Showing posts with label குறும்பு. Show all posts
Showing posts with label குறும்பு. Show all posts

Tuesday, July 9, 2013

சைட் அடிக்கிறது தப்பா சார்...

 


குழந்தை பருவத்தில் இருந்தே ஆரம்பித்துவிடும் இந்த சைட் அடிக்கும் பழக்கம் இதை மறுக்க இயலாது ஆனால் மறைக்க இயலும். குழந்தையாக இருக்கும் போது இது தான் தம்பி உன் மாமன் மகள் அத்தை மகள் நீ இவளை கட்டிக்கிறியா அவள கட்டிக்கிறியான்னு கேட்கும் போதே அந்த அறியாத வயதும் வெட்கத்துடன் சிரிக்கும் அந்த அத்தை மாமன் மகள்களை நேருக்கு நேர் பார்க்க மறுப்பர் இது எனக்கு நடந்திருக்கு என்பதை மறுக்கமாட்டேன் மறுப்பவர்கள் எல்லாம் நிச்சயம் அத்தை மகளையும், மாமன் மகளையும் ஒரு செகன்ட் நினைச்சுப்பார்ப்பீங்க...

ஒவ்வொரு கால கட்டதிற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும் பொண்ணுகளை சைட் அடிப்பதற்கு. இது ஊருக்கு ஊர் வித்தியாசப்படும் சென்னை பசங்க கலாய்க்கறாங்க என்று சொல்வார்கள் கோவை பக்கம் ஒட்டறான் என்று சொல்வதை போல மதுரை பக்கம் வேற பெயர் இருக்கும்.

சைட் அடிக்கிற பொண்ணுகளை உன் ஆளு வருது என்பர், அப்புறம் உன் பிகர் வருது என்பர் பொதுவாக பெண்களை பார்க்கும் போது கலருங்க கும்முன்னு சுத்துகிறது என்போம் பலர் அம்மணிகளை பாத்தாலே மனது பத்திகிட்டு எறிகிறது என்றும் சொல்வாங்க..

நாங்க குதிரை வருதுங்க என்போம், கிளிகள் வருகிறது என்போம், செல்லங்கள் வருகிறது என ஒவ்வொரு வயதிலும் ஒரு பெயர் வைத்து அழைப்போம்... வயது ஏற ஏற சைட் அடிப்பதற்கு பெயரும் மாறும்.

நானெல்லாம் 3ம் வகுப்பு படிக்கம் போது சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டேன் 5 ம் வகுப்பில் அதை சொல்லி அவுங்க அம்மா எங்க வூட்ல வந்து போட்டு கொடுத்து ஊதாங்குழலில் குத்து வாங்கியது வரை இன்னும் ஞாபகம் இருக்கு.. அப்ப எல்லாம் திங்கள், புதன், வெள்ளி மட்டும் தான் சீருடைகள் செவ்வாயும், வியாழனும் கலர் துணி இந்த செவ்வாய் கிழமையும் வியாழக்கிழமையும் ஒரு தனி குதுகலம் தான்...

ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு பெண்ணை சைட் அடிப்பது தான் வழக்கம் இப்படியாக போய்க்கொண்டு இருந்த வாழ்க்கையில் இனி சைட் அடிக்கவே வாய்ப்பில்லை என்று செய்துவிட்டாங்க ஆமாங்க... ஹாஸ்டலில் கொண்டு வந்து விட்டு விட்டார்கள் அங்க இருந்தாலும் பரவாயில்லை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து அத்தனைக்கும் ஆப்படித்து விட்டார்கள். அடப்பாவமே இனி பிகர் பார்க்க வாய்ப்பே இல்லை என்று ஒரு வருசம் போனது..

