பார் சாதம். கூடவே  வெஜ் பிரியாணி, காளான் பிரியாணியும் உண்டு. மாலை 4

மணி வரை கட்டுச்சாதம் களைகட்டுகிறது. அதன்பிறகு இடைப் பலகாரம். காரைக்குடிக்கே உரித்தான மரபுப் பலகாரங்கள். வெள்ளைப்பணியாரம், குழிப்பணியாரம், பூரணக் கொழுக்கட்டை,

கந்தரப்பம், கற்கண்டு வடை, போளி, மகிழம்பூப் புட்டு, கேழ்வரகுப் புட்டு.

24    Vignesh nattukoli kooraikadai    தேனியிலிருந்து போடி செல்லும் பிரதான சாலையில் கோடாங்கிபட்டியில் இருக்கிறது, ‘விக்னேஷ் நாட்டுக்கோழிக் கூரைக்கடை.’      அன்லிமிடெட்.

நாட்டுக்கோழிக் குழம்பு, கருவாட்டுக் குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, ரசம், மோர்..இந்த உணவகத்தின் ஸ்பெஷல், நாட்டுக்கோழி சுக்கா. மாலை நாட்டுக்கோழிக் குழம்பு, வறுவல், சுக்காவோடு

சுடச்சுட இட்லி, தோசை, பரோட்டா சாப்பிடலாம். 

23    Sree Narayana Coffee house கானாடுகாத்தான் ராஜா சர் தெருவிலிருக்கும் ‘ஸ்ரீ நாராயணா காபி ஹவுஸு’    வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், பூரணக் கொழுக்கட்டை எனச்

செட்டிநாட்டுப் பலகாரங்கள் எல்லாம் கிடைக்கின்றன. மதியம் ‘செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச்’ சாப்பிடலாம்.

22    Nalan restaurant `நளன் உணவகம்.’ கரூர் உழவர் சந்தைக்கு அருகில் பழைய பைபாஸ் சாலையில் இருக்கிறது.    சாமை, திணை, வரகு, குதிரைவாலி, பனிவரகு என தினமொரு தானியத்தில்

பொங்கல் கிடைக்கிறது. பாசிப்பருப்பு தோசை, முருங்கைக்கீரை தோசை, சோள தோசை... எனச் சொல்லும்போதே நாவூற வைக்கும் தோசை வகைகள் இருக்கின்றன. தூதுவளை சட்னி, பீர்க்கங்காய்

சட்னி, கேரட் சட்னி, வேர்க்கடலை சட்னி, இஞ்சி சட்னி என தினமொரு வித்தியாசமான சட்னியும் கிடைக்கிறது. 12 மணிக்கெல்லாம் மீல்ஸ் தயாராகிவிடுகிறது. 75 ரூபாய். சாதம், புடலங்காய் சாம்பார்,

மொச்சைக்குழம்பு, வெற்றிலை ரசம், அவரைக்காய்ப் பொரியல், சௌசௌ கூட்டு, பச்சரிசிப் பாயசம், சுட்ட அப்பளம், வாழைப்பூ வடை, சைவ மோர்...

21    Sree Murugavilas restaurant கரூர்-திண்டுக்கல் பைபாஸ் சாலைப் பயணத்தில், மலைக்கோவிலூர் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீமுருகவிலாஸ் உணவகத்தில் மண்பாண்டச் சமையலின் சுவை,

தண்ணிக் குழம்பு, மட்டன் எலும்புக் குழம்பு, மீன் குழம்போடு ஒரு மீல்ஸ், ஓர் உப்புக்கறி...  190 ரூபாயில் இதமான சுவையான அசலான பாரம்பர்யமான விருந்து

20    Maruthi restaurant    தேனி - மதுரைச் சாலையில் உள்ள மாருதி ரெஸ்டாரென்ட்டு    தினை சர்க்கரைப்பொங்கல், காளான் வரகரிசி பிரியாணி, சாமை சாம்பார்சாதம்,

குதிரைவாலி தயிர்சாதம்... எல்லாம் ஒவ்வொரு கிண்ணம் தருகிறார்கள். லிமிடெட்தான். சைடிஷாக, பாகற்காய் இனிப்புப்பச்சடி.  தொட்டுக்கொள்ள, நெல்லிக்காய்த் துவையல்...  இறுதியில், ஒரு

கிண்ணம் நிறையப் புதினா - மல்லி ஜூஸ்.

19    Thottathu virunthu ஈரோடு, வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள,  `தோட்டத்து விருந்து’ தோட்டத்து விருந்து ஸ்பெஷல்’ என்றே ஒரு சைடிஷ் வைத்திருக்கிறார்கள். ‘பிச்சுப்போட்ட

கோழி’-க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. ஆந்திரா முட்டை’ என்று ஒன்று...

18    Karuppaiya mess    விருகம்பாக்கம், ஆற்காடு சாலை,  சந்திரா மெட்ரோ மாலின் உள்ளே இருக்கும் கருப்பையா மெஸ்ஸு    12 மணிக்கெல்லாம் லஞ்ச் ரெடியாகி விடுகிறது. சைடிஷ்

தனியாக வாங்க வேண்டியதில்லை. சாப்பாட்டோடு வந்துவிடும். மட்டன் சாப்பாடு, சிக்கன் சாப்பாடு, நாட்டுக்கோழி சாப்பாடு, காடை சாப்பாடு, நண்டு சாப்பாடு, மட்டன் கோலா உருண்டை

சாப்பாடு, விரால் மீன் குழம்பு சாப்பாடு என  12 வகையான சாப்பாட்டு வெரைட்டிகள் வைத்திருக்கிறார்கள். நாட்டுக்கோழி சாப்பாடும், நண்டு சாப்பாடும் சர்ப்ரைஸ். மீன் ஐட்டங்களும் சிறப்பு.

நெத்திலி மீன், விறால் மீன் குழம்புகள், வஞ்சிரம் ஃபிஷ் கறி மூன்றும் ஆஸம்.

17    Karthik mess திருச்சி கன்டோன்மென்ட், வில்லியம்ஸ் சாலையில் உள்ள கார்த்திக் மெஸ்    அயிரை மீன்குழம்பு, விறால் மீன்குழம்பு, நெத்திலி மீன்குழம்பு, காரப்பொடிக்குழம்பு என

நான்கு வகையான குழம்புகள், வஞ்சிர மீன் வறுவல், நெத்திலி மீன் வறுவல், போன்லெஸ் சில்லி ஃபிஷ் என ரசனையான மீன் சைடிஷ்கள் இங்கே கிடைக்கின்றன. காரப்பொடி மீன்குழம்பு ‘கார்த்திக்

மெஸ்’ஸின் ஸ்பெஷல்.

16    Mangalambika vilas கும்பேஸ்வரர் சந்நிதியின் உள்ளே இருக்கிறது ‘மங்களாம்பிகா விலாஸ்’ காபி ஹோட்டல்.    அன்லிமிடெட். சாம்பார், வற்றல் குழம்பு, மோர், பொரியல், இரண்டு

கூட்டுகள், ஊறுகாய், பாயசம், அப்பளம், மிளகாய் வற்றல். மனசுக்கு நிறைவான சாப்பாடு. குழைந்த பருப்பு கணக்காகக் கெட்டியாக, காய்கறிக் கலவையாக இருக்கிறது சாம்பார். உப்பு, புளி, காரம்

எல்லாமே கச்சிதம். வற்றல் குழம்புதான் மங்களாம்பிகாவின் அடையாளம்.

15    Sree Parasakthi hotel சேலம், செவ்வாய்ப்பேட்டை, வெங்கடப்பன் சாலையில் சற்று உள்ளடங்கியிருக்கும் ‘ஸ்ரீஸ்ரீ பராசக்தி உணவக’    மீன்குழம்பு, நாட்டுக்கோழிக்குழம்பு,

மட்டன்குழம்பு, ‘தண்ணி’க்குழம்பு, சிக்கன் மசால் குழம்பு என 5 விதமான குழம்புகள் தருகிறார்கள். பிச்சுப்போட்ட நாட்டுக்கோழி ஃபிரை, சேலத்துக்கேயான தனித்தன்மை மிக்க சைடிஷ்.

14    Idlies    சென்னை, அசோக்நகர் 18-வது அவென்யூவிலிருக்கிறது ‘இட்லீஸ்’ (Idlies) பொடி இட்லி, பொடிஸா, வெல்ல தோசை, தயிர்ப்பொடி இட்லி, நெய்ப்பொடி இட்லி, பூண்டுக்குழம்பு

இட்லி, தவா ஃப்ரை பட்டர் இட்லி, மோர்க்களி, மட்கா தயிர்சாதம்...

13    Vaira Maligai திருநெல்வேலி,   முருகன்குறிச்சியில்  இருக்கும் ‘வைர மாளிகை’     நாட்டுக்கோழி பிரியாணி, நாட்டுக்கோழி ஆனியன் ஃப்ரை, நாட்டுக்கோழி சாப்ஸ், நாட்டுக்கோழி

சுக்கா, இரவு  7 மணியில் இருந்து 11 மணி வரை ‘பரோட்டா- பொறிச்ச கோழி’ கிடைக்கிறது

12    Ezham suvai திருச்சி,  தில்லைநகர் இரண்டாவது கிராஸில் உள்ள ஏழாம் சுவை ‘சைவ’ உணவக    ஹாட் வெஜ் ஃபிஷ், மங்கோலியன் வெஜ் லாம்ப், ஆரஞ்சு வெஜ் சிக்கன், டிம் சம் வெஜ்

லாம்ப், வெஜ் சிக்கன் லாலிபாப்,  வெஜ் எக் போண்டா,  வெஜ் ஃபிஷ் ஃபிங்கர், வெஜ் சிக்கன் ரைஸ், வெஜ் கோலா உருண்டை, தந்தூரி வெஜ் சிக்கன் ரோல்...‘வாழைப்பூ ஃப்ரைடு ரைஸ்’ இந்த

உணவகத்தின் இன்னொரு ஸ்பெஷல்

11    Santhai mutton hotel நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம் பழைய மார்க்கெட்டுக்கு எதிரில் இருக்கிற, ‘சந்தை மட்டன் சாப்பாடு ஹோட்டலில்’    ஒரு கிண்ணம் நிறைய மட்டன்

தருகிறார்கள். குலதெய்வக் கோயில்களில் கிடா வெட்டி பூசை போடும்போது போடுவார்களே... படைப்புச் சாப்பாடு, அதே ருசி. எலும்பையும் கறியையும் போட்டு ஒரே குழம்பாக திரட்டிவிடுகிறார்கள்.

