Wednesday, November 9, 2011

அஞ்சறைப்பெட்டி 10.11.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

கடந்த சில மாதங்களாக அலுவலகத்தில் வேலை, தந்தையின் உடல்நிலை கவலைக்கிடம் போன்ற காரணங்களால் அதிகமாக வலைப்பக்கமும் வரமுடியவில்லை கிட்டத்ததட்ட 1 வருடம் வியாழன் அன்று அஞ்சறைப்பெட்டி எழுதிக்கொண்டு இருந்த என்னால் எழுத முடியவில்லை இந்த வாரம் தான் கொஞ்சம் நேரம் கிடைத்ததால் மீண்டும் அஞ்சறைப்பெட்டியை ஆரம்பித்துவிட்டேன்...

...............................................................................................

பெட்ரோல் விலை உயர்வு மிகவும் கண்டிக்கத்தக்கது அதற்காக நம் மத்தியில் ஆளும் வர்க்கத்தினர் வாங்கும் வக்காலத்து இன்னும் கேவலமாக உள்ளது. பக்கத்து நாடுகளில் நம்மை விட பாதி விலை தான் உள்ளது என்ன செய்வது தனியாருக்கு அடிமைப்பட்டு கிடக்கிறோம் இது தான் நம் வழி...

பெட்ரோல் விலை உயர்வை எந்த எதிர்கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக, ஆக்கப்பூர்வமாக எதிர்த்த மாதிரி தெரியவில்லை. முதல் இரண்டு நாள் மம்தா கூக்குரளிட்டார். இப்ப அவரும் அமைதி.

மத்தியில் ஆளும் கூட்டணியில் உள்ள திமுக பெட்ரோல் விலையைப்பற்றி கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இதுவே மாநில அரசு பேருந்து கட்டணம் உயர்த்தி இருந்தால் திமுகவினர் ஊரெங்கும் போராட்டம் நடத்தி இருப்பர். மத்திய அரசு என்பாதல் கப்சிப்...
...............................................................................................

கனிமொழிக்காக ஜாமீன் கேட்டு கேட்டு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் என்று மாற்றி மாற்றி படியேறியும் பயன் இல்லை. ஜமீனை வாங்க முடிஞ்சவங்களால் இப்ப ஜாமீனை வாங்க முடியல...

................................................................................................

கூடங்குளம் அனுமின் பிரச்சனைக்காக இன்று குரல் கொடுக்கும் அப்துல்கலாம் தன் சொந்த ஊரான இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர் தற்போது அவ்வப்போது தாக்கப்பட்டு வருகின்றனர் அதற்கு ஏன் கேள்வி கேட்பதில்லை?

மத்திய அரசின் மனதை பார்க்காமல் மக்கள் மனதை பாருங்க அப்துல்கலாம் சார்..... இல்லையேல் கனவு காணுங்கள்...

................................................................................................

மக்கள் நலப்பணியாளர்கள் அய்யா நியமிக்கிரார்... அம்மா தூரத்திவிடுகிறார்... இதெல்லாம் தமிழ்நாட்டு அரசியலில் சகசமப்பா....

..................................................................................................

மெக்சிகோவில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மிகவும் சொகுசாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்குள்ள சிறைகளில் உயர் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சிறை அறைகளில் ஆண் கைதிகளுடன் விபசார அழகிகளும் தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர்.
அவர்கள் சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒத்து ழைப்புடன் அங்கு வந்து விபசாரம் நடத்துவதும் தெரிய வந்தது. அங்கிருந்த 19 அழகிகளை கைது செய்தனர். இவை தவிர, சிறைகளில் கைதிகள் பொழுது போக்குக்காக அரசு அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த 100 அதிநவீன டெலிவிஷன்கள், மற்றும் “மரிஞ்ஜுனா” என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டது.

நம்ம ஊர் சிறையில் இப்படி இருந்தா ஜெயிலில் இடம் இருக்காது நிரம்பி வழியும்....


..................................................................................................



