Wednesday, April 16, 2014

அஞ்சறைப்பெட்டி 17.04.2014


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........

வணக்கம் வலையுக நண்பர்களே...

அனைவரும் நலமா., நீண்ட நாட்களுக்கு பின் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த தமிழ் புத்தாண்டு அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

.......................................

இந்த பாராளுமன்ற தேர்தல் இதுவரை இல்லாத அளவு இந்த முறை களை கட்டியுள்ளது. கடந்த தேர்தலை விட இப்போது டெக்னாலஜி அதிகம் ஆனதால் முகநூல், டிவிட்டர் என இணையதளங்களும் கலக்குகின்றன. 
பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர் இந்த தேர்தலை சந்திக்க, காரணம் எப்போதும் தமிழகத்தில் இரு முனைப்போட்டி தான் இருக்கும் இந்த முறை அது 4 மற்றும் 5 முனை போட்டி என்று கூட சொல்லலாம். இந்த தேர்தலில் தான் தெரியும் எந்தக்கட்சிக்கு எவ்வளவு வாக்கு வங்கி என்று. கருத்துக்கணிப்பில் ஒரு நாளைக்கு ஒரு கட்சி முன்னிலை என்கின்றனர். அதுவும் குழப்பமான மனநிலையையே உண்டாக்குகின்றது.
இணையதளங்களில் புள்ளிவிபரங்கள் எல்லாம் சொல்லி எங்கள் கட்சி தான் வெற்றி பெறும் என ஆள் ஆளுக்கு சுயதம்பட்டம் அடிக்கின்றனர். கருத்துகணிப்போ, சூறாவளி சுற்றுப்பயணம் என எதை எடுத்தாலும் ஒவ்வொருவருக்கும், ஒருவர் சளித்தவர் இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது இத்தேர்தல்.. முடிவுகளுக்காக காத்திருப்போம் மே 3ம்வாரம் வரை...

.......................................

தேர்தல் நாள் அன்று முதல் ஆளாக ஓடி வாக்குச்சாவடியில் 7.10க்குள் எனது வாக்கை பதிவு செய்து விடுவேன். இந்த முறை மிக முக்கிய திருமணம் சென்னையில் தேர்தல்நாள் அன்றே வருவதால் என்ன செய்வது என்று குழப்பத்திலேயே இருக்கிறேன். ஆனாலும் டிக்கெட் எதுவும் முன் பதிவு செய்யாததால் எப்படியும் என் ஜனநாயக கடமையை ஆற்றிவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறேன். வீட்டு மக்களே முக்கியமான திருமணம் போயே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.. ஜனநாயக கடமையா?? குடும்பமா?? என்று தவிக்கிறேன்...

.......................................

வீட்டில் குழந்தைகளிடம் பன்னு வாங்குவதே தனி இன்பம், அப்படி வாங்கிய சில பன்கள்...

அப்பா, எல்லாத்துக்கும் பணம் வேணுமா?

ஆமா, தங்கம்....

வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம், இப்ப கோயிலுக்கு போனமுள்ள, அங்க கார் நிறுத்தியதற்கு கூட பணம் கேட்கும் போது நீதானே கொடுத்த??

ஆமா !!

ஏம்பப்பா சாமிகிட்ட என்ன வேண்டுன??

நிறைய சம்பாரிக்கனும், எல்லோருடனும், சந்தோசமா இருக்கனும் வேண்டினேன் !!

சாமிகிட்ட சம்பாரிக்கனும்ன்னு வேண்டிகிட்டு, பூசாரி தட்டுல எதுக்குப்பா காசு போட்டே, இப்படி போட்டுகிட்டு இருந்தா, அப்புறம் எங்க சம்பாரிக்கிறது....?????

இப்படி மாத்தி மாத்தி தினமும் பன்னு கொடுக்கிறான் எம்மவன், தாங்கமுடியல யுவர் ஆனர்....

.......................................  
ஆழ்துளைக்குழாய் செய்தியை கேட்டாவே பயமா இருக்குது, நிச்சயம் எனக்கு மட்டுமல்ல குழந்தை இருக்கும் எல்லா வீட்டுக்கும் இது தான் நிலமை.. ஆழ்துளை குழாய் அமைப்பவர்கள் அன்றே குழாய் இறக்கி மூட அடைக்கவேண்டும், இல்லையேல் சாக்கை கொண்டு நன்கு கட்டி மேலே ஒரு கல் வைத்து பக்கத்தில் பாதுகாப்புக்கு ஒரு ஆள போடனும், இல்லை என்றால் ஊர் ஊருக்கு குழந்தைகள் விழத்தான் செய்யும்... பெற்றோரும் கொஞ்சம் விழிப்புணர்வோடு குழந்தையை கண்காணிக்கனும்....

