Thursday, December 17, 2009

மார்கழி மாத கோலமும்........ சங்கவியும்.....



நேற்று காலை 5 மணிக்கு எல்லாம் வீட்டு அலாரம் அடித்தது என்னடா இன்றைக்கு நடுராத்திரில அலாரம் அடிக்குதுன்னு ஆப் பண்ணீட்டு தூங்கிட்டேன். அப்புறம் விடியற்காலை ஒரு 7.30 மணிக்கு மாடியில் இருந்து பார்த்தால் வீதி எங்கும் கோலம். என் வீட்டு முன்னாடியும் ஒரு அழகான கோலம் யார் போட்டதுன்னு கேட்டா என் மனைவி நாந்தான்னு ஒரு அழகான சிரிப்பு (பொய்தான்). அப்புறம் சொன்னாங்க இன்னிக்கு மார்கழி 1.

இந்த மாசம் முழுவதும் நாம நேரத்தில எழுந்து குளிச்சு வாசல்ல கோலம் போட்டுவிட்டு கோயிலுக்கும் போகனும் இன்னிக்கு முதல் நாள் அதனால வேலைக்குப்போய்ட்டு வந்து சாயங்காலம் போகலம் (இந்த மாசம் என் தூக்கம் போச்சு). அப்புறம் மனைவிய வேலைக்கு அனுப்ப வண்டி எடுத்தா
கோலம் கஷ்டப்பட்டு போட்டு இருக்கிறேன் பார்த்து அழிச்சராதீங்கன்னு ஒரு குட்டு வேற. சரிம்மான்னு வண்டி எடுத்துட்டுப்போனா வீதி எல்லாம் அழகான கோலங்கள். ஏன் இந்த மாதம் எல்லாரும் கோலம் போடறாங்க, கோலத்தில் எத்தனை வகை இருக்கும்ன்னு ஒரு அலசு அலசி நான் தெரிஞ்சுகிட்டத உங்களுக்கும் சொல்லலாம்னு முடிவு பண்டி ஒரு பதிவாக்கிட்டேன்.

நான் ஆபிஸ் வருவதற்கு வண்டிய எடுக்கப்போகும் போது பக்கத்து வீட்டு மாமி கோலத்தை ரசிச்சுகிட்டு இருந்தாங்க அப்ப மாமியக்கேட்டேன் மாமி கோலம்னா என்ன? மாமி சொன்னாங்க கோலம்னா ஒரு பொதுவான தோற்றம் இல்லைன்னா வடிவம்னு சொன்னங்க ஒகே மாமின்னு வந்துட்டேன். அப்புறம் கோலத்தை பற்றி விசாரிச்சா பல தகவல்கள்.





மார்கழி மாதங்களில் இன்றும் அதிகாலையில் எழுந்து பனி விலகும் முன்னே குளித்து வீதியில் பஜனை பாடிக்கொண்டே நடப்பவர்கள் இருக்கிறார்கள். வண்ணக் கோலங்கள் வீதியை நிரப்பும்.

பக்தியைப் பார்க்காமல் நடைமுறையில் விளையும் நன்மை குறித்தது மட்டுமான காரணம் குறித்த வகையில் யோசித்தால், மார்கழி மாதம் குளிர் ஆரம்பித்து விடும். மார்கழிக் குளிர் மச்சியைத் துளைக்கும், தை மாதக் குளிர் தரையைத் துளைக்கும் என்பர். குளிரென்றால் காலையில் எழுவதற்கு சோம்பல். தாமதமாக எழுந்தாலோ அன்றாடப் பணிகளில் தாமதம். அதனால் சோர்வு. மனக்கிலேசம்.

இதை முறியடிக்கவே அதிகாலைக் குளியல். புத்துணர்ச்சி பூத்து சோம்பலைத் தூக்கியடித்துவிடும். வீட்டிற்கு வெளியே நடக்க வர ஓஸோன் வாயுவின் அருமை நுரையீரலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். மனதைத் தூய்மைப்படுத்தும். கோலமும், பாடலும் மனதை ஒருமைப்படுத்தி உணர்வுகளைச் சமனப்படுத்தும். நடைப்பயிற்சியோ இன்னும் தேக ஆரோக்கியம் தரும் என அறிந்தேன்.

கோலமிடுவது எப்படி? என்ன வேண்டும்?

நம்ம ஊர்ல கோலங்கள் அரிசிமா, முருகைக்கற்பொடி போன்ற வெண்ணிற உலர்வான பொடிகளைக் கொண்டு வரையப்படுகின்றன. வீட்டுக்கு வெளியே மண்தரையாயின், நீர் தெளித்துப் புழுதி அடக்கப்படும். பின்னர் பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிதளவு உலர் பொடியை எடுத்து, விரல்கள் நிலத்தில் படாமல், நிலத்துக்கு அரையங்குல உயரத்திலிருந்து, ஏற்கெனவே எண்ணியபடியான வடிவம் கிடைக்கும் வகையில், பொடியைத் தூவிச் செல்வார்கள். பசுச் சாணம் முதலியவற்றால் மெழுகப்பட்ட மண் தரையிலோ அல்லது வேறு இறுக்கமான தரையிலோ கோலம் வரைவதாயின், சிலவேளைகளில் அரிசியை நீர்விட்டுப் பசைபோல் அரைத்துப் பின்னர் வேண்டிய அளவு நீர் விட்டுக் கரைத்து, அதை ஒரு துணியில் தோய்த்துக்கொண்டு விரல்களுக்கிடையே மெதுவாக வைத்து அழுத்த விரல்களில் வடியும் மாக்கரைசலினால் பேனாவால் வரைவதுபோல் கோலம் வரையலாம். காய்ந்த பின்னர் இது நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக்கூடியது.

