Monday, November 7, 2011

அகத்திக்கீரையின் அளவற்ற பயன்கள்....


அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். நமது அகத்தின் தீயை அகற்றுவதால் இது அகத்தி என்று பெயர் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி அன்று இறைவனை வணங்கி உண்ணும் உணவில் அகத்திக் கீரை முக்கிய உணவாக இடம் பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப் படுகிறது. பெரும்பாலும் அகத்திச்செடி நீர் தாங்கிய பூமிகளில் பயிர் செய்யப்படுகிறது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் இச்செடியில் வெற்றிலைச் கொடிக்கால்களில் வெற்றிலைக்கு நிழல் தருவதாகவும் வெற்றிலைக் கொடிக்குக் கொழு கொம்பாக உதவவும் பயிர் செய்கிறார்கள்.

அகத்தியில் அடங்கியுள்ள சத்துக்கள்

அகத்திக் கீரையில் 73 சதவிகிதம் நீரும் 8.4 சதவிகிதம் புரதமும் 1.4சதவிகிதம் கொழுப்பும் 2.1 சதவிகிதம் தாதுப்புக்களும் இருக்கின்றன. இதில் 2.2 சதவிகிதம் நார்ச்சத்தும் இருக்கிறது. மாவுச்சத்து 11.8 சதவிகிதம் இந்தக் கீரையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இக்கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து மிகச்சிறந்த புரதமாகக் கருதப்படுகிறது. சுண்ணாம்புச்சத்து இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

இக்கீரை உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். உயிர் சத்தான வைட்டமின் A, நூறு கிராம் கீரையில் 9, 000 உள்ளது. தயாமின் சத்து 0.21 மில்லி கிராமும், ரைபோ· ஃப்ளோவின் சத்து 0.09 மில்லிகிராமும், நிக்கோடினிக் அமிலம் 1.2 மில்லிகிராமும், வைட்டமின் C 169 மில்லி கிராம் இருக்கின்றன.

அகத்தியில் அடங்கியுள்ள சத்துக்கள்

அகத்திக் கீரையில் 73 சதவிகிதம் நீரும் 8.4 சதவிகிதம் புரதமும் 1.4சதவிகிதம் கொழுப்பும் 2.1 சதவிகிதம் தாதுப்புக்களும் இருக்கின்றன. இதில் 2.2 சதவிகிதம் நார்ச்சத்தும் இருக்கிறது. மாவுச்சத்து 11.8 சதவிகிதம் இந்தக் கீரையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இக்கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து மிகச்சிறந்த புரதமாகக் கருதப்படுகிறது. சுண்ணாம்புச்சத்து இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

இக்கீரை உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். உயிர் சத்தான வைட்டமின் A, நூறு கிராம் கீரையில் 9, 000 உள்ளது. தயாமின் சத்து 0.21 மில்லி கிராமும், ரைபோ· ஃப்ளோவின் சத்து 0.09 மில்லிகிராமும், நிக்கோடினிக் அமிலம் 1.2 மில்லிகிராமும், வைட்டமின் C 169 மில்லி கிராம் இருக்கின்றன.

மருத்துவப் பயன்கள்

அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது.குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும்.

தொண்டைப் புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை உண்பதினால் அகலும்.

இது மருந்து முறிவு கீரையாகும். பிற நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் அகத்திக்கீரையை சாப்பிடக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றனர்.

அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும். அகத்தி மரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி 100 மி.லி. அளவு இருவேளை குடித்து வர காய்ச்சல், தாகம், கைகால் எரிச்சல், மார்பு எரிச்சல், உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக் காய்ச்சல் குணமாகும்.

அகத்தி இலைச்சாறும், நல்லெண்ணெய்யும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமாகக் காய்ச்சி வடிப்பதற்கு முன்பு கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக்கிழங்கு, விளாமிச்ச வேர் வகைக்கு 20 கிராம் பொடி செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி வாரம் ஒருமுறை தலையிலிட்டுக் குளித்துவரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சிபெறும்.

சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. ஏனெனில் மருந்துகளின் வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடவும் செய்யும்.

இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப் போகும் வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம்.