ரத்தக் குடல் பொரியலும், வெங்காயத் தயிர் பச்சடியும் சைடிஷாகத் தருகிறார்கள். தேவைப்பட்டால் ஒரு கிண்ணம் புளிரசமும் வாங்கிப் பருகலாம்

10    Krishna Vilasam    சென்னை, அடையாறிலுள்ள  `கிருஷ்ண விலாசம்’ உணவக    விசேஷச் சாப்பாட்டில் மொத்தம் 15 வகையான டிஷ்கள். சிந்தாமணி அல்வா, சிந்தாமணி ரவா இட்லி,

கலந்த தானியங்களால் செய்யப்படும் வாசனை தோசை என்று கிருஷ்ண விலாசத்துக்கே உரிய சில வித்தியாசமான டிஷ்களும் உண்டு

9    Sivakasi Nadar mess சங்கரன்கோவிலின், அங்கூர் விநாயகர் கோயில் தெருவிலிருக்கும் சிவகாசி நாடார் மெஸ்ஸு    பொன்னி அரிசி பிரியாணி, கரண்டி ஆம்லேட், நெய் சுக்கா

8    Thirukkural hotel அடையாறு, காந்திநகர் 2-வது பிரதான சாலையில் இருக்கும் `திருக்குறள் உணவக’    ‘நம்மாழ்வார் விருந்து’, ‘தொல்காப்பியர் விருந்து’ என இரண்டுவித

‘காம்போ’-க்கள். நம்மாழ்வார் விருந்து 158 ரூபாய்... மொத்தம் 19 டிஷ்கள். ஆறு வகை வெரைட்டி ரைஸ் தருகிறார்கள். குதிரைவாலி சாம்பார் சோறு, வரகு எலுமிச்சைச் சோறு, பனிவரகு ரசச் சோறு,

சீரகச்சம்பா பிரியாணி, குதிரைவாலி தயிர் சோறு, வரகு-தக்காளிச் சோறு.

7    Pattukkottai Kamatchi mess தஞ்சாவூர், புதிய பேருந்து நிலையத்துக்கு அருகிலிருக்கிற `பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்’     240 ரூபாய் மீல்ஸ்... அன்லிமிடெட்.  தலைவாழை

இலையில் பரிமாறுகிறார்கள். மணக்க மணக்க பொன்னியரிசி சாதம்... கூட்டு, பொரியல்... தவிர, எலும்புக் குழம்பு, மீன் குழம்பு, நண்டுக் குழம்பு, நாட்டுக்கோழிக் குழம்பு, நல்லியெலும்புக் குழம்பு என

ஐந்து வகைக் குழம்புகள்…காடை கிரேவி, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, நண்டு கிரேவி, இறால் கிரேவியைச் சுமந்துகொண்டு வரிசையாக வருகிறார்கள்....நாட்டுக்கோழி தெரக்கல், நாட்டுக்கோழி

பெப்பர் ஃப்ரை, ஈரல் வறுவல், நண்டு வறுவல், மீன் வறுவல்

6    Madyasa hotel சென்னை எழும்பூர், ஹால்ஸ் ரோட்டில் உள்ள மத்ஸயா உணவகத்தில் 13 டிஷ்கள் அடங்கியது உடுப்பி பிளாட்டர். பிற்பகல் 12 மணியிலிருந்து மூன்று மணிவரை சாப்பிடலாம்.

190 ரூபாய்...ரசவடை, நான்கு மங்களூர் போண்டா, இரண்டு பீஸ் குழிப்பணியாரம்... கூடவே ஒரு பிஸ்குட் ரொட்டி, சைடு-டிஷ்ஷாகக் கொஞ்சம் சாம்பார், வெள்ளரி தோசை, கார உப்புப்புளி தோசை,

கடுபு-காரக்குழம், பிசிபேளாபாத், பெல்லுளி அன்னம், தயிர் சாதம்

5    Kaliyuga hotel    சேலம், ஜங்ஷன் மெயின் ரோட்டில் இருக்கும்  `கலியுகா உணவக’    மணக்க மணக்க கேழ்வரகுக் களி, தொட்டுக்கொள்ள நாட்டுக்கோழிக் குழம்பு, மட்டன் குழம்பு,

தலைக்கறிக் குழம்பு, மீன் குழம்பு... விரும்பினால் கீரைக்கடைசல், பொட்டுக்கடலைச் சட்னியும் தருகிறார்கள். கருவாட்டுக் குழம்பில், வாசனையுடன் இணைந்த ஒரு ‘நாட்டுச் சுவை’  உண்டு

4    Kathirvel Vathu kadai    வேலாயுதம்பாளையத்தில், கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் இருக்கிறது ‘கதிர்வேல் வாத்துக்கடை.’    வாத்துக்கறி கிரேவி, வாத்து ஃப்ரை, வாத்து முட்டை

ஆம்லேட், கலக்கி...  நான்கும் கதிர்வேல் வாத்துக்கடையில் ஸ்பெஷல்.

3    Kaliyakudi coffee hotel    மயிலாடுதுறை மணிக்கூண்டு அருகிலுள்ள காளியாகுடி காபி ஹோட்டல்    காலை ஆறரை மணிக்கு காபி, பொங்கல், வடையுடன் விடிகிறது பொழுது. மதியம்

சாப்பாடு. வழக்கம்போல, கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், வற்றல் குழம்பு, பச்சடி, பாயசம், அப்பளம்தான். ஆனால், எல்லாவற்றிலும் அசல் சோழநாட்டுச் சுவை. காளியாகுடியின் இன்னொரு ஸ்பெஷல், அல்வா.

2    Appam happers    மதுரை கே.கே.நகர், எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் இருக்கிற `ஆப்பம் ஹாப்பர்ஸ்’    இலங்கையின் பாரம்பர்ய உணவான ஆப்பங்கள், அதற்கு சைட்-  டிஷ்ஷாக பொல்

சம்பல், சீனிச் சம்பல், நூல் நூலாகப் பிரிகிற பூப்போன்ற இடியாப்பம்... அதற்கு சைட்- டிஷ், மணக்க மணக்கத் தேங்காய் சொதி: முட்டை ஸ்டஃப் செய்யப்பட்ட  அசல் சிலோன் ரொட்டி,  திகட்டாத 

வாழைப்பழ இனிப்பு ரொட்டி, முழு விளை மீன் ஃப்ரை, மொத்தி மொத்தியான  இறால் வறுவல், வித்தியசமான நண்டு ஆம்லேட் என ருசி விரும்புபவர்களுக்கு வேறுபட்ட அனுபவத்தைத் தருகிறது இந்த

உணவகம்.

1    A.P. Food paradise    சென்னை, பெரும்பாக்கம் - மேடவாக்கம் நெடுஞ்சாலை, கைலாஷ் நகரில் இருக்கும் ஏ.பி. ஃபுட் பேரடைஸ் உணவக    பரோட்டா, குடல் வறுவல், தலைக்கறி,

எண்ணெய் சுக்கா, நாட்டுக்கோழி சாப்ஸ், பெப்பர் சிக்கன், சிக்கன் லெக் பீஸ், காடை ரோஸ்ட், கரண்டி ஆம்லெட், சிக்கன் பிரியாணி, சோறு, மீன் வறுவல், நண்டு மசாலா, ரத்தப் பொரியல், சிக்கன்

பிரட்டல், மட்டன் சிக்கன் மீன் குழம்புகள், ரசம், தயிர், ஊறுகாய், அப்பளம், இனிப்பு
.

Wednesday, January 23, 2019

சோத்துக்கடை ஸ்ரீதேவி ஸ்டோர்ஸ், சலீவன் வீதி, டவுன்ஹால், கோவை...

மாலை ஆனவுடன் நொறுக்கு தீனியை தேடி மனம் அழையும். மழை பெய்துவிட்டால் வாழக்காய் பஜ்ஜி தான் வேண்டும் என்று ஒத்த கால்ல நிற்போம். முன்னெல்லாம் மாலை வேளையில் வீட்டில் பொறி, கடலை கொடுப்பார்கள் இப்போது எல்லாம் காலம் மாறி வீட்டில் நொறுக்கு தீனி தின்பதும் மிக குறைந்துவிட்டது.

நம்ம ஊரைப்பொறுத்தவரை வட இந்திய உணவான பேல் பூரி, பானி பூரி, மசால் பூரி என்று ஊரைச்சுத்தி நிறைய கடைகள் உண்டு. ஆனால் நம் பாரம்பரியத்தில் ஊறிய நொறுக்கு தீனிகடைகள் மிக குறைவு தான். தேடித்தேடித் தான் திங்க வேண்டி இருக்கும்.

நம் பாரம்பரியத்தில் ஊறியது என்றால் பொறி, கடலை, மசால் பொறி, மசால் கடலை, தட்டு முறுக்கு செட், மசாலா கரம் போன்ற நொறுக்கு தீனிகள் தான். இந்த தீனி கடைகள் நம் வீட்டுப்பக்கத்தில் இல்லை. ஆனால் தேடனும் ஆசை தீர நாவிற்கு இனிய நொறுக்கு தீனி சாப்பிடவேண்டும் என்றால் தேடனும். அப்படி தேடி தேடி பிடித்த கடை தான் ஸ்ரீதேவி ஸ்டோர்ஸ் இது சலீவன் வீதியில் சின்ன கடையாக அமைந்துள்ளது.

கடைதான் சிறியது ஆனால் உள்ளே உள்ள நொறுக்கு தீனிகள் அனைத்து சுவையோ சுவை. இந்த கடைக்கு என்று நம்மை போல தேடி தேடி உன்னும் பலர் இங்கு வருகின்றனர்.

நாம் போய் ஆர்டர் செய்த பின் தான் மிக்ஸ் செய்து நமக்கு உண்ண தருகிறார். குறைந்தபட்சம் 5 நிமிடமாவது நின்றால் தான் நமக்கு சுவையான நொறுக்ஸ் கிடைக்கும். நான் இந்த கடையில் வாடிக்கையாளர் ஆகி 5 மாதம் தான் இருக்கும். பல முறை சென்று ஒவ்வொரு முறையும் ஒரு வகையான நொறுக்சை ரசித்து ருசிச்ச பின்தான் உங்களுக்கு பகிர்கிறேன்..


தட்டு முறுக்கு செட்தான் முதலில் ஆர்டர் செய்தேன் தட்டு முறுக்கு மேல் பீட்ரூட் காரச்சட்னி வைத்து பின் சிறிய தாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீட்ரூட் மற்றும் கொத்தமல்லி இலை தூவி பின் அடுத்த தட்டு முறுக்கை எடுத்து அதில் தக்காளி காரச்சட்னி தடவி ஒரு செட்டுக்கு 4 என்ற கணக்கில் சான்விஜ் போல கொடுத்தார்கள்..



முழு தட்டு முறுக்கை எடுத்து அப்படியே ஒரு வாய் உள்ளே போட்டேன் மிதமான காரம், மொறு மொறுவென இருந்த தட்டுமுறுக்கின் சுவை, வெங்காயம், கேரட், பீட்ரூட் துருவல் எல்லாம் கலந்து இருக்க சுவை அம்மியது. மனதிற்கும் சாப்பிட்ட சுவை இருந்தது நாவில் நின்றது அதன் காரம்.

தக்காளி கரம், பொடி கரம், பன் சேன்விஜ், பேல் மிகஸ் என ஒவ்வொன்றும் ஒரு சுவை. மாலை நேர சிற்றுன்டிக்கு அருமையான கடை. இது மட்டுமல்லாமல் வித விதமான நொறுக்கு தீனிக்கள் எல்லாம் சுவையோடு இருந்தது. விலையும் குறைவான விலையே...

மாலைநேரம் வாய்க்கு ரூசியா சாப்பிட இந்த கடைக்கு தாரளமாக போகலாம்.



டவுன்ஹால் சலீவன் வீதியில் ஆட்டோ ஸ்டேண்ட் முன்புறம் இந்த கடை அமைந்துள்ளது.

Friday, November 9, 2018

சோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.


ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான மெஸ் இருக்கும், இது உள்ளுர் ஆட்களுக்கே அதன் சிறப்பு தெரியாது. அட அந்த ஓட்டல் நன்றாக இருக்கும் என்று மட்டும் தான் சொல்வாங்க அங்க என்ன சிறப்பு, எதன் சுவை மெருகேறி இருக்கும் என்றெல்லாம் யாரும் சொல்ல மாட்டாங்க.. அப்படியான மெஸ் தான் இந்த அம்மன் மெஸ். தினமும் மதியம் 12.30க்கு இங்கு களை கட்டும் சாப்பாட்டுத் திருவிழா 3.30க்கு முடிந்து விடுகிறது. இந்த மெஸ்சின் நேரமே 3 மணி நேரம் தான். காலை, மாலை எல்லாம் கிடையாது மதிய உணவு மட்டுமே இங்கு கிடைக்கும்..

இந்த மெஸ் கிட்டத்தட்ட 35 வருடத்திற்கு மேலாக இயங்குகிறது. நான் 4 வருடத்திற்கு முன் ஒரு முறை சாப்பிட்டுள்ளேன். அதன் பின் கடந்த 2 வருடமாகத்தான் இதன் சிறப்பை அரிய நேரிட்டது. அதனால் சாப்பிட நேரம் பார்த்து கிடந்தேன் இந்த தீபாவளி விடுமுறையில் அந்த சுவையை பதம் பார்த்து விட்டேன்.

மதியம் 2.20க்குத்தான் உள்ளே நுழைந்தோம் எதுவும் இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்திலேயே சென்றோம் எங்க நேரம் எல்லாமே இருந்தது.

உள் நுழைந்ததும் ஒரு சின்ன அறை பழைய காலத்து மர டேபில் போட்டு அதில் சேர் போட்டு உள்ளனர் அந்த அறையில் 8 பேர் மட்டுமே சாப்பிட இயலும், அதற்கு அடுத்த அறையில் ஒரு 10 பேர் சாப்பிடும் அளவிற்கு மர டேபிள் போட்டு இருந்தார்கள், மிக முக்கியமாக நன்றாக சுத்தமாக பராமரிக்கின்றனர் உணவு உன்னும் இடத்தை.
15 நிமிட காத்திருப்புக்கு பின் ஒடி போய் இடம் பிடித்து உட்கார்ந்தோம். ( இங்கு இடம் இருந்தால் தான் உள்ளே அனுமதிக்கின்றனர், இல்லை என்றால் வெளியில் காத்திருந்து தான் செல்ல வேண்டும்)

நல்ல தலைவாழை இலை போட்டு தண்ணீர் வைத்ததும் மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு கொண்டு வந்து வைத்தார்கள். மட்டன் கொத்துக்கறி, பிச்சுபோட்ட கோழி, சிக்கன் வறுவல், மட்டன் வறுவல் ஆர்டர் செய்தோம். ஒரு மொறத்தில் சாப்பாட்டை சுட சுட கொண்டு வந்து கொட்டினார்கள். உடன் கொத்துக்கறி வந்தது.

கொத்துக்கறி நன்கு மசாலாவோடு கலந்து இருந்தது, மசாலா ரொம்ப தூக்கலாக இல்லாமல் அளவான பதத்தில் இருந்தது. சாப்பாடு சேர்த்து பிசைந்து ஒரு கவளம் போட்டதும் தான் மனம் நிறைந்தது. அப்படி ஒரு சுவை கொத்துக்கறியின் மனமும், மசாலாவின் மனமும் இனைந்து சாப்பாட்டை நன்கு பதம் பார்த்தது. மட்டன் குழம்பை சாப்பாட்டில் ஊத்தி கொத்துக்கறியோடு இனைந்து சாப்பிடுவது மிகச்சிறந்த சுவையாக பட்டது என் நாக்கிற்கு..

குழம்பை பற்றி சொல்லவேண்டுமானால் மசாலாவின் காரம் குறைவு, மல்லித்தூள் வாசம் அதிகம் இல்லாமல் வீட்டுச்சுவை அப்படியே இருந்தது.


மட்டன் வறுவலில் கறி நன்கு வேகவைக்கபட்டு வெங்காயம், பெப்பர் போட்டு நன்கு கலந்து கொடுத்தனர். நண்பர்களோடு பகிர்ந்து உன்னும் போது எனக்கு 4 துண்டு தான் கிடைத்தது. நாலு துண்டும் நறுக்கென்று இருந்தது. கறியை நன்றாக மென்னும் திங்கும் அளவு சுவை நாவிலேயே இருந்தது.

சிக்கன் வறுவல் போன்லெஸ் கிடைக்கவில்லை எலும்போடு இருந்ததும் நன்றாக மென்னு திங்கும் அளவில் வேகவைக்கப்பட்டு இருந்தது. மட்டனின் உள்ள மசாலாவும் சிக்கனில் உள்ள மசாலாவும் வேறு வேறு போல இரண்டின் சுவையும் ஒன்று போல இல்லை ஆனால் தனி ரகமாக நாக்கில் ஜொலித்தது.

பிச்சு போட்ட கோழி பல ஓட்டலில் சாப்பிட்டு இருந்தாலும் இங்கு வேறு வித சுவையோடு இருந்தது. நிறைய வெங்காயமும், பச்சை மிளாய்யும் போட்டு அதில் கோழியை பிச்சு போட்டு நன்றாக பெப்பர், மிளாய் தூள் போட்டு பிரட்டி கொடுத்தனர். எனது நாக்கை பிரட்டி போட்டது இதன் சுவை. அடுத்த முறை போகும் போது இதத்தான் முதல்ல சாப்பிடனும்ன்னு அப்பவே முடிவு செய்துவிட்டேன்.

அடுத்து ஆந்திரா முட்டை கொடுத்தார்கள் கடலை எண்ணெய் போட்டு சமைத்திருப்பார்கள் போல முட்டை பொறியலில் வரமிளகாய் தூக்கலாக போட்டு நன்கு வனக்கி கொடுத்தனர். இதன் சுவையோ அபாரம்.

எனக்கு முன் சாப்பிட்டவர் ஸ்பெசல் கலக்கி என்றார், நான் ரசத்துக்கு தாவும் போது சரி என எனக்கும் ஒன்று என்றேன். கலக்கியில் சின்னவெங்காயம், பச்சை மிளகாய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு அதில் முட்டை பெப்பர் போட்டு கலக்கி கொடுத்தனர் ரசத்துக்கு எல்லாம் தொட்டுக்கவில்லை கப்புன்னு நானே சாப்பிட்டேன் இதுவும் அங்க சாப்பிட போகும் போது மறக்காமல் சாப்பிட வேண்டியது.

சுடச்சுட இலையில் சாப்பாடு அதில் இரண்டு கரண்டி ரசத்தை ஊற்றி நல்லா பிசைந்து ஒரு வாய்தாங்க போட்டேன் அப்பப்பபா என்னா சுவை, ரசம் அப்படி இருந்தது. தக்காளியும், புளியும் சேர்த்து இப்படி எல்லாம் ரசம் கொடுக்க முடியுமா என்னும் அளவிற்கு சுவையாக இருந்தது.

கடைசியா கெட்டித்தயிர்ன்னு சொன்னாங்க சரின்னு நானும் நண்பரும் தயிர் ஊத்தி சாப்பிட்டோம். எருமைத்தயிர் போல எந்த புளிப்பும் இல்லாமல் தயிர் சாப்பிட்டது போல இருந்தது. தயிர் பிசைந்து ரவுண்டு கட்டும் போது அதில் தேனை ஊற்றினார்கள், தேன் தயிர் அடடா என்னா சுவை செம்ம காம்பினேசனாக இருந்தது. இதை ரசித்து ரசித்து சாப்பிடும் போது குல்கந்து கொடுத்தாங்க.. அச்சோ அங்கியே என் நாக்கு செத்திடுச்சு.. தயிர், தேன், குல்கந்து எப்பா என்னா சுவை என்ன ஒரு கலவை அப்படியே இலையை நன்றாக வழிச்சு நக்கிட்டு ஒரு பருக்கை கூட விடாமல் எழுந்து வந்தேன்...

வெளியே பில் கொடுத்தார்கள் பில் தொகையை எல்லாம் பார்க்கல, அப்படி ஒரு சுவை.. கொடுக்கற காசுக்கு குறைவில்லா சுவை என்பதை அடிச்சு சொல்லலாம். அப்படியே நாக்கில் எல்லா சுவையும் வந்து வந்து போகுதுங்க...

அமைவிடம்: கோவையில் இருந்து பெங்களுர் செல்லும் பைபாசில் பவானி காவிரி ஆற்றைத்தான்டியதும் இடது பக்கம் கொமராபாளையம் செல்லும் வழி வரும் அதே சாலையில் ஒரு அரை பர்லாங்கு போனதும் இடது பக்கம் வீடு போலத்தான் இருக்கும் அங்க போனா நம்ம நாக்கு அனுபவிக்கும் அப்படி ஒரு சுவையை....

Wednesday, February 17, 2016

சோத்துக்கடை: சாய் கபே, அண்ணா சிலை அருகில். கோவை.

தினமும் என் நண்பர்கள் காலை குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு பின் சிறு நட்புக் கூட்டத்தை முடித்து விட்டு அண்ணாசிலை அருகில் உள்ள இந்த சாய் உணவகத்தில் சிம்பிளா காலை உணவை உண்பார்கள்.

நான் சில மாதங்களாக அதிகம் உணவு விடுதியின் உணவை உண்பதில்லை என்பதால் இவர்களோடு அதிகம் சாப்பிட செல்வதில்லை. ஆனால் தினமும் பூரி செம்ம, புட்டும் கடலை குருமாவும் செம்ம, இன்னிக்கு மின்ட் பூரி என தினமும் ஒவ்வொரு மெனுவாக அடுக்கி என் வயிற்றில் பசியை உருவாக்குவார்கள். அதிலும் இந்த குழவில் 75 வயது யூத் ஒருவர் இருக்கிறார் அவர் காபியை பற்றி சொல்லி என் வயிற்றை கிள்ள வைத்து விடுவார்.

சரி என்று நேற்று நண்பர் அசோக் பிறந்தநாள் என்பதால் சாப்பிட வந்தே ஆகவேண்டும் என்று சொல்லி விட்டார். ஏற்கனவே வீட்டில் மூக்கு முட்ட தின்றதால் கொஞ்சம் திணறித்தான் சாப்பிட சென்றேன். இன்றைய ஸ்பெசல் மின்ட் பூரி என்றார்கள். நண்பர்கள் புட்டு கடலை, பொங்கல், கோதுமை உப்புமா, மினி இட்லி, ஊத்தாப்பாம் என ஒவ்வொன்றாக ஆர்டர் செய்ததில், இத்தனையும் திங்க முடியாது சாமி வேண்டும் என்றால் டேஸ்ட் பார்க்கிறேன் என்ற பெயரில் ஒவ்வொன்றையும் ருசி பார்த்தேன்.

சும்மா சொல்லக்கூடாது விலையும் குறைவு, தரமும் நிறைவு. மின்ட் பூரியும் அதற்கு கொடுத்த உருளை மசாலும் செம்மப்பா.. சுடச்சுட பூரியுடன் உருளையை உள்ளே வைத்து கப்புன்னு ஒரு கடி கடிக்கும் போது தான் தெரிந்தது, மின்ட் பூரியும் கிழங்கின் காம்பினேசனின் சுவை. கொண்டக்கடலையும் புட்டும் ஒரு துளி புட்டு, கடலையில் கலந்து சாப்பிட்ட அச்சச்சோ, அருமையோ அருமை.

மினி இட்லியில் நெய்யும், வெங்காயமும் மிதங்க வந்தது, இட்லி, சாம்பார், நெய் கூட வெங்காயம் இவை அனைத்தும் ஒன்று சேர ஒரு வாய் போட்ட பின், இட்லியிலும் சொர்க்கத்தை காண முடிந்தது.

