Thursday, November 10, 2011

பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை...!


ஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது நல்லது....

1. `நாம கொஞ்சம் பேசணும்‘

உங்களவர், உலக சாம்பியன் வேகத்தில் ஓடி மறைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மேற்கண்ட மூன்று வார்த்தைகளைக் கூறினால் போதும்.
`ஏதோ பிரச்சினையைக் கிளப்பத் தான் அடி போடுகிறாள்’ என்று உணர்ந்துகொண்டு உடனடியாகத் தலைமறைவாகி விடு வார்.

`பேசுவது’ எல்லாம் கடைசியில் அழுகை, ஆத்திரம், தீர்வில்லாத நிலையில் தான் முடியும் என்று ஆண்களுக்குத் தெரியும்.

பெண்கள் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையை எப்படிக் கையாளுவது என்று ஆண்களுக்குத் தெரியாது. அப்போது கன்னாபின்னா வென்று நடக்கத் தொடங்கி விடுவார்கள்.
எதையும் மனந்திறந்து பேசித் தீர்க்க வேண்டும் என்பது கட்டுரைகளில் சரியாகத் தெரியலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவாக ஒத்து வராது.

2. `நீங்க அம்மா பையன்’
 
பெண்கள் தங்கள் துணைவருடன் உறவு சீர் கெட விரும்பினால், அவரின் அம்மாவை அடிக்கடி பேச்சில் இழுத்தால் போதும். `பாருங்கஸ உங்க அம்மா இப்படிப் பண்றாங்க’, `உங்க அம்மா எப்போதும் அப்படித்தான்’ என்றெல்லாம் சொல்வதை எந்த ஆணும் விரும்புவ தில்லை.

பெண்களுக்கு எப்படித் தங்கள் அம்மாவைப் பிடிக்குமோ, அப்படித்தான் ஆண் களுக்கும் தங்கள் அம்மாவைப் பிடிக்கும். அதனால் அம்மாவைக் குறை சொல்வதை அவர்கள் ரசிப்பதில்லை. அதேபோல, `நீங்க அம்மா பிள்ளைஸ உங்க அம்மா சொல்றது தான் உங்களுக்கு வேத வாக்கு’ என்று கூறுவதையும் விரும்புவதில்லை.

பெண்கள் தங்களைத் தமது கணவர் அல்லது காதலரின் அம்மாவுடன் தராசுத் தட்டில் நிறுத்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான அணுகுமுறையில் நடந்துகொள்ள வேண்டும். அது, பெண்கள் தாங்கள் அம்மாவாகும்போது உதவும்.

3. `உங்க நண்பரைப் பாருங்க’

 `உங்க நண்பரைப் பாருங்க... எவ்வளவு ஸ்டைலா இருக்காரு! நீங்களுந்தான் இருக்கீங்களே, தொந்தியும் தொப்பையுமாஸ’ என்று பேசும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் துணைவருடான உறவுக்குக்குத் தாங்களே வேட்டு வைப்பவர்கள்.

இப்படி பேசத் தொடங்குவது, `அப்படின்னா நீ `அவனை’யே காதலிச்சிருக்கலாம்’ அல்லது, `நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கலாம்’ என்ற வெறுப்பான கத்தலில் தான் முடியும்.

பெண்கள் தங்கள் கணவரின் அல்லது துணைவரின் நண்பரிடம் வெளிப்படை யாகக் காணாத பல குறைபாடுகள் இருக்கக்கூடும்.

கண்ணில் தெரிவதை மட்டும் கண்டு, வியப்பது அறிவீனம். பெண்கள் எப்படித் தங்களை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லையோ, அதேபோலத்தான் ஆண்களும் என்று உணர வேண்டும்.

4. 'நீங்க எப்பவும் இப்படித்தான்...'

திருந்தவே மாட்டீங்க’ முத்திரை குத்தப்படுவதை ஆண்கள் விரும்புவதில்லை. அதிலும் அவர்களே தங்களிடம் இருந்து துறக்க விரும்பும் பழக்கங்களை, குறைபாடுகளை அடிக்கடி குத்திக்காட்டுவதை தாங்குவதே இல்லை.

ஒருவரைப் பற்றி, `இவர் இப்படித்தான்’ என்று வெகு சீக்கிரமாக முடிவு கட்டிவிடுவது பெண்களின் குறைபாடு. எல்லாருமே தவறு செய்வது இயல்பு. சிலருக்கு இயல்பாகவே சில தவறுகள் சிலமுறை நேர்ந்துவிடும்.
அதுகுறித்து அந்த ஆணே வருத்தத்தில், குற்ற உணர்வில் இருப்பார். அப்போது, ஆறுதலாக இருப்பதுதான் பெண் துணையின் மீதான மதிப்பை ஆணுக்கு உயர்த்தும்.

மாறாக, நொந்த வேளையில் `லந்து’ செய்வது வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். `இப்பல்லாம்ஸ’ என்ற வார்த்தையையும் தவிர்க்கலாம். `இப்பல்லாம் நீங்க முன்ன மாதிரி அன்பாயில்லஸ’ என்று மூக்கைச் சிந்துவதால் பயனில்லை.

5. `தலையெல்லாம் நரைச்சுப் போச்சு’

மத்திய வயதை நெருங்கும் ஆண்களுக்கு தலையில் நரைமுடிகள் தலைகாட்டத் தொடங்குமனூ. அவற்றை `இளநரை’ என்றெண்ணிச் சமாதானம் அடைவது ஆண்களின் வழக்கம். அதுகுறித்து அதிகம் சுட்டிக்காட்டுவதும், `உடனே சலூனுக்கு ஓடிப்போய் `டை’ அடிச்சுட்டு வாங்க’ என்று நெட்டித் தள்ளுவதும் ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

`கல்யாணத்துக்கு முன்னால கொடியிடையா இருந்தேஸ இப்போ தடியிடையா ஆயிட்டேஸ’ என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வருமில்லையா....?!

sourse: http://www.nidur.info

23 comments:

  1. நல்லா அனுபவிச்சி போட்டிருக்கீங்க போல...

    ReplyDelete
  2. இளமை மாறாமல் இருக்க விரும்புகிறோம்...

    எங்க நடக்குது...

    ReplyDelete
  3. ஆகா... நிச்சயம் சொந்த அனுபவமும் இருக்க வேண்டும் சங்கவி சார். நானும் மனைவியர் கோணத்தில் அடுத்த வாரம் இதைப் பற்றிய பதிவு எழுத எண்ணியிருக்கிறேன். எனக்கும் இந்த விஷயங்களை அனுபவித்த தாக்கம் உண்டு. அழகாகச் சொல்லியிருக்கீங்க... நன்றி.

    ReplyDelete
  4. மாப்ள நல்லா சொல்லி இருக்கீங்க..

    இதுக்கெல்லாம் அனுபவம் தேவையா என்ன?

    ReplyDelete
  5. உங்க மனைவி ப்ளாக் படிப்பது இல்லையா ? :))

    ReplyDelete
  6. அடுத்து??? மனைவிகளுக்குப் பிடிக்காத தலைப்புகளா???

    ReplyDelete
  7. அட...
    சரியாத்தான் சொல்லியிருகீங்க.....

    ReplyDelete
  8. நல்லா வாங்கி கட்டினது மாதிரி தெரியுதே மக்கா நல்லா அனுபவிச்சி உணர்ந்து எழுதுனாப்ல இருக்கே...!!!

    ReplyDelete
  9. சங்கவி,

    ”கீதா”ச்சாரம் (அட அந்த கீதா-வை சொல்லலை சாமீய்) தொகுத்திருக்கீங்களே!

    அருமை மக்கா.

    ReplyDelete
  10. ஹாஹாஹா அனுபவ பதிவு போல இருக்கு சங்கவி..:)

    ReplyDelete
  11. நல்லாயிருக்கே.... ஒவ்வொர் விஷயமும் அருமை... கண்டிப்பாக நாவை அடக்கினால் குடும்ப வாழ்க்கை சுகம் பெறும்

    ReplyDelete
  12. அட... எல்லா இடத்திலேயேயும் இப்படித்தான் என்பதை உணர்த்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  13. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அருமை. நான் இதை எத்தனை தோழிகளுக்கு அனுப்பணும்னு கணக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. சரியா சொன்னிங்க ... உங்களைப்போலவே! எனக்கும் கூட பொறுந்துகிறது.

    ReplyDelete
  16. செம அனுபவம் போலிருக்கு, தல விட்டு தள்ளு தல, அவங்களும் காது கொடுத்து கேட்க்க போவதில்லை அப்புறம் என் இதெல்லாம் வெளிச்சம் போட்டு காட்டிகிட்டு

    ReplyDelete
  17. நல்லா சொல்லிருக்கிங்க . இதே மாதிரி பசங்க (நோட்:கல்யாணத்துக்கு முன்னால ) எந்த விசயமெல்லாம் லவர் அல்லது
    கேர்ள் பிரன்ட் கிட்ட சொல்ல கூடாதுன்னு ஒரு பதிவ போடுங்க.எங்களுக்கு ரொம்ப உதவும் ...

    ReplyDelete
  18. நண்பா அப்போ ....எப்படி பெண்கள் கணவரிடம் பேச வேண்டும். அடுத்த பதிவா?

    ReplyDelete
  19. அனுபவமான்னு கேட்க ஆசைதான்...ஆனா கேக்கல...
    நிறைய பெண்மணிகள் புரிஞ்சுப்பாங்க...
    பெரும்பாலான கணவன்களின் ஒட்டுமொத்த ஆதரவு கண்டிப்பா இருக்கும்...

    ReplyDelete
  20. பெண்களிடம் ஆண்கள் விரும்பாதைவையும்,ஆண்களிடம் பெண்கள் விரும்பாதவையும் நிறைந்து இருக்கிற சமூகத்தில் வாழ்க்கை ஒரு வித அட்ஜஸ்ட்மெண்டில்தான் ஓடுகிறது.அப்படித்தான் ஓடமுடியும் என நினைக்கிறேன்.

    ReplyDelete