Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Friday, October 17, 2014

இராத்திரி நேரத்து பூஜையில்...


"இராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில்" என்ற இந்த பாடல் தான் இந்த தலைப்பை படித்ததும் நிச்சயம் எல்லோருக்கும் நினைவு வரும், அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பட்டைய கிளப்பிய பாடல் இது. இன்றும் கிராமப்புறங்களில் திரைப்பட நடன நாட்டிய நிகழ்ச்சி நடந்தால் 12 மணிக்கு மேல் இந்த பாடல் இடம் பெறாத நடன நிகழ்ச்சியே இருக்காது எனலாம். நடன நிகழ்வு அங்கு நடக்கும் ஆட்டம் பாட்டத்தை பற்றி சொன்னால் சொல்லிகிட்டே போகலாம். இந்த கதையில் நாம் பார்க்கபோகும் இராத்திரி நேரத்து பூஜையே வேறு..

கோவையின் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் தான் நம் ஹீரோ வேலை செய்கிறார். என்ன தான் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து விதவிதமாக ஜீன்ஸ், டாப்சை எல்லாம் போட்ட பொண்ணுங்களை சைட் அடிச்சிகிட்டு இருந்தாலும் மனுசன் திங்கறதுல பலே ஆளு.. ஞாயிற்றுக் கிழமையான அவுங்க குக்கிராமத்தில் மீசைக்காரர் கறிக்கடையில் ( அது என்னங்க எல்லா ஊர்லியும் கறி போடுறவுங்க மட்டும் மீசையை முறுக்கி விட்டுகிட்டு இருக்காங்க) முன் தொடையில் இருக்கும் ஒத்தை எழும்பையும் எடுத்து விட்டு சதக்கறியாத்திங்கும் சாப்ட்டான ஆள்தாங்க நம்ம சாப்ட்வேர் ஆள்..

ஊருக்கு ஆள் வாரம் வாரம் வந்தாலும் வரும் போது மாரியப்பனிடம் விசாரிப்பான் நம்ம என்னடா பக்கத்து ஊர்ல டேன்ஸ் கீது போட்டங்களா போட்டா சொல்லு, அதுவும் எடப்பாடி பாபி சவுண்ட் சிஸ்டம் அழைத்து வருவாங்களே சேலத்து ரம்பா சங்கீதா வந்தா மறக்காம சொல்லுடா என்று மாரியப்பன் மட்டுமில்லாமல், பரந்தாமன், செந்தில், விஜி என எல்லாரிடம் பிட்டை ஓட்டி வைத்து விடுவான்.

எத்தனை நாளைக்குத்தான் சப்புன்னு போறது பக்கத்து ஊரான சுள்ளிமேட்டில் எடப்பாடி பாபி டேன்ஸ் நடக்குது அதுவும் வெசாழக்கிழமை ராத்திரி என்று கோயமுத்தூருக்கு போன போட்டதும், நம்ம ஹீரோ ஊருல அப்பன்னுக்கு உடம்பு சரியில்லைன்னு பிட்ட போட்டுட்டு பைபாஸ் ரைடரை பிடிச்சி லஷ்மி நகரில் இறங்கி, மேட்டூர் போற பஸ்ல ஏரி வீடு வந்து சேர்ந்துட்டான். எப்பவும் போல மெத்தையில் படுக்கிறேங்கற பேர்வழியில் சொம்பு தண்ணியும், தலைகணியும், பெட்சீட்டும் எடுத்துகிட்டு மொட்டை மாடிக்கு வந்து பசங்க எப்ப போன் செய்வாங்கன்னு ஒரு தம்மை பத்த வெச்சி இழுத்து கிட்டே பராக்கு பார்க்க 4 வீடு தள்ளி மொட்டை மாடியில் மேட்டர் நடக்க பையனுக்கு கிளு கிளுன்னு ஆகிடுச்சு..

கிளு கிளுன்னு இருந்தாத்தான் நண்பர்களுக்கு பிடிக்காதே, அவனுக போன் செய்ய இவன் கட் செய்துவிட்டு சுவர் ஓரமாக, சுவரோடு சேர்ந்து நின்னு நிழலைப்பார்க்க, எல்லா கதையியிலும் வர்ற மாதிரி மொட்டை, மாடி நிலா வெளிச்சம், பக்கத்தில் தவளை சத்தம், அடிக்கம் காற்றுக்கும் தென்னை மரம் சிலு சிலுவென்ற காற்று வீசும் இப்படி எல்லாம் இருக்கும் என்று நினைச்சீங்கன்னா, நொம்பத் தப்புங்கோ.. அன்னிக்குன்னு பார்த்து அம்மாவாசை முடிஞ்சு மூனா நாளோ, நாலம் நாளோ, வெளிச்சமே இல்ல கும்மிருட்டு, மலையாளத்தான் டீக்கடை வெளிச்சம் மட்டும் தான் தெரியுது, அதுவும் மலையாளத்தான் வயித்த நீட்டிக்கிட்டு டீ ஆத்துர ஆத்துல அவங்கிட்ட டீ குடிக்க வந்தவன் எல்லாம் பேசாம ஒசூர் போயே குடிச்சிக்கலாம் என்ற எண்ணம் வரும் வரை ஆத்துவான்...

நம்ம ஹீரோவுக்கோ டவுட்டு இங்க இருக்கற சோடி மலையாளத்தான் பொஞ்சாதியா இருக்குமோன்னு, ஆனாலும் ஒன்னும் தெரியல 2 உருவம் மட்டும் விளையாடுவது தெரிகிறது. அந்த கும்மிருட்டும் வேளையிலும் ஒற்றை சுவரில் அடுத்தவன் என்ன செய்யறான்னு பார்க்கற வேலையை நம்ம ஊரு ஆட்களைத்தவிர எவனும் செய்யமாட்டான்.. என்று மனதில் திட்டிகிட்டே வந்து வானத்தை பார்த்து மல்லாக்க படுத்தவன், கால் மேல காலப்போட்டு ஊர்ல இருக்கற பாதி பேரை நினைச்சிட்டான், இது யாரா இருக்கும் என்று.. அவன் பார்க்க கூடாது என்றாலும் அவன் மனசு மறுபடியும் அந்த ஒற்றை கைப்பிடிச்சுவருக்கு அழைத்து சென்று விட்டது.

ஒற்றைச்சுவரை நன்றாக பிடித்துக்கொண்டு தலையை முழுவதுமாக வெளியே நீட்டி, கண்களை பட்டையை தீட்டி வைரத்தை அறுப்பது போல் தீட்டிக்கொண்டு பார்த்தான். இப்போது உருவம் உருண்டு புரண்டது, பின் எழுந்து நின்றது போல இருந்தது கரண்ட் போய்விட்டது. ஆமாங்க இந்த கிராமத்தில் எல்லாம் பத்து மணிக்கு கரண்ட பிடுங்கி 3 பீஸ் கரண்ட் கொடுப்பாங்க அதனால ஒரு நிமிடம் கரண்ட் போய் வரும். சரி என்று கரண்ட் வந்ததும் பார்க்கலாம் என்ற இவன் பராக்கு பார்த்து நிற்க கரண்ட் வந்ததும் அங்கு எந்த அசைவுகளையும் காணம். 

மறுபடியும் நின்றவனை பாஸ்கர் பாத்துவிட்டு டேய் எத்தனை தடவை போன் பன்றது இங்க என்னடா பன்றன்னு கேக்க, இல்லடா அங்க யாரோ 2 பேர் இருந்தாங்கடா உருண்டுகிட்டு, ஆனா யார்ன்னு தெரியல என இவன் பட படன்னு உளற, டேய் ரிலாக்ஸ் இத விட அங்க சேலத்து ரம்பா ஆட வந்தாச்சாம். 10 மணிக்கு ஆரம்பிச்சு 12 மணிக்கு முடிச்சிடுவாங்க.. 11 மணிக்கு மேல தான் கிளு கிளுன்னு இருக்கும். உனக்கு அது முக்கியமா இல்ல இங்கயாருன்ன கண்டுபிடிக்கறது முக்கியாமான்னு முடிவு செய் என சொல்ல, ஐய்யய்யோ இது யாரா இருந்தா எனக்கென்ன நாம் போகலாம் என்று அய்யப்பனின் டிவிஸ் சூப்பரில் 4 பேரும், மாரியப்பன் ஸ்ப்ளண்டரில் 3 பேரும், என ஆள்ஆளுக்கு கிடைச்ச வண்டியில் ஏரி சுடுகாட்டில் வந்து ஒன்னு சேர்ந்து தம் அடிச்சுக்கொண்டு இருந்தனர்...

நம்ம ஹீரோ தான் படபடப்பா சீக்கிரம் குடிங்கடா ராத்திரி நேரத்து பூஜை பாட்டுக்கு சேலத்து ரம்பா சங்கீதா ஆட்டத்தை பார்க்க முடியாது என்று பர பரன்னு பரந்து கொண்டு இருந்த போது.. பாஸ்கர் இவன் ஒற்றைச்சுவரில் எட்டிப்பார்த்த கதையை சொல்ல எல்லாரும் கலாய் கலாய் என்று கலாய்த்துக்கொண்டு இருந்தனர், இடையில் வேகமாக வந்த மோகன் டேய் டேன்ஸ்க்கு அனுமதி இல்லைன்னு சொல்லி கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி இருக்காங்களாம்.. சீக்கிரம் வாங்கடா நாலு ஆட்டத்தை நறுக் என்று பார்த்து விடலாம் என எல்லோரும் இராத்திரி நேரத்து பூஜையை ரசிக்க கிளம்பினர்...

(தொடரும், இராத்திரி நேரத்து பூஜைகள்...)

ஹா ஹா என்ன மக்களே கிளு கிளுன்னு சொல்லி கடைசியில் தொடரும்ன்னு போட்டுட்டானேன்னு யோசிக்கறீங்களா, நன்றாக யோசியுங்க சேலம் சங்கீதா ஆட்டம் எப்படி இருந்துச்சுன்னு நாளைக்கு பார்ப்போம், அதற்கு பின் தான் இருக்கு க்ளைமேக்ஸ்)

Friday, July 18, 2014

எடுறா இரண்டாயிரம் ரூபாயை...

அலுவலக இடைவேளை நேரத்தில் செல்போனை கையில் பிடிச்சு செவுத்தில் சாய்ந்து, கிடைக்கும் 5 நிமிடத்தையும் உச்சா கூட போகாம நேரத்தை பயன் படுத்துகின்றனர் நம் ஆட்கள். அவர்கள் பேசுவது அவர்களின தனிப்பட்ட உரிமை தான் இதை நீங்களும் நானும் கேட்டா, போட கேனப்பையான்னு திட்டத்தான் செய்வானுக.

இப்படி அடிக்கடி அலுவலகத்தில் ஓதுங்கி பேசும் ஒருவனைப் பார்ப்பேன், அவன் பக்கத்து அலுவலகம் தான், ஆனாலும் அவ்வப்போது அவன் கொஞ்சி, அழுது பேசுவதை நான் கொஞ்சம் ரசிச்சு பார்த்து, சின்ன ஸ்மைலியோட சென்று விடுவேன்.

6 மணிக்கு அலுவலகத்தை விட்டு ஓடும் ஆட்களில் நான் முதல் ஆள். வண்டிய எடுத்து தலைக்கவசத்தை அணியும் போது, அந்த பையன் போனை எடுத்து, தலைக்கவசத்தின் உள் வைத்து பேசிகிட்டே சென்றான். ஏந்தம்பி பேசிகிட்டே வண்டிய ஓட்டுகிறாய் என்று யார் கேட்கமுடியும், கேட்டா போட வெண்ணெய் என்பான்.

2 நிமிடத்திற்கு பின் எப்பவும் போல என் வீட்டுக்கு செல்ல ஆயுத்தம் ஆனேன். சில நாட்களாக சாரல் மழையாக இருந்த கோவையில் நேற்று தான் சூரியன் எட்டிப்பார்த்தது. அப்படியே அலுவலக கேட்டிற்கு என் யமாஹாவைக் கிளப்பி வந்து நின்றேன். பக்கத்தில் இருந்த பள்ளி மாணவிகள் எல்லாம் அவர்களுக்கு பிடிச்ச தோழிகளோடு சிரித்து சிரித்து கூடவே தலைக்கவசத்துடன் இருந்த என்னையும் நமட்டு சிரிப்பு சிரிக்க வைத்தனர்.

சிங்கத்தை சிலிப்பி வண்டியை முறுக்கினேன், எங்கிருந்தோ சைக்கிளில் வந்த ஒருவன் அந்த பெண்களை கடக்கும் போது கையை நீட்டினான் அந்த பெண் லபக் என்று வாங்கி பள்ளி பாட மூட்டையில் திணித்தாள்.. ஆஹா 2014லிலும் காதல் கடுதாசி கொடுத்து காதலிக்கிறானே என்று மிக ஆச்சர்யம். அந்த காதலை வாழ்த்த வேண்டும் போலத்தான் இருந்தது. இந்த காதல் கடிதத்தை நானும் நிறைய எழுதி, நிறைய பேர்க்கு கொடுத்திருந்தாலும் ஒருத்தியும் என்னை காதலிக்கவில்லை என்பது தனிக்கதை. இந்த பேஸ்புக், டிவிட்டர், செல்போன் கலாச்சாரத்தில் காதல் கடிதம் என்பது நிறைய மகிழ்ச்சியை தந்தது. வாழ்க அந்த கடிதக்காதல்.

மீண்டும் சிங்கத்தை சிலிப்பி எஸ்என்ஆர் காலேஜ் தாண்டி பாப்பாநாயக்கன் பாளையத்திற்கு வண்டியை திருப்பினேன், மகன் வந்திருப்பான் அவன வீட்டு பாடம் எழுத வைக்க இன்னிக்கு என்ன பொய் சொல்லாம் என்று யோசிச்சிகிட்டே வந்தேன். சில முக்கிய முடிவுகள் இப்படித்தான் எடுக்க முடிகிறது. தனியோ யோசிச்சுகிட்டு போற ஒரே இடம் பயணம் தான். கவனத்தை சிதறவிடாதே, அப்புறம் நீ சிதறிவிடுவாய் என நீங்க நினைக்கறது புரியுது, எப்பவும் 40க்கு மேலே எண் சிங்கம் சீராது, சீரவும் விடமாட்டேன் அப்படி ஒரு கட்டுப்பாடு.

