Monday, December 28, 2009

நீச்சல் கலை

அலுவலகம் மூன்று நாட்கள் விடுமுறை என்றதும் ஊருக்குப் போவது என்று முடிவெடுத்தேன். எனது கிராமத்திற்கு செல்வது என்று முடிவானதுடன் அங்கு நண்பர்கள் எல்லாம் விடுமுறைக்கு வருகின்றேன் என்றதும் சந்தோஷம் பொங்கியது. வியாழன் இரவு புறப்பட்டு அந்தியூர் மாமா வீட்டிற்கு சென்றேன். வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டு எனது கிராமத்திற்கு சென்றேன். மழை பெய்து இருந்தாதால் வழிநெடுக பச்சை பசேல் என நெற்பயிர்களும், மஞ்சள் காடுகளும், வாழை மரங்களும் அழகாக ரசித்துக்கொண்டே சென்றேன் ( அங்க ஹெல்மெட் போடலினா யாரும் பிடிக்கமாட்டாங்களே ). ஊரில் நண்பர்களை சந்திததுவிட்டு அனைவரும் குளிக்கப்போகலாம் என்று முடிவெடுத்து ஆத்துக்குப்போகலாமா இல்லை கிணற்றுக்குப்போகலாமா என முடிவெடுக்கும் போது அனைவரும் கிணற்றுக்குப் போகலாம் என முடிவெடுத்து கிளம்பினோம்.

கிணறு ஒவ்வொரு கிராமத்து இளைஞனும் அவனது சிறுவயதில் நீச்சல் கற்க தந்தையுடனே இல்லை மாமாவுடனோ இல்ல ஊர்ல இருக்கிற அண்ணன்களுடனோ சென்று நீச்சல் பழகி இருப்பார்கள் இன்று நாம் என்ன தான் வளர்ந்து பெரிய ஆள் ஆனாலும் அன்று கற்ற நீச்சல் இன்றும் மறக்காது. சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் கற்பது இவை இரண்டும் ஒரு முறை கற்றால் வாழ்வில் மறக்காத கலைகள் ஆகிவிடும். கிராமத்தில் சைக்கிள் ஓட்டத்தெரியதா ஆட்கள் கூட இருப்பார்கள் ஆனால் நீச்சல் தெரியாத ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நான் எனது 10வயதில் நீச்சல் கற்றேன். எனது ஊர் காவிரி ஆற்றிற்குப் பக்கத்தில் இருந்ததால் ஆற்று நீச்சமும் தெரியும். நான் எப்படி நீச்சல் கற்றேன், நான் எப்படி டைவ் அடிததுப்பழகினேன், ஆற்றீல் எதிர் நீச்சல் எப்படி அடித்தேன், வேகமாக இழுத்துச் செல்லும் தண்ணீரில் எப்படி நீந்தி கரையேறுவது என நினைத்தேன். கிராமத்தில் உள்ளவர்கள் எப்பவுமே தண்ணீரைக்கண்டால் பயமில்லாமல் குதிப்பார்கள் ஆனால் நகரத்தில உள்ளவர்கள் அய்யோ எனக்கு நீச்சல் தெரியாது என்பார்கள். அதுவும் இல்லாமல் உலகில் மிகச்சிறந்த உடற்பயிற்சிகளில் நீச்சல் கலையும் ஒன்று என்று படித்த ஞாபகம். நீச்சல் கலையைப்பற்றிய எனது பதிவு.
நீச்சல் கற்பது எப்படி?
நீச்சல் கற்க நிச்சயமாக நன்கு நீச்சல் தெரிந்த நபர் வேண்டும். அவரின் உதவியுடன் தான் கற்க முடியும். முதலில் அவர் தனது கைகால்களை எவ்வாறு அசைக்கிறார் என பார்க்கவேண்டும். காலும் கையும் தண்ணீருக்குள் இருக்கும் தலைமட்டும் மேலே தூக்கி கை, கால்களை மெதுவாக ஆட்டியபடி மிதப்பார் இதை நன்கு கவனித்துவிட்டு நாம் தண்ணீரில் இறங்க வேண்டும். தண்ணீருக்குள் இறங்குவதற்கு முன் கிராமத்தில் புரடை(சுரைக்காயை ஒரு 2 மாதம் காய வைத்தால் அதற்கு பெயர் புரடை) கட்டுக்கொண்டு இறங்குவார்கள் இப்ப எல்லாம் லாரி டியூப்பில் காற்றை நிரப்பி அதற்குள் அமர்ந்து கொள்கிறார்கள். ஒரு இரண்டு நாட்கள் உதவியுடன் இறங்கினால் மூன்றாம் நாள் தைரியம் வந்து நாமும் மெதுவாக இறங்கி கை, கால்களை அசைக்கும் போது நன்கு நீச்சல் தெரிந்தவர் நமது அரைநான் கயிறை பிடித்துக்கொண்டு பின்னால் வருவார். ஒரு இரண்டு முறை பிடித்து விட்டு மூன்றாவது முறை விட்டு விட்டு பிடிப்பார். அடுத்த நாள் இந்தபக்க சுவரையும் அந்தப்பக்க சுவரையும் பிடித்து செல்ல வேண்டும் இவ்வாறு ஒரு ஒருவாரம் சென்றால் அழகாக நீச்சல் கற்றுக்கொள்ளலாம்.

