Thursday, December 10, 2009

ஓடுகிற பாம்பை பிடிக்கும் வயதில்................

ஓடுகிற பாம்பை பிடிக்கும் வயது இந்த வாக்கியத்தை ஒவ்வொரு வீட்டிலும் அதிகமாக பாட்டிகள் பயன்படுத்துவார்கள்.
எனது 7 வயது முதல் 15 வயது வரை அதிகமாக எனது வீட்டில் ஒடுற பாம்பை பிடிக்கற வயசுல இருட்டுக்குள்ள போக மாட்டேன்னு சொல்றாம்பாரு என
ஏத்து விழுகும். அப்புறம் அம்மா இருட்டுனா ஒன்னும் இல்ல நான் வருகிறேன் நீயும் வான்னு சொல்லி பயத்த போக்கிட்டாங்க...
இந்த பதிவுல நான் இந்த வயதில் என்னை அறிந்தும் அறியாமலும் செய்த குறும்புகளை உங்களுடன் பகிர்கிறேன்.

பயம்

எனது 7வது வயதில் இருட்டைக்கண்டால் பயம், தனியாக ஆத்துக்குப்போனால் பயம், மீசை பெரியாதாக உள்ள மாமவைக்கண்டால் பயம்,
இரவில் நாய், ஓநாய் குரைத்தால் பயம், சைக்கிள் போனால் பயம், சுடுகாட்டுப் பக்கம் போனால் பயம் (பின்னாட்களில் எனது பொழுது போக்கு மையமே இதுதான் இது தனிக்கதை)
பாம்பு சட்டையைக் கண்டால் பயம், கோயில்ல மினி சாமியப்பார்த்தா பயம், இடி இடித்தால் பயம், இரவில் தனியாக நடந்தாலும், அம்மாவுடன் நடந்தாலும் பயம், கிணற்றை எட்டிப்பார்த்தால் பயம்
இப்படி எதைக்கண்டாலும் பயந்தே இருந்தேன். அப்பதான் பக்கத்து வீட்டு பாட்டி ஒடுற பாம்பை பிடிக்கற வயசில ஏன்டா இப்படி இருக்கறன்னு என்ன சொல்லி சொல்லி அப்பா, அம்மா, மாமா எல்லாரும் எனது பயத்தை கொஞ்சம் கொஞ்சமா போக்கி நான் 6 வது பஸ்ஸில் போய் படிக்கனும் நான் அப்பவே பஸ்ல படிக்கட்டுல தொங்கற அழவிற்கு தைரிய வந்திருச்சு....

குறும்பு

7, 8 வது எல்லாம் நான் வீட்டில் இருந்து தான் படித்தேன் என்னுடைய தைரியமும், வம்பு இழுக்கறத பார்த்துவிட்டு எல்லாறும் திட்டுவாங்க. நான் வீட்டில் இருக்கும் போது சனி
ஞாயிறு லீவ் நாளில் கிரிக்கெட் விளையாடிவிட்டு ஆத்துக்கு குளிக்கப்போவம் அப்படி ஒரு நாள் குளிக்கும்போது சுழல் வந்து என்னை இழுக்க நான் தண்ணீரில் சென்று எனது காலை பக்கத்தில்
இருந்த பாறையில் உந்தியதால் பிழைத்தேன் அப்ப இருந்து ஆறு சுழல் மீது எனக்கு இருந்த பயம் போய்விட்டது. எனக்கு நாயைக்கணடால் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது நாய்க்கு பக்கத்துல போய்
அதுகிட்ட பழகி அப்படியே நாயின் இரண்டு முன்கால்களைப் பிடித்து சுத்தி வீசுவது இது மிகப்பெரிய தவறு தான் ஆனா அந்த வயதில் எனக்கு தெரியவில்லை அப்புறம் விட்டுவிட்டேன்.

புரட்டாசி, சித்திரை மாதங்களில் சித்தேஸ்வரன் மலைக்கு நண்பர்களுடன் போவேன் அப்ப காட்டுக்குள்ள போய் கொய்யா, பலாப்பழம் எல்லாம் மலைக்காரர்களுக்குத் தெரியாமல் பறித்து கூட்டாக
எப்பவுமே நண்பர்களுடன் தான் சாப்பிடுவேன். நாங்களே மலையில் சமைச்சு சாப்பிடுவோம் மலையில் உள்ள கோயிலுக்கெல்லாம் போக மாட்டேன் ஆனால் அந்த இயற்கையை ரொம்ப ரசிப்பேன் ( இந்த மலை ஆட்டத்தைப்பற்றி தனியா ஒரு பதிவை எழுதிக்கொண்டு இருக்கிறேன்).

இன்று டிவியில் நாம் பார்க்கும் கேண்டிட் கேமரா நான் 1988லேயே செய்துவிட்டேன். எங்கள் ஊரில் நரசுஸ் காபித்தூள் பாக்கெட் கவர் மட்டும் நண்பர்கள் எல்லாம் வீட்டில் இருந்து எடுத்து வந்து அதில் செம்மண் நிரப்பி ரோட்டில் வைத்து விடடு நாங்க பஞ்சாயத்து கிணறு மேல் உட்கார்நது கொள்வோம் அதை எடுக்கும் ஆட்கள் எல்லாம் அதை மறைத்து கொண்டுபோவதை பார்த்து சிரிப்போம் பேக்கிங் உடைந்து போய் ரோடடில் மணல் கொட்டும் மணலைப்பார்தது முழிப்பார்கள் அதைப்பார்க்கும் பொழுது எங்களுக்கு ஒரு ஆனந்தம். சைக்கிள் பஞ்சர் பண்டுவது விளையாடுகிறேன் என்ற
பேரில் நண்பனின் மண்டையை உடைத்தது இப்படி பயங்கர குறும்பு பண்டும்போது தான் குறும்பு தாங்காமல் என்னை 6ம் வகுப்பில் டிசி கொடுத்து அனுப்பிட்டாங்க. அப்புறம் ஒரு கிறிஷ்டின்
நடுநிலைப்பள்ளியில் சேர்த்தாங்க அங்க என்ன அடி பின்னு பின்னுன்னு பின்னி ஒருவழியா படிக்க வெச்சாங்க.. இங்க தான் எனக்கு மறக்க முடியாத ஆசான்கள் சின்னப்பன், ரவிக்குமார், பெலிக்ஸ், குமார், லூர்து, சார்லஸ். அப்புறம் 8 வது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் ஏன்னா முதன் முதலா அங்க தான் டூர் கூட்டிட்டடுப்போனங்க.. கோயம்பத்தூருக்கு முதன் முறையா கோவையில் மருதமலை, பொட்டானிக்கல் கார்டன், மைக்கெல் ஸ்கூல், பேரூர் முக்கியமா ஏரோப்பிளேன் எல்லாம் பார்த்தேன் அங்க படிப்பு முடிச்சு 9 வது ஹாஸ்டல் வந்துவிட்டேன். இங்க அடிச்ச கூத்து இன்றைக்கு
நினைத்தாலும் நெஞ்சில் இருந்து அகலவில்லை. என்னங்க இவ்வளவு நேரம் படிச்சு போர் அடிச்சுருச்சா....... ரொம்ப நன்றி நண்பர்களே இவ்வளவு நேரம் படிச்சதுக்கு.... மீண்டும் சந்திப்போம் எனது
ஹாஸ்டல் வாழ்க்கையில் ( உங்கள அவ்வளவு சீக்கிரம விடமாட்டேன்).....

21 comments:

  1. இப்ப நீங்க தைரியமா வலைத்தளத்துக்கு வந்து குறும்பா பதிவெழுதிருக்கீங்க.... ம்ம்ம்...

    ReplyDelete
  2. //என்னங்க இவ்வளவு நேரம் படிச்சு போர் அடிச்சுருச்சா....... //

    இல்ல..நல்லாத்தான் இருக்கு.

    //உங்கள அவ்வளவு சீக்கிரம விடமாட்டேன்//

    அவ்..அவ்...

    ReplyDelete
  3. கொஞ்சம் பிழையின்றி, அமைப்பில் கவனம் செலுத்தினால் இன்னும் மெருகு பெரும் உங்கள் எழுத்து. பாராட்டுகள்.

    ReplyDelete
  4. //இப்ப நீங்க தைரியமா வலைத்தளத்துக்கு வந்து குறும்பா பதிவெழுதிருக்கீங்க.... ம்ம்ம்...//

    வருகைக்கு நன்றி ரோஸ்விக்

    ReplyDelete
  5. //என்னங்க இவ்வளவு நேரம் படிச்சு போர் அடிச்சுருச்சா....... //

    இல்ல..நல்லாத்தான் இருக்கு.

    //உங்கள அவ்வளவு சீக்கிரம விடமாட்டேன்//

    அவ்..அவ்...//

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பூங்குன்றன்.......

