Wednesday, December 16, 2009

வாங்க நாமும் கொலஸ்டிராலை கட்டுப்படுத்தலாம்...... எப்படி?




இன்றைய உலகில் நாம் எல்லாம் படிப்பதற்கும், பணம் சம்பாதிக்கவுமே நமக்கு நேரம் செலவாகிறது. வாரத்தில் 5 நாட்களில் இதற்காகவே செலவிடுகிறோம். வார இறுதி நாட்களில் நன்றாக சாப்பிட்டுவிட்டு டிவி பார்ப்பது தான் வேலை. இப்படி இருந்தால் நமக்கு நிறைய நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறது ஆனால் உடல் பருமன் உடனடியாக வந்து விடுகிறது ஏன்னா நமக்கு உணவுக்கட்டுப்பாடும் இல்லை, உடற்பயிற்சியும் இல்லை இது தான் இன்றைய இளையதலைமுறையின் நடைமுறை.

போன வார விடுமுறையில் நண்பன் சரியாக ஜீரணம் ஆவது இல்லை வா டாக்டரிடம் போகலாம் என்று அழைத்தான் நான் சனிக்கிழமை டாக்டர் 2 மணிக்கு சென்று விடுவார் அப்பாயிண்மெண்ட் வாங்கு என்று சொல்லி கோவையின் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று அப்பாயிண்மெண்ட் வாங்கிவிட்டு ஒரு 12 மணி அளவில் சென்றோம். 1 மணி நேர காத்திருப்பிற்குப்பின் உள்ளே சென்றால் டாக்டர் செக் செய்து விட்டு சரியான உடற்பயிற்சி இல்லை கொலஸ்டிரால் அதிகமாக இருக்கிறது இந்த இளம் வயதில் இதை எல்லாம் குறைக்கவேண்டும் என ஒரு பட்டியலே கொடுத்தார். நண்பனை அனுப்பி விட்டு வீட்டில் வந்து யோசித்தேன் கொலஸ்டிரால்னா என்ன அது ஏன்? எதனால்? எதற்காக? வருகிறது என்று விசாரித்தேன் நான் தெரிந்து கொண்டதை உங்களுக்கும் தெரிவிக்கலாம் என்று தான் இந்தப்பதிவு.....





உடல் பருமன் :

நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவாசிகள்
தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்டிரால்ல நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு இதைதாங்க எழுதியிருக்கேன் படியுங்க எனக்கு தெரிந்த அளவு நான் படித்த அளவு எழுதியிருக்கிறேன் பின்னூட்டத்தில் உங்க விமர்ச்சனத்தை சொல்லுங்க.

கொலஸ்ட்ரால்:

கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது. இந்த உப்புகள் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. உடலானது தேவையான அளவு கொலஸ்டிராலினை உற்பத்தி செய்கிறது. எனவே வேறு கொலஸ்டிரால் உடைய உணவை உண்ணாமல் இருந்தால் நல்லது. ஆனால் உணவில், கொலஸ்டிராலை முழுமையாக தவிர்ப்பதென்பது கடினமானமாகும். ஏனெனில் பல உணவுகள் இதனை தன்னுள் கொண்டுள்ளன. உடலில் அதிகளவு கொலஸ்டிரால் என்பது இதய நோய்கள் போன்ற மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பல காரணிகள் உயர் அளவு கொலஸ்டிரால் ஏற்பட பங்களிக்கிறது, ஆனால் சில செயல்கள் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.

  • கொலஸ்டிரால் அளவு உங்கள் உடலில் உள்ள எச்டிஎல் கொலஸ்டிரால் அளவு (நல்ல கொலஸ்டிரால்) மற்றும் எல்டிஎல் கொலஸ்டிரால் அளவு (கெட்ட கொலஸ்டிரால்) களை பொறுத்துள்ளது. எல்டிஎல் கொலஸ்டிராலைவிட எச்டிஎல் கொலஸ்டிரால் உடலில் அதிகளவு இருப்பது உடலில் உள்ள சுகாதாரமான கொலஸ்டிரால் அளவை பேண மிக முக்கியமாகும்.
  • உடலில் நல்ல கொலஸ்டிராலலின் அளவை அதிகரிக்க, உங்கள் உணவில் எந்த வகையான கொழுப்புகள் உள்ளன என்பதனை கவணியுங்கள், குறிப்பாக ட்ரான்ஸ் பாட் (அன்சாச்சுரேட்டெட் பாட்) டினை தவிர்ப்பது நல்ல வழியாகும்.

