Thursday, June 16, 2011

என் தேவதை...(சிறுகதை)


“சத்தியமா உன்ன நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று சொன்ன என் தேவதையை உற்றுப் பார்த்தேன்.பொய் சொன்னதாக தெரியவில்லை. பத்து வருட காதல், விவரிக்க வார்த்தையில்லை.எங்கே நிகழ்ந்தது தவறு என்பதை யோசிக்கும் முன்னமே அவள் என்னை விலகி நடக்க ஆரம்பித்திருந்தாள்.அவள் வீட்டு நாய்க்குட்டி போல அனிச்சை செயலாய் அவள் பின்னே நடக்க ஆரம்பித்திருந்தேன்…

“ரம்யா please என்னன்னு தான் சொல்லிட்டு போயேன்” என்ற என் குரல் எனக்கே சரியாய் கேட்கவில்லை. என் தேவதை என்னை கடந்து main கேட்டை அடையும் போது தான் சுய நினைவு வந்தது அவள் hand bag என்னிடம் இருந்தது. அவளுக்கும் அது தோன்றியிருக்க வேண்டும். கோபம் தணியாத அதே முகத்துடன் எனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். கோபத்தில் அவள் முகம் இன்னமும் சிவப்பாய் இருந்தது. மோதலில் ஆரம்பித்த எங்கள் காதல் மோதலிலே முடியுமென்று கனவிலும் நினைக்கவில்லை. “என் bagஅ குடு” என்று கை நீட்டியபடி வந்தவளை என் கைக்கொண்டு தடுத்து “ரம்யா please எதுன்னாலும் உட்கார்ந்து பேசலாம் வா” என்றேன். “அப்போ இவ்ளோ நேரம் பேசினதெல்லாம் செவிடன் காதில ஊதின சங்கா… நீயெல்லாம் திருந்தவே மாட்டே டா” என்று இன்னமும் கோபம் குறையாத முகத்துடன் பேசிவிட்டு, அவள் bagயை என்னிடமிருந்து பிடுங்கி கொண்டு விலகி நடந்தாள்…

என் நினைவுகள் 10 வருடங்களுக்கு முன்னே போனது. +1 ல் என்னுடைய ஸ்கூலில் அவள் சேர்ந்திருந்தாள். 10ல் நான் தான் school first. ஆனால் +1ல் ஒரு term test, quaterly, half yearly exam என எதிலும் நான் class first வரவேயில்லை. எல்லாவற்றிலும் அவள் தான் first நான் second. இயல்பான் ஒரு கோபம் அவள் மீது வந்தது. ஒல்லியாய் ஒரு உருவம், கொஞ்சமாய் தலைமுடி, sharp ஆய் கண்கள். பார்த்தவுடனே அவளை எனக்கு பிடிக்காமல் போயிற்று. “அவள் மூஞ்சியும் முகரையும்” என்று அவள் கண்ணெதிரே comment செய்ததுண்டு. ஆனால் அவள் கவனம் எப்போதுமே படிப்பில் மட்டும் தான்.

என்ன தான் அவள் class first வாங்கினாலும் எப்போதுமே நான் தான் mathsல் first. ஒரு நாள் அவள் என்னிடம் வந்து “சஞ்சய் if you dont mind, உங்கிட்ட ஒரு 2 minutes பேசலாமா” என்றாள். “என்ன” என்றேன் அவள் முகத்தைப் பார்க்காமலே. ” நான் maths ல கொஞ்சம் weak, எனக்கு maths சொல்லி கொடுப்பியா” என்றாள். ” hey sorry நான் யாருக்கும் சொல்லிக் கொடுக்கமாட்டேன்” என்று மூஞ்சில் அடித்த மாதிரி சொல்லிவிட்டேன். எனக்கே தெரிந்தது first rank எடுக்க முடியாத கோபத்தை காட்டுகிறேன் என்று. ” ஓ அப்படியா சாரி” என்றபடி அவள் இடத்திற்கு சென்றாள்…

அதுக்கு பிறகு அவள் என்னிடம் எதுவும் பேசவில்லை. ஒரு இரண்டு மாதம் போயிருக்கும் திடீரென ரம்யா என்னிடம் கோபத்துடன் பேசினாள். “ஏன் அன்னைக்கு அப்படி எங்கிட்ட சொன்ன, எனக்கு தெரியும் உன் friends க்கு நீ maths ல ஹெல்ப் பண்றே னு, சொல்லிக் கொடுக்க இஷ்டமில்லைன்னு சொல்லியிருக்கலாம்ல. Its ok நீ first rank வாங்கலைன்னு கஷ்டம் உனக்கு. Don’t worry இந்த annual exam ல நீ தான் first வருவே +2 ல ம் நீ தான் first வருவே. நீ நினைச்சா மாதிரி GCT, Computer Science தான் கிடைக்கும் all the best” என படபடவென பேசிவிட்டு நகர்ந்தாள்….

