Wednesday, December 2, 2009

நண்பனின் காதல் திருமணம்.........அந்த திக் திக் சில நிமிடங்கள்.........

நான் எனது ஒரு சில நண்பர்களின் காதல் திருமணத்திற்கு (அதுதாங்க ஓடிப்போய் கல்யாணம் பன்றது)
துணை நின்று நடத்தி இருக்கின்றேன் அதில் ஒரு மறக்க முடியாத நான்(பன் வாங்கிய) எனது நண்பன் திருமணத்தின் அந்த திக் திக் சில நிமிடங்களை
உங்களுடன் பகிர்து கொள்கிறேன்.....

நாங்கள் ஒரு 6 நண்பர்கள் கோவையில் ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தோம். அங்க பல சுவரசியமான, சிரிக்கும் படியான, குத்து வாங்கிய பல நிகழ்வுகள் நடந்தன,
அதில் நாங்கள் அனைவரும் இணைந்து நடத்திய திருமணம் இது. (இப்ப தாங்க மேட்டருக்கு வர்ரேன்)

எங்கள் நண்பன் பாலா (கதையின் நாயகன்) கோவயைில் ஒரு பிரபலமான பைனான்சில் வேலை செய்தான் அவனுக்கு ப்ரமோஷன் கிடைத்து திருப்பூர் சென்றான்
இவர் அங்க மேனேஜர். அதே ஆபிசில் அந்த கிளையின் இன்சார்ஜ் கீதா இவரு போய் மூன்று மாதங்களில் இருவருக்கும் பத்திகிச்சு. அப்புறம் ஒரு 5 மாதங்கள் கழிச்சு
நண்பன் எங்ககிட்ட வந்து நான் திருமணம் செய்தால் அவளைத்தான் செய்வேன் மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்று வசனம் பேசினான் என்ன பன்றது நண்பனாச்சே
என்னுடன் தங்கியவர்களில் இருவர் வக்கீல் சொல்லவேண்டுமா எங்களுக்கு உடனே திருமணத்திற்கு நாள் குறித்து இடம் குறிச்சோம்...

நாள் ஒருவாரம் கழித்து புதன்கிழமை இடம் கோவையில் உள்ள ஒரு பிரபலமான கோயில். கோவிலுக்கு விசாரிக்க நானும், வக்கீலும் போனாம் அங்க என்னடான்னா காதல் திருமணம் இங்க அனுமதி இல்லை வேனும்னா வெளிய விநாயகர் கோயில்ல வெச்சு பண்ணிக்கலாம். இதற்கு புரோகிதர் வர மாட்டேன் என்கிறார். அவருக்கு பதில் காதல் திருமணத்திற்கு என இருக்கும் ஒருவருக்கு
ரூ.500 கொடுத்ததும் அவர் சரி என்று சொல்லிவிட்டர். மற்ற நண்பர்கள் பட்டுப்புடவை, வேஷ்டி, மாலை மற்றும் தாலி திருமணத்திற்கு தேவையான அனைத்துப்பொருட்களும் ஒரு ரூ.25000 ரெடி பண்டி வாங்கியாச்சு.

திருமண நாள் அன்று இரண்டு நண்பர்கள் பெண்ணை அழைத்துவர நடுராத்திரி 5 மணிக்கு (எனக்கு எப்பவுமே 8 மணிக்குத்தாங்க வெடியும்) போய்ட்டாங்க அப்புறம் எனக்கும் வக்கீலுக்கும் கோவில்ல வேலை எல்லாம் ரெடி ஆகி இருக்கிறோம். பொண்ணு இன்னும் வரல. கூட போனவங்க செல்லும் நாட் ரீச்சபல் என்னு பன்றது டென்சன், டென்சன்,டென்சன்.....