10ம் வகுப்பில்  விடுதியில் இருந்து டியூசனுக்காக வெளியே போய்க்கலாம் என்று சொன்னதும் எங்கு போகலாம் என்று பயங்கர கன்பியூஸ் தனம் டீச்சர்கிட்ட டியூசனுக்கு போகலாம் அங்கு தான் இருபாலரும் படிக்கலாம் என்று மனதில் சபலத்தை உண்டு செய்தபோது அங்கு இடம் இல்லை என்று செவித்தில் அடித்த பந்து போல நண்பன் வந்து சொன்னான் அப்புறம் எங்கே போகலாம் என்றால் பிவி. ஜிவி, பிஸி என் 3 ஆசிரியர்கள் அவர்கள் மூன்று பேர் பேரும் ஆறுமுகம் அங்கு சென்றோம் அங்கு சென்றால் தான் தப்பித்தவறி 10ம் வகுப்பு தேறினேன் இல்லையேல் டுட்டோரியல் தான்..

சைட் அடிப்பதற்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது... சின்ன வயதில் இருந்து பெரியவர்கள் வரை இதற்கு விதி விலக்கு கிடையாது. பல பெரிசுகள் அழகான பெண்களை பார்க்கும் போது பெருமுச்சு விட்டு தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துவார்கள்... என்னைப்போன்ற இறசுகள் எல்லாம் கண்ணிலேயே ஒரு ரவுண்டு சைட் அடிச்சி முடிச்சிடுவோம்.. காரில் சென்று கொண்டு இருந்தால் அழகான பெண்கள் செல்லும் போதெல்லாம் நம்மை அறியாமல் வேகம் குறைந்து அந்த இரண்டு நிமிடம் கவனம் பக்கத்தில் தான் இருக்கும்...

இவ்வளவு நேரம் சைட் அடிச்சத பத்தி பேசியாச்சு இனி தலைப்புக்கு வருவோம் நண்பன் ஒருவன் காதல் வலையில் விழுந்தான் நண்பனுக்கு தூது போகவில்லை என்றால் காதல் இலக்கியத்தில் தூதுவனுக்கு இடம் இருக்காது என்பதால் தூதுவன் ஆனோம் நாங்க இருவர். அவன் அப்படியே சைக்கிளை உருட்டிகிட்டு பார்க்கில் போய் கடலை போட்டுவிட்டு வரும் வரை நாங்க லைப்ரெரியில் உட்கார்ந்து பத்திரிக்கைகளை மேய்ந்து கொண்டு இருப்போம் நண்பனின் காதல் வெட்ட வெளிச்சமாகி அவனை மிரட்ட ஒரு சில பெரியவர்கள் வந்தனர் வந்து அருமையாக பேசினர் இனி இதெல்லாம் வேண்டாம் போய் படிக்கற வேலைய பாருங்க நண்பன்னா உயிரைகொடுப்பேன் என்று வீர வசனம் எல்லாம் வேண்டாம் தம்பி இதெல்லாம் இருக்கற வயது தான் தப்பில்லை இனி வேண்டாம் விடுங்க என்றார்கள். நம் வாயில் தான் சனி தாண்டவர் ஆடுகிறாரே உடனே சார் சைட் அடிச்சா தப்பா சார் என்றேன் அதற்கு அந்த பெரியவர் சைட் அடிச்சா தப்பில்ல தம்பி ஆனா எங்க பொண்ணு அடிச்சா தப்பு.. நீ கண்ணல பார்த்தால் நாங்க கையால அதை நோண்டிடுவோம் என்றார் சிரிச்சகிட்டே. ஏண்டா கம்முன்ன இருக்காம வாயக்கொடுத்து வாங்கிகட்ட சொல்றியான்னு அப்புறம் என்ன பார்க்கின் நாலு வீதியிலும் துரத்தியதெல்லாம் தனிக்கதை...

Sunday, December 30, 2012

2013ம் வருடமே நீ ! வருக !! வருக!!!

மணித்துளிகள் எண்ணப்படுகின்றன 2012 இன்னும் பல மணித்துளிகளில் நமக்கு மறந்துவிடும். இவ்வருடம் நாம் சாதித்தது என்ன? என அசைபோட நேரமில்லை....