எனக்கோ பயங்கர ஆச்சரியம் இவளுக்கு எப்படி இதெல்லாம் தெரியுமென்று. விசாரித்து பார்த்ததில் விஷ்ணு தான் இதையெல்லாம் சொன்னது தெரிந்தது. அடுத்த ஒரு மாசத்தில் annual exam. எனக்கு துளி கூட நம்பிக்கையில்லை நான் class first/school first வருவேன் என்று அதுக்கு தான் ரம்யா இருக்காளே. ஒரு மாத லீவில் அவளை சுத்தமாக மறந்துவிட்டேன்.

Annual result வந்த அன்று, நானும் விஷ்ணுவும் schoolக்கு சென்றோம். அங்கே எனக்கான ஆச்சரியம் காத்திருந்தது. school entranceல் ராகுல் தான் என்னை முதலில் பார்த்து எனக்கு wish பண்ணினான். “Congrats டா மச்சான் நீ school first டா” என்றான். என்னால் நம்பவே முடியவில்லை.
அப்போது ரம்யா cycle ஐ தள்ளியபடி என்னருகில் வந்தாள். “Sanjay, you made it, congrats” என்றாள் சிரித்தபடி… எப்படி இவளால் தோல்வியை தாங்கிக்கொள்ள முடிகிறது ? என் character க்கு just opposite ஆக இருந்தாள். சின்ன தோல்வியைக் கூட தாங்கி கொள்ள முடியாது என்னால். I felt guilty.

+2 classes ஆரம்பித்து ஒரு வாரம் போயிருக்கும். chemistry labக்கு ரெண்டு ரெண்டு பேரா team form பண்ணாங்க… என்னவோ திடீர்னு ரம்யா தான் lab ல என் pair ஆ வரணும்ன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டேன், life லயும் அவ தான் என் pair ன்னு தெரியாமலே…..
நான் வேண்டின மாதிரியே ரம்யா தான் எனக்கு labmate ஆ வந்தா. இதுல ஆச்சரியப்பட ஒன்னுமே இல்ல. என் roll no 4 அவளது 28 class strength 48. Divide பண்ணா 24, obvious ஆ அவ தான் வருவா… mindக்கு தெரிஞ்சது மனசுக்கு அப்போ தெரியல….

மீண்டு(ம்) வந்தது என் நினைவுகள். அவள் போய் இரண்டு மணி நேரம் இருக்கும். எப்போதும் ஒரு நிமிடத்திற்கு 5 முறையாவது SMS அனுப்பும் அவளிடமிருந்து ஒரு SMS கூட வரவில்லை. என் எந்த அழைப்புக்கும் பதில்லை. பேசாமல் அவள் இருக்கும் hostelக்கே போனாலென்ன என்று தோன்றியது. பல்சரை start செய்தேன். 10 நிமிடத்தில் அவள் ஹாஸ்டலில் என் வண்டி நின்றது. “I am outsite your hostel. Please come down darling” என்று அனுப்பினேன். பதில் வராது என தெரியும். ஆனால் என்னைப் பார்க்க வருவாள் என ஒரு நப்பாசை தான்.

ஒரு 10 நிமிடம கழித்து ரம்யா வெளியே வந்தாள். ரொம்ப அழுது கண்ணெல்லாம் வீங்கியிருந்தது, இவ்வளவு அவள் அழும் அளவு நான் தவறொன்றும் செய்யவில்லை. “என்ன வேணும் இப்போ உனக்கு, நான் நிம்மதியா இருக்கிறது உனக்குப் பிடிக்கலையா.. எங்கயாவது கண் காணாத இடத்திக்கு போயிரு ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.

இவ (பொண்ணுங்களே) இப்படித்தான் சின்ன சின்ன விசயத்திற்கு எல்லாம் தாம் தூம் என குதிப்பார்கள். இவங்கள கடவுளால கூட புரிஞ்சுக்க முடியாது, “அப்படி என்னடி நான் தப்புப் பண்ணிட்டேன். என்னமோ பெரிசா சொல்ற. நீ பண்றத விடவா பண்ணிட்டேன். உன் தப்பு உனக்கு பெரிசா தெரியல. நான் பண்ணது மட்டும் பெரிசா தெரியுதா. என்னைப் புரிஞ்சுக்காதவ ஒண்ணும் எனக்கு தேவையேயில்லை. Good bye” திரும்பிக் கூட பார்க்காமல் என் வண்டியை start செய்து கிளம்பிவிட்டேன்.