ஒரு அரைமணி நேரம் கழிச்சு நண்பன்கிட்ட இருந்து போன் பொண்ணு இன்னும் வரலனு. என்னடா பன்றது மணி இப்பவே 8 ஆச்சசுனு டென்சனின் உச்சியில் இருக்கும் போது
அடுத்த போன் பொண்ணு பொண்ணு வீட்டு பின்னாடி வழியா ஒரு 5 கீலோ மீட்டர் நட்ந்து வந்து பனியன் கம்பெனி பக்கதில இருக்குது நாங்க பிக்கப் பன்னிட்டு 1 மணி நேரத்தில்
வந்து விடுவோம் நீங்க ரெடியா இருங்க (நாங்க தான் ரெடியாச்சே) இந்த சமயத்தில் கோவில்ல பார்த்த கிட்டத்தட்ட அந்நிக்கு மட்டு 20 கல்யாணமாம் (இது கோவில்ல பதிவு பண்டுன கல்யாணம்) காதல் திருமணம் ஒரு 3 நடந்துச்சு.

9 மணி பொண்ணு மாப்பிள்ளை வந்தாச்சு நான் போட்டோகிராபர் அளாளுக்கு ஒரு வேலை திருமணம் நல்ல நேரத்தில் சுபமா முடிந்தது. அடுத்தது என்ன செய்யலாம்னு முடிவெடுக்கும்
போது முதல்ல சாப்பிடலாம்னு ஒட்டல் ஆர்யாஸ்ல சாப்பிட்டுவிட்டு அடுத்த முடிவ எடுத்தோம். பொண்ணு வீட்டுக்கு போன் செய்து பேசறது பேசறது நான்னு என்ன முடிவெபண்ணிட்டானுக.....

அந்த திக் திக் சில நிமிடங்கள்

நான் பொண்ணு வீட்டுக்கு போன் செஞ்சா நாலு தடவை போன் எடுக்கல எனக்கு பி.பி ஏறிருச்சு. மறுபடியும் ரிங்போகுது என்னைச்சுத்தி நண்பர்கள் ஸ்பீக்கர் ஆன்ல அவங்க அப்பா ஒரு வழியா
போன எடுத்தார். நான் பேசினேன் உங்க பொண்ணும் எங்க நண்பன் அவங்க ஆபிஸ்ல மேனேஜரும் கல்யாணம் பண்ணிட்டாங்க இப்பதான் நடந்துச்சுன்னு சொண்ணேன்.
சும்மா ஒரு 5 நிமிடம் திட்டுட்டு( செம திட்டு) கடைசியா சொன்னார்......................
எங்கிட்ட காலைல சொல்லி இருந்தா நானும் வந்து இருப்பேன்ல ஏன் சொல்லவில்லைனு எனக்கு மாத்து அப்புறம் வீட்டுக்கு வரச்சொல்லுனு சொல்லி அவங்க குடும்பம் எல்லாம் ஒன்னு சேர்நது மறுபடியும் இன்னொரு திருமணம் அவங்க குடும்த்துடன் நடந்தது. இதில் மிக முக்கியமான விசயம் பொண்ணும் எங்க நண்பனும் குடும்பத்தோட நடந்த திருமணத்திற்கு
எங்கள கூப்பிடவே இல்லை............

22 comments:

  1. /இதில் மிக முக்கியமான விசயம் பொண்ணும் எங்க நண்பனும் குடும்பத்தோட நடந்த திருமணத்திற்கு
    எங்கள கூப்பிடவே இல்லை............ /

    :)

    ReplyDelete
  2. அருமை யான பதிவு
    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. காதலர்களை சேர்த்து வைத்த உங்களையே அழைக்கவில்லை.. நட்பிலும் நிகழுமா?

    ReplyDelete
  4. /இதில் மிக முக்கியமான விசயம் பொண்ணும் எங்க நண்பனும் குடும்பத்தோட நடந்த திருமணத்திற்கு
    எங்கள கூப்பிடவே இல்லை............ /

    ஆமா வாணம்பாடி சார்.......

    நண்பர் படிக்கிறதுக்காகவே இந்த பகிர்வு

    வருைக்ககும், கருத்துக்கும் நன்றி சார்..

    வருகைக்கு நன்றி தியா.........

    ReplyDelete
  5. //காதலர்களை சேர்த்து வைத்த உங்களையே அழைக்கவில்லை.. நட்பிலும் நிகழுமா?//

    என்ன செய்வது தமிழரசி

    இப்படியும் சில நண்பர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.....

    அவர்கள் நண்பர்கள் அல்ல என்னைப்பொறுத்த வரை சுயநலவாதிகள்........

    வருைக்ககும், கருத்துக்கும் நன்றி தமிழரசி

    ReplyDelete
  6. சங்கவி , உண்மையிலேயே மிகப்பெரிய பன் தான் .. ;-)

    நா மிக அதிகாலையில மூணு மணிக்கெல்லாம் போய் பொண்ணு வீட்டுக்கு முன்னால காவல் காத்திருக்கேன், நல்ல வேளை இந்த மாரியில்லாம் உடனே பன் வாங்காம , கொஞ்ச லேட்டா ஒருவருஷம் கழிச்சி வாங்குனேன் ( நண்பனை , எங்ககூட ரொம்ப வச்சுக்க கூடாதுன்னு சொல்லிருச்சாம் அந்த பொண்ணு ), அதனால இவனும் இப்போல்லாம் பேசறதே இல்ல ... அட போங்க பாசு , இந்த விஷயத்துல மட்டும் எல்லோரும் இப்படித்தான் போல

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. எனக்கும் நிறைய அனுபவங்கள் உண்டு. எழுத வேண்டும். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  8. வருகைக்கும் நன்றி ஜெனவோ.........

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தண்டோ...ரா

    ReplyDelete
  9. ரொம்ப நல்ல அனுபவம்
    இதை போல என் வாழ்வில் உண்டு...
    ஆனா என் கதைல அருவா , கத்தி எல்லாம்..உண்டு..
    ரொம்ப நல்ல பதிவு...
    உங்களுடைய எழுது நடை ரொம்ப நல்ல இருக்கு...

    ReplyDelete
  10. உங்களைக்கூப்பிடலன்னா அடி உதை மிச்சம்னு நினைச்சுக்குங்க :)

    ReplyDelete
  11. வாங்க கமலேஷ்........

    வாங்க அருணா.............

    வாங்க சின்னஅம்மிணி.............

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
    நன்றி.........

    ReplyDelete
  12. உங்களைக் கூப்பிடவில்லையா? வினோதம் தான். நல்லா எழுதி இருக்கீங்க.

    அனுஜன்யா

    ReplyDelete
  13. வாங்க அனுஜன்யா

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
    நன்றி.........

    ReplyDelete
  14. இந்த நண்பர்களே இப்படித்தாங்க விடுங்க.ஆனாலும் காதலர்களுக்கு உதவறத விட்டுடாதீங்க. அட நம்ம புள்ளைங்களுக்கு யாராவது உதவுவாக!
    அந்தமான் க.நா.சாந்தி

    ReplyDelete
  15. யப்பா! உங்க தமிழ் தோழிகள்லாம் கான்வென்ட்ல படிச்சதுக்கு நாட்டுக்காய் சாப்பிடக்கூடாதாமா? என்னமோப்பா எம் புள்ளய தமிழ் நாட்டுல படிக்க கொண்டாந்து விட்டுருக்கேன்.ஆரோக்கியமா இருக்க விடுங்க. நல்ல பதிவு. தமிழ் நாட்டு இளம்பெண்கள் எங்கே போகிறார்கள்?


    அந்தமான் க.நா.சாந்தி

    ReplyDelete
  16. வாங்க சாந்தி....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
    நன்றி.........

    ReplyDelete
  17. பதிவு அருமையாக இருந்தது.ந்ண்பர்களை அறிந்துகொள்ள இப்படியான சம்பவங்கள் தான் வளி அமைக்கும்.உஙகள் பதிவுக்கும் துணிவிற்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. ayyo pavam ...


    your blog page looks very good.

    ReplyDelete
  19. சங்கவி விரைவில் எனது காதல் கல்யாணம் பற்றிய பதிவொன்றை எழுதப்போகிறேன். படித்து விட்டுச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  20. /இதில் மிக முக்கியமான விசயம் பொண்ணும் எங்க நண்பனும் குடும்பத்தோட நடந்த திருமணத்திற்கு
    எங்கள கூப்பிடவே இல்லை............ //

    சில சூழ்நிலைகள் தவிர்க்க இயலாதது. கண்டுக்காதீங்க. நல்ல படியா குடும்பம் நடத்துறாங்கல்ல. அதுதான் முக்கியம். அவர்களோட குடும்பமும் அவங்களை ஏற்றுக் கொண்டார்கள் அல்லவா? அது இரட்டிப்பு மகிழ்ச்சிதானே

    ReplyDelete