Thursday, November 25, 2010

பீகார் கற்றுக்கொடுத்த பாடம்

பீகார் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலம், சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்றால் அனைவரும் எடுத்துக்காட்டாக கூறுவது பீகாரைத்தான், கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை என அனைத்தும் நடந்த மாநிலம் என்றால் பீகாரைத்தான் கூறுவோம். இது எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது ஆனால் பீகாரில் அதிகமாக நடக்கிறது. பொருளாதாரம், தொழில், வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் பின்தங்கியே இருந்தது.

இன்று இந்தியாவே திரும்பி பார்க்கிற மாநிலமாக உருவாகிக்கொண்டு இருக்கிறது பீகார். அதற்கு காரணம் தற்போது நடந்த தேர்தல். லாலு, பஸ்வான் ஒரு கூட்டணி, ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பிஜேபி ஒரு கூட்டணி, காங்கிரஸ் தனியாக நின்றது. இம்மும்முனை போட்டியில் யாருக்கு வெற்றி என்று பலத்த போட்டி இருந்தது.

லாலு, பஸ்வான் தனது ஜாதி ஓட்டுக்களையும் குடும்பத்தையும், பணபலத்தையும் நம்பி களம் இறங்கனர், காங்கிரஸ் வளரும் தலைவர் ராகுலின் மக்களை ஈர்க்கும் சக்தி, வித்தியாசமான வியூகம் என புது தெம்போடு அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து பம்பரமாக சுழன்றார். அவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்து தனி மெஜாரிட்டியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று கூறினர். ஜனதா தளமும், பாஜகவும் மக்களுக்கான பல நல்ல திட்டங்களை ஏற்கனவே நிறைவேற்றி உள்ளோம், மேலும் அத்திட்டத்தை செயல்பட முனைவோம் என்று அவர்கள் மக்களுக்கான திட்டத்தை முன்னிறுத்தி களம் இறங்கினர்.

வெற்றி மக்களுக்கான திட்டத்திற்கே இதற்கு முக்கிய காரணம் நிதீஷ்குமார். பீகார் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் நிதீஷ். இவரது வெற்றி ரகசியத்தை ஒரே வரியில் சொல்லி விடலாம். மக்கள் நலனை மட்டுமே மனதில் கொண்டு செயல்பட்டதே அவருடைய வெற்றிக்கு காரணம்.

2005-ம் ஆண்டு முதல்- மந்திரியான நிதீஷ் குமார் பீகாரை எந்தெந்த முறைகளில் முன்னேற்ற வேண்டும் என்று சிந்தித்தார். நாட்டிலேயே பீகார்தான் பின்தங்கிய மாநிலமாக இருந்தது. சட்டம்- ஒழுங்கு என்பது அங்கு அறவே கிடையாது. அரசு திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக செல்ல முடியாத நிலைமை இருந்தது. மிக முக்கியமாக சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமே இங்கு சரியில்லை  இதை தெரிந்து கொண்ட நிதீஷ்குமார் இக்குறைகளை போக்க முன்னுரிமை எடுத்து செயல்பட்டார்.

இவரது ஆட்சியில் ரவுடிகள், சமூக விரோதிகள் ஒடுக்கப்பட்டனர். சட்டம்- ஒழுங்கு சீராகி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிட செய்தார். குடிநீர் திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தார். ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் குறையில்லாமல் கிடைக்க உறுதி செய்தார்.

படிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் காலியாக கிடந்த 1 லட்சம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினார். மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வர எளிதாக வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி கிடைக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகளை மேம்படுத்தினார். காலியாக இருந்த டாக்டர் பணியிடங்களை நிரப்பினார்.

நாட்டிலேயே முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். இவரிடம் எந்த அரசியல் பந்தாவும் இல்லை. எப்ப வேண்டுமானலும் யார் வேண்டுமானலும் சந்திக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி இருந்தார் இது மக்களை கவர்ந்த ஒன்று.
இவரின் அற்புத நடவடிக்கையால் பீகார் இன்று பின்தங்கிய நிலையில் இருந்து முன்னேற்றப்பாதை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் இவரது திட்டங்களும் செயல்படுத்தியி விதமும்.

பீகார் மக்களைப் பொறுத்த வரை பணம் கூடிய கூட்டம் இவைகளை எல்லாம் நம்பாமல் அவர்கள் முன்னேற்றத்திற்கு யார் உதவுகிறார்கள் என்று பார்த்து ஓட்டுப்போட்டுள்ளனர். இது பீகாருக்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் தான்.