கோதுமை ரவை நன்கு வேகவைக்கப்பட்டு, எண்ணெய் அதிகம் இல்லாமல் நிறைய வெங்காயம் போட்டு இருந்த உப்புமா, இன்னொரு முறை சாப்பிட வைத்தது.

இப்படி ஒவ்வொன்றாக டேஸ்ட் பார்த்து விட்டு கடைசியாக, காபி குடிச்சேன் பாருங்க பில்டர் காபி எல்லாம் எட்ட நிற்க வேண்டும் போல இருந்தது இந்த திக்கான காபி. தண்ணீர் கலக்காத பாலில் போட்டு இருப்பாங்க போல. நிறைவான சுவை...

8 பேர் காலை உணவை சாப்பிட்டு, பின் 1 பை 2 என்ற கணக்கில் காபி சாப்பிட்டும் வந்த பில் தொகை எண்ணவோ 340 தான்.

கோவை அவிநாசி ரோட்டில் பயணிப்பவர்கள், காலை உணவிற்கு தைரியமாக இந்த கடையை தேர்ந்தெடுக்கலாம். சுவையும், தரமும் நன்று.

அவிநாசி சாலையில் அண்ணாசிலையில் இருந்து ரயில்வே ஸ்டேசன் போகும் வழியில் திரும்பியதும் முதல் கடை இந்த சாய் கபே தான். மதிய உணவும், மாலை போண்டா வகைகளும் சூப்பரா இருக்கும் என்றனர் நண்பர்கள். நான் இன்னும் சாப்பிட்டு பார்க்கல விரைவில் அதையும் செய்யனும்..

இனி அடிக்கடி சந்திப்போம் சோத்துக்கடையில்...

Tuesday, August 5, 2014

இந்தியன் பஞ்சாபி தாபா, சித்தோடு, ஈரோடு...



கோவை சேலம் ஹைவே ரோட்டில் சித்தோடு என்ற ஊரிற்குள் செல்லும் வழியில் அந்த ஊர் எல்லையில் உங்களை வரவேற்கும் இந்தியன் பஞ்சாபி தபா.

12 வருடங்களுக்கு மேல் இருக்கிறது இந்த தாபா. ஈரோடு சுற்றி உள்ள ஊர்களில் தாபா ரொம்ப பிரபலம். ஈரோடு பெருந்துறை ரோட்டில் நிறைய தாபா இருக்கின்றனது அதைப்பற்றி பிறகு பார்ப்போம். இன்று ஈரோடு பவானி சாலையில் உள்ள இந்தியன் பஞ்சாபியை பற்றி பார்ப்போம்.

பெரிய சாலை போட்டு அதில் கயித்து கட்டில் போட்டு வைத்து இருப்பார்கள், கட்டில் நடுவே ஒரு பலகை இருக்கும். கட்டிலில் இரண்டு பக்கமும் இருவர் அமர்ந்து கொண்டு சாப்பிடும் படி அமைந்திருக்கும். இந்த கட்டிலில் அமர்ந்ததும் நமக்கு சின்ன வயதில் தாத்தா வீட்டு கயித்து கட்டிலில் ஆட்டம் போட்டது ஞாபகம் வரும்.

நாங்கள் நான்கு பேர் சென்ற இருந்ததால் இரண்டு கட்டிலை ஆக்கரமித்திருந்தோம். உட்கார்ந்ததும் பெல்லாரி வெங்காயத்தை ரவுண்டாக வெட்டி, அதன் கூட எழுமிச்சை ஊர்காய் வைத்து தட்டிலில் கொடுத்தனர். வெங்காயத்தை எடுத்து ஊர்காயில் தொட்டு ஒரு கடி கடித்தால் வெங்காய காரமும் எழுமிச்சையின் காரம் மற்றும் புளிப்பு இணைந்து நாக்கில் படும் போது மீண்டும் சாப்பிடத்தூண்டும் சுவை.

எல்லா இடங்களிலும் இடம் பெறும் வழக்கமான மெனுக்கள் தான் என்றாலும் சுவையில் தான் அதன் தரம் இருக்கின்றது. ஓரு ஹோட்டல் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க வேண்டும் எனில் நிச்சயம் அங்கு எதாவது சுவையாக இருக்கும் அதற்காகவே அந்த ஓட்டல் நன்றாக இயங்கும்.

இங்கும் அதுபோலத்தான் ரொட்டி, டால், நான் என வகை வகையாக கொடுத்தாலும் இங்கு கிடைக்கும் ப்ரைடு ரைஸ் நன்றாக இருக்கும். மிக சன்னமான அதே சமயம் உதிரி உதிரியாக உள்ள சாப்பாட்டில், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ் மற்றும் முட்டை சம விகிதத்தில் கலந்து சாப்பாட்டோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும். அந்த சாப்பாட்டை ஒரு கை வாயில் துணிக்கும் போது தான் அதன் சுவையும் தரமும் மனதில் நிற்கும்.

தயிர்சாதம் பஞ்சாபி தாபாக்களில் தயிர்சாதம் அருமையாக இருக்கும் என்று கேள்விபட்டு இருப்பீர்கள், இங்கு காணலாம் அந்த சுவையை. நன்கு குழைந்த சாப்பாட்டில் கெட்டி தயிர் ஊற்றி, அளவான உப்பு கலந்து கொடுக்கும் இந்த தயிர்சாதம் ஒரு கப் எல்லாம் நமக்கு பத்தாது, அவ்வளவு அருமையான சுவை.
இந்த பஞ்சாபியில் முக்கியமாக சாப்பிடவேண்டிய ஒன்று பள்ளிபாளையம் சிக்கன், நாட்டுக்கோழி மற்றும் பிராய்லர் இரண்டும் கிடைக்கும். நான் எப்போதும் ஆர்டர் செய்வது நாட்டுக்கோழி பள்ளிபாளயம் தான். இங்கு கிடைக்கும் நாட்டுக்கோழி பள்ளிபாளையத்தில் வெங்காயமும், தேங்காயும் நிறைய கலந்து இருக்கும் சிக்கன், வெங்காயம் மற்றும் தேங்காய் என ஒவ்வொன்றும் சாப்பிட சாப்பிட அதன் காரமும், தேங்காயின் இனிப்பும் நாவை பதம் பார்க்கும். இந்த பள்ளிபாளையம் சிக்கனுக்கு ஈரோட்டு மக்கள் ரசிகர்கள். எல்லா கடையிலும் கிடைக்கும் பட் இந்த சுவை கிடைக்காது.

கடைசியில் பாயாசம் சில் என்று இருக்கும் பாயாசத்தில் சேமியாவும், முந்திரியும் மிதக்கும் இதுவும் ஒரு கப் பத்தாது. நன்கு காரம் சாரமாக சாப்பிட்டு முடித்ததும் இந்த பாயசம் ஒரு தேவார்மிதம். நிச்சயம் தாபாவில் ஒரு நாள் சாப்பிடுங்க, சாப்பிடும் போது பள்ளிபாளையம் சிக்கன், பிரைடு ரைஸ், தயிர்சாதம் மற்றும் பாயாசத்தை மறந்திடாதீங்க...

Monday, July 14, 2014

சோத்துக்கடை - வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை


தேடி தேடி உண்ணும் உணவகத்தில் இந்த கடையும் ஒன்று. நண்பர் ஒரு வர் இங்க போய் சாப்பிடுங்க நிச்சயம் பிடிக்கும் என்றார். சரி என்று சனிக்கிழமை இரவு சாப்பிட சென்றேன். ரேஸ்கோர்ஸ் காஸ்மாபாலிடன் க்ளபை ஒட்டு உள்ள சாலையில் சென்றபோது இடது பக்கம் வளர்மதி மெஸ், கொங்கு நாட்டு சமையல் முறைப்படி என்று எழுதி இருந்தது. காரை கடையின் எதிரில் பார்க் செய்து விட்டு குடும்பத்தோடு உள்ளே சென்றேன். ஒரு 30 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏர்கண்டிசனோடு அமைந்திருந்தது இந்த உணவகம்.
சாப்பிட உட்கார்ந்ததும் மெனு கார்டு கொடுங்க என்றேன், மெனு கார்டு இல்ல சார் எங்க ஸ்பெசல் என்று பிரியாணி, புரோட்டா, முட்டை புரோட்டா, சிக்கன் கறி தோசை, மட்டன் கறி தோசை, பிச்சு போட்ட சிக்கன் பெப்பர் வறுவல், மீன், நெத்திலி மீன் என்று வரிசையாக சொன்னார்.
நான் புரோட்டா, சிக்கன் கறி தோசை, பிச்சு போட்ட சிக்கன் வறுவல், நெத்திலி மீன், ஒரு ரோஸ்ட் என்று ஆர்டர் செய்து காத்திருந்தோன். இரண்டு சின்ன ஜக்கில் சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு என்று வைத்தனர். தலைவாழை இலை போட்டு, தண்ணீர் தெளித்து காத்திருந்தேன் சாப்பிடுவதற்கு.

ஆர்டர் சொன்னவைகள் வர சிறிது நேரம் ஆகும் என்பதால் சிக்கன் குழம்பை கொஞ்சம் ஊற்றி, தொட்டு நக்கி பார்த்தேன். மசாலா கையில் அரைச்சிருப்பாங்க போல குழம்பு அதிகம் காரம் இல்லாமல், சரியான விகிதத்தில் உப்பு கலந்து, மசாலா மனம் இல்லாமல் குழம்பு மனத்தில் இருந்தது. ஊர்ப்பக்கத்தில் கையில் அரைச்சி குழம்பி வைக்கும் போது தான் இந்த பக்குவம் வரும், ஆஹா ஒரு கரண்டி குழம்பு உள்ளே போய்விட்டது.
மட்டன் குழம்பும் இது போலவே இருந்தது. உள்ளே ஒரு பீஸ் இருந்ததால் அதையும் சாப்பிட்டு பார்த்தேன், மசாலாவோடு நன்கு வெந்திருந்தது. மசாலாவும் கறியும் நல்ல சுவையில் இருந்தது.
சிக்கன் கறி தோசையும், பிச்சுப்போட்ட சிக்கன் வறுவலும் வந்தது. தோசையின் மேல் முட்டை மற்றும் வெங்காயம், சிறு பச்சை மிளகாய், கொத்தமல்லி தலையோடு சிக்கன் பீசை போட்டு நன்றாக முன்னும் பின்னும் சரியான பக்குவத்தில் சுட்டு கொடுத்திருந்தனர். கொஞ்சம் கூட தீயாமல் இருந்தது. அந்த தோசையை பிச்சு சிக்கன் கிரேவியில் தடவி அப்படியோ நாவில் கொண்டு போய் தோசையை வைக்கும் போது தான் தெரிந்தது அதன் உச்சபட்ச சுவை. நன்றாக ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டதில் 2 நிமிடத்தில் காணமல் சென்று விட்டது சிக்கன் கறி தோசை.
அடுத்து பிச்சு போட்ட சிக்கன் பிரை இதில் நன்கு வேகவைக்கப்பட்ட சிக்கனில் வெங்காயம், பச்சை மிளாகய், கறிவேப்பில்லை கூடவே பெப்பரும் போட்டு நன்றாக பிரட்டி கொடுத்திருந்தனர். தோசையின் நடுவே இந்த சிக்கனை வைத்து அப்படியே குழம்பில் துவட்டி துவட்டி சாப்பிடுவதில் தான் எவ்வளவு சுவை. இதற்காகவே மீண்டும் அங்கே போகனும் போல இருக்குங்க..
நெத்திலி மீன் வறுவல் கொடுத்தனர், மீனை முதலில் சாப்பிட்ட என் மனைவி மீன் வாசமே இல்லை நன்றாக ப்ரை செய்து இருக்காங்க, காரமும் குறைவு என்றதும் மகனுக்கும் கொடுத்தேன் அவனும் சாப்பிட்டு எனக்கு இன்னொன்று என்றான். அடுத்த நான் நெத்திலியை எடுத்து கடிக்கும் போது தான் தெரிந்தது அது புது நெத்திலிமீன் என்றும், மீன் வாடை துளியும் இல்லாமல் சுவையாக சமைத்திருந்தது பிடிச்சிருந்தது.
புரோட்டாவும் நன்றாகவே இருந்தது. மொத்தத்தில் மனசு நிறைய கொங்கு சமையலை சாப்பிட வளர்மதி மெஸ்க்கு போகலாம். மதிய உணவு இன்னும் சாப்பிட்டு பார்க்கவில்லை விரைவி போய் சாப்பிடனும். விலை மற்ற ஏசி உணவகங்களின் விலை போலத்தான் சுவைக்காக தைரியமாக கொடுக்கலாம். நாங்க 3 பேர் சாப்பிட்டதற்கு 425 ரூபாய் ஆச்சு இரவு உணவிற்கு...
அமைவிடம்: ரேஸ்கோர்ஸ் காஸ்மா பாலிடன் க்ளப் பக்கத்து ரோடு மற்றும் போட்டோ சென்டருக்கும் எதிர்ரோட்டில் அமைந்துள்ளது.

Tuesday, June 17, 2014

சோத்துக்கடை - அவிநாசி ரோடு வடக்கடை

சோத்துக்கடை பகுதியில் வடக்கடை எழுதலாமா? வேண்டாமா? என்று நெடுநாளாக யோசித்து, கடைசியாக இதிலே எழுதிவிடவேண்டும் எனவும், உணவகங்களை பற்றி எழுதும் அனைத்து கட்டுரைகளையும் இனி சோத்துக்கடையில் எழுதுவது என்று முடிவெடுத்துவிட்டேன், நிறைய டீக்கடைகளைப்பற்றியும் விரைவில் எழுதனும்.


அவிநாசி ரோடு வடக்கடை

இந்த வடக்கடைக்கு நாங்கள் வைத்த பெயர் தான் அவிநாசி ரோடு வடக்கடை, கடையின் முதலாளி இந்தக்கடைக்கு பேரே வைக்கவில்லை என்பது தான் இந்த கடையின் ஸ்பெசல்.

எனது அலுவலகத்தின் மிக அருகில் இந்தக்கடை உள்ளது. ஒரு 3 வருடங்களுக்கு முன் மாலை நேர பசி காரணமாக லஷ்மி மில்ஸ் ஜங்சனில் அதிக கடைகள் இல்லை, எங்க போய் என்ன சாப்பிடலாம் என்று யோசிச்சு திரும்பும் போது ஏர்டெல் ஆபிசின் நேர் எதிர்புறம், அம்மன் குளம் போகும் வழிக்கு பக்கத்தில் இடதுபுறம் கூட்டமாக நின்று கொண்டு கையில் தட்டை ஏந்தி சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர், சரி நாமும் போய் பார்ப்போமே என்று ஒரு தட்டை வாங்கி 2 மெது வடைகள் வாங்கினேன், சாப்ட் என்றால் சாப்ட் அப்படி ஒரு மெதுமெதுப்பு, லபக் லபக் என்று உள்ளே போனதே தெரியாமல் போனது. காரம் அதிகம் இல்லாமலும், உப்பு அதிகம் இல்லாமலும் அவர்கள் கொடுத்த தேங்காய் சட்டினியோடு வழுக்கி விழந்தது நாவில் அப்புறம் என்ன மெது வடை மட்டும் 6 உள்ள போய்டுச்சு, கூட்டம் அதிகமானதால் அடுத்த முறை வந்து மற்ற வடைகளை சாப்பிடவேண்டும் என்று கிளம்பிவிட்டேன்..


மீண்டும் நான்கு நாட்கள் கழிச்சு ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியம் சப்பாத்தி சாப்பிட்டதால் 4 மணிக்கு பசி மீண்டும் வயிற்றை எட்டிப்பார்த்து கிள்ளியது, ஓவராக கிள்ளியதால், யாரையும் துணைக்கு அழைக்காமல் வடக்கடை முன் நின்றேன். கூட்டமும் குறைவாக இருந்ததால் முதலில் கட்லெட் சொன்னேன், கட்லெட் சைஸ் சின்னதாகத்தான் இருந்தது ஆனால் சுவை செம்ம.. அடுத்து வெஜ்ரோல் இவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்தனர் ஒரு உருண்டையில் எல்லா காய்கறிகளையும் வேக வைத்து அதை அந்த உருண்டையில் வைத்து, எண்ணெய்யில் பொறிச்சு எடுத்து தருகின்றனர், சுடச்சுட வெஜ் ரோல் சாப்பிடும் போது அற்புதமான சுவையால், 1 எல்லாம் பத்த மாட்டிங்குது, குறைந்தது 4 சாப்பிட்டால் தான் "நா" அடங்குகிறது.


அடுத்து பன்னீர் போண்டா, இது பெரும் ஓட்டலில்தான் அதிகம் கிடைக்கின்றது, இதைப்போல சின்ன கடைகளில் இப்போது தான் சாப்பிட்டேன், இதன் சுவையும் செம்ம.. என்ன கடந்த 2 முறையாக சென்ற போது பன்னீர் போண்டா அதிகம் போடுவதில்லை என்று என் "நாக்கை" காய வைத்து விட்டனர்.

சமோசா வழக்கான சுவையில்லாமல் வீட்டில் செய்வது போன்ற சுவை, வாழக்காய் பஜ்ஜி, பருப்பு வடை என ஒரு 7 விதமான வடைகள் போட்டு கொடுக்கின்றனர், குறைஞ்ச பட்சம் 7 வகைகளையும் சாப்பிடும்போது தான் சாப்பிட்ட திருப்தி ஏற்படுகின்றது.



இந்த கடையின் சுவைக்கு காரணம் என்ன வென்று பார்த்தால் இவர்கள் தரமான பொருட்களை உபயோகிப்பதோடு, எண்ணெய் அடிக்கடி மாற்றுகின்றனர், 3 முறைக்கு மேல் எண்ணெய்யை உபயோகிப்பதில்லை என்பதால் சுவை கூடுகிறது. கோவை பக்கம் வருபவர்கள் மாலை வேலையில் பஜ்ஜி, போண்டா சாப்பிட இந்த கடைக்கு நிச்சயம் வரலாம்..

பெயர்: அவிநாசி ரோடு வடக்கடை

இடம்: லஷ்மி மில்ஸ் சந்திப்பில் இருந்து அவிநாசி செல்லும் வழியில் ஏர்டெல் ஆபிசிக்கு எதிரே, கேஆர்எஸ் பேக்கரியின் பக்கத்துல் இருக்கிறது ( மதியம் 12 மணியில் இருந்து ஒருவர் வடை போட்டுக்கொண்டே இருப்பார், 4 பேர் நின்று சாப்பிட்டுக்கொண்டே இருப்பர்)
விலை: எந்த வடை எடுத்தாலும் 7 ரூபாய் மட்டுமே...

Monday, April 28, 2014

சோத்துக்கடை - கிருஷ்ணபவன், சித்தாபுதூர், கோவை


கோவையில் உள்ள சிறந்த சைவ உணவகத்தில் இதுவும் ஒன்று, என்று நிச்சயம் சொல்லலாம், விலையோ மற்ற சைவ உணவகத்தை விட மிக மிக குறைவு என்று தைரியமாக சொல்லக்கூடிய உணவகம். சைவ உணவகத்திற்கு கோவையில் நிறைய உணவகங்கள் உள்ளன, அதுவும் பல இடங்களில் கிளைகளைக் கொண்ட பிரபல உணவகங்கள் நிறைய இருக்கின்றன. அவை அனைத்திற்கும் ஈடாக இங்கு கூட்டம் நிறைந்து இருக்கும் என்பது கண்கூட கண்டது.

இந்த கிருஷ்ணபவன் உணவகத்திற்கு 8 வருடமாக நான் வாடிக்கையாளர், திருமணம் முடிந்து கோவைக்கு தனிக்குடித்தனம் வந்த உடன் என் மனைவிக்கு முதன் முதலாக நான் அறிமுகப்படுத்தியது இந்த உணவகம் தான், வீட்டில் சோறு ஆக்கவில்லையா, இருக்கவே இருக்கு கிருஷ்ணபவன் என்று எங்களோடு கலந்த உணவகம்.

வெளியே சிறிய கடை மாதிரிதான் இருக்கும், உணவகத்தின் உள்ளே சென்றால் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு 60 பேருக்கு மேல் அமரக்கூடிய அளவில் இருக்கும் உணவகம், ஒரு மேற்பார்வையாளர் அனைவரும் உட்கார இடவசதி செய்து கொடுப்பார், இடம் இல்லாதவர்களை அமர வைத்து முன் வந்தவர்களுக்கு இடம் ஏற்பாடு செய்து தருவார். இந்த கவனிப்பிலேயே நம்மை முதலில் மனநிறைவாக்கி விடுவர்.

இந்த உணவகத்தில் தட்டுக்களைத்தான் பயன்படுத்துகின்றனர் தட்டுக்கள், கழுவி அதன் பின் சூடாக்கப்பட்டு பின்பு தான் பரிமாற டேபிளுக்கு கொண்டு வருகின்றனர், மிக சுத்தமான முறையில் இருக்கும் டேபிளும், தட்டும் அடுத்து பரிமாறுபவர்கள் அனைவரும் கையில் உறை உடன் தான் காணப்படுவர், மிக சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் இந்த உணவு விடுதி.

சரி உணவுக்கு வருவோம். நான் குடும்பத்தோடு எப்போதும் இங்கு வந்தாலும் முதலில் ஆர்டர் செய்வது மினி இட்லி, காரக் கொழுக்கட்டை, இனிப்பு கொழுக்கட்டை, இடியாப்பம், பணியாரம், பூரி, சேவை, சில்லி கோபி, ரவா ரோஸ்ட் கடைசியாக கம்மங்கூழ். இது தான் எங்கள் ரெகுலர் மெனு, கூட வந்திருக்கும் நண்பர்களைப் பொறுத்து மாறும் மற்ற வகைகள். ஆர்டர் செய்த பின் அதிக நேரம் காத்திருக்கவேண்டியதில்லை 5 நிமிடத்தில் டேபிளுக்கு மினி இட்லி வந்து விடும்.

மினி இட்லி ஒரு குழியான தட்டில் சாம்பாரோடு மிதந்து வரும் உடன் கொஞ்சம் நெய்யும், கொஞ்சம் வெங்காயமும் இருக்கும். தேங்காய் சட்னி, தக்காளி காரச்சட்னி, பொதினா சட்னி, கத்திரிக்காய் சட்னி என்று நான்கு வகையான சட்டனிக்கள் எப்போதும் டேபிளில் இருக்கும், தேங்காய் சட்னி கொஞ்சம் எடுத்து மினி இட்லி, சாம்பார், நெய், வெங்காயம் கலந்து ஒரு துளி நாவில் வைக்கும் போது நல்ல சுவையும் இருக்கும், மீண்டும் அடுத்த எப்ப நாவில் இட்லியை வைப்பார்கள் என்று நா ஏங்கும் அளவில் இருக்கும் சுவை. இரண்டு நிமிடத்தில் மினி இட்லி சாம்பார், சட்னி எல்லாம் கலந்து உள்ளே சென்று விடும். அந்த சுவையை மறக்க கொழுக்கட்டை சாப்பிட்டு நாவை அடுத்த சுவைக்கு தயாராக வைக்கவேண்டும்.

கொழுக்கட்டை காரம், இனிப்பு என இரண்டு வகையில் கிடைக்கும் நல்ல தரமாகவும், சுவையாகவும் இருக்கும். அடுத்து இடியாப்பம் வந்தது கூடவே தேங்காய்ப்பால், காரக்கடலை குழும்பு, தக்காளி சாஸ் உடன் வந்தது. வந்த சுவடே தெரியாமல் கரைத்தது என் நாக்கு. அடுத்து வந்த ரவா ரோஸ்ட்க்கு அவர்கள் கொடுக்கு நான்கு வகையான சட்டினி மற்றும் சுவையான சாம்பாருக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறும் நம் நாக்கு. இங்கு தினமும் ஒரு வகையான சேவை உண்டு, நான் சாப்பிட்டது லெமன் சேவை அதிக புளிப்பும் இல்லாமல், காரமும் இல்லாமல் லெமன் சுவையுடன், சாம்பரும் சேர்ந்ததால் சுவையில் சொக்கிப்போனது என் நாக்கு. 

கோபி சில்லி மற்ற இடங்களில் சாப்பிடுவதை போல இருக்காது, அதன் சுவையும் நன்கு இருக்கும், இது இல்லாமல் கோதுமை தோசை, ராகி, கம்பு, சோளம் என வித விதமான தோசைகள், அடை அவியல் என் ஒவ்வொன்றும் கிராமத்து வீட்டுச்சுவையுடனே இருப்பதால் இந்த உணவகம் ஒரு ஸ்பெசல் உணவகமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த உணவகத்தில் எதை சாப்பிடாமல் விட்டாலும் கம்மங்கூழ் மட்டும் சாப்பிடாமல் வரக்கூடாது அம்புட்டு சுவை. கம்மங்கூழுடன் கொஞ்சம் வெங்காயம், ஒரு மோர் மிளகாய், ஒரு வடு மாங்காய் என நம்மை திணடிக்கின்றனர் அவர்களது சுவையான உணவுகளால்.

கோவை வந்தால் இரவு சாப்பிடுவதற்கு நல்ல சைவ உணவகம் வேண்டும் என்றால் தைரியமாக செல்லலாம் கிருஷ்ண பவனுக்கு. இங்கு நீங்கள் செல்லும் போது கடையின் வெளியில் நிற்கும் கார்களைப்பார்க்கும் போதே தெரியும் இந்த கடையின் வாடிக்கையார்களைப்பற்றி. அடுத்து மாலை நேர உணவகம் என்பதால் 7 மணி முதல் 11 மணி வரை செயல்படுகிறது. 8 மணிக்கு பின் எப்போது போனாலும் க்யூவில் நின்று தான் சாப்பிடவேண்டும். அம்புட்டு கூட்டம் இருக்கும், அங்கு இருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது தான் தெரியும் யார் வீட்டிலும் சோறு ஆக்குவதில்லை என்று.

பெயர்: ஸ்ரீ கிருஷ்ணா டிபன் ரூம்
இடம்: மகளில் பாலிடெக்னிக்கில் இருந்து இராமகிருஷ்ணா மருத்துவமனை செல்லும் வழியில் பெருமாள் கோயில் முன்புறம்.
விலை: மற்ற உயர்தர சைவ உணவகத்தை விட மிக குறைவுதான். அனைத்து தரப்பு மக்களும் சாப்பிடும் விலை தான்...

Tuesday, February 4, 2014

சோத்துக்கடை - டோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை..


கோவையில் உள்ள பழமையான ஊர்களில் ஒன்று பேரூர். கோவையைச்சுற்றிப் பார்ப்பவர்கள் பட்டியலில் நிச்சயம் பேரூர் இருக்கும். இந்த ஊரின் எல்லையிலேயே புரதான நகரம் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பெயர் பலகையோடு தான் ஆரம்பிக்கிறது. பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிவன் ஆலயம். பேரூர் சாந்திலிங்க அடிகளாரின் மடமும், தமிழ்கல்லூரியும் இங்கு அமைந்துள்ளது இந்த ஊரின் சிறப்பு.

சுற்றுலாத்தளம் அருகில் நல்ல உணவு விடுதி கிடைப்பது அரிது என்பதும் பேரூர்க்கும் பொறுந்தும். நிச்சயம் காலை வேலை தரிசனத்துக்கு வருபவர்கள் நல்ல உணவகம் இல்லை என்று வருத்தப்படுவர். ஆனால் மாலை வேளையில் அந்த பிரச்சனை இல்லை, கோயிலின் பின்பக்கம், சிறுவாணி சாலையில் அமைந்துள்ளது டோபாஸ் ஐயர் மெஸ். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கடை இயங்குகிறது.

மாலை 4 மணியில் இருந்து கடை இயங்க ஆரம்பிக்கிறது, கோவையில் கும்பகோணம் டிகிரி காபி ஒரிஜினலாக குடிக்க விரும்புவர்கள் நிச்சயம் இங்கு வந்து குடிக்கலாம், அந்த அளவிற்கு சுவையான காபி இங்கு கிடைக்கும். மிக்சர், முறுக்கு போன்ற பலகாரங்களும் ஐயர் வீட்டு முறைப்படியும், அவர்களின் வீட்டு சுவையிலும் இருக்கும். 7 மணிக்கு மேல் சென்றால் முறுக்கு, மிச்சர் கிடைக்காது. அந்த அளவிற்கு பிரபலம்.

மாலை 6 மணிக்கு மேல்தான் ஆரம்பிக்கிறது சிற்றுண்டி, இங்கு சாப்பிட 7 பேர் அமர்ந்து சாப்பிடும் படியான இடம் மட்டுமே அமைந்திருக்கும், பார்சல் கட்டுவதற்கு மட்டும் 3 பேர் இருக்கின்றனர். இங்கு வந்து ஆர்டர் செய்பவர்கள் மாமி எனக்கு 4 இட்லி, 2 புரோட்டா என்று ஆர்டர் சொல்லிக்கொண்டே இருப்பர். மாமியும் பொறுமையாக அனைவருக்கும், பொட்டலம் கட்டிக்கொடுத்துக் கொண்டு இருப்பார். 9 மணிக்கு மேல் சென்றால் தோசை மட்டுமே கிடைக்கும்.

மாலை வேளைகளில் இட்லி, சேவை, பிரியாணி, உப்புமா, புரோட்டா, தோசை, ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட், நெய் ரோஸ்ட், ராவா தோசை என ஆர்டர்கள் பறக்கும். இங்கு கொடுக்கப்படும் சாம்பாரின் சுவையே சுவைதான். தேங்காய் சட்டினி, காரச்சட்டினி, வெஜ் குருமா என அனைத்தும் வீட்டில் சாப்பிடுவது போலவே சுவையாக இருக்கும்.

நான் கடந்த 4 வருடமாக இந்த கடைக்கு வாடிக்கையார், அதாவது இந்த ஏரியா குடி வந்ததில் இருந்து வாரம் இரு முறை இங்கு பார்சல் வாங்கிடுவேன். இட்லிக்கும் இந்த ஐயர் மெஸ் சாம்பாருக்கும் அப்படியொரு சுவை. நான் இட்லியை இந்த சாம்பாரில் மூழ்கடிச்சு கரைத்து சுவைப்பேன் அப்படி ஒரு சுவை இந்த சாம்பார். எப்பவும் பார்சல் வாங்கிவிட்டு சாம்பார் பாக்கெட் எக்ஸ்ட்ராவாக கேட்டு வாங்காமல் வருவதில்லை இன்று வரை.

ஒரு நாள் வீட்டில் எல்லாரும் ஊருக்கு சென்றாதால் அங்கு சாப்பிடச் சென்றேன். இன்று ஆணியன் ரோஸ்ட் ஸ்பெசல் என்றனர், சரி என்று ஒரு ரோஸ்ட்டை ஆர்டர் செய்தேன், கையில் தட்டோடு சாம்பாரை வலிச்சு நக்கிக்கொண்டே காத்திருந்தேன். முக்கோண வடிவில் வந்த ஆணியன் ரோஸ்ட்டை பிச்சு அவர்கள் கடை சாம்பாரில் முக்கி வாயில் துணித்தேன் அவ்வ்வ்... அப்படியே வழுக்கியது தோசை. அளவான உப்பில், புளிக்காத மாவில் நன்கு எண்ணெய் ஊற்றப்பட்ட ஆணியன் தோசை என்னோடு சண்டையிடாமல் வேகமாக உள் இறங்கியது. ஆணியன், கேரட் துறுவல், முந்திரி, திராட்சை போட்டு சுட்டு இருந்தனர். அன்றில் இருந்து இன்று வரை அந்த கடை ஆணியன் ரோஸ்ட்டுக்கு அடிமை நான்.

நெய் ரோஸ்ட், ரவா ரோஸ்ட் அவ்வப்போது சாப்பிடுவேன், புரோட்டாவும் குருமாவும் என் மகனின் பேவரைட். இங்கு பார்சலுக்கு வரும் கூட்டத்தை பார்த்தாலே புரியும் இந்த கடையின் சுவைபற்றி. இந்த ஐயர் மெஸ்  சுகாதாரமாகவும் இருக்கும்.

இந்த மெஸ்சில் விலைப்பட்டியல் நிச்சயம் அதிகமாக இல்லை. வயிறு நிறைய சாப்பிட்டாலும் 60 ரூபாயை தாண்டாது அந்த அளவிற்கு குறைவான விலை, தரமான உணவு நிச்சயம் நம்பி சாப்பிடலாம். எங்கு சாப்பிட்டாலும் அடுத்த நாள் காலை பிரச்னை இன்றி இருக்கவேண்டும் என்பதில் அனைவரும் கவனமாக இருப்போம். நம்பி சாப்பிடலாம் வயிற்றை எந்த பதமும் பார்க்காது என்பது உறுதி.

பெயர்: டோபாஸ் ஐயர் டிபன் சென்டர்

இடம்: பேரூரில் இருந்து சிறுவாணி செல்லும் வழியில் வலது பக்கம்.

விலை: 2 இட்லி 10, ஆணியன் ரோஸ்ட் 30, புரோட்டா 10

Tuesday, January 28, 2014

சோத்துக்கடை - ஹோட்டல் அன்னலட்சுமி, சத்தியமங்கலம்


ஒரு வருடத்திற்கு முன் சத்தியமங்கலம் வழியாகத்தான் ஒவ்வொரு வாரமும் அந்தியூர், பவானி செல்வேன். இப்போது தேசிய நெடுஞ்சாலை ஒரளவிற்கு சரி செய்ததால் தேசிய செடுஞ்சாலையிலேயே பயணிக்கிறேன். சத்தி வழியாக சென்றாலும் அதிகம் சாப்பிடுவதில்லை வழியில் கிடைக்கும் நொங்கு, பதனீர், கொய்யா என வழியில், சாலையில் விற்கும் பழங்கள் எல்லாம் வாங்கி சாப்பிடுவதுதான் வாகனத்தில் செல்லும் போது உற்சாகமாக இருக்கும்.