மிசோரம் மாநிலத்தில் பக்தவங்கிலான்நும் என்ற கிராமத்தில் சியானா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் 39 மனைவிகள் உள்ளனர். இவர்கள் மூலம் 121 மகன், மகள்கள் இருக்கிறார்கள். இந்த குடும்பம்தான் தற்போது உலகிலேயே மிகப்பெரிய கூட்டுக்குடும்பமாக கருதப்படுகிறது. சியானா தனது 39 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இவரது முதல் மனைவிக்கு தற்போது 71 வயது ஆகிறது.அவருக்கு 7 குழந்தைகள் பிறந்தனர். 39-வது மனைவியை கடந்த 2000-ம் ஆண்டில் சியானா மணந்தார். 31 வயது ஆகும் இந்த இளம் மனைவி மூலம் சமீபத்தில் சியானா ஆண் குழந்தை பெற்றார். கடந்த ஜூலை மாதம் சியானா 67-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது 39 மனைவிகளும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்கள். 39 மனைவிகள் மற்றும் மகன்கள், மகள்கள் வாழ்வதற்கு அவர் 4 அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை கட்டி உள்ளார். அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் 39 மனைவிகளும் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு ஒரே இடத்தில்தான் சமையல் செய்யப்படுகிறது. காலை சாப்பாட்டுக்கு மட்டும் 50 கிலோ அரிசி, 60 கிலோ இறைச்சி வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. கோடீஸ்வரரான சியானா இந்த செலவுகளை தனது பண்ணையிலிருந்து வரும் வருமானம் மூலம் சமாளித்து வருகிறார்.

நம்ம ஊர்ல 1க்க கல்யாணம் செய்து 2வது கல்யாணம் செய்தால் மகன், மச்சினன் என்று யாராவது ஒருத்தர் போட்டுத்தள்ளிடறானுக... இந்த ஆளுக்கு மச்சந்தான்....

தகவல்
மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ)  சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் புதிய பதிவை தொடக்கி உள்ளது.
மேலும் இதன் மூலம் மக்கள் உதவியுடன் வழக்குகளை விரைந்து முடிக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வழக்குகளுக்கான உதவி பெறும் முறை முதல்கட்டமாக போபாலில் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், மக்களின் வரவேற்பை பொறுத்து பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த உள்ளதாகவும் சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
இன்டர்நெட் மூலம் தகவல் வழங்கும் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் முக்கிய வழக்குகள் பலவும் இதன் மூலம் தீர்வை எட்டும் எனவும்  சி.பி.ஐ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் எனது பயணங்கள் என்ற தலைப்பில் எழுதிவருகிறார் இவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது.

தத்துவம்

மனிதர்கள் இரண்டு வகை உண்டு. ஒன்று திறமையானவர்கள் மற்றொன்று திறமையைப்பயண்படுத்ததாவர்கள்

வயதானவர்கள் கவலைப்படுவதெல்லாம், தங்களுக்கு வயதாகி விட்டதே என்பதல்ல, மற்றவர்கள் இளமையாக இருக்கிறார்களே என்று தான்...

13 comments:

  1. -என்னது... 39 மனைவிகளா? ஒண்ணை சமாளிக்கிறதே பெரும்பாடால்ல இருக்கு...

    -பெட்ரோல் விலையக் குறைக்க முடியாதுன்னு இன்னிக்கு மன்மோகன் சிங் அழுத்தமாச் சொல்லிட்டாரு... தமிழினத் தலைவரால என்ன பண்ணிட முடியும்?

    -கலாம்... ஏற்கனவே ரொம்பப் பேரு அவரை கலாய்ச்சிட்டிருக்காங்க... அதனால நீங்க சொன்னது சரின்னு மட்டும் சொல்லிக்கறேன்!

    -சிறைத் தண்டனை திருத்தத் தானே... அங்கயே இப்படின்னா எப்படித் திருந்துவானுங்க? ஹூம்...

    -அஞ்சறைப் பெட்டில எல்லாப் பக்கமும் நறுமணம் வீசுது சங்கவி சார்... உங்கப்பா பூரண உடல் நலத்தொட இருக்க அன்னை மீனாட்சியை வேண்டுறேன்...

    ReplyDelete
  2. சார் நீங்க தான் எழுதாத குறை பெட்ரோல் விலை உயர்வு பற்றி... ம்ஹும் ஒன்னும் செய்ய முடியாது.


    நம்ம தளத்தில்:
    வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  3. ஒரே ஆளுக்கு 39 மனைவி... :( ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லை....

    ReplyDelete
  4. நல்லா தான் இருக்கு, வழக்கம் போலவே காரம் அளவாக

    ReplyDelete
  5. //வயதானவர்கள் கவலைப்படுவதெல்லாம், தங்களுக்கு வயதாகி விட்டதே என்பதல்ல, மற்றவர்கள் இளமையாக இருக்கிறார்களே என்று தான்...//

    அதெப்படி பாய்ன்ட கரெக்ட்டாப் புடிச்சீங்க

    ReplyDelete
  6. இதுவே மாநில அரசு பேருந்து கட்டணம் உயர்த்தி இருந்தால் திமுகவினர் ஊரெங்கும் போராட்டம் நடத்தி இருப்பர். மத்திய அரசு என்பாதல் கப்சிப்...//

    உஸ்ஸ்ஸ்ஸ் மகள் கனிமொழிக்கு கதவை அடைச்சிரப்போராங்க ஜெயில்ல...!!!

    ReplyDelete
  7. கூடங்குளம் அனுமின் பிரச்சனைக்காக இன்று குரல் கொடுக்கும் அப்துல்கலாம் தன் சொந்த ஊரான இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர் தற்போது அவ்வப்போது தாக்கப்பட்டு வருகின்றனர் அதற்கு ஏன் கேள்வி கேட்பதில்லை?

    மத்திய அரசின் மனதை பார்க்காமல் மக்கள் மனதை பாருங்க அப்துல்கலாம் சார்..... இல்லையேல் கனவு காணுங்கள்...//

    எல்லாம் பதவி ஆசைதான், வேண்ணா பாருங்க இந்த மரியாதையான[!] மனிதருக்கு கவர்னர் பதவி கிடைச்சாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்லை...!!!

    ReplyDelete
  8. நம்ம ஊர் சிறையில் இப்படி இருந்தா ஜெயிலில் இடம் இருக்காது நிரம்பி வழியும்....//


    ஹா ஹா ஹா ஹா நானும் உம்மை போட்டு தள்ளிட்டு உள்ளே போயிருப்பேன் ச்சே வடை போச்சே...

    ReplyDelete
  9. வயதானவர்கள் கவலைப்படுவதெல்லாம், தங்களுக்கு வயதாகி விட்டதே என்பதல்ல, மற்றவர்கள் இளமையாக இருக்கிறார்களே என்று தான்...//

    அவிங்க மேல என்ன கடுப்புய்யா உமக்கு...

    ReplyDelete
  10. அஞ்சறைப் பெட்டில எல்லாப் பக்கமும் நறுமணம் வீசுது...

    ReplyDelete
  11. இது என்னோட முதல் கமெண்ட் உங்க ப்திவுக்கு.

    நல்லா இருக்கு

    ReplyDelete
  12. Ka...tham...ba...m.
    Manakkirathu. Vaazhthukkal Sago.

    ReplyDelete
  13. //எல்லாம் பதவி ஆசைதான், வேண்ணா பாருங்க இந்த மரியாதையான[!] மனிதருக்கு கவர்னர் பதவி கிடைச்சாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்லை...!!!//

    இதென்னவே பெரிய புத்திசாலித்தனமான கருத்து மாதிரி எல்லா எடத்தலயும் வாமிட் எடுத்து வைச்சிருகிறீரு. அவரு முன்னாள் சனாதிபதி. கலக்டரு ரிடயர்மெடன்ட்டு அப்புறம் கிளார்க்கு வேலைக்கு போவாரா?

    அவருக்கும் காங்கிரஸ் அரசுக்கும் ஒத்துக்காது. அப்படி இருந்தும் கூடங்குளத்தை ஆதரிக்க நாட்டுநலன்தான் காரணனமாயிருக்கணும்.

    மேலும் தமிழ்நாட்டின் மின்சாரபற்றகுறை தீர்க்க இயலாமல் தத்தளிக்கும் நமது புரட்சிதலைவி அம்மா உற்பத்தி ஆகும் கூடங்குள மின்சாரத்தில் பெரும்பகுதி தமிழ்நாட்டுக்கு என மத்திய அரசிடம் வலியுறுத்தி மின்சார பற்றக்குறையை தீர்க்காமல் அண்ணா லைபரரி,அரசு பணியாளர் வேலை நீக்கம் என பிஸியாயிருக்கிறார்.

    ReplyDelete