இந்த வகை நீச்சல் கிணறு, நீச்சல்குளம், ஏரி, கோயில் குளத்திற்கு மட்டுமே பொருந்தும்.

ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது எப்பபொழுதும் தண்ணீர் செல்லும் பக்கமாகதான் செல்ல வேண்டும். எதிர் திசையில் செல்வதை எதிர் நீச்சல் என்பர் இது மிகவும் கடினமான ஒன்று. ஆற்றிற்கும் ஒரு நல்ல அனுபவமிக்க நீச்சல் தெரிந்த நண்பருடன் செல்லவேண்டும். ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது கால்களை விட இரண்டு கைகளில் ஒவ்வவொரு கையையும் முன்புறம் தூக்கி தண்ணீரை பின்னுக்கு கொண்டு வரைவேண்டும் அப்பொழுது நாம் முன்னுக்குச்செல்வோம். கைகளை எந்த அளிவிற்கு வீசுகிறோமோ அந்த அளவிற்கு நாம் முன்னிற்குச் செல்லலாம். ஆற்று நீச்சல் கற்க குறைந்தது 15 நாட்கள் ஆகும். கைகளை வீசும் போது சுழல் இருந்தாலும் நாம் எளிதாக தப்பிக்கலாம். கடல் நீச்சல் பற்றி நான் இப்பபோது தான் விபரம் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
நீச்சலின் பயன்கள் :
1. நீச்சல் என்பது ஒரு வகையான கலை மட்டும்லல நல்ல உடற்பயிச்சியும் தான்.
2. தினமும் 1 மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் உடலில் உள்ள ஊளைச் சதைகள் குறையும்.
3. கை, கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும்.
4. நன்கு பசி எடுக்கும். கை, காலை குடைச்சல் மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
5. இரத்த ஓட்டம் சீராகிறது.
6. நன்கு மூச்சு விடுவதற்கு நுரையீரல் பகுதி விரிந்து காணப்படும்.
7. நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.
8. சிறந்த முதலுதவிக்கலையாகவும், தற்காப்புக்கலையாகவும் விளங்குகிறது.
9. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க நீச்சல் உதவுகிறது.
10. ஒரே நேரத்தில் தசை, இருதயம், என அனைத்துப்பகுதிகளும் இயங்குகிறது

எனது வேண்டுகோள் :
குழந்தைகள் படிக்கும்போது பள்ளிகளில் நீச்சல் கட்டாயப்பாடமாக்கவேண்டும். இல்லையேல் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நீச்சல் கண்டிப்பாக கற்றுத்தரவேண்டும்.
நோயற்ற சமுதாயத்தை உருவாக்க நீச்சல் கலையும் உதவும்.

21 comments:

  1. Thanks for your valuable information...

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்கள். எனக்கு இதுவரையில் நீச்சல் தெரியாது. அதனால் வருத்தப்படுகிறேன். இனிமேலாவது கற்றுக்கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  3. அருமையான தகவல் சங்கவி. நன்றி.

    ReplyDelete
  4. ஒவ்வொரு அனுபவத்தின் ஊடே பயன் தரும் பதிவுகள்.

    வாழ்த்தும் நன்றியும்.

    ReplyDelete
  5. எத்தனையோ முறை முயற்சி செய்தும் எனக்கு நீச்சல் வரவே இல்லை. :-((((((((((

    ReplyDelete
  6. நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று - அயலகங்களில் குழந்தைகளுக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது -

    நல்வாழ்த்துகள் சங்கவி

    ReplyDelete
  7. பதிவு நன்றாக உள்ளது. அதுசரி உங்கள் ஊர் பெயர் என்ன? நானும் காவிரி கரையோரம் தான்.

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல்
    எனக்கு அலவாங்கு நீச்சல்தான் தெரியும்.

    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .


    அதுதாங்க போட்டவுடன்
    தண்ணிக்கு அடியில போய் கிடக்கிறது........

    ReplyDelete
  9. @ வடிவேல்
    @ பாலாசி
    @ வானம்பாடிகள்
    @ பட்டர்பிளை சூர்யா
    @ சீனா
    @ ராஜலட்சுமி

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  10. //எத்தனையோ முறை முயற்சி செய்தும் எனக்கு நீச்சல் வரவே இல்லை. :-((((((((((//

    முயன்றால் முடியாதது இல்லை ஸ்ரீ....

    ReplyDelete
  11. வாங்க மலர்விழி....

    //பதிவு நன்றாக உள்ளது. அதுசரி உங்கள் ஊர் பெயர் என்ன? நானும் காவிரி கரையோரம் தான்.//

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தார் என்ற கிராமம்...

    ReplyDelete
  12. வாங்க தியா....

    பயனுள்ள தகவல்

    //எனக்கு அலவாங்கு நீச்சல்தான் தெரியும்.

    .
    .
    அதுதாங்க போட்டவுடன்
    தண்ணிக்கு அடியில போய் கிடக்கிறது........//

    இதற்கு எங்க ஊர்ல கடப்பாரை நீச்சல் என்று பெயர்...

    ReplyDelete
  13. இரு பாலரும் கற்றுக்கொள்ளவேண்டிய அடிப்படைப் பாடம் நீச்சல் என்பதை அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்..

    ReplyDelete
  14. நீச்சல்பற்றிய உங்க பதிவு அருமை.

    ஈரோட்டில் சந்தித்தபோது அந்தியூர்ன்னு சொன்ன ஞாபகம்,பின்னுட்டத்தில் சித்தார்ன்னு சொல்லி இருக்கிங்க எதுங்க உங்க ஊர்?

    ReplyDelete
  15. எனக்கு ரெம்ப பிடிச்ச ஒரு விஷயம் நீச்சல் . ஆனா ரெம்ப நாள் ஆச்சு நீச்சல் அடிச்சு ...

    நீங்க கொடுத்து வச்ச ஆளு

    ReplyDelete
  16. Nice & Very Useful Information who tries to follow

    ReplyDelete
  17. வாங்க முனைவர் இரா.குணசீலன்

    வாங்க மீன்துள்ளியான்

    வாங்க ராசு

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!!!

    ReplyDelete
  18. வாங்க சொல்லரசன்

    அந்தியூர் எனது பரம்பரை மற்றும் எனது மனைவி ஊர்

    சித்தார் நான் பிறந்து வளர்நத ஊர்.....

    ReplyDelete
  19. மிக உபயோகமுள்ள பதிவு சங்கவி

    நீச்சல் பற்றி மிக அழகாகக் கூறி இருக்கிறீர்கள்

    எந்த வயதிலும் கற்றுக்கொள்ள முடியுமா

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete