Showing posts with label விபத்து. Show all posts
Showing posts with label விபத்து. Show all posts

Tuesday, November 8, 2011

சொகுசு பேருந்தும் விபத்துக்களும்...

பவானி சித்தோட்டில் நடந்த விபத்தில் ஓட்டுநர் எரிந்து சாம்பலாக உள்ளார்

சமீபகாலாமாக விபத்துக்களை கேட்கும் போதே கண்ணீரில் நீர் வருகிறது அந்த அளவிற்கு விபத்துக்கள் நடந்து கொண்டு இருக்கின்றது. இதற்கு முன் விபத்துக்கள் எல்லாம் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதல் என்றும் சாலையோர மரத்தில் மோதியது என்றும் தான் அதிகம் நடந்து கொண்டு இருந்தது. நான்கு வழிச்சாலையாக மாறினால் விபத்துக்கள் குறையும் என்று தான் நினைத்தோம்.

தற்போது நான்குவழிச்சாலையில் நடக்கும் விபத்துக்கள் எல்லாம் காதில் கேட்கும் போதே கண்ணீரை வரவழைக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அரக்கோணம் அருகே நடந்த விபத்துத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்து பலர் உயிர் இழந்தனர்.

ஒரு வாரத்திற்கு முன் சேலத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தில் டிவிடி ப்ளேயரில் பாட்டுக்களை மாற்றி கொண்டு வந்தவரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு சிலர் உயிரிழந்தனர்.

சில நாட்களுக்கு முன் பவானி சித்தோடு அருகே தனியார் சொகுசு பேருந்து முன்னால் சென்று கொண்டு இருந்த பெட்ரோல் டேங்கர் லாரியை ஓவர் டேக் செய்ய முயன்றபோது லாரியின் பின் பகுதியில் இடுத்து டேங்கர் லாரி ஓட்டையாகி அதில் இருந்த பெட்ரோல் பேருந்து மேல் கொட்டு தீப்பிடித்து பலர் உயிரிழந்தனர் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். இச்செய்தியை உள்ளுர் பத்திரிக்கைகளில் படங்களுடன் செய்தியை படிக்கும் போது நம்மையும் அறியாமல் மனது அடித்துக்கொள்கிறது.


பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படும்போது இரு வண்டிகளில் ஒருவர் மேல் தவறு இருக்கும் என்போம் ஆனால் இந்த மூன்று விபத்துக்களையும் பார்க்கும் போது முற்றிலும் ஓட்டுநரின் தவறால் நடந்தவை என்பதை யாரும் மறுக்க இயலாது.

நான்கு வழிச்சாலையில் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிககுறைவு தேர்ச்சியான ஓட்டுநர் ஓட்டும் போது. ஆனால் இந்த விபத்துகளின் ஓட்டுநரின் வயதைப்பார்த்தால் 30க்குள் தான் வருகிறது. 80 கிலோமீட்டர் போகும் பேருந்தை 110 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டும்போது எதாவது ஒருநாள் ஓட்டுநர் தவறு செய்யும் போது பெரும் விபத்தை தவிர்க்க இயலாது.

சாதாரண பேருந்தை விட படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகும் போது அதிக உயிர் சேதம் ஆகின்றது. சொகுசு பேருந்துகளில் ஒரு கதவு மட்டுமே இருக்கிறது இதுவும் ஆட்டோமேடிக் முறையில் உள்ளதால் இதன் சுவிட்ச் ஓட்டுநரிடம் இருக்கும் அவர் நினைத்தால் மட்டுமே கதவை திறக்க இயலும் மேலும் இது குளிர்சாதன பேருந்தாக இருப்பாதால் காற்று புகாதவாறு வடிவமைத்து இருப்பர் அவசர உதவிக்கு சிறு கதவு மட்டுமே இருக்கும் இதனால் எந்த பயனும் இருக்காது. இவ்வாறு இருக்கும் பேருந்துகள் பயணத்திற்கு சொகுசாக இருக்கலாம் விபத்து வந்தால் உயிருக்கு மிக ஆபத்துதான்.