.......................................  

வெய்யில் அதிகம் அடிச்சா கோலா, பெப்சி எல்லாம் சாப்பிட்டு பந்தா விடும் நண்பர்களை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது..

எப்பவும் மளிகை பொருட்கள் வாங்கும் கடையில் குத்திய கம்பு கூழ் காய்ச்ச ஏதுவாக இருக்கும் கம்பு அரைகிலோ 15 ருபாய்கிக்கு விற்றார்கள், வாங்கி வந்து குக்கரில் வைத்து ஒரு ட்ம்ளர் கம்புக்கு 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டேன், கம்பு கூலாகியது அதை ஒரு மண் சட்டியில் ஊற்றி வைத்து அடுத்த நாள் காலை வெறும் வயிற்றில் ஒரு சிறு வெங்காயத்தோடு குடித்தேன், தேவமிர்தம் தானாக கிடைக்காது நாம் தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும் அந்த அளவுக்கு சுவையாக இருந்தது...

தினமும் மதியம் ஒரு கப் குடித்துவிடுகிறேன்.. பாட்டில் ட்ரிங்ஸ் குடித்து உடம்பை கொடுத்துக்கொள்வது பதில் இது எவ்வளேவோ மேல்...

.............................. 

ரொம்ப நாளைக்கு அப்புறம் நேற்று தியேட்டரில் படம் பார்க்க போனேன்.. தியேட்டரில் கூட்டமும் நிரம்பி இருந்தது மான்கரேத்தேவிற்கு, முக்கியமாக பொடுசுங்க கூட்டம் அதிகமாகவே இருந்தது, நிறைய நாட்களுக்குபின் தியேட்டரில் குடும்பம் சகிதமாக படம் பார்ப்பது அதிகரித்துள்ளது போல. பெரிய பெரிய ஸ்டார்களுக்கு தான் ஓப்பனிங்கில் பயங்கர கைதட்டல் இருக்கும், அந்த கைதட்டல் இப்போது சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருப்பது மிகவும் மகிழத்தக்கது, நிறைய பேர் படம் மொக்கை என்றனர் ஆனாலும் குடும்பத்தினர் அனைவரும் மிக ஆர்வமாக இருந்தால் படத்திற்கு சென்றிருந்தோம்... படத்தில் சதீஸ் காமெடி ரசிக்கும் போல இருந்தது, அவருக்கு ஒரு நல்ல இடம் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்....
 .............................. 

யாரும் கண்ணு வெச்சிடாதீங்க மக்களே...


8 comments:

  1. ஜன நாயகக்கடமைதான்
    ஜெயிக்கும் என் நினைக்கிறேன்
    படம் கண்படும்படியாகத்தான் இருக்கிறது
    பகிர்வுக்கும் அடிக்கடி தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஒரு ஆட்சியர் மட்டும் ஆழ்துளைக் கிணறுகள் பிரச்னைக்கு துரித நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருக்கிறார். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒரு குழந்தையைக் காப்பாற்றி விட்டார்களே என்று சந்தோஷப் பட்ட அதே நேரம் இன்னொரு குழந்தை மரணம் சங்கடப்படுத்துகிறது.

    ReplyDelete
  3. ஆழ்துளை கிணறு மரணங்கள் வேதனையை தருகின்றது! முதலில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பயன்படுத்தாத கிணறுகளை தூர்க்க வேண்டும். தேர்தல் நாளன்று திருமணம் என்றால் முன்னாலே சென்று ரிசப்ஷனில் தலை காட்டிவிட்டு இரவே கிளம்பி வந்து ஜனநாயக கடமை ஆற்றலாமே! நன்றி!

    ReplyDelete
  4. ஜனநாயகக் கடமை தான் முக்கியம்... அடுத்து வரக்கூடிய எம்.பி.யைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உங்களுக்கும் இருக்கிறது. நான் என் மகனிடம் வாங்கும் பன்னுகளை வைத்து ஒரு தனிப்பதிவே எழுதலாம். மான் கராததே எனக்குப் பிடிக்கவில்லை.

    அப்புறம் கடைசியா படத்துல அரசியல்வாதி மாதிரியே இருக்கீங்க.....

    ReplyDelete
  5. குழந்தைகளிடம் பெறும் பன்.... என்றுமே ரசிக்கத்தக்கவை..

    ஜனநாயக கடமை... நல்லது.

    கடைசி படம் - “கை எடுத்து கும்பிட்டால்” உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கே அளியுங்கள் என தானாகவே ஒலி வந்திருக்கும்!

    ReplyDelete
  6. பன்னு நானும் வாங்கியிருக்கிறேன்...
    அஞ்சறைப் பெட்டி எப்பவும் போல அருமை...

    ReplyDelete