சிங்கம் திரும்பியதும் வேகத்தடைக்கு பக்கத்தில் நிறைய கூட்டம், நமக்குத்தான் ஊராம் வீட்டு விசயம் என்றால் மூக்க தூக்கிட்டு போய் அது என்ன நாத்தம் என்று பார்க்கவில்லை என்றால் தூக்கம் வராதே. வண்டியை நிறுத்தி இறங்காமல் வேடிக்கை பார்த்தேன், ஓர் அழகான ஆண்டி வந்து என் முன் நின்றது, அதன் முடி முட்டியை தாண்டி நின்றதால் ஒரு நிமிடம் சண்டையை விட்டு விட்டு ஆண்டடிய பார்க்க ஆரம்பித்தேன். தலைக்கவசத்தை கழட்டி ஆண்டடியிடம் பேசி விட வேண்டும் என்று கழட்டும் போதே அந்த ஆண்ட்டி அந்த குழந்தை மேல தான் தப்பு, இவுங்க விடாம சண்டை போடுறாங்க பாருங்க என்றதும், ஆஹா இது தான் சாக்கு என்று அப்படீங்களா என்று கதை கேட்ட ஆரம்பித்தேன், ஆண்டியின் நீள முடியை ரசிச்சபடியே..

இருசக்கர வாகனத்தில் மெதுவாகத்தான் வந்திருக்கிறான், வேகத்தடை இருந்ததால் மெதுவாகத்தான் வரமுடியும், வேகமாக வர வாய்ப்பு இல்லை, ஒளிஞ்சு விளையாட்டு விளையாடிய பாப்பா ஓடி வந்து வண்டிக்குள் விழுந்து விட்டது இது தான் மேட்டர். அந்த பெண்ணுக்கு கையில் சிராய்ப்புடன் கூடிய காயம் மட்டுமே பட் 2000 கொடு இல்லை என்றால் வா ஆஸ்பத்திரிக்கு போகலாம் அந்த ஸ்கேன், இந்த ஸ்கேன் என்று இவர்கள் போட்ட பிட்டில் பையன் திரு திரு என்று விழித்து நின்றான்.

நான் வண்டிய விட்டு இறங்கிய அவன் மேல தப்பு இல்லை என்று சொல்லனும் என்று என் மனசு துடிச்சது, கூட ஆண்டடி வேற இருக்கிறாங்க என் தைரியத்தை காட்டவேண்டும் என்று வேகமாக இறங்கினேன், ஆண்டி வேண்டாம் தம்பி நமக்கேன் வம்பு, அவுங்கள பார்த்தா பணம் வாங்காம விட மாட்டாங்க போல, நாம பொழப்ப பார்ப்போம் என்றது, எனக்கும் அது தான் சரி என பட்டது. நாம நியாயம் கேட்க போய், அவர்கள் நிறைய இருந்தாங்க, நம்மள ரெண்டு வீசினால் நாம் அடிவாங்கி ஓட வேண்டும் என்று  நம்ம ஊர் சராசரி மனது நினைத்தது, வா வீட்டுக்கு போகலாம் என்றும் சொன்னது மனசு, ஆண்டியிம் கிளம்பி விட்டது.. நானும் கிளம்பிட்டேன்..

அப்போது கூட்டத்தில் சத்தமாக கேட்டது உனக்கு வேண்டாம் எனக்கும் வேண்டாம் எடுறா 2000 ரூபாயை....

Wednesday, April 16, 2014

திருநங்கைகள்

 
திருநங்கைகளுக்காக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். நிறையத் திருநங்கைகள் முகநூலில் நட்பாக இருந்தாலும் அவ்வளவாக யாரிடமும் கதைத்தது இல்லை, ஆனால் எனக்கு நன்கு அறிமுகமானவன் திருநங்கையாக ஆனது தான் என்னில் மிக ஆச்சர்யம்..

என்னுடன் 7 மற்றும் 8ம் வகுப்பு படித்தவன் திருமுருகன் அதற்குப் பின் நான் பள்ளி மாறியதால் அவனைப்பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நீண்ட நாட்களுக்குப் பின் ஈரோட்டில் பணிபுரியும் போது பேருந்து நிலையத்தில் குமார் டீக்கடையில் தினமும், ஒரு டீயும் ஒரு வில்ஸ் பில்டரும் அடித்தால் தான் அன்றைய பொழுது சிறப்பாக அமையும் என்பது என் நினைப்பு, கிட்டத்தட்ட 3 வருடம் தினமும் காலை அங்கு தம்மோடு இருப்பேன். எப்பவும் போல வில்ஸ் பில்டர் வாங்கிப் பற்ற வைக்கும் போது தான் அந்தக் கடையினுள் என்னைப் பார்த்து உருவம் ஒன்று மறைவது போல் இருந்தது, அந்தக் உருவத்தின் முன் நின்றவர்கள் திருநங்கைகள்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் திருநங்கைகளைச் சர்வசாதரணமாகப் பார்க்கலாம். அதுவும் மாலை 7 மணிக்கு மேல் அங்கு நிறையப் பேர் சுற்றித்திரிவர். அவர்களுக்காக நிறையப் பேர் காத்தும் இருப்பர், நான் சொல்வது 2003ல் இப்போது எப்படி என்று தெரியவில்லை. பேருந்து நிலையம் எப்போதும் இப்படித்தான் இருக்கும் நாம் தான் கண்டும் காணமலும் போக வேண்டும்.

டீக்கடையின் உள்ள இருந்தவர்கள் என்னைப் பார்த்து சிரிக்க, கடை ஓனர் குமார் என்னய்யா உன்னைப்பார்த்து லைலா ஒளியுது என்றார். லைலாவா யாரு  என்று எனக்குப் புரியவில்லை முதலில், அப்புறம் லைலா வெளியே வந்து, என்னைத்தெரியுதா என்று பேச, டேய் திருமுருகா என்னடா ஆச்சு உனக்கு என்றேன், கண்களில் நீருடன் என் கை பற்றி என் தலைஎழுத்துங்க, நீங்க எப்படி இருக்கீங்க என்ற விசாரிப்போடு எங்க படித்தாய் என்ன வேலை செய்கிறாய் என்ற நார்மல் விசாரிப்போடு விலகினான். அடுத்த நாள் குமாரிடம் விசாரித்த போது பாம்பே போய் எல்லாம் கட் செய்து வந்துவிட்டு இப்போது லைலாவாக மாறிவிட்டான் என்றார். அதற்குப் பின் அவனை நான் பார்க்கவில்லை.

மீண்டும் ஒரு வருடம் கழித்து என் ஊர் திருவிழாவில் கரகாட்டம் ஆட ஒரு திருநங்கைகள் குரூப் வந்துள்ளது என்றனர், அப்போதைய கரகாட்டத்தில் ஆடியவர்கள் எல்லாம் திருநங்கைகளாக இருந்தாலும் ஆட்டம் சூப்பர் என்றனர். கரகாட்டம் என்றாலே என் மனது உடல் எல்லாம் அந்த இடத்தில் தான் இருக்கும் அப்புறத் நான் ஆட்டம் பார்க்காமல் போனால் எப்படி என்று உடனே ஓடி பார்த்தேன் அங்குக் குறவன் குறத்தி ஆட்டத்தைக் கலக்கியது லைலா என்கிற திருமுருகன். எனக்கு என்னவோ போல் இருந்தது என்னடா இவன் இப்படி ஆகிவிட்டானே என்று. அன்றைய ஆட்டம் முடிவில் என்னைப் பார்த்த அவனிடம் பேச முயன்றேன், ஆனால் கண்ணில் நீருடன், எல்லோரும் உன்னைத் தப்பா நினைப்பாங்க என்னிடம் பேச வேண்டாம் போ என்றான்.

