Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Monday, June 1, 2015

கல்யாண சோறு


இந்த வருட வைகாசியில் உறவுகள் மற்றும் நண்பர்களின் பல திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமணம் என்றாலே உணவு தான் எல்லா வீட்டிலும் முக்கியமானதாக இருக்கும் மற்றும் அனைவரும் உணவிற்குத்தான் மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் அனைத்து இடங்களிலும் கொடுப்பார்கள். அந்த முக்கியத்துவம் அவர்களின் அந்தஸ்த்து போல இருக்கும், அதற்காக நிறைய செலவு செய்து உழைத்திருப்பார்கள் என்றால் அது மிகையாகது. 

நான் சாப்பிட்ட எல்லா இடங்களிலும் (ஒரு திருமணத்தை தவிர) உணவுகள் எங்குமே நம் பாரம்பரிய உணவு முறைகளில் இல்லை, ரொட்டி அல்லது நான் கொடுக்காத திருமணமே இல்லை, நான், பன்னீர் மசாலா, தயிர் சேமியா, ஊத்தாப்பாம் என்று எதுவுமே நம் உடலிற்கு ஏற்ற உணவாகவே இல்லை. இதை குறையாக எழுதவில்லை நிறைய செலவு செய்து இந்த மாதிரி நம் பாரம்பயித்திற்கும், நம் மண்ணிற்கேற்ற நம் உடலிற்கும் சம்பந்தம் இல்லாத உணவை பெருமை என்ற பெயரிலும். கெத்து என்ற பெயரிலும் பணத்தை வாரி இறைத்து உணவாக வைக்கின்றனர்.

அதுவும் கல்யாண வீட்டில் பபே என்ற பெயரில் நமக்க சம்பந்தமில்லாத உணவு முறையை இப்பொழுது எல்லாம் நாகரீகம் என்ற பெயரில் கொண்டு வருகின்றனர். நம்ம ஊர் பெருசுங்க எல்லாம் தோசை ஒன்னு, கொஞ்சம் சட்னி கொடுப்பா என்று தட்டை எடுத்துக்கொண்டு வரிசையில் காத்து நின்று வாங்கி உண்ணுகின்றனர். இது தான் நம் பாரம்பரிய மிக்க கல்யாண சாப்பாடா? என்றால் கேள்வி மட்டுமே மிஞ்சுகிறது.

அதுவும் இந்த பபே முறையில் எல்லா வகை சட்டினிக்களும், குழம்பும் ஒன்றாக கலந்து விடுகின்றது, இதில் எங்க சட்டினியின் சுவையை சுவைப்பது சுவைத்து உண்பது என்று தான் இன்னும் விளங்கல..

இதை எல்லாம் தான் நம் மக்கள் விரும்புகின்றனர். ஒவ்வொரு பப்பே முறை உணவிற்கு செல்லும் போது என் மனதிற்கு தோன்றுவது மேல் உள்ள என் குமுறல்கள்... இப்படி பபே பற்றி நம்ம ஊர் ஆட்களிடம் காதும் காதும் வைத்த மாதிரி கேட்டால் பொழுந்து கட்டுவார்கள்.

வரிசையாக வந்த திருமணத்தில் கடந்த சனி இரவு ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன் மணமகனின் அப்பா பாரம்பரியத்தை மிக விரும்புபவர் போல அனைவருக்கும் தலைவாலை இலை, 3 வகையாக காய்கள், கூட்டு, வடை, பாயசம் அப்பளம் என்று 15 வருடத்திற்கு முந்தைய திருமண விருந்தை கடைபிடித்து கலக்கி இருந்தார்.

திருப்தியாக சாப்பிட்டு விட்டு கையை கழுவிவிட்டு வெற்றிலை பாக்கு போடும் போது ஒரு ஆத்தா சொன்னது, இந்த மாதிரி விருந்து சாப்பிட்டு நொம்ப நாள் ஆச்சு... சின்னச்சாமி கலக்கிபுட்டாரு என்றது...

நானும் சொல்கிறேன் இதை போல, விருந்து சாப்பிட்டு நிறைய நாள் ஆச்சு என்று.... 

இனி எந்த கண்ணாலத்தில் இப்படி சோறு போட போறாங்களோன்னு என் மனசு அல்லோல்டுது.

Thursday, September 13, 2012

திருமண நாள்..... 5ம் ஆண்டில்....


திருமணம் ஒவ்வொருவரின் வாழ்விலும் சந்தோசங்களை அள்ளிக்கொடுக்கும் காலக்கட்டம். வாழ்வில் பல சந்தோசங்கள் இருந்தாலும் திருமண நாள் என்ற சந்தோசம் மிக இனிமையானது. எத்தனையோ திருவிழாக்கள் வந்தாலும் அதை கொண்டாடுவோம் ஆனால் அசை போடமாட்டோம் ஆனால் திருமண நாள் நம் நினைவுகள் நிச்சயம் அன்று நடந்த நிகழ்வுகளை அசை போட வைக்கும்..

இப்பதிவை எழுதும் போது நினைவுகளுடன் ரீங்காரமிட்டு ஒரு வித சந்தோச உணர்வுடன் பகிர்கிறேன்..



சிறுவயதில் இருந்து சொந்தபந்தங்கள், நண்பர்கள் திருமணத்திற்கு செல்லும் போது நம் திருமணம் எப்படி நடக்கும் என்று ஒரு எண்ண ஓட்டம் நிச்சயம் மனதில் இருக்கும்.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இரண்டு  வகை சொந்தத்தில் திருமணம் செய்வது, புது சொந்தத்தில் திருமணம் செய்வது என்று சொல்லலாம். சொந்தத்தில் திருமணம் செய்வது மிக அதிக சந்தோசம் என்னைப் பொறுத்தவரை...

எனக்கு சிறுவயதில் இருந்து மாமா வீட்டுக்கு சென்றால் அங்கு அக்கா பெண்ணோடு விளையாடிக்கொள்டு இருப்பேன். அப்போது பார்ப்பவர்கள் என்ன இப்பவே ஊர்  விளையாடுகிறாயா என்று கிண்டல் அடிப்பார்கள். 
எதாவது நிகழ்ச்சிகளுக்கு சென்றால் என்னடா எப்ப பார்த்தாலும் அக்கா பொண்ணோடு சுத்தற என்று சிறுவயதில் இருந்து மன ஓட்டத்தை அக்கா பெண் மேல் திரும்பிய காலகட்டம் கல்லூரி செல்லும் போது தான் என்றாலும் ஞாபகம் தெரிந்து முதல் என் முதல் பெண் தோழி அக்கா பெண் தான்.

அக்கா பெண்ணை என் முதல் தோழியை  திருமணம் செய்து கொள்ளலாம் என் குடும்ப பெரியவர்கள் சம்மதித்து ஒரு நல்ல நாள் பார்த்து பேசி முடிவானது என் திருமணம். திருமண 14.09.2008 அன்று அந்தியூரில் லட்சுமி திருமண மண்டபத்தில் முடிவாகி சரியாக 4 வருடங்களுக்கு முன் என் முதல் தோழியை, என் அக்கா மகளை பெற்றோர்கள், உற்றார்கள், உறவினர்கள் முன் மனைவியாய் ஏற்றேன்...


இன்று 2 வயது மகனுடன் கொண்டாடுகிறேன் இத்திருமணநாளை...


இன்றோடு நான்கான்டுகள் முடிந்து ஐந்தாவது ஆண்டில் கடவுளின் ஆசியோடும் உங்கள் வாழ்த்துக்களோடு அடிஎடுத்து வைக்கிறேன்....

அன்புடன்
சங்கவி....
(சங்கமேஸ், கவிதா)

Sunday, August 12, 2012

கல்யாணமாகும் கன்னிப்பையன்களுக்காக...


கல்யாணம் என்றாலே மாப்பிள்ளை களை முகத்தில் வந்துவிடும். நம்மாளுகளில் உடலை கட்டுக்கோப்பா வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் எல்லோரும் ஜிம்முக்கு போவதில்லை தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என எதுவும் மேற்கொள்வதில்லை. 

திருமணம் என்ற பேச்சை எடுக்கும் முன் நம் கன்னிப்பையன்கள் எல்லாம் தினமும் நல்லா மூக்கு பிடிக்க தின்று விட்டு கவுந்தடிச்சு தூங்குவது தான் வேலை. தூங்கி எழுந்ததும் விழிப்பது சிகரெட்டில் தான் அப்படியே ஒரு தேநீர் அருந்தி விட்டு குளிச்சு ஆயா கடையில் 2 இட்லி சாப்பிட்டுட்டு அரக்க பறக்க அலுவலகம் செல்வார்கள் அங்கு மதியம் கிடைப்பதை சாப்பிட்டு விட்டு மாலை வேலை முடிந்ததும் நேராக செல்லும் இடம் மது அருந்த தான் அதுவும் வசதிக்கு  தகுந்தாற்போல் மாறும்.

பல நேரம் தங்கும் அறையிலும், அப்புறம் விதவிதமான பார் கடைசியில் சாக்கனாக்கடை என்று ஒவ்வொரு இடமும் ஓர் அனுபவமாக இருக்கும். வெளியூரில் தங்கி வேலைக்கு செல்லும் போது இப்படித்தான் இருந்தது என் அனுபவம்.

திருமணம் என்ற பேச்சை எடுத்ததும் எப்படி தொப்பையை குறைப்பது பீரும், கள்ளும் சாப்பிட்டதால் வந்த பரிசு அது. என்று நினைக்கையில் அனுபவமே சிறந்த அரு மருந்து என என் நண்பரைக் கேட்டேன் அவர் சிலது சொன்னார் நான் சிலது செய்தேன் நினைத்தை அடைந்தேன் அந்த டிப்ஸ் உங்களுக்கு சொல்றேன் முயற்சி செய்யுங்க...

தினசரி செய்யவேண்டியவை

தினமும் காலை தூங்கி எழுந்ததும் அரை லிட்டர் தண்ணீர் பின் குடிக்க வேண்டும்.
ஒரு மணி நேரம் கொஞ்சம் வேகமான நடைபயணம்.
வீட்டிற்கு வந்ததும் ஒரு அரை மணி நேரம் தசைப்பயிற்சி.

காலை உணவாக 4 இட்லி அல்லது 2 தோசை.
11 மணிக்கு 1 கப் கீரை உடன் வேகவைத்த முட்டையின் வெள்ளைபகுதி 2.
மதியம் 1 கப் சாப்பாடு, சாப்பாடு அளவிற்கு கீரை உடன் ஏதாவது ஒரு காய்கறிகள்.
பச்சை தேநீர் 1 கப் உடன் கோதுமை ரொட்டி 2 துண்டு
இரவு 7 மணிக்கு 3 சப்பாத்தி மட்டும் சாப்பிட வேண்டும்.
படுக்கும் போது பசித்தால் 2 கோதுமை ரொட்டி துண்டுகள் மட்டும்.
இதற்கு இடையில் பசித்தால் வெள்ளரிபிஞ்சு, கேரட், பீட்ரூட் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

6 முதல் 7 மணி நேர தூக்கம் போதுமானது

எண்ணெய்யில் பொறித்த பண்டங்கள் சாப்பிடக்கூடாது முக்கியமாக போண்டா, பஜ்ஜி மற்றும் வறுத்த பண்டங்கள்..

காலை எழுந்து ஒரு 10 நிமிடம் ஓட முயற்சி செய்யலாம். அப்போது தான் தொடை எல்லாம் இறுகும் இது கட்டாயம் இல்லை முயற்சி செய்யலாம்..

இந்த முறையை திருமணத்துக்கு முன் 4 மாதங்களாக கடைபிடித்தேன் 76 கிலோ இருந்த நான் 68 கிலோவாக மாறிவிட்டேன். தொப்பையும் கொஞ்சம் உள்ள போக அப்போது தான் மாப்பிள்ளை களை வந்தது போல் இருந்தது...

கல்யாணம் ஆனவுடன் கவலைப்படவேண்டாம்  சில ஆண்டுகளுக்கு இதை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு கட்டு கட்டுன்னு கட்டவும். இது புதுமாப்பிள்ளைகளுக்கான அனுபவ பதிவுங்க. முயற்சி செய்யுங்க முடியாதது இல்லை...

Sunday, November 27, 2011

அதிகரிக்கும் முதிர் கண்ணன்கள்


கடந்த காலங்களில் குழந்தைகள் விடுமுறை விட்டால் தாத்தா வீட்டுக்கு சென்று தாத்தா, பாட்டியோடு ஆட்டம் பாட்டத்துடன் இருப்பார்கள் இனி வரும் காலங்களில் பேரக்குழந்தைகளோடு கொஞ்சி குழாவி மகிழ வருங்கால தாத்தாக்கள் அந்த உடல் நலத்தோடு இருப்பார்களா என்றால் நிச்சயம் சந்தேகம் தான்...

இதற்கு முந்தைய தலைமுறையினர் அதிகபட்சம் 25 வயதில் திருமணம் செய்து கொண்டனர் இதனால் தங்களது மகனுக்க 25 ஆகும் போது அவர்களுக்கு 50 வயதாகி இருக்கும் தன் மகனுக்கு 26 அல்லது 27ல் திருமணம் செய்து வைத்து தங்களது பேரன் பேத்திகளோடு நல்ல உடல் ஆரோக்கியத்தோடு விளையாட முடிந்தது. இளமைகாலங்களிலும் சந்தோசமாக வாழ முடிந்தது.

இப்போதைய இளையஞர்கள் படித்து முடித்தவுடன் வேலை எதிர்பார்க்கின்றனர் வேலை கிடைத்ததும் திருமணத்தை பற்றி யோசிப்பதில்லை கேட்டால் இன்னும் அதிக சம்பளத்தில் வேலையில் சேர வேண்டும் வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்தில் செட்டில் ஆக வேண்டும் பின்பு தான் திருமணத்தைப்பற்றி யோசிக்க வேண்டும் என்கின்றனர்.

இன்றைய இளைஞர் தனது இளமைக்காலங்களை சம்பாரிப்பதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் இது தவறில்லை ஆனால் சம்பாரிக்கும் வயதில் இளமையை தவறு விடுகின்றனர் என்பது தான் இதில் கவனிக்கவேண்டியது. இன்றைய கலாச்சாரத்தில் லிவிங்டுகெதர் அதிகம் இருப்பது சற்றே இளப்பாருகிறார்கள் என்று கூறலாம். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு இளைஞர்கள் வேலைக்கு அலையும் போதும் குறைந்த சம்பளத்தில் வேலையில் இருக்கும் போது அவர்களது இளமைக்காலங்கள் கட்டாயமாக அமுக்கப்படுகிறது.

கலாச்சார சீர்கேடு என்று நகரங்களிலும், இப்பெவெல்லாம் காலம் கெட்டுப்போச்சு என்று கிராமப்புறங்களிலும் சொல்பவர்கள் சரியான வயதில் திருமணம் செய்து வைத்தால் இப்பிரச்சனைக்கு ஓரளவு தீர்வுகாணலாம். ஆனால் அதை அனைவரும் செய்ய மறுப்பர் காரணம் இன்னும் செட்டில் ஆகவில்லை இன்னும் சம்பாரிக்க வேண்டும் என்ற கனவால் திருமணத்தைப்பற்றி யோசிப்பதில்லை.

என் நண்பன் இன்று சென்னையில் பெரிய கம்பெனியில் உயர்ந்த பதவியில் அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்குகிறான் எங்கள் ஊரைச் சேர்ந்தவன் அவன் வயது 33 இன்னும் திருமணம் ஆகவில்லை எப்ப கேட்டாலும் அவன் அப்பா சொல்வது பார்த்துகிட்டே இருக்கிறோம் ஒன்னும் செட்டாக மாட்டிங்கு அவனுக்கு செவ்வாய் இல்ல சுத்த ஜாதகம் எப்படியும் இன்னும் 2 வருடத்தில் முடித்துவிடுவேன் என்கிற அவருக்கு வயது 65. அவனைக்கேட்டால் என்னடா செய்யறது வீட்ல பார்த்து முடிக்கட்டும் என்று இருக்கிறேன் என்கிறான். இவனைப்போல் முதிர்கண்ணன்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர்.

