Wednesday, April 16, 2014

திருநங்கைகள்

 
திருநங்கைகளுக்காக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். நிறையத் திருநங்கைகள் முகநூலில் நட்பாக இருந்தாலும் அவ்வளவாக யாரிடமும் கதைத்தது இல்லை, ஆனால் எனக்கு நன்கு அறிமுகமானவன் திருநங்கையாக ஆனது தான் என்னில் மிக ஆச்சர்யம்..

என்னுடன் 7 மற்றும் 8ம் வகுப்பு படித்தவன் திருமுருகன் அதற்குப் பின் நான் பள்ளி மாறியதால் அவனைப்பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நீண்ட நாட்களுக்குப் பின் ஈரோட்டில் பணிபுரியும் போது பேருந்து நிலையத்தில் குமார் டீக்கடையில் தினமும், ஒரு டீயும் ஒரு வில்ஸ் பில்டரும் அடித்தால் தான் அன்றைய பொழுது சிறப்பாக அமையும் என்பது என் நினைப்பு, கிட்டத்தட்ட 3 வருடம் தினமும் காலை அங்கு தம்மோடு இருப்பேன். எப்பவும் போல வில்ஸ் பில்டர் வாங்கிப் பற்ற வைக்கும் போது தான் அந்தக் கடையினுள் என்னைப் பார்த்து உருவம் ஒன்று மறைவது போல் இருந்தது, அந்தக் உருவத்தின் முன் நின்றவர்கள் திருநங்கைகள்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் திருநங்கைகளைச் சர்வசாதரணமாகப் பார்க்கலாம். அதுவும் மாலை 7 மணிக்கு மேல் அங்கு நிறையப் பேர் சுற்றித்திரிவர். அவர்களுக்காக நிறையப் பேர் காத்தும் இருப்பர், நான் சொல்வது 2003ல் இப்போது எப்படி என்று தெரியவில்லை. பேருந்து நிலையம் எப்போதும் இப்படித்தான் இருக்கும் நாம் தான் கண்டும் காணமலும் போக வேண்டும்.

டீக்கடையின் உள்ள இருந்தவர்கள் என்னைப் பார்த்து சிரிக்க, கடை ஓனர் குமார் என்னய்யா உன்னைப்பார்த்து லைலா ஒளியுது என்றார். லைலாவா யாரு  என்று எனக்குப் புரியவில்லை முதலில், அப்புறம் லைலா வெளியே வந்து, என்னைத்தெரியுதா என்று பேச, டேய் திருமுருகா என்னடா ஆச்சு உனக்கு என்றேன், கண்களில் நீருடன் என் கை பற்றி என் தலைஎழுத்துங்க, நீங்க எப்படி இருக்கீங்க என்ற விசாரிப்போடு எங்க படித்தாய் என்ன வேலை செய்கிறாய் என்ற நார்மல் விசாரிப்போடு விலகினான். அடுத்த நாள் குமாரிடம் விசாரித்த போது பாம்பே போய் எல்லாம் கட் செய்து வந்துவிட்டு இப்போது லைலாவாக மாறிவிட்டான் என்றார். அதற்குப் பின் அவனை நான் பார்க்கவில்லை.

மீண்டும் ஒரு வருடம் கழித்து என் ஊர் திருவிழாவில் கரகாட்டம் ஆட ஒரு திருநங்கைகள் குரூப் வந்துள்ளது என்றனர், அப்போதைய கரகாட்டத்தில் ஆடியவர்கள் எல்லாம் திருநங்கைகளாக இருந்தாலும் ஆட்டம் சூப்பர் என்றனர். கரகாட்டம் என்றாலே என் மனது உடல் எல்லாம் அந்த இடத்தில் தான் இருக்கும் அப்புறத் நான் ஆட்டம் பார்க்காமல் போனால் எப்படி என்று உடனே ஓடி பார்த்தேன் அங்குக் குறவன் குறத்தி ஆட்டத்தைக் கலக்கியது லைலா என்கிற திருமுருகன். எனக்கு என்னவோ போல் இருந்தது என்னடா இவன் இப்படி ஆகிவிட்டானே என்று. அன்றைய ஆட்டம் முடிவில் என்னைப் பார்த்த அவனிடம் பேச முயன்றேன், ஆனால் கண்ணில் நீருடன், எல்லோரும் உன்னைத் தப்பா நினைப்பாங்க என்னிடம் பேச வேண்டாம் போ என்றான்.

மீண்டும் பல நாட்கள் கழித்து அவன் ஊர் வழியாகக் கிரிக்கெட் மேட்ச் ஆட சென்றோம், அப்போது அவன் ஊரில் பயங்கரக் கூட்டம் என்னவென்று பார்த்தால் லைலாவை அவன் குடும்பத்தினர் ஏன்டா இந்த ஊருக்கு வந்தாய் என்று அடித்துத் துரத்தினர், துரத்தியவர்கள் எல்லோரும் அவன் உறவினர்கள் என்பது மிக குறிப்பிடத்தக்கது. அன்று அவனைப்பாத்தபோது நான் மட்டுமல்ல என்னுடம் படித்த அவன் ஊர் பெண்களும் அங்கு இருந்தனர். அனைவரின் கண்களிலும் கண்ணீர் என்கண்களிலும் சேர்த்து தான்.

அதன் பின் அவனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, அவன் ஊர்பக்கம் விசாரித்த போது அப்போது போனவன் தான் இதுவரை இங்கு வரவில்லை என்றும், சென்னையில் இருக்கின்றான் என்று சொல்கின்றனர் வேறு எந்தத் தகவலும் இல்லை.

உச்சநீதிமன்ற இந்தத் தீர்ப்பை பார்த்ததும் அவன் ஞாபகம் தான் வந்தது எனக்கு. அவன் எங்கு இருப்பனோ என்று தெரியவில்லை ஆனால் அவனுக்கும் ஒரு அங்கிகாராம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்...

10 comments:

  1. அவன் எங்கு இருப்பனோ என்று தெரியவில்லை ஆனால் அவனுக்கும் ஒரு அங்கிகாராம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும் unmaiyana karuthu vazhthukkal

    ReplyDelete
    Replies
    1. Really i so feel happy.. All the best ...They are our lovely sisters..

      Delete
  2. திருநங்கைகள் வாழ்வு மிகவும் பரிதாபத்திற்குரியது. நினைக்கும்போதே கண்கள் குளமாகின்றன.

    ReplyDelete
  3. உண்மை அனுபவம் சோகத்தில்.

    ReplyDelete
  4. அவர்களும் மனிதர்களே! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்க கூடியது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. உண்மைக்கதை கண்களைக் குளமாக்கியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு நல்ல விதமான செயல்பாடாக வேண்டும்

    ReplyDelete
  6. மனதை வருத்திய பதிவு. இனிமேலாவது அவர்கள் வாழ்வில் ஒளி வீசும் என நம்புவோம்....

    ReplyDelete
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

    வலைச்சர தள இணைப்பு : ஞாயிறு மறையும் வேளை!

    ReplyDelete
  8. தங்களின் பதிவு கண்டு மனம் மிகவும் வருந்தியது. லைலா எங்கேயாவது நல்லபடியாக வாழட்டும். உற்ற துனையாக இருந்து இறைவன் நல்லருள் புரிவானாக!..

    ReplyDelete
  9. Nothing going to change of this shit announcement of supreme Court. Any have we are going to see them as same as before from a step back we never treated them as humans at all all we know is to see them with the same old views .

    ReplyDelete