மீண்டும் பல நாட்கள் கழித்து அவன் ஊர் வழியாகக் கிரிக்கெட் மேட்ச் ஆட சென்றோம், அப்போது அவன் ஊரில் பயங்கரக் கூட்டம் என்னவென்று பார்த்தால் லைலாவை அவன் குடும்பத்தினர் ஏன்டா இந்த ஊருக்கு வந்தாய் என்று அடித்துத் துரத்தினர், துரத்தியவர்கள் எல்லோரும் அவன் உறவினர்கள் என்பது மிக குறிப்பிடத்தக்கது. அன்று அவனைப்பாத்தபோது நான் மட்டுமல்ல என்னுடம் படித்த அவன் ஊர் பெண்களும் அங்கு இருந்தனர். அனைவரின் கண்களிலும் கண்ணீர் என்கண்களிலும் சேர்த்து தான்.

அதன் பின் அவனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, அவன் ஊர்பக்கம் விசாரித்த போது அப்போது போனவன் தான் இதுவரை இங்கு வரவில்லை என்றும், சென்னையில் இருக்கின்றான் என்று சொல்கின்றனர் வேறு எந்தத் தகவலும் இல்லை.

உச்சநீதிமன்ற இந்தத் தீர்ப்பை பார்த்ததும் அவன் ஞாபகம் தான் வந்தது எனக்கு. அவன் எங்கு இருப்பனோ என்று தெரியவில்லை ஆனால் அவனுக்கும் ஒரு அங்கிகாராம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்...

Thursday, February 6, 2014

பொம்பளப் பேயும் நண்பர்களும்...


தூக்கத்தில் உச்சாப் போவதற்காக, இரவு விழித்த போது தலையில் ' தீ ' உடன் ஆத்துப்பள்ளத்தில் ஓர் உருவம் சென்று கொண்டு இருந்தது. பேயைப்பற்றிக் கேள்விப்பட்ட நான், அன்று தான் பார்த்தேன், பேய் இருப்பது உண்மைதான் என அப்போது தான் அறிந்தேன். அடுத்த இரண்டு நாட்களாகக் காய்ச்சல் வந்து படுத்த படுக்கையானேன்.

எங்க ஊரில் இரவு டியூசனுக்குச் சென்றால், காலையில் எழுந்துக் கொஞ்ச நேரம் படித்துவிட்டு வீட்டுக்குக் காலை 6.30 மணிக்குத்தான் வருவோம். வந்த உடன் பள்ளிக்குச் செல்ல நேரம் சரியாக இருக்கும். டியூசனுக்குச் செல்வது என்றால் எல்லோருக்கும் அலாதிப் பிரியம். ஆம், எங்க ஊர் ஓப்பன் தியேட்டரில் போடும் படங்களை அன்று இரண்டாவது ஆட்டம் ( செகன்ட் ஷோவை நாங்க இப்படித்தான் சொல்வோம்) படத்துக்குச் சென்று வருவது வாடிக்கை. இதற்காகவே எப்பப் பெரிய பையன் ஆகி 9ம் க்ளாஸ் செல்வோம் என்று காத்திருப்போம்.

டியூசனில், இரவு தங்கி இருக்கும் போது தான் உச்சாவுக்கு, எழுந்த நான் பேயைக்கண்டேன். காய்ச்சல் நன்றாகிப் பேயைப்பார்த்தேன் என்று விஜியிடம் சொன்னேன். அவன் கேவலமாகச் சிரிக்கிறான். குமாரிடம் சொன்னேன் அவனும் அதே, சுந்தர் தான் கொஞ்சம் பயந்து உண்மைதானே என்றான். ஆம் என்று முழுக் கதையையும் சொன்னதும், அன்று இரவு அனைவரும் தூங்காமல் பேயை எதிர்பார்த்துக் காத்திருந்தோம் மொட்டை மாடியில். வழக்கம் போல அன்று பேய் வரும் போது நானும் சுந்தரும் விழித்திருந்தோம்.

தீ எரிந்து கொண்டு இருக்கிறது, அந்தத் தீ நடந்து வருகிறது, நாங்கள் இருந்த இடத்தில் இருந்து காணும் பொழுதுத் தீ சிறிதுத் தூரம் போய் நின்றது. அப்போது தான் சுந்தர் ஆமாண்டாப் பேய் என்றும், உடனே விஜியையும், குமாரையும் எழுப்பியதில், தூக்கக்கலக்கத்தில் இருந்த அவர்கள் பேயைப்பார்த்து நடுங்கினர், கூடவே நாங்களும். சரி பேய் நாளை வருகிறதா? என்று அடுத்த நாள், காத்திருந்துப் பார்த்தோம். அடுத்த நாளும் வந்தது.

இப்போது தான் நான் சொன்னது உண்மை என்று, அனைவரும் நம்பினர். என்னசெய்யலாம், என்று கிணற்று மேட்டில் அனைவரும் ஆலோசனையில் ஈடுபட்டப் போது பேயை ச்சந்திக்கலாம் என்று முடிவுசெய்தோம். இதற்குத் தைரியமான ஆள் வேண்டும், என்று முடிவெடுத்த போது, பரந்தாமனை அழைக்கலாம் என்று முடிவெடுத்து, அவனை ஆள் விட்டுக் கூட்டி வரச்சொன்னோம். அவன் பேய்யைப் பார்த்தோம் என்றதும், பயங்கரமாகச் சிரிக்க ஆரம்பித்தான்.

அன்று இரவு டியூசனில் அவனைத் தங்க வைத்து இரவில் பேய் தீயைக் காண்பித்ததும், தைரியசாலியான அவனும் நடுங்க ஆரம்பித்தான். எல்லோரும் மாரியம்மன் கோயிலில் பூ போட்டுக் கேட்டோம், பேயைச் சந்திக்கலாமா? வேண்டாமா ? என்று, அம்மன் " பூ " சந்தியுங்கள் என்று வந்தது.

பேயை சந்திக்கச் சரியான நாள் பார்த்தோம், சனிக்கிழமை என்று சொன்னார்கள். அதனால் ஒரு சனிக்கிழமையைத் தேர்ந்தெடுத்து அன்று பேய்க்கு "கருப்பு" என்றால் பயமாம், அதனால் எல்லோரும் கையில் "கருப்புக் கயிர்" கட்டிக்கொண்டோம், "செருப்பு" என்றால் பயம் என்றார்கள் எல்லோரும் செருப்பு போட்டுக்கொண்டோம், "சீவக்கட்டையில் அடித்தால் ஓடிவிடுமாம் 2 சீவக்கட்டை எடுத்துக்கொண்டு பேயை சந்திக்க தயாரானோம்". இவ்வளவு பயத்திலும் விஜிக்குமட்டும் ஒரு கிளுகிளுப்பு பொம்பளப் பேயாக இருந்தா, நான் ஒரு தடவை கட்டிப்பிடிச்சிக்கிறேனடா? என்று எங்களை சூடாக்கினான்.

