Monday, April 21, 2014

வாருங்கள் ஜனநாயக கடமையாற்றுவோம்..


நம் நாட்டில் நமக்கு எத்தனையோ உரிமைகள் இருந்தாலும், வாக்குரிமைக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. நமது உரிமையை என்றும் நாம் யாருக்கும் விட்டுத்தரக்கூடாது என்று சொல்வோம், அது போலத்தான் நம் ஓட்டுரிமையை யாருக்கும் விற்கக்கூடாது, விட்டுத்தரக்கூடாது. நம் ஒரு வாக்கில் என்ன ஆகப்போகிறது என்று தான் இங்கு நிறைய பேர் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர், ஒரு வாக்கில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் ஆக எது நடந்தாலும் நம் கடமையை தவறாமல் நிறைவேற்றியே ஆக வேண்டும், தவறாமல் வாக்களியுங்கள் நண்பர்களே...

என் கன்னி வாக்கை முதன் முதலாக 1999ல் பாராளுமன்ற தேர்தலில் தான் வாக்களித்தேன். கோபிசெட்டிபாளையம் தான் எங்கள் பாராளுமன்ற தொகுதி முதல் வாக்கு பாராளுமன்ற தேர்தலுக்க அளித்ததில் மிக்க மகிழ்ச்சி. அதற்கு முந்தைய தேர்தல் வரை வாக்கு இல்லை என்றாலும் திமுகவிற்காக பூத் சிலிப் எழுதும் பணியில் இருப்பேன். வரும் அனைவருக்கும் பூத் சிலிப் கொடுத்து வாக்கு கேட்கும் அந்த ஒரு நாள் மிக சந்தோசமாக போகும். 1991 தேர்தலின் போது நான் 9ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன் அப்போதே பூத் சிலிப் எழுதிக்கொடுத்துக்கொண்டு இருப்பேன். எல்லோரும் ஓட்டுப்போடுகிறார்கள் நமக்கு எப்படி ஓட்டு போடும் உரிமை கிடைக்கும், வாக்காளன் என்ற தகுதி கிடைக்கும் என்று ஏங்கிய காலம் அது.

இது வரை வந்த அனைத்து தேர்தலிலும் தவறாமல் வாக்களித்துவிடவேண்டும் என்பதில் எள்ளவும் மாற்று கருத்து கிடையாது. 2006 ம் ஆண்டு தேர்தல் எனக்கு மறக்கமுடியாத தேர்தல் காரணம் எங்கள் வாக்குச்சாவடியில் கடைசி ஓட்டு என்னுடையது என்பதால். அது த்ரில்லிங்கான நாள். வாக்குச்சாவடி முடிய முடிய ஒடியாந்து ஓட்டு போட்ட தருணம் அது.

நான் சார்ந்த கட்சிகளுக்கு பரப்புறை ஆற்றுவதில் நிறைய அனுபவம் உண்டு, அதுவும் சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தலில் எல்லாம்  ஊர் சுற்றிய அனுபவங்கள் மிக அதிகம். ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்டுரை எழுதலாம் அதில் ஒரு கிளு கிளு அனுபவத்தை இன்று பார்ப்போம்..

1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது எங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தை சேர்ந்தவர் தான் திமுகவில் 12வது வார்டு கவுன்சிலருக்கு நின்றார். எங்கள் அப்பாவும் தீவிர திமுககாரர் என்பதால் அவருக்காக தீவிரமாக பரப்புறை செய்தோம். அப்போது எனக்கு வாக்கு இல்லை என்றாலும் சிலிப் எழுதுவது, வாகனங்கள் மெயின்டேன் செய்வது என்று தீவிரமாக வேலை செய்தேன். 12ம் வகுப்பு முடிச்ச வாலிப வயசு எனக்கு. அப்போது என்னிடம் சரக்கு சாப்பிடும் பழக்கம் எல்லாம் இல்லை, நண்பர்கள் சரக்கடிச்சு அவர்கள் கிளு கிளு கதைகள் சொல்லும் போதெல்லாம் காதை தீட்டி கேட்டுவிட்டு அவர்கள் போதை தெளிந்ததும் அவ்வப்போது கிண்டல் அடிப்பது வழக்கம்.