பெண்களில் 27 வயதுக்கு மேல் திருமணம் செய்யும் பெண்கள் அதிகம் பேர் சிசேரியன் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர் என்று ஒரு கருத்து கணிப்பு கூறுகிறது. முன்னர் சரியான நேரத்தில் பெண்ணுக்கு திருமணம் செய்யும் போது அவர்களது உடல் அமைப்பில் மாற்றம் வர வர குழந்தை பேரு இயற்கையானதாக இருக்கிறது. தற்போது தான் சிசேரியன் பழக்கம் அதிக அளவில் உள்ளது கடந்த காலங்களில் 5, 6 குழந்தை பெற்றவர்கள் எல்லாம் இயற்கையாகத்தான் குழந்தை பெற்றுள்ளனர். தற்போது அது குறைந்து வருகிறது.

வயது அதிகமாக திருமணம் செய்வதால் குழந்தை இல்லாமல் தவிப்பர்கள் இன்று ஏராளம் இதற்கான மருத்துவமனைகளில் இன்று கூடும் கூட்டத்தை கண்டாலே தெரியும்.

30 வயதில் இருந்து 35 வயதுக்குள் தான் இன்று அதிகம் திருமணம் செய்கின்றனர் அவ்வாறு செய்யும் போது அவர்களது வாழ்க்கையில் பாதி வருடங்கள் முடிவடிந்து விடுகிறது நம் ஆட்களின் சராசரி ஆயுட்காலம் 65 என்கின்றனர். பாதி வாழ்க்கையில் திருமணம் செய்து தன் மகன் அல்லது மகளுக்கு திருமணம் முடிக்கும் போது அவர்களுக்கு 65 வயதாகிவிடுகிறது தங்கள் பேரன் பேத்திகளோடு அந்த கால தாத்தாக்கள் போல இந்தக்கால, வருங்கால தாத்தாக்கள் இருப்பார்களா என்றால் நிச்சயம் சந்தேகம் தான்...

நிச்சயம் இன்று விற்கும் விலைவாசிக்கு நல்ல சம்பாரித்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்பது நன்றாக தெரியும் ஆனால் அந்த 24 வயதில் இருந்து 30 வயதுவரையான இளமைக்காலங்களை இழக்கின்றனர் என்பது தான் என் கருத்து.

பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாரிக்கலாம் ஆனால் வயது???????

Friday, November 18, 2011

நண்பனின் காதல் திருமணம்....


நான் எனது ஒரு சில நண்பர்களின் காதல் திருமணத்திற்கு (அதுதாங்க ஓடிப்போய் கல்யாணம் பன்றது)  துணை நின்று நடத்தி இருக்கின்றேன் அதில் ஒரு மறக்க முடியாத நான்(பன் வாங்கிய) எனது நண்பன் திருமணத்தின் அந்த திக் திக் சில நிமிடங்களை உங்களுடன் பகிர்து கொள்கிறேன்.....

நாங்கள் ஒரு 6 நண்பர்கள் கோவையில் ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தோம். அங்க பல சுவரசியமான, சிரிக்கும் படியான, குத்து வாங்கிய பல நிகழ்வுகள் நடந்தன, அதில் நாங்கள் அனைவரும் இணைந்து நடத்திய திருமணம் இது.

எங்கள் நண்பன் பாலா (கதையின் நாயகன்) கோவயைில் ஒரு பிரபலமான பைனான்சில் வேலை செய்தான் அவனுக்கு ப்ரமோஷன் கிடைத்து திருப்பூர் சென்றான்  இவர் அங்க மேனேஜர். அதே ஆபிசில் அந்த கிளையின் இன்சார்ஜ் கீதா இவரு போய் மூன்று மாதங்களில் இருவருக்கும் பத்திகிச்சு. 

அப்புறம் ஒரு 5 மாதங்கள் கழிச்சு நண்பன் எங்ககிட்ட வந்து நான் திருமணம் செய்தால் அவளைத்தான் செய்வேன் மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்று வசனம் பேசினான் என்ன பன்றது நண்பனாச்சே
என்னுடன் தங்கியவர்களில் இருவர் வக்கீல் சொல்லவேண்டுமா எங்களுக்கு உடனே திருமணத்திற்கு நாள் குறித்து இடம் குறிச்சோம்...

நாள் ஒருவாரம் கழித்து புதன்கிழமை இடம் கோவையில் உள்ள ஒரு பிரபலமான கோயில். கோவிலுக்கு விசாரிக்க வக்கீலும்,  சுரேசும் போனார்கள் அங்க என்னடான்னா காதல் திருமணம் இங்க அனுமதி இல்லை வேனும்னா வெளிய விநாயகர் கோயில்ல வெச்சு பண்ணிக்கலாம். இதற்கு புரோகிதர் வர மாட்டேன் என்கிறார். அவருக்கு பதில் காதல் திருமணத்திற்கு என இருக்கும் ஒருவருக்கு  ரூ.500 கொடுத்ததும் அவர் சரி என்று சொல்லிவிட்டர். மற்ற நண்பர்கள் பட்டுப்புடவை, வேஷ்டி, மாலை மற்றும் தாலி திருமணத்திற்கு தேவையான அனைத்துப்பொருட்களும் ஒரு ரூ.25000 ரெடி பண்டி வாங்கியாச்சு.

திருமண நாள் அன்று இரண்டு நண்பர்கள் பெண்ணை அழைத்துவர நடுராத்திரி 5 மணிக்கு போய்ட்டாங்க அப்புறம் நான், வக்கீல் சங்கர், சுரேஷ் கோவில்ல செய்ய வேண்டிய வேலை எல்லாம் ரெடி செய்து கொண்டு இருந்தோம். பொண்ணு இன்னும் வரல. கூட போனவங்க செல்லும் நாட் ரீச்சபல் என்னு பன்றது டென்சன், டென்சன்,டென்சன்.....

ஒரு அரைமணி நேரம் கழிச்சு நண்பன்கிட்ட இருந்து போன் மச்சி பொண்ணு இன்னும் வரலனு. என்னடா பன்றது மணி இப்பவே 8 ஆச்சசுனு டென்சனின் உச்சியில் இருக்கும் போது அடுத்த போன் பொண்ணு பொண்ணு வீட்டு பின்னாடி வழியா ஒரு 5 கீலோ மீட்டர் நட்ந்து வந்து பனியன் கம்பெனி பக்கதில இருக்குது நாங்க பிக்கப் பன்னிட்டு 1 மணி நேரத்தில்
வந்து விடுவோம் நீங்க ரெடியா இருங்க.

இந்த சமயத்தில் கோவில்ல பார்த்த கிட்டத்தட்ட அன்று மட்டு 20 கல்யாணம் நானும் சுரேசும் மத்த கல்யாணத்துக்கு வந்த பொண்ணுகனை சைட் அடிச்சிட்டு இருந்தோம்.

9 மணி பொண்ணு மாப்பிள்ளை வந்தாச்சு நான் போட்டோகிராபர் அளாளுக்கு ஒரு வேலை செய்ய அய்யர் அவர் வேலையை செய்ய திருமணம் நல்ல நேரத்தில் சுபமா முடிந்தது. அடுத்தது என்ன செய்யலாம்னு முடிவெடுக்கும்
போது முதல்ல சாப்பிடலாம்னு ஒட்டல் ஆர்யாஸ்ல சாப்பிட்டுவிட்டு அடுத்த முடிவ எடுத்தோம். பொண்ணு வீட்டுக்கு போன் செய்து முடிவு செய்து மாப்பிள்ளைய பேசச் சொன்னோம்.

மாப்பிள்ளை பொண்ணு வீட்டுக்கு போன் செஞ்சா நாலு தடவை போன் எடுக்கல எங்களுக்கு பி.பி ஏறிருச்சு. மறுபடியும் ரிங்போகுது  நண்பர்கள் ஸ்பீக்கர் ஆன்ல அவங்க அப்பா ஒரு வழியா
போன எடுத்தார். மாப்பிள்ளை பேசினான் உங்க பொண்ணும் நானும் உங்க பொண்ணும் கல்யாணம் பண்ணிட்டாங்க இப்பதான் நடந்துச்சுன்னு மாப்பிள்ளை சொல்ல...

சும்மா ஒரு 5 நிமிடம் திட்டுட்டு( செம திட்டு) கடைசியா சொன்னார். எங்கிட்ட காலைல சொல்லி இருந்தா நானும் வந்து இருப்பேன்ல ஏன் சொல்லவில்லைனு கொஞ்சம் டென்சனா பேசினார்.

அடுத்து இரண்டு குடும்பமும் பொது இடத்தில் பஞ்சாயத்து பேசி மறுபடியும் இன்னொரு திருமணம் அவங்க குடும்பத்துடன் பவானி கூடுதுறையில் நடத்தினார்கள். 

இதில் மிக முக்கியமான விசயம் பொண்ணும் எங்க நண்பனும் குடும்பத்தோட நடந்த திருமணத்திற்கு எங்கள கூப்பிடவே இல்லை....

நண்பன் தானே எங்கிருந்தாலும் வாழட்டும் என்று சந்தோசமாக இதை கண்டுக்கல அவனை மறுபடியும் நாங்களும் கேக்கல... 

இது ஒரு மீள் பதிவு.... இரண்டு வருடத்திற்கு முன்னால் எழுதியது.. நேற்று நண்பனை எதாச்சையாக பார்த்தேன் எப்படி டா இருக்கேன்னு கேட்டா இல்லடா எனக்கு அவளுக்கும் ஒத்து வரல விவாகரத்து செய்யலாம்ன்னு ரெண்டு பேரும் முடிவு செய்து அப்ளை செய்திருக்கிறேன் என்றான்...
என்ன சொல்ல அவனிடம் ஓகே பாரு என்று வந்துட்டேன்...


இதுக்காட உனக்கு கல்யாணம் செய்து வைத்தோம் தூரத்தில் இருந்தாலும் சந்தோசமாக இருக்கிறேன் என்று சொன்னால் நிம்மதியாக இருக்கும் திருமணம் செய்த போது இருந்த நண்பர்களிடம் பேசினேன் ரொம்ப வருத்தப்பட்டது அவனை விட நானும் எனது நண்பர்களின் குடும்பமும் தான்....

Thursday, November 17, 2011

கணவனும் மனைவியும்...


"என்னடி ராதா கல்யாணம் ஆகி 4 மாதம் ஆச்சு எப்படி இருக்கு சென்னையும், உன் திருமண வாழ்க்கையும் எப்படி இருக்கு?"

"நல்லாயிருக்கும்மா"

"உம்புருஷன் சென்னையிலேயே 10 வருசமா இருக்கிறாரு உன்னைய ஊர் சுத்திக்காட்டறாரா?"

"ம்.. அதுக்கென்னம்மா குறை நான் கேக்கமலேயே வெளியே கூட்டிட்டுப்போய் நிறைய சுத்திக்காட்டுகிறார்"

"சம்பளம் எல்லாம் உன் கையில தராரா இல்ல அவரே வெச்சிக்கிறாரா?"

"எல்லாம் ஏடிஎம் கார்டுதான்ம்மா"

"என்னடி. அம்மாவும், மகளும் பேசிகிட்டே இருக்கீங்க? சீக்கிரம் கோழிய அடிச்சு குழம்பு வையுங்க மத்தியானம் மருமகன் அவர் சிநேகிதன் வர்றாராம்"

"சும்மா கத்தாதீங்க மருமகன் முன்னாடியே சொல்லிட்டாரு!"

"ஏன்டி சிரிக்கிற?"

?இல்லம்மா எம் புருஷன் காலைல 5 மணிக்கு எழுந்து எக்ஸர்சைஸ் எல்லாம் முடிச்சிட்டு 5அரை மணியில் இருந்து வீட்டு வேலை, சமையல் வேலை எல்லாம் எனக்கு ஒத்தாசையா இருப்பாரும்மா"

"மாப்பிள்ளை சமைப்பாராம்மா?"

"ம்.. என்ன நச்சரிக்கமா அவரே சாப்பாடு எடுத்து வைச்சு டைமுக்கு புறபட்டுருவாரு.. மாலை வந்தது துணிகளை எல்லாம் எடுத்து வாசிங்மெசின்ல போட்டு அவரே காயவைச்சு எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்வாரும்மா"

"இந்த சுத்து வட்டாரத்துல எத்தனை பேரை விசாரித்து இந்த மாப்பிள்ளைய உனக்கு கட்டி வெச்சோம்! நாங்க புடிச்ச மாப்பிள்ளைன்னா சும்மாவா!! கேக்கவே சந்தோசமா இருக்கு ராதா!!!"

"போம்மா எம்புருஷன் என்னை சோதிக்கிறாரும்மா?"

"என்னடி சொல்ற?"

"ஆமாம்மா இவரு ஆபீஸ் விட்ட நேரா வீட்டுக்கு வந்தருவாரு குடி, சிகெரெட், தண்ணி என எந்த பழக்கமும் இல்ல அவருகிட்ட குறையே கண்டுபிடிக்க முடியலம்மா?"

"இப்படி ஒருத்த கிடைக்கரதுக்கு கொடுத்து வச்சிருக்கனும் ராதா!"

"போம்மா. ஒரு பொண்டாட்டிக்கு, புருஷனை ஆட்டிவைக்கணும், புருஷன் செய்யற தப்பைக் கண்டுபிடிச்சு வசைபாடணும், காதைத்திருகி குட்டி வைக்கணும்னு... இப்படியெல்லாம் ஆசை இருக்காதா?! இப்படி என் ஆசை எதையுமே நிறைவேற்றிக்க முடியாம இவர் என்னை ஒரேயடியா இப்படி சோதிச்சா எப்படி?!’’

Tuesday, September 13, 2011

திருமண நாள்.....


திருமணம் ஒவ்வொருவரின் வாழ்விலும் சந்தோசங்களை அள்ளிக்கொடுக்கும் காலக்கட்டம். வாழ்வில் பல சந்தோசங்கள் இருந்தாலும் திருமண நாள் என்ற சந்தோசம் மிக இனிமையானது.

சிறுவயதில் இருந்து சொந்தபந்தங்கள், நண்பர்கள் திருமணத்திற்கு செல்லும் போது நம் திருமணம் எப்படி நடக்கும் என்று ஒரு எண்ண ஓட்டம் நிச்சயம் மனதில் இருக்கும்.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இரண்டு  வகை சொந்தத்தில் திருமணம் செய்வது, புது சொந்தத்தில் திருமணம் செய்வது என்று சொல்லலாம். சொந்தத்தில் திருமணம் செய்வது மிக அதிக சந்தோசம் என்னைப் பொறுத்தவரை...

எனக்கு சிறுவயதில் இருந்து மாமா வீட்டுக்கு சென்றால் அங்கு மாமா பெண்ணோடு விளையாடிக்கொள்டு இருப்பேன். அப்போது பார்ப்பவர்கள் என்ன மாமனோடு விளையாடுகிறாயா என்று கிண்டல் அடிப்பார்கள். எதாவது நிகழ்ச்சிகளுக்கு சென்றால் என்னடா எப்ப பார்த்தாலும் அத்தை பொண்ணோடு சுத்தற என்று சிறுவயதில் இருந்து மன ஓட்டத்தை அத்தை பெண் மேல் திரும்பிய காலகட்டம் கல்லூரி செல்லும் போது தான் என்றாலும் ஞாபகம் தெரிந்து முதல் என் முதல் பெண் தோழி அத்தை பெண் தான்.


அத்தை பெண்ணை என் முதல் தோழியை  திருமணம் செய்து கொள்ளலாம் என்று நான் சொல்வதற்கு முன் என் அக்காக்கள் எல்லாம் முடிவு செய்து பேசஆரம்பித்தார்கள். என் குடும்ப பெரியவர் என் பெரியப்பாவிடம் நானும் என் முடிவையும் சொன்னேன் என் அத்தை மகளை கூப்பிட்டு கேட்டார் எனக்கும் சம்மதம் என்றதும். ஒரு நல்ல நாள் பார்த்து பேசி முடிவானது என் திருமணம். திருமண 14.09.2008 அன்று அந்தியூரில் லட்சுமி திருமண மண்டபத்தில் முடிவாகி சரியாக மூன்று வருடங்களுக்கு முன் என் முதல் தோழியை, என் அத்தை மகளை பெற்றோர்கள், உற்றார்கள், உறவினர்கள் முன் மனைவியாய் ஏற்றேன்...



இன்றோடு மூன்றாண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டில் உங்கள் வாழ்த்துக்களோடு அடிஎடுத்து வைக்கிறேன்....

என்றும் அன்புடன்
சங்கமேஸ்வரன்
கவிதா
(சங்கவி)

Wednesday, August 3, 2011

கணவனிடம் பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்...


ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விசயங்களை தமக்காக செய்ய வேண்மும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் அமைந்தால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால் எதிர்பார்ப்புக்கு முரணாக அமைந்தால் குடும்ப வாழ்க்கை பூதம்பமாக வெடிக்க ஆரம்பிக்கும்.

பெண்கள் எதிர்பார்க்கும் விசயங்கள் அனைத்தும் ஆண்களால் செய்ய முடியவில்லை என்றாலும் செய்ய முடிகிற காரியத்தை நிறைவேற்றினால் அது அவர்களின் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வேராக அமையும் என்பதை ஒவ்வொரு ஆணும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆண்களிடம் பெண்கள் பொதுவாக எதிர்பார்ப்பது என்ன

பெண்கள் ஒரு விசயம் குறித்து ஆண்களிடம் பேசும் போது அதை தெளிவாகவும் கவனமாகவும் கேக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவ்வாறு கேட்டுக்கொண்டு அதற்கு ஏற்றாற் போல் நடந்து கொண்டால் அவளது மன உணர்வை ஆண்கள் புரிந்துகொண்டதாக நினைக்கின்றனர்.

பெண்களின் கோப, எதிர்மறைவான எல்லா உணர்வுகளும் அவர்களின் 3 நாள் பிரச்சனையுடன் தொடர்புடையவை அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்கள் இரக்க உணர்ச்சியை முன்னேற்றிக்கொண்டால் நல்லது. அதற்காக கண்ணீர் விட்டு அழவேண்டியதில்லை. தோழமையின் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ள வேண்டும்.

பெண்களைப் பொறுத்த வரை தனிமையில் தொட்டு பேசுவது, மெல்ல அடித்து விளையாடுவது போன்றவற்றை மிக்க விரும்புவர் அதனால் அடிக்கடி பேச வேண்டும்

தனது கணவர் மாதத்திற்கு ஒரு முறையாவது தமக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்று விரும்புவர். இது பொதுவானது தான் ஆனால் எதிர்பார்க்காவண்ணம் சமைத்து அசத்த வேண்டும் இதை மிக ரசிப்பார்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பாக இருங்கள் ஆனால் அவர்களை சொந்த உடமைகளாக கருதாதீர்கள்.

தனது ஆண் எப்போதும் தங்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்துவதை பெண்கள் விரும்புவர், பெண்களை விட்டு செல்லும் தருணங்களில் அந்த அன்பை வித்தியாசமாக வழியில் வெளிப்படுத்த வேண்டும்.

ஆண்கள் விரும்பும் பெண்களை மிக வேகமாக இழப்பதற்கு ஒரு வழி பொய் சொல்வது ஆண்கள் மிக நேர்மையாக இருப்பதை அதிகம் விரும்புவர்.

வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் அதிகமாக கணவனிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்.

விடுமுறை நாளில் கூட இருக்கும் போது வேலையை பகிர்ந்து கொண்டு வெளியில் சென்று வரலாம் என்று அவர்களை அழைப்பதை மிக விரும்புகின்றனர்.

பெண்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறினால் குடும்பமும் மிக மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை...

Wednesday, December 2, 2009

நண்பனின் காதல் திருமணம்.........அந்த திக் திக் சில நிமிடங்கள்.........

நான் எனது ஒரு சில நண்பர்களின் காதல் திருமணத்திற்கு (அதுதாங்க ஓடிப்போய் கல்யாணம் பன்றது)
துணை நின்று நடத்தி இருக்கின்றேன் அதில் ஒரு மறக்க முடியாத நான்(பன் வாங்கிய) எனது நண்பன் திருமணத்தின் அந்த திக் திக் சில நிமிடங்களை
உங்களுடன் பகிர்து கொள்கிறேன்.....

நாங்கள் ஒரு 6 நண்பர்கள் கோவையில் ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தோம். அங்க பல சுவரசியமான, சிரிக்கும் படியான, குத்து வாங்கிய பல நிகழ்வுகள் நடந்தன,
அதில் நாங்கள் அனைவரும் இணைந்து நடத்திய திருமணம் இது. (இப்ப தாங்க மேட்டருக்கு வர்ரேன்)

எங்கள் நண்பன் பாலா (கதையின் நாயகன்) கோவயைில் ஒரு பிரபலமான பைனான்சில் வேலை செய்தான் அவனுக்கு ப்ரமோஷன் கிடைத்து திருப்பூர் சென்றான்
இவர் அங்க மேனேஜர். அதே ஆபிசில் அந்த கிளையின் இன்சார்ஜ் கீதா இவரு போய் மூன்று மாதங்களில் இருவருக்கும் பத்திகிச்சு. அப்புறம் ஒரு 5 மாதங்கள் கழிச்சு
நண்பன் எங்ககிட்ட வந்து நான் திருமணம் செய்தால் அவளைத்தான் செய்வேன் மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்று வசனம் பேசினான் என்ன பன்றது நண்பனாச்சே
என்னுடன் தங்கியவர்களில் இருவர் வக்கீல் சொல்லவேண்டுமா எங்களுக்கு உடனே திருமணத்திற்கு நாள் குறித்து இடம் குறிச்சோம்...

