Tuesday, April 29, 2014

யாரும் கண்டு கொள்வதில்லை??

புரூக் பீல்ட் அல்லது பன் மாலில் எப்போது சினிமாவிற்கு போனாலும் கூட்டம், கோவையில் எத்தனை தியேட்டர் இருந்தாலும் இங்கு மட்டும் தான் கூட்டம் அலைமோதுகிறது. இத்தனைக்கும் டிக்கெட் விலையோ மற்ற தியேட்டர்களை விட கூடுதல் தான் ஆனாலும் இங்கு Apps போனை கையில் வைத்துக்கொண்டு உடலை பாதி மூடியும், மூடாமல் துணியை போர்த்திக்கொண்டும் திரிகின்றனர் அதுவும் நாம் கையில்லாத பனியனை உள்ளாடையாக பயன்படுத்துகிறோம் அதைத்தான் இவர்கள் மேலாடையாக பயன்படுத்துகின்றனர், ஆக சினிமாவோடு இலவசமாக சினிமா பார்க்கும் கூட்டம் தான் இங்கெல்லாம் திரிகிறது.

எங்கு பார்த்தாலும் கூட்டமாக திரியும் இளைஞர்களையும், யுவதிகளையும் நான் குறை கூறவில்லை காரணம் ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கின்றனர், இப்பவெல்லாம் பிஇ 2 ம் வருடம் படிக்கும் போதே எப்படி கேம்பசில் செலக்ட் ஆவது என்று ப்ளான் போட்டு படிக்கறவங்க தான் இங்கு அதிகம், அப்படி படித்தவர்கள் இன்று நல்ல நிலையில் அருமையான சம்பளத்தில் இருக்கின்றனர் என்பது மகிழ்வான ஒன்று.. எனக்கு தெரிஞ்ச பையன் மிக ஏழ்மையான குடும்பம் அவன் அப்பா செம்ம தண்ணி வண்டி இருந்தாலும் அவனை கஷ்டப்ட்டு படிக்க வெச்சார்., பையன் படிப்பில் செம்ம சுட்டி ஆனால் ஆங்கிலத்தில் தத்தி, இது இவனுக்கு மட்டுமல்ல அரசு உயர்நிலைப்பள்ளியில் படிச்சவனுக்கு எல்லாம் வருவது தான். ஆனாலும் பையன் கொஞ்சம் உஷார். பிஇ சேர்ந்த கையோடு ஆங்கில பயிற்சி வகுப்பில் சேர்ந்து தத்தி தத்தி மேலேறிவிட்டான். 3 வது வருடம் படிக்கும் போது கேம்பசில் செலக்ட் ஆகி பெங்களூரில் வேலை, படிப்பு முடிஞ்சு இன்று பெங்களூரில் குடும்பத்தோட செட்டில். அன்று அவன் குடும்பத்தை உதாசீனப்படுத்தியவர்கள் எல்லாம் இன்று பொண்ணு கொடுக்க வரிசையாக வருகிறார்கள் என்று சொல்லி பெருமைப்பட்டார் அன்றைய குடிகார தந்தை, இப்ப அவர் குடிப்பதில்லையாம் அது தான் கூடுதல் சிறப்பு.

இந்த கேம்பசில் செலக்ட் ஆகாத பசங்க தான் ரொம்ப பாவம், நிறைய செலவு செய்து படித்தும், இங்கு 6 ஆயிரம் ரூபாய்க்கு வேலைக்கு க்யூவில் நிற்பது பரிதாபத்துக்குரியது. அதுவும், நேற்று என் சொந்தக்காரப்பையன் என் கம்பெனிக்கு தேர்வுக்கு வந்திருந்தான், பிஇ முடிச்சு 75 சதவீதம் வைத்திருந்தான், ரொம்ப சந்தோசமாக இருந்தது ஒரு வருடம் நிறைய தேர்வுக்கு போய்ட்டு வந்து விட்டான் ஆனாலும் தேர்வாகவில்லை, அவன் அப்பா ரொம்ப புலம்பினார், சரி வாடா என்று வரச்சொல்லி தேர்வு எழுதச்சொன்னா, பையன் எல்லாத்திலும் பெயில், ஏன் என்று கேட்டால் communication problem இந்த communication எவன் கண்டுபிடிச்சான்னு தெரியல இது இல்லாம இன்று நிறைய பேர் அல்லாடுகிறார்கள் என்பது நம் கண் கூட தெரிகிறது.

இந்த communication இல்லாதாற்கு யார் காரணம். அரசு பள்ளியில் படித்தது காரணமா அங்கு வரும் வாத்திகளுக்கே இது இல்லாதது காரணமா இதற்காக முயற்சி எடுக்காதது காரணமா அரசு இதற்கு தனிக்கவனம் செலுத்தாதது காரணமா என்று கேட்டுகிட்டே போகலாம், ஆனால்  அவன் அவனுக்கு வேணும் என்பது தான் பதிலாக இருக்கும்.

13 comments:

  1. வெற்றியாளர்களின் கதைதான் கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்டவர்கள் கதை சோகமானதுதான். BSRB, TNPSC Group 2, UPSC போன்ற பரீட்சைகள் எழுதலாமே...

    ReplyDelete
    Replies
    1. அதனால தானே சார் இன்று இந்த பரிட்சைகள் எல்லாம் 10 இலட்சம் பேருக்கு மிகாமல் எழுதுகின்றனர்...

      Delete
  2. கம்யூனிகேஷன் மட்டுமே காரணம் அல்ல. படிப்பை தாண்டிய பல விசயங்கள் இருக்கு. சில சிறந்த படிப்பாளிகள் வெளியுலகத்தில் தோற்றுவிடுகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான், ஆனால் அது நகர்புற மாணவர்களுக்கு, கிராமத்தில் உயர்நிலைப்பள்ளியிலும், மேல்நிலைப்பள்ளியிலும் பயலுபவர்களுக்கு அதெல்லாம் கிடைக்காது...

      Delete
  3. ஆங்கிலம் நம் மாணவர்களின் வாய்ப்புகளை கொன்றுவிடுவது வருத்தமான விஷயம்தான்!

    ReplyDelete
    Replies
    1. கிராமப்புற பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்களை ஒன்றுக்கு இரண்டாக நியமித்து மாணவர்களுக்கு ஆங்கில அறிவை புகட்ட முயற்சிக்கலாம்...

      Delete
  4. தீர்வுகள் காணமுடியத கேள்விகள்...

    ReplyDelete
  5. நானும் நகரமும் இல்லாத கிராமமும் இல்லாத ஒரு சிற்றூர் தான். கல்லூரி முடித்தவுடன் சேர்த்து நாலு வார்த்தை இங்க்லீஷ் பேசுவதற்குள் நாக்கு தள்ளி விடும். நிறைய ஆங்கிலப்படங்கள் பார்ப்பது உதவியது. அடுத்து ஆங்கில நாவல்கள். பெரிய அளவு ஆங்கில அறிவு தேவையில்லை. எளிதாகவே இருக்கும். படித்த சிட்னி ஷெல்டனும் ஜேம்ஸ் ஹாட்லி சேசும் நிறைய உதவின.. இப்போது பரவாயில்லை என நினைக்கிறேன்! (எனக்கு என்ன கஷ்டம்.. நான் பேசறதை கேக்கறவன் பாடு!)

    ReplyDelete
  6. Naan ennai ninaithukkonden......... naanum english varaamal thadumaariyavanthaan. ungalukku manathil nambikkai irunthaal intha communication easy endru purinthu konden, schoolil ithai valarkka vendum ! nalla pathivu !

    ReplyDelete
  7. Nalla pathivu Sathish..... Naan ennai ninaithukkonden, enakkum intha problem irunthathu, English pesa manathil nambikkai mukkiyam enbathai purinthukkonden !

    ReplyDelete
  8. பல சமயங்களில் ஆங்கிலம் தெரியாமல் தடுமாறியவர்களை பார்த்திருக்கிறேன். அதுவும் மொழி தெரியாத ஊர் செல்லும்போது ஆங்கிலமாவது கை கொடுக்காதா என்று தோன்றிவிடும்!

    தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கச் சொல்லுங்கள்.

    ReplyDelete