    ReplyDelete
  6. //கொஞ்சம் பிழையின்றி, அமைப்பில் கவனம் செலுத்தினால் இன்னும் மெருகு பெரும் உங்கள் எழுத்து. பாராட்டுகள்.//

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வானம்பாடி சார்.........

    உங்களைப்போல் சீனியர்கள் கருத்துக் கூற கூற
    நான் எனது எழுத்துகளை மெருகேற்றிக்கொள்கிறேன் சார்....

    தங்கள் விமர்சனத்திற்கு நன்றி சார்...

    ReplyDelete
  7. //அங்க படிப்பு முடிச்சு 9 வது ஹாஸ்டல் வந்துவிட்டேன்.//

    இப்ப பத்தாவது படிக்கிறீங்களா. :)

    ReplyDelete
  8. நல்லாயிருக்கு

    ReplyDelete
  9. //அங்க படிப்பு முடிச்சு 9 வது ஹாஸ்டல் வந்துவிட்டேன்.//

    இப்ப பத்தாவது படிக்கிறீங்களா. :)

    ஆமாங்க இன்னிக்கு 10வது மாதிரி வினாத்தாள் படிக்கிறேன்
    .
    .
    .
    .
    .
    .
    .
    .

    இன்றைய தினசரி பத்திரிக்கையில்.......


    தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சின்னஅம்மிணி.............

    ReplyDelete
  10. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தியா......

    ReplyDelete
  11. //எனக்கு நாயைக்கணடால் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது நாய்க்கு பக்கத்துல போய்
    அதுகிட்ட பழகி அப்படியே நாயின் இரண்டு முன்கால்களைப் பிடித்து சுத்தி வீசுவது இது மிகப்பெரிய தவறு தான் ஆனா அந்த வயதில் எனக்கு தெரியவில்லை அப்புறம் விட்டுவிட்டேன்.// .......கல்லை கண்டால் இந்த மனுஷனை காணோம்; இந்த மனுஷனை கண்டால் கல்லை காணோம்னு நாய் புலம்பியிருக்கும்.

    ReplyDelete
  12. Hi friend this is vennilla here.. ur doing a really good job.. can we exchange links..

    ReplyDelete
  13. வாங்க சித்ரா......

    //.......கல்லை கண்டால் இந்த மனுஷனை காணோம்; இந்த மனுஷனை கண்டால் கல்லை காணோம்னு நாய் புலம்பியிருக்கும்.//

    அதெப்படிங்க நாய் புலம்பனது உங்களுக்குத் தெரியும்.......

    ஓ............. ஒரு பொண்ணு மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான்
    தெரியும்னு சொல்லுவாங்க....

    அதுபோல..............................?

    தங்கள் வருகைக்கும், கிண்டலுக்கும் ரொம்ப நன்றி சித்ரா..................

    ReplyDelete
  14. Hi Vennila.........

    Welcome You and Your comments.......

    ReplyDelete
  15. என்னை நாய்ங்க்றீங்க. இதுக்கு எல்லாம் அசர மாட்டோம், அப்பு.

    ReplyDelete
  16. //என்னை நாய்ங்க்றீங்க. இதுக்கு எல்லாம் அசர மாட்டோம், அப்பு.//

    ஐய்யய்யோ நா அப்படி சொல்லலிங்க..........

    யம்மாடி, ஆத்தாடி பட்டு பட்டுனு போட்டுத்தாக்கறீங்க.........

    ReplyDelete
  17. இவ்வளவுகுறும்பையும் நெஞ்சுக்குள்ளே வச்சு இருந்தீங்களா........கலகல என்று கொட்டுறீங்க. சபாஷ்........

    ReplyDelete
  18. //இவ்வளவுகுறும்பையும் நெஞ்சுக்குள்ளே வச்சு இருந்தீங்களா........கலகல என்று கொட்டுறீங்க. சபாஷ்........//

    வாங்க நிலாமதி தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி......

    அடிக்கடி வாங்க.........

    ReplyDelete
  19. hai, sangkavi. your ILAMAI KALLAM Super.

    ReplyDelete
  20. ஆஹா அப்பாவியா போட்டோவில் இருக்கும் சங்கேஷா இது....இளமை கால நினைவின் பலமே எப்ப நினைச்சாலும் இனிப்பது தாங்க....உங்க நிகழ்காலமும் எதிர்காலமும் இப்படியே இனிக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. Hi,

    Write about Vella hostel

    ReplyDelete