எங்கள் பிரச்சாரத்திற்காக ஒரு சுவராஜ் மஸ்தா வேன் ஏற்பாடு செய்திருந்தார்கள் அதில் முன் பின் ஸ்பீக்கர் கட்டி, பொன்னான வாக்குகளை உதயசூரியனுக்கு போடுங்க என்றும், போடுங்கம்மா ஓட்டு உதயசூரியனைப்பார்த்து என்று தீவிர பரப்புறை செய்வோம்.

எங்கள் வேன் எப்போது கழுவ செல்கிறேன் என்று செல்லும் போதெல்லாம் வேனில் ஆட்கள் புல்லாகி வண்டி காவிரிக்கு கழுவ போகும். எனக்கு முதல் 4 நாட்கள் ஒன்றும் புரியவில்லை, சரி சரக்கடிக்க போவாங்க என்று தான் இருந்தேன், எப்ப போனாலும் சரி ஆள் ஆளுக்கு பேசிகிட்டே கிளம்பிடுவாங்க. என்ன செய்யறாங்க என்று கண்டு பிடிக்க ஒரு நாள் அவர்கள் சென்றதும் பின் நானும் நண்பனும் செல்ல, வண்டி ஆற்றின் ஓரத்தில் ஒதுக்குப்புறத்தில் நின்று கொண்டு இருந்தது. என்னடா செய்கிறார்கள் என்று பார்த்தால் உள்ளே நீக்ரோவின் கிளு கிளு படம். அடப்பாவிகளா எங்கிட்ட சொல்லி இருந்தா நானும் வந்திருப்பேனே என்றேன்... நீ சின்னப்பையன் இங்க வரக்கூடாதுன்னு தொறத்திவிட்டுட்டானுக படுபாவிப்பசங்க.. எப்ப தேர்தல் பிரச்சாரம் என்றாலும் இது கண்முன்னே எனக்கு ஓடும், அன்று நடந்ததை இந்த தேர்தல் அன்று எங்கள் நட்புக்கள் எல்லாம் பேசி பேசி சிரிப்போம்...

2009க்கு முன் நடந்த தேர்தலில் எல்லாம் தீவிரமாக திமுகவிற்கு பரப்புறையில் ஈடுபட்டு இருப்பேன், அதற்கு பின் நடந்த சில சம்பவங்களால், பெரியப்பாவோடு இணைந்து கட்சியும் மாறி, காட்சியும் மாறிவிட்டேன். இப்போதெல்லாம் போனமா ஓட்டப்போட்டமா வந்தம்மா என்று இருக்கிறேன்... என் ஜனநாயக கடமையாற்ற ஆவலோடு இருக்கிறேன்....


4 comments:

  1. என் ஜனநாயக கடமையாற்ற ஆவலோடு இருக்கிறேன்....
    >>
    நானும்..., கூடவே தூயாவும்...., தூயாக்கு இந்தத் தேர்தலில்தான் ஓட்டுப் போடப்போறா.

    ReplyDelete
  2. தீவிர கட்சி ஈடுபாடு எல்லாம் இல்லை! ஆனால் எம்.ஜி.ஆர் பிடிக்கும். 1996 முதல் ஓட்டு போட்டு வருகிறேன்! ஒரு முறை கூட மிஸ் ஆனது இல்லை! ஓட்டும் ஒரே கட்சிக்கு போனது இல்லை! இந்த முறையும் தயாராக இருக்கிறேன்!

    ReplyDelete
  3. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  4. ஜனநாயக கடமை.... சரி தான்....

    என்னுடைய வாக்கினை அளிக்க முடியாதபடி பட்டியலிலிருந்து பெயரை நீக்கி விட்டது தேர்தல் ஆணையம்! :(

    ReplyDelete