கோலத்தில் நிறைய வகைகள் இருக்கிறது ஆனால் நம்ம ஊர்ல அதிகமா வரையறது.
1. புள்ளிக்கோலம்
2. ரங்கோலி(கலர் பொடியில் வரைவது)

இதில் புள்ளிக்கோலம் தினமும், ரங்கோலி கோலம் விஷேச நாட்களில் வரைவார்கள். எப்பொழுது வரைந்தாலும் கோலத்தின் அழகே அழகு......
கோலம் வரைதல் ஒரு யோகசனமாம் மற்றும் பெண்களுக்கு நல்ல உடற்பயிற்ச்சி என்றும் அறிந்தேன்.

கோலத்தைப்பற்றிய தகவல்கள் நிறைய இருக்கும் என நினைக்கிறேன் இருந்தால் நீங்களும் சொல்லுங்களேன்...

13 comments:

  1. உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. விடியற்காலை 7 .30 , ரொம்ப அநியாயமாக உள்ளது. கொடுத்து வைத்தவர் தான் . கோலங்கள் என்றால் எனக்கும் மிகவும் பிடிக்கும். என்னுடைய வலையில் சில கோலங்கள் உள்ளன. முடிந்தால் பார்க்கவும்

    ReplyDelete
  2. அரிசி பொடி கோலங்கள் எறும்பு போன்ற ஜீவன்களின் உணவுக்காக.. கலையும் உணவும் கலந்த படைப்பு.. நல்ல பதிவு.

    :)) விடியற்காலை 7.30 அட அவங்களுக்காகவே கண்டுபிடிச்சதுதான் ஸ்டிக்கர் கோலம்..

    ReplyDelete
  3. "விடியற்காலை 7 .30 , ரொம்ப அநியாயமாக உள்ளது."
    ஏங்க 7.30 நடு ராத்திரி இல்ல?

    ReplyDelete
  4. கோலமும் அழகு. அதை பற்றி சொல்லிய விதமும் அழகு.

    ReplyDelete
  5. என் மனைவி நாந்தான்னு ஒரு அழகான சிரிப்பு (பொய்தான்). அப்புறம் சொன்னாங்க இன்னிக்கு மார்கழி 1.

    ம்ம்ம்ம் இதை படிக்கலையா...உங்கள் தங்கமணி

    மார்கழி மாதத்தில் கோலத்தை பற்றி ஒரு அலசல் என்னை மாதிரி கோலம் தெரியாதவங்களை அழவைச்சிட்டீங்க....( காலையில் எழும் வேலை மிச்சம் ஹிஹிஹி)

    ReplyDelete
  6. கோலத்தை பற்றிய அழகான தொகுப்பு..

    நாங்க இங்கே காலை 4.15 எழுந்துக்கோனும்பா. சற்று சிரமமென்றபோதும் பழகிபோனதால் சுகமாக இருக்கு..

    ReplyDelete
  7. ரொம்ப நல்ல பதிவு முதல்ல நன்றிகள் !!! ஆபீஸ்லே இன்று ரொம்ப கடிங்க என் மேல்அதிகாரி என் பிராணனை வாங்கிட்டாரு அந்த ரிப்போர்ட் இந்த ரிப்போர்ட்னு கேட்டு .... இடையில் உங்க பதிவ படிச்சு நான் என் பள்ளி காலத்துக்கே போய்டேன் எங்க தெருவில் நான் நீனு போட்டி போடு சீக்ரம் எழுந்து கோலம் போடுவோம் என் அம்மா கூட சேர்ந்து நானும் வண்ணம் தீட்டி இருக்கேன்..... சீக்ரம் எழுவதால் சோம்பல் இல்லமா நல்ல படிக்கவும் உதவும்.... ஆனா இப்போ என் அப்பார்ட்மென்ட் வாசல்ல ஒரு ஸ்டிக்கர் வாங்கி ஒட்டி இருக்கேன் நிரந்தரமா .... நல்ல பண்டிகை நாள்ல ஒரு 4 புள்ளி வச்சு கோலம் போட முடியும் அதயும் எதிர் வீடு வண்டுகள் ஒரு சனதுக்குள்ள அழிச்சுடுவாங்க

    ReplyDelete
  8. பதிவு நன்றாக உள்ளது நண்பரே....

    வாழ்த்துக்கள்....

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. ரொம்ப நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. கோல‌ம் ப‌ற்றி அருமையான ப‌திவு போட்ருக்கீங்க‌ !

    ReplyDelete
  11. கோலம் Arithmetic சம்பந்தப்பட்டதுன்னுதான் research சொல்லுது, புள்ளிகளை சரியாக எண்ணிவைப்பது சிறந்த கணக்கு பாடமாகவே சொல்லப்படுகிறது...

    எனக்கும் கோலம் ரொம்ப பிடிக்கும், நானும் நல்லா கோலம் போடுவேன்! கோலத்தைப் பற்றி நான் ஒரு பதிவு எழுதிவைத்திருக்கேன்... நீங்க முந்திக்கிட்டீங்க!

    அழகான கோலம் போட்ட உங்க அவங்களுக்கு என் வாழ்த்துக்கள், அழகா எழுதிய உங்களுக்கும்தான்!

    ReplyDelete
  12. கோலங்கள் பற்றி அருமையான பதிவு ... கலக்குங்க

    அன்புடன்
    மீன்துள்ளி செந்தில்

    ReplyDelete
  13. Very nice writings...

    ReplyDelete