ஆசனூர் செல்வதற்காக சத்தியில் கறி வெட்டிக்கொண்டு இருந்தோம், கறிக்கடைக்காரரிடம் இங்கு காலை உணவிற்கு இட்லியும், குடல்கறியும் எங்கே கிடைக்கும் என்று விசாரித்தோம் அவர் அப்படி எல்லாம் இங்கு கிடைக்காதுங்க என்றார், சரி தேடுவோம் என்று ஒவ்வொரு இடமாக விசாரிக்க ஆரம்பித்தோம்.

காலை உணவுகள் அதிகம் இட்லியாகத்தான் இருக்கும் அநேக வீட்டில், ஞாயிறு அன்று மட்டும் அசைவம் வைத்து சாப்பிடுபவர்கள் சிக்கன் அல்லது கறிக்குழம்போடு சாப்பிடுவர், இட்லிக்கு எத்தனையோ குழம்புகள் சுவையாக இருக்கும் என்று சொன்னாலும் இட்லியும், குடல்கறியையும் அடிச்சக்கவே முடியாது, குடல் கறி பிரியர்கள் அநேகம் பேர் இந்த வரியை நிச்சயம் வழி மொழிவார்கள். அதுவும் குடல் பொறியலை விட குடல் குழம்புக்குத்தான் இட்லியுடன் கலந்தடிக்கும் போது சுவை கூடும். இதற்காகவே வெளியூர் சென்றால் இட்லி குடல்கறி எங்கே கிடைக்கும் என்று ஒரு சுத்து சுத்தி வருவேன் அந்த ஊரை.

நிறைய பேருக்கு அவர்கள் ஊரில் ஹோட்டல் இருக்கிறது என்று தெரியும் ஆனால் அங்கு என்ன நன்றாக இருக்கும் என்றும் அதற்காக நிறைய பேர் அங்கே சாப்பிட வருகிறார்கள் என்று தெரியாது. ஊரின் அருமை ஊர்க்காரர்களுக்கே தெரியாது என்று கூட கூறலாம். இந்த ஹோட்டல் படத்திற்காக நண்பர்களை தொடர்பு கொண்ட போது அப்படியா, அங்க இது பேமஸா என்ற எதிர் கேள்வி கேட்கின்றனர்.

சத்தியமங்கலத்தில் ஒரு ஆட்டோ டிரைவரிடம் விசாரிக்கும் போது அன்னலட்சுமிக்கு போங்க இதே ரோட்டில் என்றார். அன்னலட்சுமி ஹோட்டல் வாசல் வந்தததும் பெரிய கடை, முன்னாடி விசாலமான வாகனம் நிறுத்தும் இடம், ப்ளக்ஸ் போர்டில் அன்னலட்சுமி சைவம், அசைவம் என எழுதி இருந்தது, கடையின் உள்ளே சென்றதும் குடல் ரெடியா என கேட்டேன், அண்ணே குடல் ரெடியாக இன்னும் 5 நிமிடம் ஆகும் ஆனா, தலைக்கறி ரெடி என்றனர். என் கூட வந்த உடன்பிறப்புக்கள் அப்படியா தலைக்கறி என்றால் ஒகே என்று உள்ளே வந்தால் உட்கார இடம் இல்லை. பேருந்து நிலையம் பக்கத்தில் இருப்பதால் போக்குவரத்து ஊழியர்கள் தான் அநேகம் பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர் அவர்களின் தினசரி காலை உணவு அங்கேதானாம்.

சிறிது நேரத்தில் இடம் கிடைத்தது வரிசையாக உட்கார்ந்து கொண்டு இட்லி தலைக்கறி ஆர்டர் செய்தோம். ஆளுக்கு இரண்டு இட்லி கூடவே ஒரு சிறிய தட்டு நிறைய க்ரேவியுடன் தலைக்கறி. இட்லியை பிச்சு கிரேவியுடன் தொட்டு நாவில் வைத்தவுடன் அளவான காரத்தில் இருந்தது கிரேவி அப்படியே நாவில் கரைந்தது. எதிர்பார்க்கவில்லை நான் அவ்வளவு சுவையை தலைக்கறி வரமிளகாய், தேங்காய் மற்றம் சிறு வெங்காயம் போட்டு வதக்கி கொடுத்திருந்தனர். முக்கியமாக நன்றாக வெந்து இருந்தது. இரண்டு இட்லிக்கு ஒரு ப்ளேட் தலைக்கறியை காலி செய்தேன். நான் மட்டும் தான் காலி செய்தேன் என்று திரும்பி பார்த்தால் என் சகாக்கள் எல்லோம் காலி செய்தனர்.

மீண்டும் அண்ணே குடல் ஆகிவிட்டதா என்றேன், இரண்டு நிமிடம் பொறுங்க தம்பி, இப்பதான் இறக்கி வைத்துள்ளனர் என்றார். அதற்குள் என் சகா இன்னும் இரண்டு இட்லி ஒரு ப்ளேட் தலைக்கறி என சொல்ல, எனக்கு மீண்டும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்தது, எனக்கும் அதே போல என சேர்த்து சொன்னேன். மறுபடியும் இரண்டு இட்லிக்கு அந்த ப்ளேட் தலைக்கறியும் சாப்பிட்டாச்சு, சாப்பிட்டு நிமிரும்போது குடல் ரெடி எத்தனை ப்ளேட் என்றனர், இப்ப ஆளுக்கு ஒன்னு என்று ஆர்டர் சொல்லி காத்திருக்கவில்லை சுடச்சுட உடனே வந்தது, ஒரு ப்ளேட் நிறைய குடல் கறி எங்கள் இலையை பதம் பார்த்தது.

குடல் கறியில் நன்றாக வெந்த பின் அதில் மசாலாவை தூக்கலாக சேர்த்து இருந்தனர் மசலாவும், குடலும் நன்கு பிணைந்திருந்தது. அதன்பின் பெரியவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பில்லை உடன் பெப்பர் கொஞ்சம் கலந்து குடலோடு சேர்த்து கிரேவியாக கொடுத்தனர். இதற்கும் இட்லிக்கும் உண்டான காம்பினேஷனில் மீண்டும் இரண்டு இட்லி உள்ளே போனது. ஆசானூருக்கு சென்று சாப்பிட இடம் இல்லாமல் இங்கேயே வயிறு நிரம்பியது.

நிச்சயம் சத்தியமங்கலம் பக்கம் சென்றால் சாப்பிட்டு பாருங்க தலைக்கறி, மற்றும் குடல் கறியையும் எப்போதும் மறக்காத சுவை. மீண்டும் சாப்பிட தோன்றும் சுவை. சத்தியமங்கலம் என்றலே வீரப்பன் ஞாபகம் வரும் தற்போது எனக்கு தலைக்கறியும், குடல்கறியும் தான் ஞாபகம் வருகிறது.

ஒரு நபர் எட்டு இட்லி 2 ப்ளேட் தலைக்கறி, 2 ப்ளேட் குடல் கறி சாப்பிட்டால் நிச்சயம் நகர்புறத்தில் 300 ரூபாய்க்கு மேல் தான் பில் வரும். ஆனால் இங்கு மிக குறைவான விலையில் அசத்தலான டேஸ்ட்டில் இருந்தது.

பெயர்:  ஹோட்டல் அன்னலட்சுமி ( சைவம், அசைவம்)
இடம்: சத்தியமங்கலம் ( பஸ்நிலையத்தில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் இடப்பக்கம் உள்ளது
விலை: ஒரு ப்ளேட் தலைக்கறி 40 ரூபாய், குடல்கறி 40 ரூபாய் என மிக குறைந்த விலைதான். 

Monday, January 20, 2014

சோத்துக்கடை - அவிநாசி திருமூர்த்தி டீ ஸ்டால்


சோத்துக்கடை நிறைய எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை அவ்வப்போது இதுவரை யாரும் அறியாத அதாவது அந்த ஊர்க்கராருக்கே அதன் சுவை தெரியாமல் இருப்பது போன்ற கடைகளை எழுதினால், என்னைப்போல தேடி தேடி சாப்பிடுபவர்களுக்கு மிக பயனாக இருக்கும் அவ்வாறு இருக்கும் கடைகளை மட்டும் பதிவாக்கவேண்டும் என்பது என் எண்ணம்.

இன்று நாம் சாப்பிடும் சோத்துக்கடை அவிநாசி திருமூர்த்தி டீ ஸ்டால் & மெஸ் இதன் பெருமை அந்த ஊர்க்கரார்களுக்கே சிலருக்கு தெரியவில்லை என்பது தான் முக்கிய அம்சம். டீ ஸ்டால் என்று தான் அனைவரும் நினைப்பர் ஆனால் உள்ளே என்நேரமும் 20 பேர் உட்கார்ந்து அவர்களின் கையும், வாயும் சண்டை இட்டுக்கொண்டு இருக்கும் என்பதை அறிந்து இருக்கமாட்டார்கள்.

2000ம் வருடம் எனக்கு அறிமுகம் இந்த திருமூர்த்தி டீ ஸ்டால், நண்பர் ஒருவருடன் கோவைக்கு காலையில் நேரத்திலேயே பயணித்துக்கொண்டு இருந்தோம் அவிநாசி வரும் போது காலை உணவை இங்கேயே முடித்துக்கொள்ளலாம் என்றார் சரி என்று இட்லியும், ஆப்பமும் சாப்பிட்டேன் ஏனோ அந்த கடையில் சுவை பிடித்து விட காரில் செல்லும் போது எல்லாம் சாப்பிடும் கடையாகிவிட்டது.

சமீபத்தில் குடும்பத்துடன் சென்றேன், குடும்ப மக்கள் எல்லாம் இந்த கடை அந்த கடை என்று லைட் வெளிச்சம் அதிமாகவும், பளீர் என்று தெரியும் படி உள்ள கடையை கை காண்பித்தனர். கம்முன்னு வாங்க ஒரு நல்ல டீக்கடையை காண்பிக்கிறேன் என்றதும் டீக்கடையா? என்று ஆளாளுக்கு மூஞ்சியை இழுத்தனர்.

அவிநாசி பஸ் நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் டெலிபோன் ஆபிசை தாண்டி அரச மரத்துக்கு பககத்தில் காலை 8 மணிக்கு வண்டியை நிறுத்த இடமில்லாமல் தள்ளி நிறுத்தி இது தான் அந்த கடை என்றேன். இதுவா, என்று ஆளாளுக்கு வாயை பிதுக்கினர். வெளியில் பெஞ்ச் போடப்பட்டு அடுத்து உள்ளே போவதற்கு தயாராக உட்கார்ந்திருந்தனர் சில குடும்பங்கள் அடுத்து நாங்கள் போய் நின்றதும் எங்க குடும்ப மக்கள் எல்லாத்துக்கும் என் மேல அம்மூட்டு கோபம்.