இதுவரை எது நடந்தாலும் அதை மறந்து விட்டு 2013யை வரவேற்க நான் தயாராகிவிட்டேன். 2013ல் நான் சாதிக்கப்போவது நிறைய இருக்கிறது இந்த வருடம் என் வாழ்வில் மிக முக்கியமான வருடமாக நிச்சயம் இருக்கும்.  வரும் வருடத்தில் நிறைய புதிய வழித் தடங்களில் எனது பாதங்களை அடி எடுத்து வைக்கிறேன் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற தன்னம்பிக்கையோடு தடம் பதிக்கிறேன்.....
 
ஒவ்வொரு முறை நிகழும் போது அன்பு நண்பர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
 
என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...........
 
 
வாழ்த்துக்கள்... நண்பர்களே....
 
என்றும் அன்புடன்
சங்கமேஸ் (சதீஸ், சங்கவி)
www.sangkavi.com
www.vivasayam.com
 

Wednesday, June 15, 2011

ஓடுற பாம்பை பிடிக்கும் வயதில்...


ஓடுகிற பாம்பை பிடிக்கும் வயது இந்த வாக்கியத்தை ஒவ்வொரு வீட்டிலும் அதிகமாக பாட்டிகள் பயன்படுத்துவார்கள்.

எனது 7 வயது முதல் 12 வயது வரை வீட்டிற்குள் மின்சாரம் இல்லாத சமயத்தில் போக மாட்டேன் அதற்கு எங்க வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒடுற பாம்பை பிடிக்கற வயசுல இருட்டுக்குள்ள போக மாட்டேன்னு சொல்றாம்பாரு என்று திட்டுவார்கள். அப்புறம் போக போகஅம்மாவின் துணையுடன் இருட்டிய இடங்களுக்கு சென்று பின் பயம் நீங்கி இருட்டினாலும் பயம் இல்லாமல் செல்ல பழகிவிட்டேன்.

இப்பதிவில் எனது சிறுவயதில் அறிந்தும் அறியாமலும் செய்து குறும்புகளை பதிவாக்கி உள்ளேன்..



பயம்

எனது சிறுவயதில் வயதில் இருட்டைக்கண்டால் பயம், தனியாக ஆத்துக்குப்போனால் பயம், மீசை பெரியாதாக உள்ள மாமவைக்கண்டால் பயம், இரவில் நாய், ஓநாய் குரைத்தால் பயம், சைக்கிளில் வேகமாக  போனால் பயம், சுடுகாட்டுப் பக்கம் போனால் பயம் (பின்னாட்களில் எனது பொழுது போக்கு மையமே இதுதான் இது தனிக்கதை) பாம்பு சட்டையைக் கண்டால் பயம், கோயில்ல மினி சாமியப்பார்த்தா பயம், இடி இடித்தால் பயம், இரவில் தனியாக நடந்தாலும், அம்மாவுடன் நடந்தாலும் பயம், கிணற்றை எட்டிப்பார்த்தால் பயம், குழியைப்பார்த்தால் பயம், நெருப்பைக் கண்டால் பயம், குடிகாரத்களை கண்டால் பயம்  இப்படி எதைக்கண்டாலும் பயந்தே இருந்தேன். 

எனது பக்கத்து வீட்டுல் உள்ள பாட்டி ஒடுற பாம்பை பிடிக்கற வயசில ஏன்டா இப்படி இருக்கறன்னு என்ன கிண்டல் அடிப்பார். பின் பெற்றோர்கள், ஊர் அண்ணன்கள் இவர்களிடம் எல்லாம் பழக பழக எனது பயத்தை கொஞ்சம் கொஞ்சமா விலகியது. நான் 6ம் வகுப்பு படிக்கும் போது பஸ்ஸில் போய் தான் படிக்கனும் அந்த வயசிலேயே நான் பஸ்ல படிக்கட்டுல தொங்கிட்டுத்தான் போவேன் அந்த அளவிற்கு பயம் அறியாமல் பல தவறுகள் செய்வேன்..

குறும்பு

8 வது வரை நான் வீட்டில் இருந்து தான் படித்தேன் என்னுடைய தைரியமும், நண்பர்களிடம் வம்பு இழுக்கறத பார்த்துவிட்டு வீட்டில் குமுறு குமுறுன்னு குமுளுவாங்க.

நான் வீட்டில் இருக்கும் போது விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாடிவிட்டு காவிரி ஆற்றுக்கு குளிக்கச் செல்வோம் அப்படி ஒரு நாள் குளிக்கும்போது யானை பாறை என்று அழைப்பார்கள் அங்கிருந்து சொருவல் அடிக்கும் போது தள்ளி உள்ள சுழலில் சிக்கிக்கொண்டேன் சுழல் சுற்றி இழுக்கும் போது எனது காலை பக்கத்தில் இருந்த பாறையில் உந்தியதால் பிழைத்தேன் அப்ப இருந்து ஆறு சுழல் மீது எனக்கு இருந்த பயம் போய்விட்டது. அதற்கு பின் வேண்டும் என்றே சுழுலுக்கு சென்று பல முறை தப்பி வந்துள்ளேன்.

எனக்கு நாயைக்கணடால் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது நாய்க்கு பக்கத்துல போய் அதுகிட்ட விளையாட்டுக்காட்டி அப்படியே நாயின் இரண்டு முன்கால்களைப் பிடித்து சுத்தி வீசுவது அப்போது நாய் துள்ளி விழுந்து நம்மைப் பார்த்து கத்தும் ஆனால் கிட்ட வராது. அதற்கு பின் நம்மைப்பார்க்கும் போதெல்லாம் கத்து கத்துன்னு கத்தும். ஒரு நாள் இரவில் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்க்கப் போது என்னால் பாதிக்கப்பட்ட இரண்டு நாய்கள் என்னைப்பார்த்து கத்த பக்கத்து வீட்டில் திருடன் என நினைத்து சத்தம் போட ஊர் கூடி என்னைப்பார்த்து சிரித்தது. (நான் சைட் அடிச்ச பொண்ணும் சிரித்தது) அதில் இருந்து அந்த குறும்பை விட்டுவிட்டேன்.

புரட்டாசி, சித்திரை மாதங்களில் சித்தேஸ்வரன் மலைக்கு நண்பர்களுடன் போவேன் அப்ப காட்டுக்குள்ள போய் கொய்யா, பலாப்பழம் எல்லாம் மலை வாசிகளுக்கு தெரியாமல் பறித்து கூட்டாக எப்பவுமே நண்பர்களுடன் தான் சாப்பிடுவேன். ஒரு முறை நானும் நண்பனும் பழாப்பழத்தை பறிக்கும் போது மலைக்காரனும் அவன் மனைவியும் பார்த்து அடிக்க வர அவுங்க இரண்டு பேர் மேலேயும் பலாப்பழத்தை வீசிவிட்டு கீழே தள்ளி விட்டு விட்டு வந்மு விட்டோம் மலைக்காரர்கள் எல்லாம் சேர்ந்து எங்களை தேட அவர்களுக்கு தெரியாமல் பாறைகளில் ஒளிந்து ஒளிந்து வரும் போது கரடியைப்பார்த்து பின்னங்கால் பிடறி அடித்து ஓடியது மறக்க இயலாத நினைவு.

