Monday, April 28, 2014

சோத்துக்கடை - கிருஷ்ணபவன், சித்தாபுதூர், கோவை


கோவையில் உள்ள சிறந்த சைவ உணவகத்தில் இதுவும் ஒன்று, என்று நிச்சயம் சொல்லலாம், விலையோ மற்ற சைவ உணவகத்தை விட மிக மிக குறைவு என்று தைரியமாக சொல்லக்கூடிய உணவகம். சைவ உணவகத்திற்கு கோவையில் நிறைய உணவகங்கள் உள்ளன, அதுவும் பல இடங்களில் கிளைகளைக் கொண்ட பிரபல உணவகங்கள் நிறைய இருக்கின்றன. அவை அனைத்திற்கும் ஈடாக இங்கு கூட்டம் நிறைந்து இருக்கும் என்பது கண்கூட கண்டது.

இந்த கிருஷ்ணபவன் உணவகத்திற்கு 8 வருடமாக நான் வாடிக்கையாளர், திருமணம் முடிந்து கோவைக்கு தனிக்குடித்தனம் வந்த உடன் என் மனைவிக்கு முதன் முதலாக நான் அறிமுகப்படுத்தியது இந்த உணவகம் தான், வீட்டில் சோறு ஆக்கவில்லையா, இருக்கவே இருக்கு கிருஷ்ணபவன் என்று எங்களோடு கலந்த உணவகம்.

வெளியே சிறிய கடை மாதிரிதான் இருக்கும், உணவகத்தின் உள்ளே சென்றால் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு 60 பேருக்கு மேல் அமரக்கூடிய அளவில் இருக்கும் உணவகம், ஒரு மேற்பார்வையாளர் அனைவரும் உட்கார இடவசதி செய்து கொடுப்பார், இடம் இல்லாதவர்களை அமர வைத்து முன் வந்தவர்களுக்கு இடம் ஏற்பாடு செய்து தருவார். இந்த கவனிப்பிலேயே நம்மை முதலில் மனநிறைவாக்கி விடுவர்.

இந்த உணவகத்தில் தட்டுக்களைத்தான் பயன்படுத்துகின்றனர் தட்டுக்கள், கழுவி அதன் பின் சூடாக்கப்பட்டு பின்பு தான் பரிமாற டேபிளுக்கு கொண்டு வருகின்றனர், மிக சுத்தமான முறையில் இருக்கும் டேபிளும், தட்டும் அடுத்து பரிமாறுபவர்கள் அனைவரும் கையில் உறை உடன் தான் காணப்படுவர், மிக சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் இந்த உணவு விடுதி.

சரி உணவுக்கு வருவோம். நான் குடும்பத்தோடு எப்போதும் இங்கு வந்தாலும் முதலில் ஆர்டர் செய்வது மினி இட்லி, காரக் கொழுக்கட்டை, இனிப்பு கொழுக்கட்டை, இடியாப்பம், பணியாரம், பூரி, சேவை, சில்லி கோபி, ரவா ரோஸ்ட் கடைசியாக கம்மங்கூழ். இது தான் எங்கள் ரெகுலர் மெனு, கூட வந்திருக்கும் நண்பர்களைப் பொறுத்து மாறும் மற்ற வகைகள். ஆர்டர் செய்த பின் அதிக நேரம் காத்திருக்கவேண்டியதில்லை 5 நிமிடத்தில் டேபிளுக்கு மினி இட்லி வந்து விடும்.