காய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன் சாற்றில் இரு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும்.

சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.

குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும். 

அகத்தியிலையை அவித்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறும். அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகும்.

அகத்தி வேர்ப்பட்டை, ஊமத்தன் வேர் சம அளவாக எடுத்து அரைத்து வாதவீக்கத்திற்கும், கீல் வாயுக்களுக்கும் பற்றிட குணமாகும். இது வாயுவை உண்டாக்கும் இயல்புடையது. எனவே வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இக்கீரையை உண்ணக் கூடாது.

பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் மாறும்

அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும்.

இலைச்சாறை உறிய, தலைநீர் இறங்கும்.

அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.

இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும்.

அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும். 

அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும். 

இக்கீரையை உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் தீரும். 

பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும்.

அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் தீரும். 

அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர், ஜலதோஷம் தீரும். 

அகத்தி மரப்பட்டை கஷாயம், காய்ச்சலின்போது உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது. 

வேர்ப்பட்டையை அரைத்து வாதவலி மேல் பூசிவர வலி மாறும். 

அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும். 

இக்கீரை பித்த நோயை நீக்கும். 

இக்கீரை, உடல் சூட்டைத் தணிக்கும்.

15 comments:

  1. அகத் தீயை அகற்றுவதால் அகத்தி என்று பெயர் - தெரியாத தகவல் தெரிந்து கொண்டேன். இந்தக் கீரையில் இத்தனை பயன்களா... அறிந்து கொண்டேன். எமக்கு வழங்கிய தங்களுக்கு நன்றி நவில்கின்றேன்.

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்.பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. கீரைனாலே பத்தடி தூரம் ஓடுவேன்... so.. வுடு ஜூட்..

    ReplyDelete
  4. கீரைகளின் அரசன் அகத்தி....


    அகததி கீரை பயன் படுத்தும்போதும் பார்த்துதான் பயன்படுத்த வேண்டும்...

    நல்ல தகவல்கள்..
    வாழ்த்துக்கள் சங்கவி சார்...

    ReplyDelete
  5. கீரைகளின் அரசன் அகத்தி....


    அகததி கீரை பயன் படுத்தும்போதும் பார்த்துதான் பயன்படுத்த வேண்டும்...

    நல்ல தகவல்கள்..
    வாழ்த்துக்கள் சங்கவி சார்...

    ReplyDelete
  6. அகத்திகீரையில் இம்புட்டு சமாச்சாரம் இருக்கா அடடடே சூப்பர் தகவலா இருக்கே...!!!!

    ReplyDelete
  7. மருத்துவ குணக் கீரையை மருந்து மாதிரியே பார்த்து உபயோக்க வேண்டுமா, சரி!

    ReplyDelete
  8. உபயோகமான பதிவு...

    //குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும். //

    இது இதுவரை கேள்விப்படாதது...

    நல்ல பகிர்வு அண்ணா...

    ReplyDelete
  9. //இந்த அவரை விதை இருக்கிறதே...

    அதை அகத்திக்கீரையுடன் வதக்கிச் சாப்பிட்டால், வாதம் தீருமா என்றால் தீரும்...

    சில பேர் சொல்றான் தீராதுன்னு... தீராதுன்றவனுக்கு தீராது...

    இவ்வாறாகச் சாப்பிட்டு வந்தால் எல்லா நாளுமே நல்ல நாளாக மலரும்//

    திடீர்னு நியாபகம் வந்துச்சு...

    :))))))

    ReplyDelete
  10. அகத்தி கீரை பற்றிய அருமை தகவல் நண்பரே ,பகிர்வுக்கு நன்றி

    tamil manam 8 th vote

    http://thulithuliyaai.blogspot.com

    ReplyDelete
  11. அகத்திகீரையின் பயன்களை தெரிந்து கொண்டேன்,


    நம்ம தளத்தில்:
    மதுரை வைகை ஆற்றில் வெள்ளம். படங்கள் பார்க்க!

    ReplyDelete
  12. மிகவும் உபயோகமான தகவல்கள்.

    ReplyDelete
  13. அகத்திக் கீரை பற்றிய
    அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  14. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete