Sunday, November 27, 2011

அதிகரிக்கும் முதிர் கண்ணன்கள்


கடந்த காலங்களில் குழந்தைகள் விடுமுறை விட்டால் தாத்தா வீட்டுக்கு சென்று தாத்தா, பாட்டியோடு ஆட்டம் பாட்டத்துடன் இருப்பார்கள் இனி வரும் காலங்களில் பேரக்குழந்தைகளோடு கொஞ்சி குழாவி மகிழ வருங்கால தாத்தாக்கள் அந்த உடல் நலத்தோடு இருப்பார்களா என்றால் நிச்சயம் சந்தேகம் தான்...

இதற்கு முந்தைய தலைமுறையினர் அதிகபட்சம் 25 வயதில் திருமணம் செய்து கொண்டனர் இதனால் தங்களது மகனுக்க 25 ஆகும் போது அவர்களுக்கு 50 வயதாகி இருக்கும் தன் மகனுக்கு 26 அல்லது 27ல் திருமணம் செய்து வைத்து தங்களது பேரன் பேத்திகளோடு நல்ல உடல் ஆரோக்கியத்தோடு விளையாட முடிந்தது. இளமைகாலங்களிலும் சந்தோசமாக வாழ முடிந்தது.

இப்போதைய இளையஞர்கள் படித்து முடித்தவுடன் வேலை எதிர்பார்க்கின்றனர் வேலை கிடைத்ததும் திருமணத்தை பற்றி யோசிப்பதில்லை கேட்டால் இன்னும் அதிக சம்பளத்தில் வேலையில் சேர வேண்டும் வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்தில் செட்டில் ஆக வேண்டும் பின்பு தான் திருமணத்தைப்பற்றி யோசிக்க வேண்டும் என்கின்றனர்.

இன்றைய இளைஞர் தனது இளமைக்காலங்களை சம்பாரிப்பதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் இது தவறில்லை ஆனால் சம்பாரிக்கும் வயதில் இளமையை தவறு விடுகின்றனர் என்பது தான் இதில் கவனிக்கவேண்டியது. இன்றைய கலாச்சாரத்தில் லிவிங்டுகெதர் அதிகம் இருப்பது சற்றே இளப்பாருகிறார்கள் என்று கூறலாம். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு இளைஞர்கள் வேலைக்கு அலையும் போதும் குறைந்த சம்பளத்தில் வேலையில் இருக்கும் போது அவர்களது இளமைக்காலங்கள் கட்டாயமாக அமுக்கப்படுகிறது.

கலாச்சார சீர்கேடு என்று நகரங்களிலும், இப்பெவெல்லாம் காலம் கெட்டுப்போச்சு என்று கிராமப்புறங்களிலும் சொல்பவர்கள் சரியான வயதில் திருமணம் செய்து வைத்தால் இப்பிரச்சனைக்கு ஓரளவு தீர்வுகாணலாம். ஆனால் அதை அனைவரும் செய்ய மறுப்பர் காரணம் இன்னும் செட்டில் ஆகவில்லை இன்னும் சம்பாரிக்க வேண்டும் என்ற கனவால் திருமணத்தைப்பற்றி யோசிப்பதில்லை.

என் நண்பன் இன்று சென்னையில் பெரிய கம்பெனியில் உயர்ந்த பதவியில் அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்குகிறான் எங்கள் ஊரைச் சேர்ந்தவன் அவன் வயது 33 இன்னும் திருமணம் ஆகவில்லை எப்ப கேட்டாலும் அவன் அப்பா சொல்வது பார்த்துகிட்டே இருக்கிறோம் ஒன்னும் செட்டாக மாட்டிங்கு அவனுக்கு செவ்வாய் இல்ல சுத்த ஜாதகம் எப்படியும் இன்னும் 2 வருடத்தில் முடித்துவிடுவேன் என்கிற அவருக்கு வயது 65. அவனைக்கேட்டால் என்னடா செய்யறது வீட்ல பார்த்து முடிக்கட்டும் என்று இருக்கிறேன் என்கிறான். இவனைப்போல் முதிர்கண்ணன்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர்.

பெண்களில் 27 வயதுக்கு மேல் திருமணம் செய்யும் பெண்கள் அதிகம் பேர் சிசேரியன் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர் என்று ஒரு கருத்து கணிப்பு கூறுகிறது. முன்னர் சரியான நேரத்தில் பெண்ணுக்கு திருமணம் செய்யும் போது அவர்களது உடல் அமைப்பில் மாற்றம் வர வர குழந்தை பேரு இயற்கையானதாக இருக்கிறது. தற்போது தான் சிசேரியன் பழக்கம் அதிக அளவில் உள்ளது கடந்த காலங்களில் 5, 6 குழந்தை பெற்றவர்கள் எல்லாம் இயற்கையாகத்தான் குழந்தை பெற்றுள்ளனர். தற்போது அது குறைந்து வருகிறது.

