உள்ளுரில் இருந்து உலகம் வரை........
மீண்டும் இலங்கை கடற்படையினர் தாக்குதல்... இதைக்கண்டித்து முதல்வர் பிரதமருக்கு கடிதம்.. ஆட்சி மாறினாலும் இவ்விசயத்தி காட்சி மாறவில்லை...
இக்காட்சி மாற வேண்டுமெனில் மத்தியில் காங்கிரஸ் ஆளக்கூடாது.. காங்கிரசை தவிர வேறு யார் ஆட்சி நடத்தினாலும் இந்திய மீனவர்கள் மீது தாக்கப்படுவது இருக்காது...
சிலரைக்கேட்டால் இந்திய மீனவர்கள் தாக்கப்படவில்லை... தமிழக மீனவர்கள் தான் தாக்கப்பட்டனர் என்பர்...
தமிழ்நாட்டில் இருந்து எம்பிக்கள் மட்டும் வேண்டும்... ஆனால் தமிழர்கள் வேண்டாமாம்....
............................................................ .............................. .....
கவுரவ கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனை ;19 பேருக்கு ஆயுள்: மதுரா கோர்ட் அதிரடி தீர்ப்பு... சபாஷ் வரவேற்க வேண்டிய தீர்ப்பு...
கவுரவ கொலைகள் வடநாட்டில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் நடக்கிறது.. கவுரவ கொலை செய்பவர்களுக்கு இதுபோல் கடுமையான தண்டனைகள் கொடுக்கம் போது தான் கட்டபஞ்சாயத்துக்கள் குறையும்...
இச்சம்பவத்திம் நடந்தது 1991 தண்டனை வழங்கியது 2011... தீர்ப்புக்கு 20 வருடம் என்றால் தண்டனையை நிறைவேற்ற??????
கவுரவ கொலைகள் வடநாட்டில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் நடக்கிறது.. கவுரவ கொலை செய்பவர்களுக்கு இதுபோல் கடுமையான தண்டனைகள் கொடுக்கம் போது தான் கட்டபஞ்சாயத்துக்கள் குறையும்...
இச்சம்பவத்திம் நடந்தது 1991 தண்டனை வழங்கியது 2011... தீர்ப்புக்கு 20 வருடம் என்றால் தண்டனையை நிறைவேற்ற??????
............................................................ .............................. .....
உத்திரபிரதேசத்தில் ராகுல் தீவிர பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார் என்று பரபரப்பாக கத்தியது மீடியாக்கள்...
உபியை நான்காக பிரிக்கவேண்டும் என்று கூறி சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றப்போகிறோம் என்ற அறிவித்து எல்லாரையும் ஆப் ஆக்கிவிட்டார் மாயாவதி.....
உபியை நான்காக பிரிக்கவேண்டும் என்று கூறி சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றப்போகிறோம் என்ற அறிவித்து எல்லாரையும் ஆப் ஆக்கிவிட்டார் மாயாவதி.....
............................................................ .............................. ......
இந்தவாரம் சிறைகம்பியை எண்ணும் விஐபி ஜே.கே.ரித்திஷ்... அடுத்த வாரம் யாரோ?????
............................................................ .............................. ......
காங்கிரசின்
புதிய தலைவர் ஞானதேதிகனுக்கு வாழ்த்துக்கள்... எப்படித்தான் எல்லா
தலைவர்களையும் அரவனைத்துப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்...
............................................................ .............................. ........
சபாஷ் வரவேற்க வேண்டிய உத்தரவு...
நம்ம ஊர்ல ஒரு ஏழைப்பையன் படிக்க வேண்டும் என்று வங்கியில் கடன் கேட்டால் இந்த வங்கி அதிகாரிங்க செய்யர அலப்பறை இருக்கே சொல்ல முடியல...
இதே பணக்காரா தொழில் அதிகபர்கள் ஒருபாய் கூட முதல் போடாமல் சொத்தை கணக்கு காட்டி கடன் வாங்கி தொழில் நடத்த ஓடிப்போய் கடன் தருகிறார்கள்... இதே தொழில் நஷ்டத்தில் இயங்கினால் எப்படி தள்ளுபடி ஆகும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறார்கள்....
இருப்பவர்களுக்கு ஒரு சட்டம்... இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் என்று மாறும் இந்நிலமை....
............................................................ .............................. ........
கூடங்குளம் அனுமின் நிலையம் வேண்டுமா வேண்டாமா என்று மக்களிடம்
கருத்து கணிப்பு கேட்டு அதற்கு பின் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும்...
பாராளுமன்ற கூட்டத் தொடர் அமைதியாக நடக்க பெட்ரோல் விலையை குறைத்து விட்டனர்... கூட்டத்தொடர் முடிந்ததும் நிச்சயம் பெட்ரோல் விலை உயர்வை எதிர்பார்க்கலாம்...
பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் விதிமுறைகளை மீறும், பெரிய அளவில் சேர்க்கை கட்டணம் வசூலிக்கும், பேராசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி போட, புதிய சட்டம் ஒன்று பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது.
இதை வரவேற்கலாம் ஆனால் அதற்கு முன் பொதுமக்கள் ஏன் நன்கொடை தருகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். தரமான கல்வியை தனியார் நிறுவனங்கள் தருவதால் தான் அங்கு நன்கொடை அளிக்க மக்கள் முன்வருகின்றனர்.
முதலில் அரசு கல்லூரிகளை அதிமாக்கி தரமான கல்வி அளிக்க முன் வாருங்கள் நன்கொடை வசூலிப்பது தானாக மறைந்து விடும்...
............................................................ .............................. ........
பாராளுமன்ற கூட்டத் தொடர் அமைதியாக நடக்க பெட்ரோல் விலையை குறைத்து விட்டனர்... கூட்டத்தொடர் முடிந்ததும் நிச்சயம் பெட்ரோல் விலை உயர்வை எதிர்பார்க்கலாம்...
............................................................ .............................. ........
பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் விதிமுறைகளை மீறும், பெரிய அளவில் சேர்க்கை கட்டணம் வசூலிக்கும், பேராசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி போட, புதிய சட்டம் ஒன்று பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது.
இதை வரவேற்கலாம் ஆனால் அதற்கு முன் பொதுமக்கள் ஏன் நன்கொடை தருகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். தரமான கல்வியை தனியார் நிறுவனங்கள் தருவதால் தான் அங்கு நன்கொடை அளிக்க மக்கள் முன்வருகின்றனர்.
முதலில் அரசு கல்லூரிகளை அதிமாக்கி தரமான கல்வி அளிக்க முன் வாருங்கள் நன்கொடை வசூலிப்பது தானாக மறைந்து விடும்...
தகவல்
சூரிய குடும்பத்தில் வேற்று கிரகவாசிகள் அலைந்து திரிவதாகவும்,
அவர்களை நெருங்கி பார்க்க முடியவில்லை என்றும் விஞ்ஞானிகள்
கூறியுள்ளனர். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை
ஒன்றில், சூரிய குடும்பத்தில் வேற்றுக்கிரக வாசிகள் வசிப்பதற்கான
ஆதாரங்களோ, அவர்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர் என்பதற்கான
ஆதாரங்களோ கிடையாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால்,
இந்திய வம்சா வழி விஞ்ஞானி உள்ளிட்ட சில விஞ்ஞானிகள் சூரிய குடும்பத்தில்
வேற்றுக்கிரக வாசிகள் வசிப்பதாக நம்புகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த
பென் ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இருவர், ஒபாமா நிர்வாகத்தின்
இந்த அறிக்கையை நிராகரித்துள்ளனர். எங்களது ஆழமான விண்வெளி ஆராய்ச்சியில்,
இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாசாவின் பயோனீர்
மற்றும் வொயா ஜெர் விண்வெளி ஓடங்களை கொண்டு மிகவும் ஆழமாக ஆராய்ந்தால், இது
புலப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் இந்த கருத்தை
“ஆக்டா” என்ற விண்வெளிக்கான அமைப்பு ஏற்றுக் கொண்டு, அதன் இணைய தளத்திலும்
வெளியிட்டுள்ளது.
ராக் எத்திக்ஸ் இன்ஸ்டியூட்
ஆராய்ச்சியாளர் ஜேக்கப் ஹக் மிஸ்ரா, புவி மற்றும் சுற்றுச்சூழல் சிஸ்டம்ஸ்
நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ரவிக்குமார் ஆகியோரும், வேற்றுக்கிரகவாசிகள்
இருப்பதை உறுதிப்படுத்துகின்றனர். வேற்றுக்கிரக வாசிகளின் விண்வெளி ஓடம்,
நமது சூரிய குடும்பத்தை சுற்றி வருவதை காண முடிகிறது.