பீகார் வெற்றி அடுத்து வரும் மாநிலங்களுக்கு கிலி ஏற்படுத்து உள்ளது. திட்டம் தீட்டுவது பெரிதல்ல அது எப்படி மக்களை சென்றடைவது என்று பார்க்க வேண்டும். ஏழைகள் வீட்டுக்கு சென்று அவர்களுடன் உணவு அருந்தி தோள் மேல் கை போட்டு சென்றால் பத்தாது அதற்கு பதில் அவர்கள் குடி இருக்கும் வீட்டிற்கு சாலை, தண்ணீர், மின்சார வசதி செய்து கொடுத்தால் ஓட்டு தானாக விழும் என்பதற்கு பீகார் சாட்சி.

அதிகம் படிக்காத மக்களே இந்த அளவிற்கு சிந்தித்து வாக்களித்துள்ளார்கள் என்றால் படித்தவர்களும் சிந்திக்க வேண்டும். யார் நமக்கு நல்ல திட்டங்களை அளித்து அதை சரியாக செயல்படுத்துகிறார்களோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை அளிக்க வேண்டும்..

அப்பொழுதுதான் நாமும் நம் நாடும் முன்னேற்றப்பாதையில் செல்லும்... வல்லரசாக இருப்போம் என்ற நம்பிக்கையில்...

31 comments:

  1. அதிகம் படிக்காத மக்களே இந்த அளவிற்கு சிந்தித்து வாக்களித்துள்ளார்கள் என்றால் படித்தவர்களும் சிந்திக்க வேண்டும்//
    சூப்பர் பாயிண்ட்...

    ReplyDelete
  2. நம்ம ஆளுங்க குவார்ட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்தா போதும்..பொண்டாட்டி ஓட்டையும் சேர்த்து குத்திடுவான்

    ReplyDelete
  3. அனைவரும் சிந்திக்கவேண்டிய விஷயம் இது....

    நல்ல பகிர்வு அண்ணா...

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு சகோதரா இதையும் கொஞ்சம் பாருங்கள்...
    தமிழ்நாட்டவரைப் பற்றிது..

    http://mathisutha.blogspot.com/2010/11/blog-post_25.html

    ReplyDelete
  5. எங்க பாஸ் கேக்குறாங்க!!! இலவசமா டிவிய வாங்கிகிட்டு காசு குடுத்து கல்வி வாங்குறாங்க!!!!!!!! காசு கொடுத்து சரக்க வாங்கிட்டு இலவசமா நோய வாங்குறாங்க!!!!!! மொத்ததுல இந்த அரசியல் வியாதிகள் ஓட்டையே வாங்கிர்றாங்க!!! என்னமோ போங்க பாஸ்!!!! பகல் கனவு காணாம!!

    ReplyDelete
  6. பத்திரிகைகளின் பித்தலாட்டம்: பீகாரில் சாதி தோற்றதா?

    http://arulgreen.blogspot.com/2010/11/blog-post_25.html

    ReplyDelete
  7. பீஹார் மக்களுக்கும் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கும் வாழ்த்துகள்.

    நம்ப மக்கள் பிரியாணிக்கும் அல்ப பணத்துக்கும் மயங்காமல் இருந்தால் நல்ல காலம் பிறக்கும். ஆனா நம்ப ஊரில் நிதீஷ்குமார் மாதிரி அரசியல்வாதி யாரும் இல்லையே :(

    ReplyDelete
  8. விழிபபுணர்வு ஏற்படுத்தி சிந்திக்க வைக்கும் அருமையான கட்டுரை.. நண்பரே..! பீகார் தேர்தல் முடிவுகள் குறித்த குறித்து அறியப்படாத பல தகவல்களை அள்ளி கொடுத்து இருக்கீங்க. நண்பரே...! தொடரட்டும் தங்கள் பணி சிறப்புடன்.

    ReplyDelete
  9. வரும் தேர்தலிலாவது மக்கள் பணத்திற்காய் இல்லாமல் திட்டங்களுக்காய் ஓட்டளிக்க வேண்டும்.. நல்ல பதிவு

    ReplyDelete
  10. உணர்வு பூர்வமான படைப்பு

    ReplyDelete
  11. //ம்ம ஆளுங்க குவார்ட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்தா போதும்..பொண்டாட்டி ஓட்டையும் சேர்த்து குத்திடுவான் //


    இடைத்தேர்தலுக்கு வேனும்னா அப்படி இருக்கலாம் (நம் மக்கள் மேல் நம்பிக்கை)

    ReplyDelete
  12. வாங்க அகள்விளக்கு

    நிச்சயம் சிந்திக்கவேண்டிய விசயம் தான்...

    ReplyDelete
  13. ம.தி.சுதா...

    பார்த்தேன் உங்கள் பதிவை உணர்வுப்பூர்வமாக இருந்தது...

    ReplyDelete
  14. வாங்க வைகை..

    பார்ப்போம் இத்தேர்தலில் பணமா திட்டமா என்று...

    ReplyDelete
  15. வாங்க அருள்...

    ஜாதி தோற்றதோ இல்லையோ.. நல்ல திட்டம் வெற்றி பெற்றது...

    ReplyDelete
  16. //ஆனா நம்ப ஊரில் நிதீஷ்குமார் மாதிரி அரசியல்வாதி யாரும் இல்லையே :( //

    இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயந்தான்...

    ReplyDelete
  17. வாங்க பிரவீன்குமார்..

    வாங்க வெறும்பய..

    வாங்க பாலாஜிசரவணன்..

    வாங்க யாதவன்...

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  18. /பீகார் மக்களைப் பொறுத்த வரை பணம் கூடிய கூட்டம் இவைகளை எல்லாம் நம்பாமல் அவர்கள் முன்னேற்றத்திற்கு யார் உதவுகிறார்கள் என்று பார்த்து ஓட்டுப்போட்டுள்ளனர். இது பீகாருக்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் தான்.
    //

    நம்ம ஊர்லயும் இதே மாதிரி ஒரு நல்ல முதல்வரை தேர்ந்தெடுத்தா நிச்சயமா நாமும் பெரிய ஆளுகதான் அண்ணா ..!!

    ReplyDelete
  19. //அதிகம் படிக்காத மக்களே இந்த அளவிற்கு சிந்தித்து வாக்களித்துள்ளார்கள் என்றால் படித்தவர்களும் சிந்திக்க வேண்டும். யார் நமக்கு நல்ல திட்டங்களை அளித்து அதை சரியாக செயல்படுத்துகிறார்களோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை அளிக்க வேண்டும்..//

    சரியான வார்த்தைகள்....

    ReplyDelete
  20. //ஏழைகள் வீட்டுக்கு சென்று அவர்களுடன் உணவு அருந்தி தோள் மேல் கை போட்டு சென்றால் பத்தாது அதற்கு பதில் அவர்கள் குடி இருக்கும் வீட்டிற்கு சாலை, தண்ணீர், மின்சார வசதி செய்து கொடுத்தால் ஓட்டு தானாக விழும் என்பதற்கு பீகார் சாட்சி.//

    நச் பாய்ண்ட்.
    இது யாரையோ சாடுவது போல இருக்குதே...

    ReplyDelete
  21. பீகார் மக்கள் மட்டுமல்ல பங்காளி. நாமும் யார் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவாரோ அவர்களைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் பணத்தை வாங்கிகொண்டு முறையற்ற ஆளுக்கு வோட்டு போட்டால் அப்புறம் அனுபவிக்க வேண்டியது நாமதான்.

    ReplyDelete
  22. நல்லா தான் இருக்கு படிக்கிறதுக்கு, ஆனால் இது மாறி தலைவர் தமிழ் நாட்டில் இருக்காங்களா!

    ReplyDelete
  23. அருமையான அலசல். தெளிவான, கோர்வையான கருத்தாடல்.

    ReplyDelete
  24. யோசித்தால் மட்டுமே மாற்றம் வரும்...

    ReplyDelete
  25. //அதிகம் படிக்காத மக்களே இந்த அளவிற்கு சிந்தித்து வாக்களித்துள்ளார்கள் என்றால் படித்தவர்களும் சிந்திக்க வேண்டும்//

    good point

    ReplyDelete
  26. நல்ல பதிவு.. இப்படியான அரசியல் வாதிகளை சினிமா ஹீரோக்களாக மற்றும் பார்த்த நம் மக்களுக்கு இது வியப்புத்தான்

    ReplyDelete
  27. யார் நமக்கு நல்ல திட்டங்களை அளித்து அதை சரியாக செயல்படுத்துகிறார்களோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை அளிக்க வேண்டும்


    நல்ல கருத்து தான் ஆனால் நடக்குமா நடக்கும் என நம்புவோமாக!!!!

    ReplyDelete
  28. அனைவரும் சிந்திக்கவேண்டிய விஷயம் இது....

    நல்ல பகிர்வு அண்ணா...

    ReplyDelete
  29. இந்த முறையும் பீகாரில் சாதிதான் வென்றது!

    http://arulgreen.blogspot.com/2010/11/blog-post_28.html

    ReplyDelete
  30. விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்த பதிவு நண்பரே . முதல் மறுமொழியில் ஒரு நண்பர் குருப்பிட்டு இருக்கிறார்

    ///////ஆர்.கே.சதீஷ்குமார் said...
    அதிகம் படிக்காத மக்களே இந்த அளவிற்கு சிந்தித்து வாக்களித்துள்ளார்கள் என்றால் படித்தவர்களும் சிந்திக்க வேண்டும்//
    சூப்பர் பாயிண்ட்...
    /////////
    இதில் இன்றைய உண்மையான நிலை என்னவென்றால் இன்று அதிகம் படித்தவர்கள் யாரும் சிந்திப்பதே இல்லை என்பதுதான் உண்மை .
    அதுதான் இவளவு முன்னேற்றம் கண்டும் இன்னும் சீர்திருத்தப் படாமல் இருக்கிறது நமது அரசியல் .

    ReplyDelete