Tuesday, December 22, 2009

வாழைப்பழம் சாப்பிடுங்கள்.....நலமுடன் வாழுங்கள்...



நாம் கோவிலுக்குச் சென்று வழிபடும் போது கடவுளுக்கு படைக்கப்படும் பொருட்களில் வாழைப்பழம் முக்கியமானது. வீட்டில் எந்த விசேசமானலும் நமது இலையில் நிச்சயம் வாழைப்பழம் இருக்கும்.  நமது முன்னோர்கள் கூறிய முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம், பல மருத்துவ குணங்களைக்கொண்டது வாழைப்பழம், நமது சமூகத்தில் வாழைப்பழம் 100ல் 99 பேர் உயயோகப்படுத்துகிறோம். வாழைப்பழத்தின் வகைகள், அதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்களை நான் தெரிந்து கொண்டதை இப்பதிவின் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

 வாழைப்பழம் :
 வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில். மத்திய அமெரிக்காவில் 350 வருடங்களாகத்தான் பிரபலம். அங்கிருந்து வட அமெரிக்காவிற்கு போனது. கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் பயன்கள், மருத்துவக் குணங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்க, இப்போது காலை உணவின் முக்கிய அம்சமாகி விட்டது.
கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். அடிமை வியாபாரிகள் தந்த பெயர் பனானா. அப்போது வாழைப்பழம் இப்போது போலப் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எல்லாப் பழங்களும் பழுக்கும் போது எத்திலீன் வாயுவை வெளிப்படுத்தும். வாழையில் அதிகமாக இருக்கும்.



வாழைப்பழ வகைகள்
செவ்வாழை
ரஸ்தாளி
கற்பூரவல்லி
பேயன்
பச்சைநாடன்
பூவன்
மொந்தன்
கதலி
நவரன்
குணங்கள்:
வாழை ஒரு மரமில்லாத மரம். மற்ற மரங்களுக்கு இருப்பதைப் போன்று கனத்த கெட்டியான அடிமரமோ, கிளைகளோ கிடையாது. 8௰ அடி உயரத்தில் மரம்போல் வளர்ந்தாலும் அதன் அடிமரம் அடுக்கடுக்கான மெல்லிய பட்டைகளாலானது. பலமாக காற்றடித்தாலும் மளுக்கென்று ஒடிந்து விடக் கூடியது. இந்தத் தண்டு பத்து அடி வரை வளர்ந்து 100 லிருந்து 150 பழங்கள் கொண்ட வாழைத் தாரையே தாங்கும் பலம் பெற்றிருப்பது எப்படி என்பது இயற்கையின் விந்தை.
இலைகள் நீண்டு பெரிதாக இருப்பதால் பழங்குடியினர் இதை வீட்டுக்கு கூரையாகவும், குடையாகவும் கூட உபயோகிக்கின்றனர். ஒரு மரம் ஒரு முறைதான் பழம் தரும். ஒரு சீப்பை கை என்றும், தனியாக ஒரு பழத்தை விரல் என்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். பல அடுக்கு சீப்புகள் கொண்டது ஒரு குலை. வாழைச் சீப்பு எப்போதும் மேல் நோக்கியே இருக்கும். வீட்டிலும் அதை அப்படியே வைத்தால்தான் கெடாமல் இருக்கும்.


வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்:
வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி  இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.
வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்:
* இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும்.
* செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது.
* பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும்.
* மலைவாழை சோகையை நீக்கும்.
* பேயன் வாழை குடற்புண் தீர்க்கும்.
* நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

* வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது.
* “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது.
* உடல்நலனுக்கு எப்பொழுதும் முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும். மூளையில் “செரோடினின்” உருவாக வாழைப்பழம் உதவுகிறது. 
* வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். மூளைக்கு வலுவூட்டும்.
* தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து ஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சை நீங்கும்
* பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கு முதலியவை நீங்கும்.
* இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும்.
* சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும்.
* கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகை சாப்பிட இருமல் நீங்கும். உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டு அவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய் சேர்ந்து விடும்.

* தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும்.
* தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும்.


வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டியவர்கள் :
கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும்,நீரழிவு நோய் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும்.

13 comments:

  1. நல்ல பதிவு. சும்மாவே எனக்கு வாழைப்பழம் பிடிக்கும்.அடிக்கடி சாப்பிடுவேன்.இத வேற சொல்லீட்டிங்க ,தெனமும் சாப்பிட வேண்டியதுதான்.

    ReplyDelete
  2. நல்ல பதிவு படங்கள் அருமை. (இதையும் காசுக்காக என்ன என்னமோ போட்டு பழுக்க வைக்கறாங்கன்னு .. கேட்டு ரொம்ப வருத்தமாயிடிச்சி)

    ReplyDelete
  3. பயன்மிக்க பதிவு,

    வாழைப்பழம் விரும்பிச் சாப்பிடுவேன்

    வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நல்ல தகவல்களுடன் பயனுள்ள பதிவு


    ஆமா, கவுண்டமணி செந்தில் காமெடிக்கு உதவும்னு சொல்லவே இல்லியே :))

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவு.
    இந்த பாப் அப் வீண்டோ எடுத்துட்டு ஃபுல் பேஜ் அல்லது கமெண்ட் பார்ம் வையுங்க

    ReplyDelete
  6. //அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். //

    இதுவரை நான் அறிந்திராத தகவல்..

    //கற்பூரவல்லி//

    இதை ஈரோடு பகுதியில் தேன் வாழை என்கின்றனர்.

    வாழைப்பழத்தின் வரலாறும் அதை உட்கொள்வதினால் கிடைக்கும் பயன்களை தொகுத்ததும் மிகவும் பயனுள்ளது.

    நல்ல இடுகை...

    ReplyDelete
  7. வாழை பழத்துல இவ்வளவு விஷயங்களா? தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  8. பல நல்ல தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. வாழைபழம் நார்சத்து அதிகம் உள்ளதுன்னு கேள்வி பட்டிருக்கேன்!

    பத்திகுச்சி குத்த வசதியா இருக்குன்னு தான் கோவிலுக்கு கொண்டுபோறாங்களாம்! மத்தபடி கோவிலுக்கும் வாழைபழத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லையாம்!

    (மனசாட்சி:நீ அடங்கவே மாட்டியா)

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு.
    ஐயோ படங்களைப் பார்த்த உடனே சாப்பிட ஆசையா இருக்குதே. :-))

    ஏண்ணே! அட்ரஸ் கொடுத்தா ஆட்டோவுல வாழைப்பழம் அனுப்புவீங்கே??

    ReplyDelete
  11. வாழைப்பழங்களின் படங்களைப் பார்க்கவே ஆசையாயிருக்கு.எங்கள் வீட்டு ஞாபகமும் வருது.நல்ல பிரயோசனமான பதிவு சங்கவி.

    ReplyDelete
  12. அன்பின் சங்கவி

    பல தகவல்கள் - பகிர்ந்தமைக்கு நன்றி

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete