Tuesday, November 8, 2011

சொகுசு பேருந்தும் விபத்துக்களும்...

பவானி சித்தோட்டில் நடந்த விபத்தில் ஓட்டுநர் எரிந்து சாம்பலாக உள்ளார்

சமீபகாலாமாக விபத்துக்களை கேட்கும் போதே கண்ணீரில் நீர் வருகிறது அந்த அளவிற்கு விபத்துக்கள் நடந்து கொண்டு இருக்கின்றது. இதற்கு முன் விபத்துக்கள் எல்லாம் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதல் என்றும் சாலையோர மரத்தில் மோதியது என்றும் தான் அதிகம் நடந்து கொண்டு இருந்தது. நான்கு வழிச்சாலையாக மாறினால் விபத்துக்கள் குறையும் என்று தான் நினைத்தோம்.

தற்போது நான்குவழிச்சாலையில் நடக்கும் விபத்துக்கள் எல்லாம் காதில் கேட்கும் போதே கண்ணீரை வரவழைக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அரக்கோணம் அருகே நடந்த விபத்துத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்து பலர் உயிர் இழந்தனர்.

ஒரு வாரத்திற்கு முன் சேலத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தில் டிவிடி ப்ளேயரில் பாட்டுக்களை மாற்றி கொண்டு வந்தவரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு சிலர் உயிரிழந்தனர்.

சில நாட்களுக்கு முன் பவானி சித்தோடு அருகே தனியார் சொகுசு பேருந்து முன்னால் சென்று கொண்டு இருந்த பெட்ரோல் டேங்கர் லாரியை ஓவர் டேக் செய்ய முயன்றபோது லாரியின் பின் பகுதியில் இடுத்து டேங்கர் லாரி ஓட்டையாகி அதில் இருந்த பெட்ரோல் பேருந்து மேல் கொட்டு தீப்பிடித்து பலர் உயிரிழந்தனர் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். இச்செய்தியை உள்ளுர் பத்திரிக்கைகளில் படங்களுடன் செய்தியை படிக்கும் போது நம்மையும் அறியாமல் மனது அடித்துக்கொள்கிறது.


பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படும்போது இரு வண்டிகளில் ஒருவர் மேல் தவறு இருக்கும் என்போம் ஆனால் இந்த மூன்று விபத்துக்களையும் பார்க்கும் போது முற்றிலும் ஓட்டுநரின் தவறால் நடந்தவை என்பதை யாரும் மறுக்க இயலாது.

நான்கு வழிச்சாலையில் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிககுறைவு தேர்ச்சியான ஓட்டுநர் ஓட்டும் போது. ஆனால் இந்த விபத்துகளின் ஓட்டுநரின் வயதைப்பார்த்தால் 30க்குள் தான் வருகிறது. 80 கிலோமீட்டர் போகும் பேருந்தை 110 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டும்போது எதாவது ஒருநாள் ஓட்டுநர் தவறு செய்யும் போது பெரும் விபத்தை தவிர்க்க இயலாது.

சாதாரண பேருந்தை விட படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகும் போது அதிக உயிர் சேதம் ஆகின்றது. சொகுசு பேருந்துகளில் ஒரு கதவு மட்டுமே இருக்கிறது இதுவும் ஆட்டோமேடிக் முறையில் உள்ளதால் இதன் சுவிட்ச் ஓட்டுநரிடம் இருக்கும் அவர் நினைத்தால் மட்டுமே கதவை திறக்க இயலும் மேலும் இது குளிர்சாதன பேருந்தாக இருப்பாதால் காற்று புகாதவாறு வடிவமைத்து இருப்பர் அவசர உதவிக்கு சிறு கதவு மட்டுமே இருக்கும் இதனால் எந்த பயனும் இருக்காது. இவ்வாறு இருக்கும் பேருந்துகள் பயணத்திற்கு சொகுசாக இருக்கலாம் விபத்து வந்தால் உயிருக்கு மிக ஆபத்துதான்.

உலகிலேயே அதிகூடிய விபத்துக்கள் இடம்பெறும் நாடாக சீனா பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அந்நாட்டில் கடுமையான சட்ட திட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டதையடுத்து தற்போது இந்தியாவே அதிகளவு விபத்துக்கள் இடம்பெறும் நாடு என்ற ஸ்தானத்தை அடைந்துள்ளது.

இந்த விபத்துக்கள் அனைத்துக்கும் மிக முக்கிய காரணம் சாலைவிதிகளை மதிக்காத ஓட்டுநர்கள் தான். இந்த நான்கு வழிச்சாலைகளில் வாகனங்களின் குறைந்த பட்ச வேகமே மணிக்கு 75 முதல் 130 கி.மீ என்ற அளவில் இருக்கிறது. இந்தப் பாதைகளில் வாகனங்களின் வேகமாக செல்கின்றன என்பதை விட பேருந்துகள் பறக்கின்றன என்றால் அது மிகையாகது.

கனரக வாகனங்கள் சாலை ஓரம் நின்று கொண்டு இருக்கும்போது வேகமாக வரும் வாகன ஓட்டியால் அந்த வாகனம் நிற்கிறதா செல்கிறதா என்று யோசித்து முடிக்கையில் விபத்து ஏற்பட்டு விடுகிறது. சுங்கவரி வசூலிப்பதில் இருக்கும் ஆர்வம் துளி கூட விபத்தை எப்படி தவிர்ப்பது என்பதில் இல்லை.

நான்கு வழிச்சாலை அமைக்கும் போது வாகனங்கள் ஓய்வெடுக்க தனியாக இடம் அமைக்க வேண்டும், வழியில் பாத்ரூமிற்கு செல்ல வேண்டி வரும் அதற்காக குறிப்பிட்ட கிலோமீட்டர் இடைவெளியில் தரமான கழிப்பிட வசதி செய்து தரவேண்டும். அப்போது கண்ட இடத்தில் வாகனங்கள் ஓரம்கட்டி நிற்க வாய்ப்பில்லை.

சாலைவிபத்துக்களை தவிர்க்க ஓட்டுருக்கு நிறைய பயிற்சி அளிக்க வேண்டும் குறிப்பிட்ட வேகத்தை தாண்டி அதிக வேகமாக ஓட்டும் ஓட்டுநருக்கு தடை விதிக்க வேண்டும்.

நல்ல அனுபவம் உள்ள ஓட்டுநர்களையே சொகுசு பேருந்துக்கு ஓட்டுநராக அனுப்ப வேண்டும்.

ஓட்டுநர் ஒருவர் விபத்தை ஏற்படுத்தி விட்டரெனில் அவரின் லைசென்ஸ் குறிப்பிட்ட காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும்.

அதிகவேக வாகனங்களை அதிகாரிகள் கவனித்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்..

இதுவரை நடந்த சாலை விபத்துக்களை கணக்கிட்டு ஏன் நடந்தது என்பதை ஆராய்ந்து இனி இந்த தவறு வராமல் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று ஓட்டுநருக்கு பாடம் எடுக்க வேண்டும்.

இந்த மாதிரி செய்தால் ஓரளவிற்கு விபத்தை தவிர்க்க இயலும்...

என்னதான் பதிவெழுதி, போராட்டம் நடத்தி, ஊர்வலம் சென்று சாலை விதிகளை கவனியுங்கள் என்றாலும் ஓட்டுநர்கள் அதிகம் கேட்கமாட்டார்கள் ஏனெனில் வாகன உரிமையாளர் இந்த நேரத்துக்கு இங்க இருக்கனும் அங்க இருக்கனும் என்று கட்டாயப்படுத்துவர் யாராவது பிடித்தால் என் பேரைச் சொல்லு நான் பார்த்துக்கிறேன் என்று தைரியம் சொல்வார்கள். இவர்கள் சம்பாரிப்பதற்கு நம்பி வரும் தொழிலாளியும், வாடிக்கையரும் உயிரை இழக்க வேண்டி இருக்கிறது...

நிச்சயம் சாலை விபத்து தொடர்கதைதான் இதற்கு முடிவெழுதுவது என்பது கஷ்டமே....

நம் உயிருக்கு நாம் தான் பாதுகாப்பு...

முடிந்தவரை நாம் சாலைவிதிகளை மதித்து பின்பற்றுவோம்...

20 comments:

  1. சங்கவி சார்... முன்னால் செல்லும் பேருந்து நிற்கிறதென்றால் தானும் வண்டியை நிறுத்தி பொறுமையாகச் செல்லாமல் சைடில் சென்று தான் மட்டும் முந்திவிட வேண்டும் என நினைக்கும் மடையர்கள் நிறையப் பேரைக் பார்க்கிறேன். இது மாதிரி மனோபாவம்தான் விபத்துக்கு பெரும்பான்மை காரணம் என்பது என் கருத்து. சாலை விதிகளை கற்பு போல மதிக்க வேண்டும் என்பதிலும் எனக்கு உடன்பாடே. நன்றி.

    ReplyDelete
  2. அவசரமும் கவனக்குறைவுகளுமே இந்த மாதிரி விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணம். எல்லோரும் இதே மாதிரிதான் வாகனம் ஓட்டுகிறார்கள்.

    சமீபத்தில் மலேசியா சென்றிருந்தபோது கவனித்தேன். அங்குள்ள எந்த வாகனத்திலும் எந்த விதமான கீறல்களோ ஒடுக்குகளோ இல்லை. வாகனங்களை அவ்வளவு லாவகமாகக் கையாளுகிறார்கள்.

    ReplyDelete
  3. //முடிந்தவரை நாம் சாலைவிதிகளை மதித்து பின்பற்றுவோம்...//

    முடிந்தவரை அல்ல, கண்டிப்பாக 100% சதவீதம் பின்பற்ற வேண்டும்...

    அதில் தன்னுயிரும், மற்ற பல உயிர்களும் அடங்கும் போது....

    ReplyDelete
  4. நான்கு வழி சாலையில் குருட்டு நம்பிக்கையில் (ஒரே ரோட் தானே... எவன் குறுக்க வந்துட போறான்?ன்னு நெனைப்புல) கவனத்தை திசை திருப்புவதால் இப்போது அதிக விபத்துக்கள் நடந்தேறி வருகிறது.

    //
    நான்கு வழிச்சாலை அமைக்கும் போது வாகனங்கள் ஓய்வெடுக்க தனியாக இடம் அமைக்க வேண்டும், //
    அங்காங்கே பெட்ரோல் பங்க் இருக்கே? அதுவும் இல்லைன்னா நிறைய சாலையோர கடைகளில் வண்டி நிப்பாட்ட போதுமான வசதி இருக்கு. அத விட்டுட்டு ஓரத்துல நிப்பாட்டுரோம்ங்குற பேர்ல பாதி விபத்துக்கு காரணம் ஆகுறாங்க. அதுவும் நைட்ல எந்த ஓரத்துல எந்த வண்டி நிக்குதுன்னே தெரிய மாட்டேங்குது?! இந்த லட்சணத்துல தான் இவிங்களும் சுங்க வரி வாங்குறாய்ங்க.


    ஒவ்வொரு குறிப்பிட்ட கிலோ மீட்டருக்கும் கண்காணிப்பு காமிரா வைத்து அதிகமான வேகத்தில் போகக்கூடிய வாகனங்களை உடனே அடுத்த செக்போஸ்ட்டில்/டோல்கேட்டில் வழிமறித்து அப்போதே தண்டனை கொடுக்க வேண்டும். இதையெல்லாம் நம் இந்திய அரசு செய்யுமாங்குறது ரொம்ம்ம்ம்ம்ம்ம்பவே சந்தேகம் தான்!

    அருமையான விழிப்புணர்வு கட்டுரை
    வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  5. இப்போதுதான் ஒரு திரைப்படத்தில் விபத்து நடக்கும்
    காட்சியைப் பார்த்தேன். உள்ளம் நடுங்குகிறது.
    இரவில் பயணம், குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, பேருந்தைப் பராமரிக்காமல்
    இருப்பது இப்படி எத்தனையோ காரணங்கள்.
    எல்லாவற்றையும் மிஞ்சுவது இந்த ஓவர்டேக்கிங் தான்.
    இங்கென்று இல்லை பெண் இருக்கும் ஊரிலும், குடித்துவிட்டு வண்டி ஓட்டும் பெண்களே இருக்கிறார்கள்.
    அதற்காகவே இவர்கள் மிக மிகக் கவனமாக இருப்பார்கள். தெய்வம் தான் துணை.