  • இதய இரத்தநாள பயிர்ச்சிகளை ஒழுங்காக செய்வது, உணவில் குறைந்த அளவு கொலஸ்டிராலினை எடுத்துக்கொள்வது மற்றும் புகைக்காமல் இருப்பது போன்றவை உடலில் கெட்ட கொலஸ்டிரால் சேர்வதை அகற்றும் பிறவழிகளாகும்.
கொலஸ்டிரால் உள்ளவர்கள் எதை சாப்பிடலாம் எதை தவிர்க்கலாம் :

  • வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள். மொனொ அன்ஸேச்சுரேடெட் எண்ணெய் மற்றும் பாலி அன்ஸேச்சுரேடெட் எண்ணெய்கள், சமையலில் உபயோகிக்க
    வேண்டும். அவற்றையும் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.
  • கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய் போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெயிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.
  • பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.
  • ஒலிவ எண்ணெய் (ஜைத்தூன் எண்ணெய்) யில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ஸ்(antioxidants) உள்ளது. இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது. FDA பரிந்துரைப் படி தினமும் 2 மேஜைக்கரண்டி (23 Gram) ஆலிவ் எண்ணெய் இதயத்துக்கு மிக நல்லதாம்.
  • தேங்காயில் உள்ள fatty Acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையை குறைக்கிறது என சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
    தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இதை தொடக்கூடாது என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது.
    தேங்காய் எண்ணெயில் "medium chain Fatty Acid" அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும் Capric Acid,மற்றும் 'Lauric Acid' ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் போதிய அளவு தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம்.
  • எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்டைஸ்டு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.
  • அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் அதிகம் உள்ளது.
  • முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம்.ஆனால் முட்டையை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஹார்வார்டு பள்ளி தெரிவிக்கிறது.
  • அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.
  • கொட்டை வகைகள்: முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.
  • வால் நட்டில் அதிக அளவு பாலி அன் சேச்சுரேட்டட் அமிலக் கொழுப்பு உள்ளது. இது கொலெஸ்ட்ராலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. பாதாமும் இதைப் போல் குணமுடையது
  • பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.
  • ஸேடுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்
  • எண்ணெயில் பொரித்துண்ணும் உணவுகளை, பொறிப்பதற்கு பதிலாக வேகவைத்ததோ, சுட்டோ, வதக்கியோ சாப்பிடப் பழக வேண்டும்.
  • கொழுப்பு நீக்கிய பால் (skimmed milk) அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் (low fat milk), வெண்ணெய் மற்றும் தயிரை உபயோகிக்க வேண்டும்.
  • டோனட்ஸ் (Dough nuts), மஃப்பின்ஸ்(muffins) போன்ற pastry பாஸ்ட்ரி வகை துரித உணவு(fast food)களைத் தவிர்க்க வேண்டும்.
  • பழவகைகள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள், ரொட்டி, அரிசி மற்றும் பாஸ்டா உணவுகள் உண்ண வேண்டும்.
  • வெண்ணையைத் தவிர்த்து, திரவ நிலையிலான மார்கரின் பயன்படுத்தலாம்.
  • உணவுப் பொருட்களில் உள்ளக் கொழுப்பின் அளவை, அவற்றின் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்து கொள்ளவது கூடுதலாக உள்ளக் கொழுப்பு உணவைத் தவிர்க்க உதவும்.
  • இனிப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • நார்ச்சத்து காய்கறிகள்: நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.
  • ஓட்ஸில்(Oatmeal) கரையக்கூடிய நார் சத்து இருக்கிறது .இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்கிறது.கிட்னி பீன்ஸ், ஆப்பிள், பியர்ஸ், பார்லி போன்றவற்றிலும் இத்தகை கரைக்கூடிய நார் சத்து அதிகம் உள்ளது.
  • வாழைப் பழத்தில் அதிக நார் சத்து உள்ளது -நல்லது
நாம் சாப்பிடும் உணவு வகையில் கொலஸ்டிராலின் அளவு :

* முட்டை (வெண்கரு+மஞ்சட்கரு) -550 (mg /100gm)
* வெண்ணெய் -250 (mg /100gm)
* சிப்பி மீன் (Oyster)-200 (mg /100gm)
* இறால் (Shrimp)-170 (mg /100gm)
* மாட்டு இறைச்சி -75 (mg /100gm)
* ஆட்டிறைச்சி (Mutton)-65 (mg /100gm)
* கோழியிறைச்சி-62 (mg /100gm)
* பனீர் (cottage cheese)-15 (mg /100gm)
* ஐஸ் கிரீம்-45 (mg /100gm)
* நிறைக்கொழுப்புப் பால் (1 குவளை)-34 (mg /100gm)
* கொழுப்பு நீக்கிய பால் (1 குவளை)-5 (mg /100gm)
* பிரெட்-1 (mg /100gm)
* ஸ்போஞ்ச் கேக்-130 (mg /100gm)
* சாக்லேட் பால்-90 (mg /100gm)
நாமும் இதைப்பின்பற்றினால் கொலஸ்டிரால் இல்லாத மனிதனாக வாழ முயற்சிக்கலாமே.......

29 comments:

  1. அருமையான பதிவு .
    இப்படியான பதிவுகளை வாசிக்க காத்து இருக்கிறோம் .
    இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான விடயங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கி இருக்கிறீர்கள் .
    நன்றி .

    ReplyDelete
  2. //பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது.//

    ஹோட்டலுக்கு போகவே கூடாது.
    நடைபாதை கடைகள் உணவை சாப்பிடக்கூடாது.சரிதானே நண்பா?

    இந்த நல்ல இடுகையை எல்லோரும் ஒருமுறை படிக்க வேண்டும்.அருமை !!!

    ReplyDelete
  3. ரொம்ப அருமையான பதிவு ! நான் கூட வீட்டில் ஒரு தடவை use பண்ணும் எண்ணையை அடுத்ததடவை பயன் படுத்துவது இல்லை

    ReplyDelete
  4. இந்த காலகட்டத்திற்கு ஏற்ற பதிவு. பயனுள்ள தகவல்களை எடுத்துகாட்டியுள்ளீர்கள்...தங்களின் சென்ற இடுகையிலே சொன்னதுபோல் இயற்கை காய்கறிகள் பழங்கள் போன்றனவற்றை நமது அன்றாட உணவில் பயன்படுத்தினாலே போதும் என்றே நினைக்கிறேன். மேலும் உடற்பயிற்சியும் அவசியம்.

    நல்ல சிந்தனை இடுகை....

    ReplyDelete
  5. எனக்கும் கொழுப்பு அதிகம் என்று பரிசோதனை முடிவுகள் சொல்கிறது. பயனுள்ள இடுகை. நன்றி

    ReplyDelete
  6. நீங்க பேசாம டாக்டரா ஆயிருந்திருக்கலாம் .. மிகவும் பயனுள்ள இடுகை ..
    நிறைய தகவல்கள் .. இதையெல்லாம் எங்கிருந்து பிடிக்கிறீர்கள் ?

    தொடர்ந்து எழுதுங்கள் ,
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மிக அருமையான பதிவு.
    எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.

    ReplyDelete
  8. உங்களுக்கு ஒரு விருது அறிவிசிருக்கேன். தயவு செய்து என் ப்ளாக் வந்து பார்க்கவும்

    ReplyDelete
  9. மக்களின் ஆரோக்கியத்தின் மேல் உள்ள அக்கறையுடன் ஒரு நல்ல பதிவு.

    ReplyDelete
  10. ரொம்ப அவசியமான உபயோகமான பதிவு !!! தொடர்ந்து இதுபோல எழுதுங்கள் படிக்க காத்து இருக்கிறோம் !!!

    ReplyDelete
  11. நல்ல பதிவு.

    திருப்பூரிலிருக்கும் நண்பர் ராமனைத் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா பிரச்சனையும் சரியாகிடும். :)

    ReplyDelete
  12. //அருமையான பதிவு .
    இப்படியான பதிவுகளை வாசிக்க காத்து இருக்கிறோம் .
    இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான விடயங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கி இருக்கிறீர்கள்//

    வருகைக்கு நன்றி பவி.....

    ReplyDelete
  13. //ஹோட்டலுக்கு போகவே கூடாது.
    நடைபாதை கடைகள் உணவை சாப்பிடக்கூடாது.சரிதானே நண்பா?//

    நண்பரே சரிதான்...

    ReplyDelete
  14. //ரொம்ப அருமையான பதிவு ! நான் கூட வீட்டில் ஒரு தடவை use பண்ணும் எண்ணையை அடுத்ததடவை பயன் படுத்துவது இல்லை//

    வாங்க மலர்.......

    நல்ல பழக்கம்......... Keep it up

    ReplyDelete
  15. //இந்த காலகட்டத்திற்கு ஏற்ற பதிவு. பயனுள்ள தகவல்களை எடுத்துகாட்டியுள்ளீர்கள்...தங்களின் சென்ற இடுகையிலே சொன்னதுபோல் இயற்கை காய்கறிகள் பழங்கள் போன்றனவற்றை நமது அன்றாட உணவில் பயன்படுத்தினாலே போதும் என்றே நினைக்கிறேன். மேலும் உடற்பயிற்சியும் அவசியம்.//


    இயற்கை காய்கறிகளே போதும் பாலாசி....
    கொஞ்சம் கொலஸ்டிரால் உள்ள பொருட்களையும் தவிர்க்கலாமே.........

    ReplyDelete
  16. //எனக்கும் கொழுப்பு அதிகம் என்று பரிசோதனை முடிவுகள் சொல்கிறது. பயனுள்ள இடுகை. நன்றி//

    வருகைக்கும் என்னை அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி நண்பரே.......

    ReplyDelete
  17. //நீங்க பேசாம டாக்டரா ஆயிருந்திருக்கலாம்//

    ஐய்யய்யோ நோயாளிகள் எல்லாம் பாவம் நண்பா.....

    ReplyDelete
  18. //மிக அருமையான பதிவு.
    எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.//


    உங்களுக்கு பயன் அளிப்பது சந்தோஷமாக இருக்கிறது

    வருகைக்கு நன்றி சரவணன்...

    ReplyDelete
  19. //உங்களுக்கு ஒரு விருது அறிவிசிருக்கேன். //



    உங்கள் விருதுக்கு நன்றி மோகன்........

    ReplyDelete
  20. //மக்களின் ஆரோக்கியத்தின் மேல் உள்ள அக்கறையுடன் ஒரு நல்ல பதிவு.//


    வாங்க சித்ரா வாங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி......

    ReplyDelete
  21. //ரொம்ப அவசியமான உபயோகமான பதிவு !!! தொடர்ந்து இதுபோல எழுதுங்கள் படிக்க காத்து இருக்கிறோம் !!!//

    நிச்சயமாக எழுதுவேன் ஆழிமழை.......

    ReplyDelete
  22. //திருப்பூரிலிருக்கும் நண்பர் ராமனைத் தொடர்பு கொள்ளுங்கள். எல்லா பிரச்சனையும் சரியாகிடும். :)//

    வருகைக்கு நன்றி விக்னேஷ்வரி.....

    நிச்சயமாக ராமனை தேடி தொடர்புகொள்கிறேன்...

    ReplyDelete
  23. பதிவு அருமை ... இந்த காலத்தில எல்லோருக்கும் இந்த பிரச்சினை இருக்கு ,,
    நண்பர் ஒருவர் பூண்டு மாத்திரை சாப்பிட்டு கொழுப்பை கட்டுபடுத்தி உள்ளார்.

    அவர நாங்க கிண்டல் பண்றது " என்னையா கொழுப்பு மாத்திரை சாப்பிட்டாச்சா " என்று

    அன்புடன்
    மீன்துள்ளி செந்தில்

    ReplyDelete
  24. கொலஸ்ராயில் பதிவு அருமை.

    அப்ப சூடான வெண்ணீர் குடித்தால் கூட கொலஸ்ராயில் நாளடைவில் குறையும்.

    ReplyDelete
  25. Very interesting observations! But with just food alone one cannot control cholestrol levels. One also needs to regularly exercise. Perhaps,some write up on this aspect would also help.

    ReplyDelete
  26. nalla pathivu, arumaiyana karuthukkal. vazhthukkal

    ReplyDelete
  27. நல்ல பதிவு
    எண்ணையில் பொரித்த பண்டங்கள் தவிர்க்கனும்
    பிரீ ஹீட் ஆயில் வனஸ்பதி [டால்டா நெய் க்கு தடா
    கொழுத்தவனுக்கு கொள்ளுனு சொல்வாங்க.வாரம் ஒருமுறை கொள்ளு சாப்பிடலாம்.ஃபைல்ஸ் கம்ப்லெய்ண்ட் உள்ளவங்க சாக்கிரதை.
    ஓட்ஸ் போன்ற ஃபைபர் ஃபுட் நார்ச்சத்துள்ள காய்கறிகள் நல்லது
    உடற்பயிற்சி மிக மிக மிக முக்கியம்

    ReplyDelete
  28. நாக்கை கட்டுப்படுத்தினாலே போதும்ங்கறிங்க. :)

    ReplyDelete
  29. anbarkalae,
    POONDU/Garlic migavum nallathu
    vazhga valamudan
    suren

    ReplyDelete