டிவியில் நாம் இப்பவெல்லாம் பார்க்கும் கேண்டிட் கேமரா நான் 1988லேயே செய்துவிட்டேன். எங்கள் ஊரில் நரசுஸ் காபித்தூள் பாக்கெட் கவரில் செம்மண் நிரப்பி ரோட்டில் வைத்து விடடு நாங்க பஞ்சாயத்து கிணறு மேல் உட்கார்நது கொள்வோம் அதை எடுக்கும் ஆட்கள் எல்லாம் அதை மறைத்து கொண்டுபோவதை பார்த்து சிரித்து மகிழ்வோம். ரொம்ப தெரிஞ்சவுங்களாக இருந்தால் என்னக்கா மறைத்து எடுத்துட்டு போறீங்க என்று கிண்டல் அடித்து சிரிப்போம். ஒரு சிலர் எடுக்கும் போது பாக்கெட் உடைந்து மண்ணாக கீழே விழும் மணலைப்பார்த்ததும் திரு திருவென முழிப்பார்கள் அதைப்பார்க்கும் பொழுது எங்களுக்கு ஒரு ஆனந்தம்.

சைக்கிள் பஞ்சர் பண்டுவது விளையாடுகிறேன் என்ற பேரில் நண்பனின் சைக்கிளை பஞ்சர் செய்து அவன் வேகமாக சைக்கிளை எடுத்து ஓட்டும் போது விழந்து மண்டையை உடைத்தது. 

இப்படி பயங்கர குறும்பு பண்டும்போது தான் எங்க பள்ளியில் குறும்பு செய்கிறான் அரசு பள்ளி வேண்டாம் தனியார் கிறிஷ்டின் பள்ளியில் நல்லா அடிக்கிறாங்களாம் அங்க கொண்டு போய் சேர்க்கலாம் என்று எங்கப்பா அங்கே சேர்த்தார்.

அது ஒரு நடுநிலைப்பள்ளி அங்க என்ன அடி பின்னு பின்னுன்னு பின்னி ஒருவழியா படிக்க வெச்சாங்க.. இங்க தான் எனக்கு மறக்க முடியாத ஆசான்கள் சின்னப்பன், ரவிக்குமார், பெலிக்ஸ், குமார், லூர்து, சார்லஸ் போன்றவர்கள் கிடைத்தார்கள். 

அப்பள்ளியில் 8 வது படிக்கும் போது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்  முதன் முதலா அங்க தான் என்னை டூர் கூட்டிட்டடுப்போனங்க. அப்போது கிராமத்தில் இருந்து டூர் போவது பெரிய விசயம் போய்ட்டு வந்து அளப்பானுக பாருங்க காது கிழிந்திடும்.

முதன் முதலாக சுற்றுலா சென்ற இடம் கோவை.  கோவையில் மருதமலை, பொட்டானிக்கல் கார்டன், மைக்கெல் ஸ்கூல், பேரூர் முக்கியமா ஏரோப்பிளேன் எல்லாம் பார்த்தேன். அந்த டூரில் முதல் முறையாக ஆடிய ஆட்டம் மறக்க இயலாது.

அங்கு படிக்கும் போது வாங்கிய அடியில் குறும்பை மூட்டை கட்டி வைத்து விட்டேன். அங்க படிப்பு முடிச்சு 9 வது கோபிக்கு ஹாஸ்டல் வந்துவிட்டேன். இங்க அடிச்ச கூத்துக்கு அளவில்லை.

இரவில் பீஸ் கேரியரை பிடுங்குவது, சமையல்காரன் தூங்கும் போது சாக்கு அடி போடுவது, சுவர் ஏறி முதன் முதலாக வள்ளி படம் பார்த்தது, பீடி குடிச்சு அடி வாங்கியது, கேங் சேர்ந்து இரவில் சக மாணவர்களை அடிக்கப்போவது, வார்டன் கந்தசாமியிடம் அடிவாங்குவது, அவரை கிரிக்கெட் விளையாடும்போது பந்தால் தாக்கியது, முதன் முதலாக காதலில் விழந்தது என பல உண்டு. இன்றைக்கு நினைத்தாலும் நெஞ்சில் இருந்து அகலவில்லை அந்த சந்தோச தருனம்.