உலகிலேயே அதிகூடிய விபத்துக்கள் இடம்பெறும் நாடாக சீனா பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அந்நாட்டில் கடுமையான சட்ட திட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டதையடுத்து தற்போது இந்தியாவே அதிகளவு விபத்துக்கள் இடம்பெறும் நாடு என்ற ஸ்தானத்தை அடைந்துள்ளது.

இந்த விபத்துக்கள் அனைத்துக்கும் மிக முக்கிய காரணம் சாலைவிதிகளை மதிக்காத ஓட்டுநர்கள் தான். இந்த நான்கு வழிச்சாலைகளில் வாகனங்களின் குறைந்த பட்ச வேகமே மணிக்கு 75 முதல் 130 கி.மீ என்ற அளவில் இருக்கிறது. இந்தப் பாதைகளில் வாகனங்களின் வேகமாக செல்கின்றன என்பதை விட பேருந்துகள் பறக்கின்றன என்றால் அது மிகையாகது.

கனரக வாகனங்கள் சாலை ஓரம் நின்று கொண்டு இருக்கும்போது வேகமாக வரும் வாகன ஓட்டியால் அந்த வாகனம் நிற்கிறதா செல்கிறதா என்று யோசித்து முடிக்கையில் விபத்து ஏற்பட்டு விடுகிறது. சுங்கவரி வசூலிப்பதில் இருக்கும் ஆர்வம் துளி கூட விபத்தை எப்படி தவிர்ப்பது என்பதில் இல்லை.

நான்கு வழிச்சாலை அமைக்கும் போது வாகனங்கள் ஓய்வெடுக்க தனியாக இடம் அமைக்க வேண்டும், வழியில் பாத்ரூமிற்கு செல்ல வேண்டி வரும் அதற்காக குறிப்பிட்ட கிலோமீட்டர் இடைவெளியில் தரமான கழிப்பிட வசதி செய்து தரவேண்டும். அப்போது கண்ட இடத்தில் வாகனங்கள் ஓரம்கட்டி நிற்க வாய்ப்பில்லை.

சாலைவிபத்துக்களை தவிர்க்க ஓட்டுருக்கு நிறைய பயிற்சி அளிக்க வேண்டும் குறிப்பிட்ட வேகத்தை தாண்டி அதிக வேகமாக ஓட்டும் ஓட்டுநருக்கு தடை விதிக்க வேண்டும்.

நல்ல அனுபவம் உள்ள ஓட்டுநர்களையே சொகுசு பேருந்துக்கு ஓட்டுநராக அனுப்ப வேண்டும்.

ஓட்டுநர் ஒருவர் விபத்தை ஏற்படுத்தி விட்டரெனில் அவரின் லைசென்ஸ் குறிப்பிட்ட காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும்.

அதிகவேக வாகனங்களை அதிகாரிகள் கவனித்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்..

இதுவரை நடந்த சாலை விபத்துக்களை கணக்கிட்டு ஏன் நடந்தது என்பதை ஆராய்ந்து இனி இந்த தவறு வராமல் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று ஓட்டுநருக்கு பாடம் எடுக்க வேண்டும்.

இந்த மாதிரி செய்தால் ஓரளவிற்கு விபத்தை தவிர்க்க இயலும்...

என்னதான் பதிவெழுதி, போராட்டம் நடத்தி, ஊர்வலம் சென்று சாலை விதிகளை கவனியுங்கள் என்றாலும் ஓட்டுநர்கள் அதிகம் கேட்கமாட்டார்கள் ஏனெனில் வாகன உரிமையாளர் இந்த நேரத்துக்கு இங்க இருக்கனும் அங்க இருக்கனும் என்று கட்டாயப்படுத்துவர் யாராவது பிடித்தால் என் பேரைச் சொல்லு நான் பார்த்துக்கிறேன் என்று தைரியம் சொல்வார்கள். இவர்கள் சம்பாரிப்பதற்கு நம்பி வரும் தொழிலாளியும், வாடிக்கையரும் உயிரை இழக்க வேண்டி இருக்கிறது...

நிச்சயம் சாலை விபத்து தொடர்கதைதான் இதற்கு முடிவெழுதுவது என்பது கஷ்டமே....

நம் உயிருக்கு நாம் தான் பாதுகாப்பு...

முடிந்தவரை நாம் சாலைவிதிகளை மதித்து பின்பற்றுவோம்...