Wednesday, June 15, 2011

ஓடுற பாம்பை பிடிக்கும் வயதில்...


ஓடுகிற பாம்பை பிடிக்கும் வயது இந்த வாக்கியத்தை ஒவ்வொரு வீட்டிலும் அதிகமாக பாட்டிகள் பயன்படுத்துவார்கள்.

எனது 7 வயது முதல் 12 வயது வரை வீட்டிற்குள் மின்சாரம் இல்லாத சமயத்தில் போக மாட்டேன் அதற்கு எங்க வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒடுற பாம்பை பிடிக்கற வயசுல இருட்டுக்குள்ள போக மாட்டேன்னு சொல்றாம்பாரு என்று திட்டுவார்கள். அப்புறம் போக போகஅம்மாவின் துணையுடன் இருட்டிய இடங்களுக்கு சென்று பின் பயம் நீங்கி இருட்டினாலும் பயம் இல்லாமல் செல்ல பழகிவிட்டேன்.

இப்பதிவில் எனது சிறுவயதில் அறிந்தும் அறியாமலும் செய்து குறும்புகளை பதிவாக்கி உள்ளேன்..



பயம்

எனது சிறுவயதில் வயதில் இருட்டைக்கண்டால் பயம், தனியாக ஆத்துக்குப்போனால் பயம், மீசை பெரியாதாக உள்ள மாமவைக்கண்டால் பயம், இரவில் நாய், ஓநாய் குரைத்தால் பயம், சைக்கிளில் வேகமாக  போனால் பயம், சுடுகாட்டுப் பக்கம் போனால் பயம் (பின்னாட்களில் எனது பொழுது போக்கு மையமே இதுதான் இது தனிக்கதை) பாம்பு சட்டையைக் கண்டால் பயம், கோயில்ல மினி சாமியப்பார்த்தா பயம், இடி இடித்தால் பயம், இரவில் தனியாக நடந்தாலும், அம்மாவுடன் நடந்தாலும் பயம், கிணற்றை எட்டிப்பார்த்தால் பயம், குழியைப்பார்த்தால் பயம், நெருப்பைக் கண்டால் பயம், குடிகாரத்களை கண்டால் பயம்  இப்படி எதைக்கண்டாலும் பயந்தே இருந்தேன். 

எனது பக்கத்து வீட்டுல் உள்ள பாட்டி ஒடுற பாம்பை பிடிக்கற வயசில ஏன்டா இப்படி இருக்கறன்னு என்ன கிண்டல் அடிப்பார். பின் பெற்றோர்கள், ஊர் அண்ணன்கள் இவர்களிடம் எல்லாம் பழக பழக எனது பயத்தை கொஞ்சம் கொஞ்சமா விலகியது. நான் 6ம் வகுப்பு படிக்கும் போது பஸ்ஸில் போய் தான் படிக்கனும் அந்த வயசிலேயே நான் பஸ்ல படிக்கட்டுல தொங்கிட்டுத்தான் போவேன் அந்த அளவிற்கு பயம் அறியாமல் பல தவறுகள் செய்வேன்..

குறும்பு

8 வது வரை நான் வீட்டில் இருந்து தான் படித்தேன் என்னுடைய தைரியமும், நண்பர்களிடம் வம்பு இழுக்கறத பார்த்துவிட்டு வீட்டில் குமுறு குமுறுன்னு குமுளுவாங்க.

நான் வீட்டில் இருக்கும் போது விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாடிவிட்டு காவிரி ஆற்றுக்கு குளிக்கச் செல்வோம் அப்படி ஒரு நாள் குளிக்கும்போது யானை பாறை என்று அழைப்பார்கள் அங்கிருந்து சொருவல் அடிக்கும் போது தள்ளி உள்ள சுழலில் சிக்கிக்கொண்டேன் சுழல் சுற்றி இழுக்கும் போது எனது காலை பக்கத்தில் இருந்த பாறையில் உந்தியதால் பிழைத்தேன் அப்ப இருந்து ஆறு சுழல் மீது எனக்கு இருந்த பயம் போய்விட்டது. அதற்கு பின் வேண்டும் என்றே சுழுலுக்கு சென்று பல முறை தப்பி வந்துள்ளேன்.

எனக்கு நாயைக்கணடால் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது நாய்க்கு பக்கத்துல போய் அதுகிட்ட விளையாட்டுக்காட்டி அப்படியே நாயின் இரண்டு முன்கால்களைப் பிடித்து சுத்தி வீசுவது அப்போது நாய் துள்ளி விழுந்து நம்மைப் பார்த்து கத்தும் ஆனால் கிட்ட வராது. அதற்கு பின் நம்மைப்பார்க்கும் போதெல்லாம் கத்து கத்துன்னு கத்தும். ஒரு நாள் இரவில் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்க்கப் போது என்னால் பாதிக்கப்பட்ட இரண்டு நாய்கள் என்னைப்பார்த்து கத்த பக்கத்து வீட்டில் திருடன் என நினைத்து சத்தம் போட ஊர் கூடி என்னைப்பார்த்து சிரித்தது. (நான் சைட் அடிச்ச பொண்ணும் சிரித்தது) அதில் இருந்து அந்த குறும்பை விட்டுவிட்டேன்.

புரட்டாசி, சித்திரை மாதங்களில் சித்தேஸ்வரன் மலைக்கு நண்பர்களுடன் போவேன் அப்ப காட்டுக்குள்ள போய் கொய்யா, பலாப்பழம் எல்லாம் மலை வாசிகளுக்கு தெரியாமல் பறித்து கூட்டாக எப்பவுமே நண்பர்களுடன் தான் சாப்பிடுவேன். ஒரு முறை நானும் நண்பனும் பழாப்பழத்தை பறிக்கும் போது மலைக்காரனும் அவன் மனைவியும் பார்த்து அடிக்க வர அவுங்க இரண்டு பேர் மேலேயும் பலாப்பழத்தை வீசிவிட்டு கீழே தள்ளி விட்டு விட்டு வந்மு விட்டோம் மலைக்காரர்கள் எல்லாம் சேர்ந்து எங்களை தேட அவர்களுக்கு தெரியாமல் பாறைகளில் ஒளிந்து ஒளிந்து வரும் போது கரடியைப்பார்த்து பின்னங்கால் பிடறி அடித்து ஓடியது மறக்க இயலாத நினைவு.

டிவியில் நாம் இப்பவெல்லாம் பார்க்கும் கேண்டிட் கேமரா நான் 1988லேயே செய்துவிட்டேன். எங்கள் ஊரில் நரசுஸ் காபித்தூள் பாக்கெட் கவரில் செம்மண் நிரப்பி ரோட்டில் வைத்து விடடு நாங்க பஞ்சாயத்து கிணறு மேல் உட்கார்நது கொள்வோம் அதை எடுக்கும் ஆட்கள் எல்லாம் அதை மறைத்து கொண்டுபோவதை பார்த்து சிரித்து மகிழ்வோம். ரொம்ப தெரிஞ்சவுங்களாக இருந்தால் என்னக்கா மறைத்து எடுத்துட்டு போறீங்க என்று கிண்டல் அடித்து சிரிப்போம். ஒரு சிலர் எடுக்கும் போது பாக்கெட் உடைந்து மண்ணாக கீழே விழும் மணலைப்பார்த்ததும் திரு திருவென முழிப்பார்கள் அதைப்பார்க்கும் பொழுது எங்களுக்கு ஒரு ஆனந்தம்.

சைக்கிள் பஞ்சர் பண்டுவது விளையாடுகிறேன் என்ற பேரில் நண்பனின் சைக்கிளை பஞ்சர் செய்து அவன் வேகமாக சைக்கிளை எடுத்து ஓட்டும் போது விழந்து மண்டையை உடைத்தது. 

இப்படி பயங்கர குறும்பு பண்டும்போது தான் எங்க பள்ளியில் குறும்பு செய்கிறான் அரசு பள்ளி வேண்டாம் தனியார் கிறிஷ்டின் பள்ளியில் நல்லா அடிக்கிறாங்களாம் அங்க கொண்டு போய் சேர்க்கலாம் என்று எங்கப்பா அங்கே சேர்த்தார்.

அது ஒரு நடுநிலைப்பள்ளி அங்க என்ன அடி பின்னு பின்னுன்னு பின்னி ஒருவழியா படிக்க வெச்சாங்க.. இங்க தான் எனக்கு மறக்க முடியாத ஆசான்கள் சின்னப்பன், ரவிக்குமார், பெலிக்ஸ், குமார், லூர்து, சார்லஸ் போன்றவர்கள் கிடைத்தார்கள். 

அப்பள்ளியில் 8 வது படிக்கும் போது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்  முதன் முதலா அங்க தான் என்னை டூர் கூட்டிட்டடுப்போனங்க. அப்போது கிராமத்தில் இருந்து டூர் போவது பெரிய விசயம் போய்ட்டு வந்து அளப்பானுக பாருங்க காது கிழிந்திடும்.

முதன் முதலாக சுற்றுலா சென்ற இடம் கோவை.  கோவையில் மருதமலை, பொட்டானிக்கல் கார்டன், மைக்கெல் ஸ்கூல், பேரூர் முக்கியமா ஏரோப்பிளேன் எல்லாம் பார்த்தேன். அந்த டூரில் முதல் முறையாக ஆடிய ஆட்டம் மறக்க இயலாது.

அங்கு படிக்கும் போது வாங்கிய அடியில் குறும்பை மூட்டை கட்டி வைத்து விட்டேன். அங்க படிப்பு முடிச்சு 9 வது கோபிக்கு ஹாஸ்டல் வந்துவிட்டேன். இங்க அடிச்ச கூத்துக்கு அளவில்லை.

இரவில் பீஸ் கேரியரை பிடுங்குவது, சமையல்காரன் தூங்கும் போது சாக்கு அடி போடுவது, சுவர் ஏறி முதன் முதலாக வள்ளி படம் பார்த்தது, பீடி குடிச்சு அடி வாங்கியது, கேங் சேர்ந்து இரவில் சக மாணவர்களை அடிக்கப்போவது, வார்டன் கந்தசாமியிடம் அடிவாங்குவது, அவரை கிரிக்கெட் விளையாடும்போது பந்தால் தாக்கியது, முதன் முதலாக காதலில் விழந்தது என பல உண்டு. இன்றைக்கு நினைத்தாலும் நெஞ்சில் இருந்து அகலவில்லை அந்த சந்தோச தருனம்.

நிச்சயம் இதைப்படித்த உங்களுக்கு உங்கள் சிறுவயது ஞாபகம் வரும். அசை போடுங்கள் உங்கள் நினைவுகளை சந்தோசமாக...

6 comments:

  1. என் குழந்தை கால பருவத்துக்கு சென்ற வந்துவிட்டேன்...

    ReplyDelete
  2. தமிழ் மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சி...

    ReplyDelete
  3. சுகமாய் இருந்தது உங்கள் நினைவலைகள். நடுநடுவே நீங்கள் செய்த விஷயங்கள் என்னையும் என் பள்ளிப் பருவத்தினை நினைத்து சிரிக்க வைத்தது... நன்றி நண்பரே.....

    ReplyDelete
  4. குறும்புகள் அருமை... நீங்க சொன்ன பயத்துல பாதி இப்பவும் எனக்கு இருக்குங்க... எல்லாத்தையும் விட உங்கள் மீட்டல்களோடு நனையும் என் நினைவலைகளை மீட்டி பார்க்க செய்துவிட்டீர்கள்.. அழகான ஞாபகங்கள் சகோ.

    ReplyDelete
  5. உங்கள் நினைவுகள் சுகம்,

    ReplyDelete
  6. "இப்படி பயங்கர குறும்பு பண்டும்போது தான் எங்க பள்ளியில் குறும்பு செய்கிறான் அரசு பள்ளி வேண்டாம் தனியார் கிறிஷ்டின் பள்ளியில் நல்லா அடிக்கிறாங்களாம் அங்க கொண்டு போய் சேர்க்கலாம் என்று எங்கப்பா அங்கே சேர்த்தார்.

    அது ஒரு நடுநிலைப்பள்ளி அங்க என்ன அடி பின்னு பின்னுன்னு பின்னி ஒருவழியா படிக்க வெச்சாங்க.. இங்க தான் எனக்கு மறக்க முடியாத ஆசான்கள் சின்னப்பன், ரவிக்குமார், பெலிக்ஸ், குமார், லூர்து, சார்லஸ் போன்றவர்கள் கிடைத்தார்கள்.

    அப்பள்ளியில் 8 வது படிக்கும் போது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் முதன் முதலா அங்க தான் என்னை டூர் கூட்டிட்டடுப்போனங்க. அப்போது கிராமத்தில் இருந்து டூர் போவது பெரிய விசயம் போய்ட்டு வந்து அளப்பானுக பாருங்க காது கிழிந்திடும்.

    முதன் முதலாக சுற்றுலா சென்ற இடம் கோவை. கோவையில் மருதமலை, பொட்டானிக்கல் கார்டன், மைக்கெல் ஸ்கூல், பேரூர் முக்கியமா ஏரோப்பிளேன் எல்லாம் பார்த்தேன். அந்த டூரில் முதல் முறையாக ஆடிய ஆட்டம் மறக்க இயலாது."
    Hai Sathish, I am so much happy to see you here.. But I can't remember you. I am Loganathan from Guruvareddiyur. I also studied in the same St. Ignatius Middle School, Budapadi. You were in first batch or second batch of the school? Which is your native? Again and again very very happy to meet you here....Unfortunately I sent request from facebook by thinking we can see what will happen.. but really I am very happy to meet one of my schoolmate after many decades.....Love you da. keep in touch.

    ReplyDelete