மினி இட்லி ஒரு குழியான தட்டில் சாம்பாரோடு மிதந்து வரும் உடன் கொஞ்சம் நெய்யும், கொஞ்சம் வெங்காயமும் இருக்கும். தேங்காய் சட்னி, தக்காளி காரச்சட்னி, பொதினா சட்னி, கத்திரிக்காய் சட்னி என்று நான்கு வகையான சட்டனிக்கள் எப்போதும் டேபிளில் இருக்கும், தேங்காய் சட்னி கொஞ்சம் எடுத்து மினி இட்லி, சாம்பார், நெய், வெங்காயம் கலந்து ஒரு துளி நாவில் வைக்கும் போது நல்ல சுவையும் இருக்கும், மீண்டும் அடுத்த எப்ப நாவில் இட்லியை வைப்பார்கள் என்று நா ஏங்கும் அளவில் இருக்கும் சுவை. இரண்டு நிமிடத்தில் மினி இட்லி சாம்பார், சட்னி எல்லாம் கலந்து உள்ளே சென்று விடும். அந்த சுவையை மறக்க கொழுக்கட்டை சாப்பிட்டு நாவை அடுத்த சுவைக்கு தயாராக வைக்கவேண்டும்.

கொழுக்கட்டை காரம், இனிப்பு என இரண்டு வகையில் கிடைக்கும் நல்ல தரமாகவும், சுவையாகவும் இருக்கும். அடுத்து இடியாப்பம் வந்தது கூடவே தேங்காய்ப்பால், காரக்கடலை குழும்பு, தக்காளி சாஸ் உடன் வந்தது. வந்த சுவடே தெரியாமல் கரைத்தது என் நாக்கு. அடுத்து வந்த ரவா ரோஸ்ட்க்கு அவர்கள் கொடுக்கு நான்கு வகையான சட்டினி மற்றும் சுவையான சாம்பாருக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறும் நம் நாக்கு. இங்கு தினமும் ஒரு வகையான சேவை உண்டு, நான் சாப்பிட்டது லெமன் சேவை அதிக புளிப்பும் இல்லாமல், காரமும் இல்லாமல் லெமன் சுவையுடன், சாம்பரும் சேர்ந்ததால் சுவையில் சொக்கிப்போனது என் நாக்கு. 

கோபி சில்லி மற்ற இடங்களில் சாப்பிடுவதை போல இருக்காது, அதன் சுவையும் நன்கு இருக்கும், இது இல்லாமல் கோதுமை தோசை, ராகி, கம்பு, சோளம் என வித விதமான தோசைகள், அடை அவியல் என் ஒவ்வொன்றும் கிராமத்து வீட்டுச்சுவையுடனே இருப்பதால் இந்த உணவகம் ஒரு ஸ்பெசல் உணவகமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த உணவகத்தில் எதை சாப்பிடாமல் விட்டாலும் கம்மங்கூழ் மட்டும் சாப்பிடாமல் வரக்கூடாது அம்புட்டு சுவை. கம்மங்கூழுடன் கொஞ்சம் வெங்காயம், ஒரு மோர் மிளகாய், ஒரு வடு மாங்காய் என நம்மை திணடிக்கின்றனர் அவர்களது சுவையான உணவுகளால்.

கோவை வந்தால் இரவு சாப்பிடுவதற்கு நல்ல சைவ உணவகம் வேண்டும் என்றால் தைரியமாக செல்லலாம் கிருஷ்ண பவனுக்கு. இங்கு நீங்கள் செல்லும் போது கடையின் வெளியில் நிற்கும் கார்களைப்பார்க்கும் போதே தெரியும் இந்த கடையின் வாடிக்கையார்களைப்பற்றி. அடுத்து மாலை நேர உணவகம் என்பதால் 7 மணி முதல் 11 மணி வரை செயல்படுகிறது. 8 மணிக்கு பின் எப்போது போனாலும் க்யூவில் நின்று தான் சாப்பிடவேண்டும். அம்புட்டு கூட்டம் இருக்கும், அங்கு இருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது தான் தெரியும் யார் வீட்டிலும் சோறு ஆக்குவதில்லை என்று.

பெயர்: ஸ்ரீ கிருஷ்ணா டிபன் ரூம்
இடம்: மகளில் பாலிடெக்னிக்கில் இருந்து இராமகிருஷ்ணா மருத்துவமனை செல்லும் வழியில் பெருமாள் கோயில் முன்புறம்.
விலை: மற்ற உயர்தர சைவ உணவகத்தை விட மிக குறைவுதான். அனைத்து தரப்பு மக்களும் சாப்பிடும் விலை தான்...

18 comments:

  1. மினி இட்லி, காரக் கொழுக்கட்டை, இனிப்பு கொழுக்கட்டை, இடியாப்பம், பணியாரம், பூரி, சேவை, சில்லி கோபி, ரவா ரோஸ்ட் கடைசியாக கம்மங்கூழ்.
    >>
    இதை வெச்சே ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கலாம் போல!?

    ReplyDelete
    Replies
    1. யக்கா.. நாலு பேர் சாப்பிடும் போது இந்த மெனு ரொம்பக்கம்மி...

      Delete
  2. Super hotel recommendation.... on my next visit I will try it. Neenga sollumpothey enakku naakkil echil oora aarambichiduchu....

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் அடுத்த முறை வரும் போது வாங்க.. போகலாம், கம்மங்கூழ் சாப்பிடலாம்....

      Delete
  3. எனக்கு மெனுவை படித்ததும் நாவீல் நீர் ஊறுகிறது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இந்த பக்கம் வந்தா சொல்லுங்க சாப்பிட்டே பார்த்து விடலாம்...

      Delete
  4. //வெளியே சிறிய கடை மாதிரிதான் இருக்கும், உணவகத்தின் உள்ளே சென்றால்//

    நான் இதே மாதிரி உணர்ந்தது மயிலை சங்கீதா ஹோட்டலில்! மதுரை சபரி ஹோட்டல் கூட இதே போலத்தான்.

    சுவையாக வர்ணித்திருக்கிறீர்கள். குறைந்த விலை, குறைந்த விலை என்கிறீர்கள்... எது என்ன விலை என்று சொல்லியிருக்கலாம். எங்க ஊர் ஹோட்டல்களில் ரவா ரோஸ்ட் 60 ரூபாய். சாதா ரவா தோசை 45 ரூபாய்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நான் விலைப்பட்டியலே கொடுத்திருக்கிறேன் பாருங்கள்... ரோஸ்ட் வகைகள் 45 ரூபாய்தான்..

      Delete
  5. சாப்பிட வேண்டும்பேர்ல் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. கோவை வரும்போது வாங்க சாப்பிட்டுவிடுவோம்...

      Delete
  6. நல்ல உணவகம் பற்றிய அறிமுகம்.... இங்கே சாப்பிடுவதற்கே ஒரு முறை கோவை வர வேண்டும் போல!

    ReplyDelete
    Replies
    1. எப்பவும் கோவை வருபவர் தானே நீங்க., வரும் போது நிச்சயம் போய்ட்டுவாங்க..

      Delete
  7. நிறைய முறை சென்றிருக்கிறேன்.. நல்ல ஹோட்டல்.. நையாண்டி பவனில் மாட்டிக்கிட்டீங்க போலிருக்கே?

    ReplyDelete
    Replies
    1. ஆவி அப்படி சொல்ல முடியாது., இல்லை என்றும் மறுக்க முடியாது...

      Delete
  8. செட் தோசையும் நல்ல சுவையாக இருக்கும் சதீஷ்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க தல, அத மறந்துட்டேன்...

      Delete
  9. Only Once I went for my friend'$ marriage fumction. Taken breakfast was not good. Very normal. But for others I don't know!!!!!

    ReplyDelete
    Replies
    1. சார் வணக்கம்., இந்த உணவகம் மாலை நேரம் மட்டுமே செயல்படுகிறது... ஒவ்வொருவருக்கும் ஒரு சுவை.. எனக்கு பிடிச்சிருக்கு அவ்வளவுதான்...

      Delete