வயது அதிகமாக திருமணம் செய்வதால் குழந்தை இல்லாமல் தவிப்பர்கள் இன்று ஏராளம் இதற்கான மருத்துவமனைகளில் இன்று கூடும் கூட்டத்தை கண்டாலே தெரியும்.

30 வயதில் இருந்து 35 வயதுக்குள் தான் இன்று அதிகம் திருமணம் செய்கின்றனர் அவ்வாறு செய்யும் போது அவர்களது வாழ்க்கையில் பாதி வருடங்கள் முடிவடிந்து விடுகிறது நம் ஆட்களின் சராசரி ஆயுட்காலம் 65 என்கின்றனர். பாதி வாழ்க்கையில் திருமணம் செய்து தன் மகன் அல்லது மகளுக்கு திருமணம் முடிக்கும் போது அவர்களுக்கு 65 வயதாகிவிடுகிறது தங்கள் பேரன் பேத்திகளோடு அந்த கால தாத்தாக்கள் போல இந்தக்கால, வருங்கால தாத்தாக்கள் இருப்பார்களா என்றால் நிச்சயம் சந்தேகம் தான்...

நிச்சயம் இன்று விற்கும் விலைவாசிக்கு நல்ல சம்பாரித்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்பது நன்றாக தெரியும் ஆனால் அந்த 24 வயதில் இருந்து 30 வயதுவரையான இளமைக்காலங்களை இழக்கின்றனர் என்பது தான் என் கருத்து.

பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாரிக்கலாம் ஆனால் வயது???????

27 comments:

  1. நீங்கள் சொல்வது போல் எங்கோ ஒன்றிரண்டு நடந்தாலும் பெரும்பாலும் 21 வயதிலேயே (Software engineer!!) வேலைக்கு போவதால், இப்போது தான் நிறைய பேருக்கு 25 வயதுக்குள் திருமணம் நடந்து விடுகிறது என நினைக்கிறேன்

    ReplyDelete
  2. என் நண்பன் இன்று சென்னையில் பெரிய கம்பெனியில் உயர்ந்த பதவியில் அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்குகிறான் எங்கள் ஊரைச் சேர்ந்தவன் அவன் வயது 33 இன்னும் திருமணம் ஆகவில்லை எப்ப கேட்டாலும் அவன் அப்பா சொல்வது பார்த்துகிட்டே இருக்கிறோம் ஒன்னும் செட்டாக மாட்டிங்கு அவனுக்கு செவ்வாய் இல்ல சுத்த ஜாதகம் எப்படியும் இன்னும் 2 வருடத்தில் முடித்துவிடுவேன் என்கிற அவருக்கு வயது 65.//

    என்னிடம் கேட்காமலையே என்னைப்பற்றி எழுதிய சங்கவியை கண்டிக்கிறேன் :))

    ReplyDelete
  3. ..நீங்கள் சொல்வது போல் எங்கோ ஒன்றிரண்டு நடந்தாலும் பெரும்பாலும் 21 வயதிலேயே (Software engineer!!) வேலைக்கு போவதால், இப்போது தான் நிறைய பேருக்கு 25 வயதுக்குள் திருமணம் நடந்து விடுகிறது என நினைக்கிறேன்..

    அண்ணே நீங்கள் சொல்வது போல் வேலை கிடைத்து விடுகிறது ஆனால் நம்மாளுகளுக்கு ஆசை விடவில்லை.. சாப்ட்வேர் இன்ஜினியர் ஆனதும் ஆடுத்து ஆன்சைட் வாய்ப்பு கிடைக்குமா என்றும் இதை விட பெரிய கம்பெனி கிடைக்குமா என்று தான் அதிகம் பார்க்கின்றனர் அப்புறம் தான் திருமணம்... நீங்கள் சொல்வது போல் சாப்ட்வேர் இன்ஜினியர் 25வயதுக்குள் திருமணம் செய்பவர்கள் ஒரு 20 சதவீதம் பேர் தான் இருப்பர்...

    எடுத்துக்காட்டுக்கு நம் பதிவுலக நண்பர்களைப் பாருங்கள்... 25 வயதுக்கு மேல் நிறைய பேர் இன்னும் இருக்கின்றனர்...

    ReplyDelete
  4. வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

    இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

    இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

    "அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

    சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

    ***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****



    .

    ReplyDelete
  5. ரமேஷ் இது சத்தியமா உன் கதைன்னு தெரியாது... தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் வரிகளை சேர்த்திருப்பேன்...

    ReplyDelete
  6. வேலையில் உத்திரவாதம் இல்லாத நிலைமையும் இதற்க்கு ஒரு காரணம்... கல்யாணம் முடிந்தவுடன் வேலை போய் விட்டால் என்ன செய்வது என்று பலரும் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கலாம் அல்லவா?

    ReplyDelete
  7. இன்றைய நடைமுறை எதார்த்ததை சொல்லியிருக்கீங்க சங்கமேஷ்

    ReplyDelete
  8. திருமணங்கள் அந்தந்த காலக்கட்டத்தில் நடந்து விடுகிறது...

    சந்தர்ப்ப சூழ்நிலைகள், வசதி வாய்ப்பு, குடும்ப சூழல், வேலை போன்ற விஷயங்கள் திருமணத்தை தள்ளிப்போக வைக்கிறது...

    திருமண வயது தள்ளிப்போடப்படுவது தவறான விஷயம்தான் ஆனால் சந்தர்ப்பங்கள் அப்படி செய்ய தூண்டுகிறது...

    ReplyDelete
  9. பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாரிக்கலாம் ஆனால் வயது???????

    நிச்சயமாக விழிப்புணர்வு பதிவு .

    அடுத்து பெரும்பாலும் ஆண்பிள்ளைகளின் திருமண காலங்களை தள்ளி வைத்து பெற்றோர்கள் பெண்களுக்கு திருமணத்தை அவசரமாக நடத்த பார்கின்றனர் அவர்களுக்கு பார்க்கின்ற மாப்பிளைகளுக்கு முப்பது வயது கடந்து இருந்தால் இந்த மாப்பிள்ளைக்கு அதிக வயது ஒரு 25-28 வயதில் மாப்பிள்ளை பார்க்குமாறு கூறும் பெற்றோர்கள் தனது மகனிற்கு முப்பது வயது கடந்து செல்கின்றது என்பதை கவனிக்க மறுக்கின்றனர் .

    ReplyDelete
  10. perfect definition sir ., nice post

    ReplyDelete
  11. ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க. இன்றைய காலத்தில் குடும்பத்திற்காக, பணத்திற்காக பலரும் முதிர் கண்ணன்களாக இருக்கிறார்கள். அவர்கள் தன்னை பற்றியும் பார்க்க வேண்டும்.


    நம்ம தளத்தில்:
    எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு

    ReplyDelete
  12. அருமையான பதிவு.
    நன்கு யோசித்து எழுதப்பட்ட தற்கால நிலைமையை விளக்கும் பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. சரியான கருத்துக்களே! நான் என்னுடைய பேரனுடன் ஓர்குட் நண்பனாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.என் வயது 61 என் பேரன் வயது 12

    ReplyDelete
  14. சமூகத்தின் சுயநலமிக்க நகர்வுகளில் இதுவும் ஒன்று. நன்றாக சம்பாதித்தால் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் திருமணம் தள்ளித்தான் போகிறது. இதன் பாதிப்பு அடுத்த தலைமுறைகளில் தெரியும். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  15. you are absolutelly right. many youths are bold to love their class mates; co workers when marriage they expect their parents to find a girl with all "kudumbaponnus". Working woman is to be expected as life partner. But she has to be a best tamil kalachchaara ponnu . Girls parents expect a bhoom bhoom maadu maapillai who will lisiten to their daugther, no mamanaar, mamiyaar thollai, strictly no nathanaars. selfishness is the basic thumbrule nowadays which is destroying family institution in India

    ReplyDelete
  16. பெரும்பாலும் இவ்வாறுதான் போய்கொண்டிருக்கின்றது.

    ReplyDelete
  17. தற்போதைய காலகட்டத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளது உண்மைதான்...நம்மிடையே நிறைய பேர் இப்படிதான் இளமையை தொலைத்து விடுகிறார்கள்...தாமதமாக திருமணம் செய்து கொண்டு...மனைவியை நேசிக்க முடியாமல் பிள்ளையை நேசிக்க முடியாமல் அப்போதும் பணத்தின் பின்னே ஓடுகிறார்கள்...சரியான வயதில் திருமணம் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும்...ஆனால் ஒரு நன்மை இதிலும்.. மத்திம வயதில் திருமணம் செய்து கொள்வதால் ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெற்றுக்கொள்வதில்லை...

    ReplyDelete
  18. Arumai. Muthirkannangal athigamavathu Samuthaya theemaiyagave enakku padukirathu.
    TM 8.

    ReplyDelete
  19. இந்த செட்டில் என்பதற்கு எது வரைமுறை என்றே தெரியவில்லை. குழந்தையின்மைக்கு 30 வயது திருமணம் தான் மிக பெரிய காரணம்.செட்டில் ஆகி திருமணம் செய்து பிறகு குழந்தை இல்லாமல் இருந்து என்ன பயன்? இனியாவது 25 வயதிற்குள் கட்டாயம் திருமணம் செய்விப்போம்.இது தொடர்பா நான் எழுதிய பதிவு http://amuthakrish.blogspot.com/2010/11/blog-post_16.html

    ReplyDelete
  20. sariya thaan solli irukkinga.. nalla pathivu..

    ReplyDelete
  21. Kandippa indraya ilaingargal yosikka vediya vishayam.....

    Nalla padhivu...

    ReplyDelete
  22. good post 100% true

    ReplyDelete