அப்போது ஒரு குடும்பம் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து அவர்களின் BMW காரில் ஏறி அமர்ந்தனர். அப்போது தான் வீட்டு மக்களிடம் சொன்னேன் பாருங்க இந்த கடை வாடிக்கையார்களை என்று. அடுத்து எங்களுக்கு இடம் கிடைக்க ஆள் ஆளுக்கு கிடைத்த இடத்தில் உட்கார்ந்தோம் இலை வைத்து தண்ணீர் வைத்த உடன் இட்லி ஆர்டர் செய்தோம். (நிற்க கவனிக்க இட்லிக்கா எங்களை இவ்வளவு தூரம் படிக்க வைத்தாய் என்று தோணிருக்குமே ) இட்லி என்றால் குஷ்பு இட்லியான்னு தான் நம்மாளுக கேப்பாங்க ஆனா அது இல்லீங்க நன்றாக சுடச் சுட நல்ல வெளீர் நிறத்தில் பஞ்சு போல இட்லியை வைத்தனர் கூடவே சட்னியும், சாம்பார் மற்றும் காரச்சட்டினி அட அட இட்லியை எடுத்து சட்னியில் தொட்டு, சாம்பாரில் தொட்டு சாப்பிட்டால் லபுக்கு என்று உள்ளே போகும், போகும் போது அடுத்த துண்டு எப்ப நாக்கிற்கு வரும் என்று நாக்கு நிச்சயம் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்கும். நான் எப்பவும் இட்லி சட்னி, சாம்பார் மூன்றையும் நன்கு பிசைந்து சாம்பாரை நிறைய ஊற்றி குடுக்கும் ஆள் அதனால் நான் எப்பவும் 7 இட்லிக்கும் குறையாமல் சாப்பிடுவேன்.

அடுத்து தோசை, ஆப்பம் என சிம்பிளான உணவு வகைகள் தான் அவ்வப்போது பொங்கல் இருக்கும் இவை அனைத்துக்கும் அவர்கள் கொடுக்கும் சட்னி சாம்பாரின் ருசியில் நிச்சயம் மனம் குளிர்ந்து தான் போகவேண்டும். அன்று சாப்பிட்டுவிட்டு என் குடும்பத்தினர் இனி ஊருக்கு வரும் போது எல்லாம் வண்டி அவிநாசி போய்ட்டுத்தான் வரனும் என்று அன்பு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

காலை தான் இப்படி என்றால் இரவு இடம் கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழிச்சுத்தான் இடமே கிடைக்கும் அந்த அளவிற்கு கூட்டம் நிற்கும். இரவு மெனுவும் ஒன்றும் பெரியதாக இல்லை இட்லி, தோசை, பொடி தோசை, ஆப்பம், சப்பாத்தி என்று சிம்பிளாகத்தான் இருக்கும் ஆனால் சுவைதான் மீண்டும் அங்கு வரத்தோணும். சின்ன இடம் என்றாலும் சுவையானது என்றால் தேடிப்போவதில் ஒன்றும் தவறில்லை..

பெயர்:  திருமூர்த்தி டீ ஸ்டால்

இடம்: அவிநாசி (புது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் நடக்கும் தூரத்தில் உள்ளது)

விலை: மிக மிக குறைவுதான்

படம் நெட்டில் சுட்டது...

Wednesday, January 15, 2014

சோத்துக்கடை - UPM கெடாக்கறி விருந்து



நிறைய தேடித் தேடி சாப்பிடுவேன் வித விதமாக சாப்பிடுவதில் அலாதி பிரியம் எனக்கு ஆனாலும் இது வரை சாப்பாட்டை பற்றியும், மெஸ் பற்றியும் எழுதியதில்லை முகநூலில் நம்ம டைரக்டர் கேபிள் அண்ணன் அவர்கள் தொடங்கிய சாப்பாட்டுக்கடையில் அவ்வப்போது பதிவிடுவேன் அவ்வளவு தான் எனது சோத்துப்பதிவு. நான் கடைகளை பற்றியும், உணவை பற்றியும் பதிவிடாததற்கு மிக முக்கிய காரணம் அங்கு மொபைலில் போட்டோ எடுத்தால் என் ரங்கமணிக்கு பிடிக்காது அதனால் பதிவிடுவதில்லை. 

நான் பதிவிடும் இந்த சோத்துக்கடை ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை பகுதிகளில் மிக பிரபலமானது. ஈரோடு பகுதிகளில் கெடாவிருந்து ஓட்டல்கள் மிக பிரபலம், இன்று இந்த பகுதியில் நிறைய கடைகள் இருக்கிறது அந்த கடைகளுக்கு எல்லாம் முன்னோடி தான் இந்த UPM கெடாவிருந்து சோத்துக்கடை. பெருந்துறையில் இருந்து வரும் போது சீனாபுரத்துக்கு அருகிலும், பெருமாநல்லூரில் இருந்து குன்னத்தூர் வழியாக சீனாபுரம் வரும் போதும் இந்த சோத்துக்கடை இருக்கிறது.

இது கடை அல்ல, ஒரு தோட்டம் இந்த தோட்டத்தின் பெயர் தான் UPM இந்த தோட்டத்தின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் ஒரு பனியாள் ஒருவரோடு நடத்தப்படுகிறது இந்த சோத்துக்கடை மதியம் மட்டும் தான் கெடாவிருந்து காலை, மாலையில் கிடையாது. கெடாவிருந்துக்கு நாம் செல்ல வேண்டும் என்று நினைத்தால் முந்தைய நாள் மாலை அல்லது காலை 10 மணிக்குள் முன்பதிவு செய்யவேண்டும் அப்போது தான் நமக்கு கிடைக்கும் கெடாக்கறி விருந்து.

ஈரோடு மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் ஜவுளி மற்றம் கட்டிட கான்ட்ராக்டர்ஸ் அதிகம் உள்ள பகுதி, திருப்பூரில் ஏற்றுமதியாளர்கள் அதிகம் இருப்பதால் அவர்களும் அதிகம் தங்களது வாடிக்கையார்களுடன் வருவதால் இந்த UPM கெடாவிருந்து தோட்டம் எப்போதும் கெடாக்கறி விருந்திற்காக உணவு ரசிகர்களின் கூட்டம் நிரம்பி இருக்கும்.

அப்படி என்னதான் சோறு போடுகிறார்கள் இந்த கெடாக்கறி விருந்தில் என்று நானும் நண்பர்களோடு சென்றிருந்தோன் சோறு போடுகிறார்கள் என்றால் முதலில் நிற்பது நானாகத்தான் இருக்கும். அன்று கோபியில் இருந்து நண்பர்களோடு குன்னத்தூர் வழியாக UPM கெடாக்கறி விருந்திற்கு தோட்டத்திற்கு சென்றோம். எளிமையான வரவேற்பில் அசத்தினார் தோட்டத்துக்காரர்.

மதியம் 1.30 மணிக்கு சரியாக சாப்பிட அழைத்தார் எங்களை, அதற்கு முன் சாப்பாடு ஒரு ஆளுக்கு 350 ரூபாய் என்று சொன்னாதால் நிறைய சாப்பிடவேண்டும் என்ற எண்ணமும் நிறைய சாப்பிடுவதற்கு ஒரு 60 ML மட்டும் சாப்பிட்டால் போதுமென்று கொஞ்சாமாக தாகசாந்தி அருந்திவிட்டு வெறும் வயிரோடு போருக்கு (சாப்பிட) தயாரானோம்.

வழக்கம் போல தலைவாழை இலையும், உப்பும் வைத்துவிட்டு பசியை தூண்டினர். பின் தலைக்கறி வைத்தனர் சும்மா சொல்லக்கூடாது 1 கரண்டி தான் வைத்தனர் நன்கு மசால், கொஞ்சம் பெப்பர் போட்டு தூக்கலான மணத்துடனும், நல்ல காரத்துடனும் இருந்தது அடுத்த நிமிடத்தில் வயிற்றுக்குள் சென்று விட்டது. அதில் இருந்த கிரவி என் ஆட்காட்டி விரலால் வழித்து வழித்து நக்கப்பட்டது.

குடல்கறி என்றதும் குடல் மட்டும் வரவில்லை கூடவே இரத்தமும், இதன் இரண்டுடன் சேர்த்து தேங்காய்ப் பூ போட்டு வைத்தனர். குடல் நன்கு வேகவைக்கப்ட்டு இருந்ததால் மெல்லுவதற்கு இதமாக இருந்தது.

நுரையீரல் வறுவல், எலும்புக்கறி, கறிவருவல், ஆட்டு மூளை, கொத்துக்கறி, கோலா உருண்டை என ஆட்டு வகையும், அப்புறம் வந்தது நாட்டுக்கோழி வறுவல், சில்லி சிக்கன், பள்ளிபாளையம் சிக்கன், பெப்பர் சிக்கன் அப்புறம் முட்டை வைத்தனர். இதை எல்லாம் வைத்த பின்தான் பிரியாணி அளவாக ஒரு கப்பில் வைத்தனர்.

பிரியாணி பொன்னி அரிசியில் தனித்தனியாக நெய்யால் உலர்ந்திருந்தது. மசாலா பிரியாணியுடன் ஒட்டவில்லை ஆனாலும் பிரியாணியின் நாவில் இருக்கும். அடுத்து அரிசி சோறு கூடவே கறிச்சாரோடு சதக்கறியும், இவை இரண்டையும் பிசைந்து ஒரு கவளை வாயில் போடும் போது தான் கையில் அரைச்ச குழம்பின் பக்குவம் தெரியும். குழம்பை மட்டும் நிச்சயம் இரு முறை கேட்டு வாங்கி சாப்பிடத்தோன்றும். அடுத்து சோறு உடன் எழும்பு குழம்பு இது கொஞ்சம் தண்ணி போலத்தான் இருக்கும் இதை எழும்பு ரசம் என்றும் கூறுவர்.

சோறுடன் புளி ரசம், ரசத்தை பொறுத்தவரை ஒவ்வொரு இடத்திலும் ஒரு சுவை இருக்கும் ஒவ்வொன்றும் ரசிச்சு ருசிச்சு சாப்பிடும் படியும் இருக்கும் சாப்பிட்டது ஜீரணம் ஆக புளி ரசம், கடைசியாக எருமத்தயிர் ஒரு கப். இந்த தயிர் சாப்பிட்டால் கொழு கொழு என்று ஆகாலம் என்று சொல்வாங்க, இன்னொன்றும் சொல்வாங்க புல்லா சரக்கடிச்சிட்டு வாந்தி எடுத்து வயிறு, தொண்டை எல்லாம் எரிபவர்கள் ஒரு கப் அடிச்சா போதும் எரிச்சல் பஞ்சா பறந்திடும் என கூட சொல்வாங்க..

முடிவில் வெற்றிலைபாக்கு கொடுத்து விருந்தை முடிச்சிடுவாங்க. 350 ரூபாய்ககு இத்தனை வகையான உணவுகள் நிச்சயம் கிடைக்காது, அப்படியே கிடைச்சாலும் அது குடலை பாதிக்காத வண்ணம் இருக்கவேண்டும் இது எல்லாம் கறிவிருந்தில் இருக்கிறது. இன்னொரு முக்கியமான விசயம் இங்கு செய்யப்படும் மசாலாக்கள் அம்மிக்கல்லில் அரைச்சி குழும்பு வைக்கின்றனர் என்பது தான் இந்த ருசியின் ரகசியம்.

நிச்சயம் அனைவரும் சாப்பிடவேண்டிய உணவகம், இன்று இதே போல் ஈரோட்டைச்சுற்றி நான்கு கடைக்கு மேல் இருக்கு எல்லா இடத்திலும் இதே போல் தான் இந்த கறிசோத்துக்கடை தான் முதலில் ஆரம்பிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு இந்த கடைக்கு நான் சென்று 1 வருடத்திற்கு மேல் இருக்கும் நேற்று நண்பர்களுடன் அளவாடும்போது இங்கு போய் சாப்பிட்டதை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம் அந்த ஞாபகத்தில் எழுதிய கட்டுரை இது.

நாளை காணும் பொங்கல் என்று ஒரு சில பகுதியில் சொல்வாங்க ஆனா எங்க ஊரில் கறி நாள் என்று தான் சொல்வோம் அந்த கறிநாளுக்காக இந்த கெடகறிவிருந்து.