என் room க்கு வந்த பிறகு, என் mobile ஐ தூக்கி எறிந்தேன் கோபத்தில் . அது எங்கே விழுந்தது என கூட பார்க்கவில்லை. சாப்பிட கூட தோன்றவில்லை. வெறும் தரையிலே படுத்துக்கொண்டேன். தனிமையை போல ஒரு கொடுமை இல்லை. அதும் நமக்கு பிடித்தவர்கள் இல்லை என்றால் வாழ கூட தோன்றாது.

எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. காலையில் சுள்ளென்று வெயில் பட்ட போது சுரணை வந்தது, Mobile ன் ஒவ்வொரு parts யும் தேடி எடுத்து switch on செய்தேன். 4 SMS வந்திருந்தது. ஒன்றை தவிர மற்றது எல்லாம் ப்ரியாவிடமிருந்து. “Sorry da sanju” என்று ஆரம்பித்து ஏன் mobile ல switch off பண்ணிருக்கே, “I knew its my mistake i m really sorry da. I didnt mean to hurt you. Please …. ” படித்து முடிக்கும் முன்னமே Darling Calling என்று ப்ரியாவின் picture display ஆனது.

சுரத்தே இல்லாமல் “என்ன” என்றேன். “எப்படிடா இருக்கே.. இன்னும் கோபம் போகலையா. Night full ஆ நா தூங்கவேயில்ல தெரியுமா நீ எப்போ mobile switch on பண்ணுவேன்னு திரும்ப திரும்ப டயல் பண்ணிட்டே இருந்தேன்”. நான் அவளிடம் செய்ததை அவள் எனக்காக செய்திருந்தது எனக்கே சற்று ஆச்சரியமாய் இருந்தது. நானாவது தூங்கிவிட்டேன் அவள் நைட் fulla தூங்காமல் ஒரு கிறுக்கி மாதிரி திரும்ப திரும்ப dial பண்ணிருக்கிறாள். நினைக்க நினைக்க நான் ஏன் இப்படி பண்ணினேன் என்று என் மீது கோபம் கோபமாய் வந்தது. அவளும் night சாப்பிட்டு இருக்கவில்லை.

“Sorry மா” என்றேன், அதற்கு மேல் என்ன பேசுவது என்றே தெரியவில்லை, 5 நொடி மெளனத்திற்கு பிறகு, “சரி போய் சாப்பிடு என்றேன்” “இல்ல உன்ன நேர்ல பார்த்தா தான் சாப்பிடுவேன், என்னப் பார்க்க வா” என்றாள். நேற்று “என் கண் முன்னாடி இருக்காத போ” என்று துரத்தியது இவள் தானா ???

“சரி 10 நிமிசத்தில ரெடியா இரு வரேன்” என்றபடி கிளம்ப தயாரனேன். அடுத்த 1/2 மணி நேரத்தில் அவளைப் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்த sky blue tops ம் black jean ம் அணிந்திருந்தாள். “ஐயா ரொம்ப சுறுசுறுப்பு” என்றபடியே என் பைக்கில் அமர்ந்தாள். “எங்க போலாம்” என்றேன். “நேத்து போன அதே beach, ஆனா no fights” என்றாள் கண்ணடித்தபடியே..

எதற்காக சண்டை அப்பறம் சமாதானம் என்று அவள் கடைசி வரை சொல்லவேயில்லை. நானும் கேக்கவேயில்லை.

8 comments:

  1. இயல்பான காதல் கதை. ஆனாலும் திரும்ப திரும்ப கேட்டாலும் காதலின் இனிமை மாறுவதில்லை.. அழகான கதை... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //எதற்காக சண்டை அப்பறம் சமாதானம் என்று அவள் கடைசி வரை சொல்லவேயில்லை. நானும் கேக்கவேயில்லை.//

    அதானே.

    நல்ல சிறுகதை பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. உங்கள் தளத்தில் திடீரென்று அழகான காதல் கதை.
    ரசித்தேன்.விடையில்லாமல் முடித்ததுதான்....பெண்களின் மனதிற்குள் என்ன இருக்குமென்பதை அறியமுடியாது என்பதைச் சொல்லி முடித்திருக்கிறீர்கள் போலும் !

    ReplyDelete
  4. தேவதையை புரிஞ்சிக்கமுடியலையா..:)

    ReplyDelete
  5. கதை ஓக்கே.. கதைல வந்த தேவதை உங்க எத்தனாவது தேவதை ? ஹி ஹி டீட்டெயில் ப்ளீஸ்

    ReplyDelete
  6. தேவதை என்ற தலைப்புக்கேற்ற அந்தப் படம் வெகு அழகு!

    ReplyDelete
  7. a gud one,luvly one and true abt women

    ReplyDelete