பேயைச் சந்திக்க ஆத்துப்பள்ளத்துக்குச் செல்வதற்கு, அன்று மாலையில் இருந்தே, எந்ந வழியில் போவது, பேய் வந்தால் எப்படி ஒடுவது, என்று எல்லா இடங்களையும் ஆய்வு செய்தோம். அன்று இரவு டியூசன் முடிஞ்சதும் நாங்கள் 5 பேரூம் தயாராக இருந்தோம், மணி 12 ஆகப்போகுது பேய்யைக்காணம், ஆனால் எங்கள் பயம் மட்டும் குறையவே இல்லை. பேய்க்கு கால் இருக்காது, என்றும் அது வெனீர் நிறத்தில் இருக்கும் என்றும் , குலை நடுங்க முழித்திருந்தோம்.

எதிர்பாத்தப்படி பேய் வந்தது. பேய் நடந்து வர வர நாங்களும், மொட்டை மாடியில் இருந்து கீழே வந்து, எங்கள் ஆயுதங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு ஆத்துப்பள்ளத்தை நோக்கி நடந்தோம். பேய் அக்கறையில் போக நாங்க இக்கரையில் நின்றோம். பேய்யை நாங்கள் புல் மறைவில் இருந்து யார்?, முதலில் பார்ப்பது என்று பயந்து கொண்டு இருந்தோம்.

பரந்தாமன் தான் முதலில் பார்த்தான், பார்த்தவன் பேய் அறைந்தது போன்று நின்றான், எங்களுக்கு பயம் தொற்ற. அவன் எங்களை எட்டி உதைத்தான், அடப்பன்னிங்களே. அது பேய்யல்லடா மீன்காரன் சண்முகம் என்றான். எட்டிப்பாத்ததை பார்த்த சண்முகம் என்னங்கடா மீன் வேண்டுமா?  என்ற கேட்க எங்களுக்கு சிரிப்பு கூடவே. பேயைப்பார்க்காத ஏமாற்றம், விஜிக்கோ கட்டிப்பிடிக்க இயலவில்லை என்று வருத்தம்.

அதன் பின் சண்முகத்திடம் பேசும் போது. தான் தெரிந்தது இரவு ஆத்து மேட்டில் கட்டிய வலையில் மீன் இருக்கிறதா? என்று பார்ப்பதற்காக. தீப்பந்தம் பிடித்துக்கொண்டு வருவேன், மீன் இருந்தால் எடுத்து இந்த வலையில் போட்டு விட்டு மீண்டும் காலை வந்து மார்க்கெட் செல்வேன் என்றார். எங்களுக்கோ பேயை பார்க்க இயலாத வருத்தம்...

Monday, August 12, 2013

மாமன் பொண்ணுக்கு கண்ணாலம்....


" ஹாய் கீதா என்னோட மாமா அதான் உன்னோட அப்பா என்ன சொல்றார்? "
" குத்துக்கல்லுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சாலும் வைப்பாரம், உங்களுக்கு என்னைத்  தர மாட்டாராம்! "

"
ஏன் நான்  உன்ன வெச்சு காப்பாத்த மாட்டேனாமா, இல்ல கல்யாணம்  செஞ்சுட்டு கழட்டி விட்டுடுவேனாமா? "

"
இந்த லொள்ளுதானே வேண்டாங்கறது, அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சீங்களா? "

 " 
எங்கம்மாகிட்டே பேசினேன் , அவங்க அண்ணணை அதான் உங்கப்பனை எதிர்த்து ஒண்ணும் செய்ய மாட்டாங்களாம். ஆனா முடிவா சொல்லிட்டேன்  நீதான் எம்பொண்டாட்டின்னு! "

"
நெசம்மாவா மாமா? "

"
ஏய் , இந்த லொள்ளுதானே  வேண்டாங்கறது! "

"  
நானும் எங்கப்பாகிட்ட தீர்க்கமா சொல்லிட்டேன்,  அப்பவும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாரு "

"
பேசாம ஓடிப்போய் கல்யாணம் செஞ்சுக்கலாமா? "

"
வேணாம் மாமா.  ரெண்டு பேருமே இங்கே பெங்களூர்ல வேலை செஞ்சுகிட்டு கைநிறைய சம்பளம் வாங்கறோம், நம்மால தனியா வாழ்ந்து காட்டமுடியும்னு நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு! "

"
சரி, அப்ப  இப்படிச்  செய்யலாமா? "

"
எப்படி ? "

"  
நம்ம வீட்டைத் தவிர மத்தவங்கல்லாம் நம்மை  சப்போர்ட் பண்றாங்க. பேசாம நாமளே  
கல்யாண மண்டபத்தை பிடிச்சு பத்திரிக்கையையும்  அடிச்சிடலாம்.  உனக்கும்  எனக்கும் ஒரே சொந்த பந்தம்தான். என்னோட  சித்தப்பா மூலம்  எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்திடுவோம்.  உங்கப்பாவை  எதிர்த்துக்கிட்டு மண்டபத்துக்கு வர உன்னால முடியுமா? "

" 
கவலையேபடாதே மாமா.  ரெண்டு நாளைக்கு முன்னாடி ஊருக்கு போய் வேலையப்பாரு.
கல்யாணத்துக்கு முதல் நாள் நான் சின்னம்மா வீட்டுக்கு வந்துடறேன். யார் எதிர்த்தாலும் சரி கல்யாணத்தன்னிக்கு காலைல என் கழுத்தில நீ தாலி கட்டறே!... "

"
ம்ம்... அப்படி சொல்லுடி என் செல்லம்! "

இரவு பொள்ளாச்சியிலிருந்த அம்மாவை போனில் அழைத்தாள் கீதா. 

"  அப்பா முடிவா என்னதான் சொல்றாரும்மா ? "
" அவரு இதுக்கு சம்மதிக்கவே மாட்டாராம் "

" அம்மா நானும் ரவி மாமாவும் ... ... ...  ...  இப்படி கல்யாணம் பண்ணிக்கறதா முடிவு செஞ்சிருக்கோம். உனக்கு சம்மதமா? " 

" இவ்வளவு தைரியமாடிஉனக்கு?  உங்கப்பாவுக்கு தெரிஞ்சா மனசு ஒடஞ்சு போயிடுவாரு! "

" போகட்டும்மா!  உங்க சம்மதத்துக்காக இவ்வளவு வருஷமா நானும் காத்திருந்து காத்திருந்து நொந்து போயிட்டேன். இன்னிக்கு ரவியோட சித்தப்பா ஈரோட்டில  மண்டபம் பார்த்து முடிச்சிட்டு பத்திரிக்கையும்  அடிக்கச் சொல்லிட்டாரு!
பத்திரிக்கையை பார்த்துட்டு  முடிவு செய்யுங்க. நீங்க  கல்யாணத்துக்கு
சம்மதிக்கலைன்னாலும் ஊர்ல  உலகத்துல உங்களப் பத்தி  பேசமா இருக்கணும்னா கல்யாண  மண்டபத்துக்கு வந்து வரவேற்புலயாவது நில்லுங்க! அப்பதாம்மா உங்களுக்கு மரியாதையா
இருக்கும். "

"
என்னடி இப்படி பேசற, நானா மட்டேங்கறேன், உங்கப்பாதான்  புரிஞ்சுக்கவே  மாட்டேங்கறாரு"

"
அது எனக்குத்  தெரியாதா? இது தான் என்னோட  முடிவு.  நான் அப்புறமா கூப்பிடறேன்,வச்சுடறேம்மா."
அடுத்து ரவியை அழைத்த கீதா அவனிடம்...