    ReplyDelete
  6. ஏ விபத்தே உனக்கு ஒரு விபத்து வராதா...???

    ReplyDelete
  7. உங்கள் அக்கறைக்கு நன்றி சங்கவி...

    ReplyDelete
  8. நம்ம நாட்டிற்க்கு, இருக்கும் ட்ராபிக்கு 75 to 130 Km per hour வேகம் என்பது மிக அதிகம், வேகம் 60‍ km per hour க்குள் இருக்க வேண்டும், போதும்.

    ReplyDelete
  9. //என்னதான் பதிவெழுதி, போராட்டம் நடத்தி, ஊர்வலம் சென்று சாலை விதிகளை கவனியுங்கள் என்றாலும் ஓட்டுநர்கள் அதிகம் கேட்கமாட்டார்கள் ஏனெனில் வாகன உரிமையாளர் இந்த நேரத்துக்கு இங்க இருக்கனும் அங்க இருக்கனும் என்று கட்டாயப்படுத்துவர் யாராவது பிடித்தால் என் பேரைச் சொல்லு நான் பார்த்துக்கிறேன் என்று தைரியம் சொல்வார்கள். இவர்கள் சம்பாரிப்பதற்கு நம்பி வரும் தொழிலாளியும், வாடிக்கையரும் உயிரை இழக்க வேண்டி இருக்கிறது...//
    மிகச் சரியாகச் சொல்லியிருக்கீங்க!

    ReplyDelete
  10. சொகுசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது வேண்டுமானால் இப்போது அதிகரித்திருக்கலாம். ஆனால், நெடுஞ்சாலைகளில் தினமும் ஒரு சில விபத்துக்காட்சிகளைக் காணாமல் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. புறவழிச்சாலை என்றாலே, அதிவேகமாகச் செல்ல போடப்பட்டவை என்ற தவறான எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.

    ReplyDelete
  11. ஓட்டுனர் அவரை நம்பி இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு ஓட்ட வேண்டும்.

    ReplyDelete
  12. என்னதான் சட்டத்திட்டங்கள் இருந்தாலும் எங்களுக்கு நாங்கள் பயப்பட்டால் மட்டுமே விபத்துக்களைத் தவிர்க்கமுடியும் !

    ReplyDelete
  13. பேருந்து ஓட்டுனர் டிவிடியில் எங்கேயும் எப்போதும் படத்தை பார்த்துக்கொண்டே ஓட்டியிருப்பார் போல...

    ReplyDelete
  14. வேகம்..பொறுமை.. நிதானம். இதுகளைக் கட்டுப்பாட்டுல வெச்சுக்கிட்டாலே விபத்துகளைத் தவிர்க்கலாம்.

    ReplyDelete
  15. சுயகட்டுப்பாடும் வாகனத்தின் கட்டுப்பாட்டு அறிவும் மிக முக்கியம். வேகமாகப் போவதில் பெருமையில்லை. பாதுகாப்பாகப் போவதில்தான் பெருமை. நல்ல பதிவு.

    ReplyDelete
  16. நல்ல பதிவு.
    பேருந்து இயக்குபவர்களும், மக்களும் சட்ட திட்டங்களுக்கு உட்பட வேண்டும், ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எல்லாம் லஞ்சம் என்பதால் விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. கடைசியில் பலியாவது மக்கள் தான்.

    ReplyDelete
  17. //இந்த நான்கு வழிச்சாலைகளில் வாகனங்களின் குறைந்த பட்ச வேகமே மணிக்கு 75 முதல் 130 கி.மீ என்ற அளவில் இருக்கிறது. //

    very few Indian highways having maximum speed limit of 100kmph and most of our four lane highways are having maximum 80kmph only.

    most of the accidents are happening because of avoiding the traffic rules, experienced drivers are ok with the rules and young drivers, city bus driver never follow rules.

    stopping lorries in the side of road, coming in opposite lane are major issue in our highway. even if you put 8 lane highway accidents will happen here. our highways are not world class, many places road damages are not been rectified, no proper markings available.

    ReplyDelete