நிச்சயம் இதைப்படித்த உங்களுக்கு உங்கள் சிறுவயது ஞாபகம் வரும். அசை போடுங்கள் உங்கள் நினைவுகளை சந்தோசமாக...

Thursday, December 10, 2009

ஓடுகிற பாம்பை பிடிக்கும் வயதில்................

ஓடுகிற பாம்பை பிடிக்கும் வயது இந்த வாக்கியத்தை ஒவ்வொரு வீட்டிலும் அதிகமாக பாட்டிகள் பயன்படுத்துவார்கள்.
எனது 7 வயது முதல் 15 வயது வரை அதிகமாக எனது வீட்டில் ஒடுற பாம்பை பிடிக்கற வயசுல இருட்டுக்குள்ள போக மாட்டேன்னு சொல்றாம்பாரு என
ஏத்து விழுகும். அப்புறம் அம்மா இருட்டுனா ஒன்னும் இல்ல நான் வருகிறேன் நீயும் வான்னு சொல்லி பயத்த போக்கிட்டாங்க...
இந்த பதிவுல நான் இந்த வயதில் என்னை அறிந்தும் அறியாமலும் செய்த குறும்புகளை உங்களுடன் பகிர்கிறேன்.

பயம்

எனது 7வது வயதில் இருட்டைக்கண்டால் பயம், தனியாக ஆத்துக்குப்போனால் பயம், மீசை பெரியாதாக உள்ள மாமவைக்கண்டால் பயம்,
இரவில் நாய், ஓநாய் குரைத்தால் பயம், சைக்கிள் போனால் பயம், சுடுகாட்டுப் பக்கம் போனால் பயம் (பின்னாட்களில் எனது பொழுது போக்கு மையமே இதுதான் இது தனிக்கதை)
பாம்பு சட்டையைக் கண்டால் பயம், கோயில்ல மினி சாமியப்பார்த்தா பயம், இடி இடித்தால் பயம், இரவில் தனியாக நடந்தாலும், அம்மாவுடன் நடந்தாலும் பயம், கிணற்றை எட்டிப்பார்த்தால் பயம்
இப்படி எதைக்கண்டாலும் பயந்தே இருந்தேன். அப்பதான் பக்கத்து வீட்டு பாட்டி ஒடுற பாம்பை பிடிக்கற வயசில ஏன்டா இப்படி இருக்கறன்னு என்ன சொல்லி சொல்லி அப்பா, அம்மா, மாமா எல்லாரும் எனது பயத்தை கொஞ்சம் கொஞ்சமா போக்கி நான் 6 வது பஸ்ஸில் போய் படிக்கனும் நான் அப்பவே பஸ்ல படிக்கட்டுல தொங்கற அழவிற்கு தைரிய வந்திருச்சு....

குறும்பு

7, 8 வது எல்லாம் நான் வீட்டில் இருந்து தான் படித்தேன் என்னுடைய தைரியமும், வம்பு இழுக்கறத பார்த்துவிட்டு எல்லாறும் திட்டுவாங்க. நான் வீட்டில் இருக்கும் போது சனி
ஞாயிறு லீவ் நாளில் கிரிக்கெட் விளையாடிவிட்டு ஆத்துக்கு குளிக்கப்போவம் அப்படி ஒரு நாள் குளிக்கும்போது சுழல் வந்து என்னை இழுக்க நான் தண்ணீரில் சென்று எனது காலை பக்கத்தில்
இருந்த பாறையில் உந்தியதால் பிழைத்தேன் அப்ப இருந்து ஆறு சுழல் மீது எனக்கு இருந்த பயம் போய்விட்டது. எனக்கு நாயைக்கணடால் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது நாய்க்கு பக்கத்துல போய்
அதுகிட்ட பழகி அப்படியே நாயின் இரண்டு முன்கால்களைப் பிடித்து சுத்தி வீசுவது இது மிகப்பெரிய தவறு தான் ஆனா அந்த வயதில் எனக்கு தெரியவில்லை அப்புறம் விட்டுவிட்டேன்.