"
மாமா படிச்சிக்கிட்டிருக்கியா? "

"
இல்ல இப்பதான் எங்கப்பாகிட்ட பேசி முடிச்சேன் "

"
என்ன சொன்னார்? "

"
நாம எடுத்த  முடிவை  சொன்னேன்.  பேசாம கேட்டவர் " நீ இந்தளவுக்கு முடிவு பண்ணிட்ட  இனி நான் சொல்லவும்  செய்யறதுக்கும்  என்ன இருக்கு?  ஊர் உலகம் என்னைப் பேசாம  இருக்க மண்டபத்துக்கு வந்து எல்லோரையும் கையெடுத்துக் கும்பிட்டு வரவேற்கறேன்" என்றார். எங்கம்மா தான் தாம்தூம்னு குதிச்சுது!

"
அப்ப அவங்க ஒரு வழியா வர்றாங்கன்னு சொல்றே, எங்கம்மாதான் அப்பா கிட்ட எப்படி  சொல்றதுன்னு முழிக்கிறாங்க. பத்திரிக்கை பிரிண்ட் ஆகி வந்துடுச்சா? "

"
நாளை மாலை கிடைச்சதும்  எங்க சித்தப்பா உங்க அம்மாகிட்ட தர்றேன்னு சொல்லிட்டாரு "

"
சரி நாளான்னிக்கு எங்க  வீட்ல ஒரு  பூகம்பம் இருக்கு! நடப்பது நடக்கட்டும். நான் தூங்கப் போறேன். குட் நைட் மாமா! "

மறு நாள் இரவு கீதாவின் வீட்டில்...

"
ஏங்க டேபிள்ல இருக்கற பத்திரிக்கைய படிச்சீங்களா ? "

"
ம்... படிச்சேன் படிச்சேன். உம்புள்ளைக்கு அதிகமா படிச்சிட்டமேங்கற திமிரு. கஷ்டப்பட்டு
படிக்க வைச்ச என் பேச்ச கேக்காம அவளா  முடிவெடுக்கறா! "

"
ஏங்க அவ மேல  கோபப்படுறீங்க! அவ என்ன ஊர் பேர் தெரியாதவனையா விரும்புறா ? உங்க தங்கச்சி பையனைத்தானே? "

"
ஆமாண்டீ  எந்தங்கச்சி பையந்தா! ஆனா அவுங்கப்பன் ஒரு குடிகாரனாச்சே! "

"
ஆனா ரவிக்கு  எந்த கெட்ட பழக்கமுமில்லேங்கறதினாலதானே கீதா அவனை  விரும்புறா?"

"  
எனக்கு பிடிக்கல. நம்ம புள்ள தப்பான முடிவெடுத்துட்டா !"

 " அவ  சரியாத்தான் முடிவெடுத்திருக்கா ! "

"
என்ன நான் சொல்லச் சொல்ல எதுத்தா  பேசற? "

" இப்படிச்  சொல்லி என் வாய மூடாதீங்க .நல்லா யோசிச்சு பாருங்க 25 வயசுப்பெண்ணு மூணு  வருசமா உங்க கிட்ட போராடுறா அவனைத்தான் கட்டிக்குவேன்னு. இருவருக்கும் நல்ல வேலை  நல்ல சம்பளம் ன்னு இருக்காங்க.  உங்களுக்கு உங்க வரட்டு கவுரம் தான் முக்கியமா போச்சா? நம்ம பொண்ணு என்ன  அவங்கூட ஓடியா போயிட்டா? ஊரறிய பத்திரிக்கை அடிச்சு நம்ம சொந்தக்காரங்க எல்லாரையும் அழைச்சிருக்கா! எல்லோரும் அவளுக்கு சப்போர்ட்டா இருக்கறதால நீங்க செய்ய வேண்டிய  வேலைய அவுங்க செய்யறாங்க. அவளுடைய முடிவில் தெளிவாத்தான்  இருக்கா. நீங்க தான் குழம்பிப் போயிருக்கீங்க! நான் இந்த கல்யாணத்துக்கு போறேங்க நீங்க வருவதும் வராததும் உங்க இஷ்டம்."

 இரவு 11 மணி...

" யாருக்குங்க போன் பண்ணறீங்க? "

" பத்து நிமிசமா போன் போடறேன்,பிசியாவே இருக்கு! "
"
இந்நேரத்துல போய்  யாரைத் தொந்தரவு பண்றீங்க?"
    
 " ம்.. எம் பொண்ண "

"  
எ..என்னங்க சொல்றீங்க? "

"  
ஆமா  நானே தான் சொல்றேன்.  அவனைத்தான் கல்யாணம் கட்டுவேன்னு மூணு  வருசமா இவ சொல்றான்னா அவன் மேல இவ எந்த அளவிற்கு நம்பிக்கை வைச்சிருக்கணும்னு யோசிச்சேன். அவ நம்பிக்கை இனி வீண் போகக்கூடாதுன்னுதான் நானே முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்னு சொல்லப்போறேன்! "

   " உண்மையாவாங்க?  நான் கனவு கினவு  காணலியே! உங்களை நெனச்சு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு! ச்சே! இந்த     சந்தோஷ செய்திய  சொல்ற  நேரத்துல அவ போன் பிசியாவே இருக்கே! "

" அப்படிப் போடு  அருவாளைன்னானாம். அடியே இவளோட தம்பிக்கு உன் உறவுக்காரங்கள்ள யாராவது பொண்ணு கொடுக்கிறேன்னு வந்து அந்தப்  பொண்ணை எனக்கு பிடிக்காமப் போனா;  ' எங்க உறவுக்காரங்கன்னாலே உங்களுக்கு எளக்காரம்தா'-ன்னு நீ சொல்லக்கூடாதுங்கறதுக்காகத்தான் எனக்கு இஷ்டமில்லாத  மாதிரி இவ்வளவு நாளும்  நடிச்சுக்கிட்டிருந்தேன்.இப்ப நீ ரொம்ப  வற்புறுத்தறதினாலேயே  கீதாவை  என் தங்கச்சிப் பையனுக்கு கட்டி வைக்க சம்மதிக்கற மாதிரி என் பொண்ணோட ஆசையை நிறைவேத்திட்டேன் " என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே...

"விடுடி அவ  சந்தோசமா பேசிகிட்டு இருப்பா நாளைக்கு காலைல சொல்லுவோம்... நான் உன்ன பொண்ணு பார்த்துட்டு போய் நடந்தே உங்க ஊருக்கு வந்து எத்தனை நாள் ஓடையிலே பேசியிருப்பேன்.. 
நீ போய்த் தூங்கு" என்றார்.

Monday, July 15, 2013

வாடகை வீடும் நான் பட்ட அவஸ்தையும்...



வாடகைக்கு வீடு கேக்க போனா வீட்டுக்கு வாடகையை சொல்லாமல் வீட்டிற்கே விலையை சொல்கின்றனர்.. இந்த தொகைக்கு ஒரு வங்கியில் கடன் வாங்க தவணையாக கட்டிவிடலாம் என்று வங்கிக்கு அடிமையாகின்றனர் இங்கு பலர். வீட்டு உரிமையாளருக்கு அடிமையாக இருப்பதை விட வங்கிக்கு அடிமையாக இருக்கலாம் போல...

நமது இந்திய திருநாட்டில் கிராமத்தில் இருந்து இன்று பட்டணத்திற்கு சென்று வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்து தான் உள்ளது அதுவும் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைய வந்த பிறகு அந்த நிறுவனங்கள் வளர்ந்ததோ இல்லையோ இங்கு வீட்டு வாடகை வளர்ந்து விட்டது. சென்னையை பொறுத்த வரை மாநகராட்சியில் வீடு வாடகைக்கு பிடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்.. இன்றும் சென்னையில் பலர் தினமும் 2 மணி நேர பயணத்திற்கு பின் அலுவலகம் வந்து செல்வோரின் எண்ணிக்கை மிக அதிகமாகத்தான் இருக்கும்.

வீட்டு வாடைகை பணத்தை கேட்கும் போது நிச்சயம் கொஞ்சம் தலை சுத்தத்தான் வேண்டும். ஒரு படுக்கையறை, இரு படுக்கையறை என்று குருவி கூடு போல வீட்டை கட்டி வைத்து விட்டு வாடகையை மட்டும் சிங்கத்தின் கூண்டு போல கேட்கின்றனர். தமிழகத்தை பொறுத்த மட்டில் சென்னைக்கு அடுத்த படியாக என்று சொல்வதை விட கிட்டத்தட்ட சென்னைக்கு நிகரான வாடகை தான் நிர்ணயிக்கின்றனர் கோவையின் வீட்டு உரிமையாளர்கள்.

ஒரு வேலைக்கு தனித்தேர்வுக்கு செல்பவனை விட வீட்டு உரிமையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்வதற்குள் உச்சாவே வந்துவிடும். சமீபத்தில் வீடு வாடகைக்கு பிடிக்கவேண்டும் என்று ஊரைச்சுத்தி தேடாமல் அலுவலகப் பக்கத்திலேயே தேடினேன்.. ஒரு படுக்கையறை வசதி கொண்ட வீடு 7000 மும், 2 படுக்கையறை கொண்ட வீடு 10000 என்றனர் அது ஒரு வீதிக்கு மட்டும் அடுத்த வீதிக்கு சென்றால் இன்னும் அதிகமாக இருக்கிறது.

நிறைய நாட்கள் வீடு தேடி நிறைய அட்வான்ஸ கொடுத்து வீட்டுக்கு குடி வந்தால் தண்ணீர் ஒரு நாள் விட்டு ஒருநாள் தான் வருமாம்.. தண்ணீருக்குத்தான் முதல் அடி அடித்துக்கொள்வர். அடுத்து கரண்ட் பில் 5 வீடு வாடகைக்கு விட்டு இருப்பர் 5க்கும் ஒரே கனெஷன் கொடுத்து இருப்பர் அது பில் மட்டும் ஒரு குடும்த்துக்கு தலா 2000க்கு மேல் வரும். உறவினர்கள் வந்தால் அன்று மாலையே கிளம்பிடவேண்டும் முக்கியமாக குளிக்ககூடாது என்று ரூல்ஸ் சொல்கின்றனர்.

இன்னொரு இடத்தில் போக்கியத்திற்கு வீடு என்றனர் சரி எவ்வளவுங்க என்றேன் 7 இலட்சம் என்கின்றனர் சரி வீட்டை காட்டுங்க என்றதும் நீங்க உறுதியாக வருவதாக இருந்தால் காட்டுகிறேன் என்றார்... போற போக்க பாத்தா 7 இலட்சத்தையும் காட்டு அப்புறம் கதவை திறப்பீங்க போல என்றேன்.. திரு திரு வென விழித்தார் சந்தோசமாக வீட்டை வெச்குக்குங்க என்றேன் கேட்டை வேகமாக சாத்தும் சத்தம் கேட்டது.

இரவு பத்து மணிக்குள் வீட்டிற்குள் வந்துவிடவேண்டும். இரண்டாவது ஆட்டம் சினிமா எல்லாம் பார்க்க செல்லக்கூடாது. நான் 10 மணி 5 நிமிடத்திற்கு வீட்டை பூட்டிவிடுவேன் என்றார்.. இதை விடக்கொடுமை அவரு வெளியே வந்தாம் நாம் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று சொன்னார் பாருங்க துண்டக்காணம் துணியக்காணம் என்று ஓடிவந்தேன்.

வீட்டு உரிமையாளர்கள் இவ்வளவு சட்டம் பேசுவதற்கு நிச்சயம் அவர்கள் காரணம் இல்லை நாம் தான் காரணம் வாடகைக்கு வீடு கேட்டு செல்லும் போது எவ்வளவுனாலும் தருகிறேன் என்று அப்ப மிடில் மக்கள் சொல்ல ஆரம்பித்ததில் இருந்து தான் இவர்கள் வீட்டு வாடகையை உயர்த்த ஆரம்பித்தனர். அடுத்து புரோக்கர்கள் இவர்கள் சார் ஐடியில வேலைசெய்கிறார் கைநிறைய சம்பளம் வீட்டுக்கு அவர் 7000 தருகிறேன் என்கிறார் நீங்க 5000 போதும் என்கிறீர் என்று அவர்களின் கமிஷனுக்காக உசுப்பேத்தி உசுப்பேத்தி வாடகையையும் உசத்திவிடுகின்றனர்..

சரி வீட்டில் தான் பிரச்சனை அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விசாரித்தால் இரு படுக்கையறை 15 ஆயிரம் முதல் தொடங்குகிறது அதுமட்டுமில்லாமல் சர்வீஸ் சார்ஜ் என்று அது மாதத்திற்கு 2500 புடுங்கிகொள்கின்றனர். எதிர்த்து கேட்டால் இங்க இப்படித்தான் சால் இஸ்டம் இருந்தா இருங்க இல்லை வேற வீடு பாருங்க என்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்பை பொறுத்த வரை வாடகை அதிகம் ஆனால் வீட்டு உரிமையாளர் தொந்தரவு இருக்காது அல்லது குறைவாக இருக்கும். வீட்டுக்கு உறவினர்கள் வந்தாலும் பிரச்சனை இருக்காது...

வீடு வாடக்கு என்று செல்லும் போது அவர்கள் கேட்கும் முக்கிய கேள்வி நீங்க எங்க வேலையில் இருக்கீங்க உங்க மனைவி எங்க இருக்காங்க வீட்டில் எத்தனை பேர் என்ற கேள்வியில் நம்முடைய சம்பள விகிதத்தை கணக்கிட்டு வாடகையை ஏற்றும் அதிபுத்திசாலிகளும் உள்ளனர். இரண்டு பேரும் வேலைக்கு போய்டுவீங்க குழந்தை பள்ளிக்கு போய்விடும் அப்ப பிரச்சனையில்லை இவர்கள் வீட்டை அசுத்தம் செய்யமாட்டார்கள் என்று அப்போது தான் அவர்களுக்கு எல்லாம் மூளை கவுட்டி கவுட்டியாக வேலை செய்யும்... என்ன செய்ய வெளியூருக்கு வேலைக்கு வந்தால் நம் தலை எழுத்து இதுதான்.. இங்கு மட்டுமல்ல எல்லா ஊர்களிலும்...

வாடகைக்கு குடி இருப்பவர்களின் அக்கப்போரும் நிறைய இருக்கு என்று அவர்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைப்பர் வீட்டு உரிமையாளர்கள் அதை நாம் மறுக்க இயலாது ஆனால் இதில் அதிக தொந்தரவு எங்கே என்று பார்த்தால் உரிமையாளர்கள் தான் என்று பல தரப்பும் உண்மையை உரக்க சொல்லும்....