நாள் ஒருவாரம் கழித்து புதன்கிழமை இடம் கோவையில் உள்ள ஒரு பிரபலமான கோயில். கோவிலுக்கு விசாரிக்க நானும், வக்கீலும் போனாம் அங்க என்னடான்னா காதல் திருமணம் இங்க அனுமதி இல்லை வேனும்னா வெளிய விநாயகர் கோயில்ல வெச்சு பண்ணிக்கலாம். இதற்கு புரோகிதர் வர மாட்டேன் என்கிறார். அவருக்கு பதில் காதல் திருமணத்திற்கு என இருக்கும் ஒருவருக்கு
ரூ.500 கொடுத்ததும் அவர் சரி என்று சொல்லிவிட்டர். மற்ற நண்பர்கள் பட்டுப்புடவை, வேஷ்டி, மாலை மற்றும் தாலி திருமணத்திற்கு தேவையான அனைத்துப்பொருட்களும் ஒரு ரூ.25000 ரெடி பண்டி வாங்கியாச்சு.

திருமண நாள் அன்று இரண்டு நண்பர்கள் பெண்ணை அழைத்துவர நடுராத்திரி 5 மணிக்கு (எனக்கு எப்பவுமே 8 மணிக்குத்தாங்க வெடியும்) போய்ட்டாங்க அப்புறம் எனக்கும் வக்கீலுக்கும் கோவில்ல வேலை எல்லாம் ரெடி ஆகி இருக்கிறோம். பொண்ணு இன்னும் வரல. கூட போனவங்க செல்லும் நாட் ரீச்சபல் என்னு பன்றது டென்சன், டென்சன்,டென்சன்.....

ஒரு அரைமணி நேரம் கழிச்சு நண்பன்கிட்ட இருந்து போன் பொண்ணு இன்னும் வரலனு. என்னடா பன்றது மணி இப்பவே 8 ஆச்சசுனு டென்சனின் உச்சியில் இருக்கும் போது
அடுத்த போன் பொண்ணு பொண்ணு வீட்டு பின்னாடி வழியா ஒரு 5 கீலோ மீட்டர் நட்ந்து வந்து பனியன் கம்பெனி பக்கதில இருக்குது நாங்க பிக்கப் பன்னிட்டு 1 மணி நேரத்தில்
வந்து விடுவோம் நீங்க ரெடியா இருங்க (நாங்க தான் ரெடியாச்சே) இந்த சமயத்தில் கோவில்ல பார்த்த கிட்டத்தட்ட அந்நிக்கு மட்டு 20 கல்யாணமாம் (இது கோவில்ல பதிவு பண்டுன கல்யாணம்) காதல் திருமணம் ஒரு 3 நடந்துச்சு.

9 மணி பொண்ணு மாப்பிள்ளை வந்தாச்சு நான் போட்டோகிராபர் அளாளுக்கு ஒரு வேலை திருமணம் நல்ல நேரத்தில் சுபமா முடிந்தது. அடுத்தது என்ன செய்யலாம்னு முடிவெடுக்கும்
போது முதல்ல சாப்பிடலாம்னு ஒட்டல் ஆர்யாஸ்ல சாப்பிட்டுவிட்டு அடுத்த முடிவ எடுத்தோம். பொண்ணு வீட்டுக்கு போன் செய்து பேசறது பேசறது நான்னு என்ன முடிவெபண்ணிட்டானுக.....

அந்த திக் திக் சில நிமிடங்கள்

நான் பொண்ணு வீட்டுக்கு போன் செஞ்சா நாலு தடவை போன் எடுக்கல எனக்கு பி.பி ஏறிருச்சு. மறுபடியும் ரிங்போகுது என்னைச்சுத்தி நண்பர்கள் ஸ்பீக்கர் ஆன்ல அவங்க அப்பா ஒரு வழியா
போன எடுத்தார். நான் பேசினேன் உங்க பொண்ணும் எங்க நண்பன் அவங்க ஆபிஸ்ல மேனேஜரும் கல்யாணம் பண்ணிட்டாங்க இப்பதான் நடந்துச்சுன்னு சொண்ணேன்.
சும்மா ஒரு 5 நிமிடம் திட்டுட்டு( செம திட்டு) கடைசியா சொன்னார்......................
எங்கிட்ட காலைல சொல்லி இருந்தா நானும் வந்து இருப்பேன்ல ஏன் சொல்லவில்லைனு எனக்கு மாத்து அப்புறம் வீட்டுக்கு வரச்சொல்லுனு சொல்லி அவங்க குடும்பம் எல்லாம் ஒன்னு சேர்நது மறுபடியும் இன்னொரு திருமணம் அவங்க குடும்த்துடன் நடந்தது. இதில் மிக முக்கியமான விசயம் பொண்ணும் எங்க நண்பனும் குடும்பத்தோட நடந்த திருமணத்திற்கு
எங்கள கூப்பிடவே இல்லை............