ஆனால்,
அதன் புறப்பகுதியை நெருங்கிச் சென்று பார்க்க முடியவில்லை. இன்னும்
ஆழமாகச் சென்று, நுணுக்கமான முறையில் ஆராய்ச்சி செய்தால், வேற்றுக்கிரக
வாசிகளை நெருங்கிச் சென்று பார்க்க முடியும் என்று அவர்கள் உறுதிப்பட கூறி
உள்ளனர்.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் தமிழ் டிவிட்டர் என்ற பெயரில் தமிழில் வரும் டிவிட்டுகளில் நச்சு என்று உள்ள வரிகளை தனியாக தொகுத்து ஒரு வலைப்பதிவை உருவாக்கி உள்ளார்... நச் டிவிட்டுகள் இங்கு கிடைக்கின்றன...
தத்துவம்
வாழ்க்கை என்கிற ஆடையில் நன்மை தீமை என்ற இரு நூல்களும் இருக்கும்.
உலகத்திற்கு வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்; ஆனால் யாராவது ஒருவருக்கு. நீங்களே உலகமாக இருக்கலாம்.
வெற்றி இலவசமாக கிடைப்பதில்லை... தேவையான உழைப்பும், தியாகமும் அவசியம்...
வெற்றி இலவசமாக கிடைப்பதில்லை... தேவையான உழைப்பும், தியாகமும் அவசியம்...
இந்த அஞ்சறைப் பெட்டி பிரமாதம். அதிலும் வங்கிகளில் கடன் வாங்குவதற்குப் படும் பாட்டை நீங்கள் சொல்லியிருப்பது மிக நிதர்சனம். அருமை.
ReplyDeleteஇந்த கடிதம் எழுதுகிற கலாச்சாரம் எப்போது ஒழியுமோ தெரியவில்லை...
ReplyDeleteஇந்தவாரம் சிறைகம்பியை எண்ணும் விஐபி ஜே.கே.ரித்திஷ்... அடுத்த வாரம் யாரோ?????
ReplyDelete>>>
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அஞ்சறைப்பெட்டி மணம் குணம் காரம் நிரம்பப்பெற்ற விஷயங்கள் ஊள்ளடங்கியது.
ReplyDeleteபதிவில் செம கலவை....
ReplyDeleteமீனவர்களுக்கு ஏற்படும் கொடுமை யார் வந்தாலும் தடுக்க முடியாது. வேற்று கிரக வாசிகள் பற்றிய ஆராய்ச்சி இன்னும் அதிகரிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி
நம்ம தளத்தில்:
நமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது எப்படி?
வெற்றி இலவசமாக கிடைப்பதில்லை... தேவையான உழைப்பும், தியாகமும் அவசியம்.../
ReplyDeleteமுத்தாய்ப்பான முத்தான வரிகள் மனம் கவர்ந்தன.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
உத்திரபிரதேசத்தில் ராகுல் தீவிர பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார் என்று பரபரப்பாக கத்தியது மீடியாக்கள்...
ReplyDeleteஉபியை நான்காக பிரிக்கவேண்டும் என்று கூறி சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றப்போகிறோம் என்ற அறிவித்து எல்லாரையும் ஆப் ஆக்கிவிட்டார் மாயாவதி.....//
அரசியல்ல யாருக்கு எப்பிடி ஆப்பு வைக்கணும்னு மாயாவதிக்கு தெரிஞ்சது நம்ம தமிழனுக்கு தெரியலை பாருங்க ம்ஹும்...
அஞ்சரை பெட்டி அனைத்திலும் அருமை.. தொடருங்கள்
ReplyDelete//
ReplyDeleteசிலரைக்கேட்டால் இந்திய மீனவர்கள் தாக்கப்படவில்லை... தமிழக மீனவர்கள் தான் தாக்கப்பட்டனர் என்பர்...
தமிழ்நாட்டில் இருந்து எம்பிக்கள் மட்டும் வேண்டும்... ஆனால் தமிழர்கள் வேண்டாமாம்....
//
செருப்படி கேள்விகள்
இன்று என் வலையில்
ReplyDeleteதூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்?
It is not that the private institutions are giving best education. It is projected so and people are going behind.
ReplyDeleteசூப்பர் தொகுப்பு!
ReplyDelete