புரட்டாசி, சித்திரை மாதங்களில் சித்தேஸ்வரன் மலைக்கு நண்பர்களுடன் போவேன் அப்ப காட்டுக்குள்ள போய் கொய்யா, பலாப்பழம் எல்லாம் மலைக்காரர்களுக்குத் தெரியாமல் பறித்து கூட்டாக
எப்பவுமே நண்பர்களுடன் தான் சாப்பிடுவேன். நாங்களே மலையில் சமைச்சு சாப்பிடுவோம் மலையில் உள்ள கோயிலுக்கெல்லாம் போக மாட்டேன் ஆனால் அந்த இயற்கையை ரொம்ப ரசிப்பேன் ( இந்த மலை ஆட்டத்தைப்பற்றி தனியா ஒரு பதிவை எழுதிக்கொண்டு இருக்கிறேன்).

இன்று டிவியில் நாம் பார்க்கும் கேண்டிட் கேமரா நான் 1988லேயே செய்துவிட்டேன். எங்கள் ஊரில் நரசுஸ் காபித்தூள் பாக்கெட் கவர் மட்டும் நண்பர்கள் எல்லாம் வீட்டில் இருந்து எடுத்து வந்து அதில் செம்மண் நிரப்பி ரோட்டில் வைத்து விடடு நாங்க பஞ்சாயத்து கிணறு மேல் உட்கார்நது கொள்வோம் அதை எடுக்கும் ஆட்கள் எல்லாம் அதை மறைத்து கொண்டுபோவதை பார்த்து சிரிப்போம் பேக்கிங் உடைந்து போய் ரோடடில் மணல் கொட்டும் மணலைப்பார்தது முழிப்பார்கள் அதைப்பார்க்கும் பொழுது எங்களுக்கு ஒரு ஆனந்தம். சைக்கிள் பஞ்சர் பண்டுவது விளையாடுகிறேன் என்ற
பேரில் நண்பனின் மண்டையை உடைத்தது இப்படி பயங்கர குறும்பு பண்டும்போது தான் குறும்பு தாங்காமல் என்னை 6ம் வகுப்பில் டிசி கொடுத்து அனுப்பிட்டாங்க. அப்புறம் ஒரு கிறிஷ்டின்
நடுநிலைப்பள்ளியில் சேர்த்தாங்க அங்க என்ன அடி பின்னு பின்னுன்னு பின்னி ஒருவழியா படிக்க வெச்சாங்க.. இங்க தான் எனக்கு மறக்க முடியாத ஆசான்கள் சின்னப்பன், ரவிக்குமார், பெலிக்ஸ், குமார், லூர்து, சார்லஸ். அப்புறம் 8 வது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் ஏன்னா முதன் முதலா அங்க தான் டூர் கூட்டிட்டடுப்போனங்க.. கோயம்பத்தூருக்கு முதன் முறையா கோவையில் மருதமலை, பொட்டானிக்கல் கார்டன், மைக்கெல் ஸ்கூல், பேரூர் முக்கியமா ஏரோப்பிளேன் எல்லாம் பார்த்தேன் அங்க படிப்பு முடிச்சு 9 வது ஹாஸ்டல் வந்துவிட்டேன். இங்க அடிச்ச கூத்து இன்றைக்கு
நினைத்தாலும் நெஞ்சில் இருந்து அகலவில்லை. என்னங்க இவ்வளவு நேரம் படிச்சு போர் அடிச்சுருச்சா....... ரொம்ப நன்றி நண்பர்களே இவ்வளவு நேரம் படிச்சதுக்கு.... மீண்டும் சந்திப்போம் எனது
ஹாஸ்டல் வாழ்க்கையில் ( உங்கள அவ்வளவு சீக்கிரம விடமாட்டேன்).....