Tuesday, July 9, 2013

சைட் அடிக்கிறது தப்பா சார்...

 


குழந்தை பருவத்தில் இருந்தே ஆரம்பித்துவிடும் இந்த சைட் அடிக்கும் பழக்கம் இதை மறுக்க இயலாது ஆனால் மறைக்க இயலும். குழந்தையாக இருக்கும் போது இது தான் தம்பி உன் மாமன் மகள் அத்தை மகள் நீ இவளை கட்டிக்கிறியா அவள கட்டிக்கிறியான்னு கேட்கும் போதே அந்த அறியாத வயதும் வெட்கத்துடன் சிரிக்கும் அந்த அத்தை மாமன் மகள்களை நேருக்கு நேர் பார்க்க மறுப்பர் இது எனக்கு நடந்திருக்கு என்பதை மறுக்கமாட்டேன் மறுப்பவர்கள் எல்லாம் நிச்சயம் அத்தை மகளையும், மாமன் மகளையும் ஒரு செகன்ட் நினைச்சுப்பார்ப்பீங்க...

ஒவ்வொரு கால கட்டதிற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும் பொண்ணுகளை சைட் அடிப்பதற்கு. இது ஊருக்கு ஊர் வித்தியாசப்படும் சென்னை பசங்க கலாய்க்கறாங்க என்று சொல்வார்கள் கோவை பக்கம் ஒட்டறான் என்று சொல்வதை போல மதுரை பக்கம் வேற பெயர் இருக்கும்.

சைட் அடிக்கிற பொண்ணுகளை உன் ஆளு வருது என்பர், அப்புறம் உன் பிகர் வருது என்பர் பொதுவாக பெண்களை பார்க்கும் போது கலருங்க கும்முன்னு சுத்துகிறது என்போம் பலர் அம்மணிகளை பாத்தாலே மனது பத்திகிட்டு எறிகிறது என்றும் சொல்வாங்க..

நாங்க குதிரை வருதுங்க என்போம், கிளிகள் வருகிறது என்போம், செல்லங்கள் வருகிறது என ஒவ்வொரு வயதிலும் ஒரு பெயர் வைத்து அழைப்போம்... வயது ஏற ஏற சைட் அடிப்பதற்கு பெயரும் மாறும்.

நானெல்லாம் 3ம் வகுப்பு படிக்கம் போது சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டேன் 5 ம் வகுப்பில் அதை சொல்லி அவுங்க அம்மா எங்க வூட்ல வந்து போட்டு கொடுத்து ஊதாங்குழலில் குத்து வாங்கியது வரை இன்னும் ஞாபகம் இருக்கு.. அப்ப எல்லாம் திங்கள், புதன், வெள்ளி மட்டும் தான் சீருடைகள் செவ்வாயும், வியாழனும் கலர் துணி இந்த செவ்வாய் கிழமையும் வியாழக்கிழமையும் ஒரு தனி குதுகலம் தான்...

ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு பெண்ணை சைட் அடிப்பது தான் வழக்கம் இப்படியாக போய்க்கொண்டு இருந்த வாழ்க்கையில் இனி சைட் அடிக்கவே வாய்ப்பில்லை என்று செய்துவிட்டாங்க ஆமாங்க... ஹாஸ்டலில் கொண்டு வந்து விட்டு விட்டார்கள் அங்க இருந்தாலும் பரவாயில்லை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து அத்தனைக்கும் ஆப்படித்து விட்டார்கள். அடப்பாவமே இனி பிகர் பார்க்க வாய்ப்பே இல்லை என்று ஒரு வருசம் போனது..

10ம் வகுப்பில்  விடுதியில் இருந்து டியூசனுக்காக வெளியே போய்க்கலாம் என்று சொன்னதும் எங்கு போகலாம் என்று பயங்கர கன்பியூஸ் தனம் டீச்சர்கிட்ட டியூசனுக்கு போகலாம் அங்கு தான் இருபாலரும் படிக்கலாம் என்று மனதில் சபலத்தை உண்டு செய்தபோது அங்கு இடம் இல்லை என்று செவித்தில் அடித்த பந்து போல நண்பன் வந்து சொன்னான் அப்புறம் எங்கே போகலாம் என்றால் பிவி. ஜிவி, பிஸி என் 3 ஆசிரியர்கள் அவர்கள் மூன்று பேர் பேரும் ஆறுமுகம் அங்கு சென்றோம் அங்கு சென்றால் தான் தப்பித்தவறி 10ம் வகுப்பு தேறினேன் இல்லையேல் டுட்டோரியல் தான்..

சைட் அடிப்பதற்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது... சின்ன வயதில் இருந்து பெரியவர்கள் வரை இதற்கு விதி விலக்கு கிடையாது. பல பெரிசுகள் அழகான பெண்களை பார்க்கும் போது பெருமுச்சு விட்டு தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துவார்கள்... என்னைப்போன்ற இறசுகள் எல்லாம் கண்ணிலேயே ஒரு ரவுண்டு சைட் அடிச்சி முடிச்சிடுவோம்.. காரில் சென்று கொண்டு இருந்தால் அழகான பெண்கள் செல்லும் போதெல்லாம் நம்மை அறியாமல் வேகம் குறைந்து அந்த இரண்டு நிமிடம் கவனம் பக்கத்தில் தான் இருக்கும்...

இவ்வளவு நேரம் சைட் அடிச்சத பத்தி பேசியாச்சு இனி தலைப்புக்கு வருவோம் நண்பன் ஒருவன் காதல் வலையில் விழுந்தான் நண்பனுக்கு தூது போகவில்லை என்றால் காதல் இலக்கியத்தில் தூதுவனுக்கு இடம் இருக்காது என்பதால் தூதுவன் ஆனோம் நாங்க இருவர். அவன் அப்படியே சைக்கிளை உருட்டிகிட்டு பார்க்கில் போய் கடலை போட்டுவிட்டு வரும் வரை நாங்க லைப்ரெரியில் உட்கார்ந்து பத்திரிக்கைகளை மேய்ந்து கொண்டு இருப்போம் நண்பனின் காதல் வெட்ட வெளிச்சமாகி அவனை மிரட்ட ஒரு சில பெரியவர்கள் வந்தனர் வந்து அருமையாக பேசினர் இனி இதெல்லாம் வேண்டாம் போய் படிக்கற வேலைய பாருங்க நண்பன்னா உயிரைகொடுப்பேன் என்று வீர வசனம் எல்லாம் வேண்டாம் தம்பி இதெல்லாம் இருக்கற வயது தான் தப்பில்லை இனி வேண்டாம் விடுங்க என்றார்கள். நம் வாயில் தான் சனி தாண்டவர் ஆடுகிறாரே உடனே சார் சைட் அடிச்சா தப்பா சார் என்றேன் அதற்கு அந்த பெரியவர் சைட் அடிச்சா தப்பில்ல தம்பி ஆனா எங்க பொண்ணு அடிச்சா தப்பு.. நீ கண்ணல பார்த்தால் நாங்க கையால அதை நோண்டிடுவோம் என்றார் சிரிச்சகிட்டே. ஏண்டா கம்முன்ன இருக்காம வாயக்கொடுத்து வாங்கிகட்ட சொல்றியான்னு அப்புறம் என்ன பார்க்கின் நாலு வீதியிலும் துரத்தியதெல்லாம் தனிக்கதை...