Thursday, June 9, 2011

அஞ்சறைப்பெட்டி 09.06.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
இலங்கையில் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்ஷே அரசு மீது, போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை, போர்க் குற்ற விசாரணை செய்வதற்கு, இந்திய அரசு சார்பில் வற்புறுத்த வேண்டும்.

இலங்கையின் மீது பிற நாடுகளோடு சேர்ந்து இந்தியாவும் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என, தமிழக முதல்வரால் சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது வரவேற்கத்தக்கது.தமிழகம் மற்றும் உலககெங்கும் வாழும் தமிழர்கள் மனதில் இத்தீர்மானம் நம்பிக்கையை தந்துள்ளது.

இலங்கை தமிழருக்காக கவர்னர் உரையில் எதுவும் இல்லை என்று பதிவுலகில் ஒரு சில பதிவர்கள் தோல்வியை தாங்க முடியாமல் குமுறி பதிவிட்டு இருந்தனர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என பார்ப்போம்...

...............................................................................................

நடுநிலையாளர்கள் நடுநிலையாளர்கள் என்று பதிவிடுகின்றனர் அந்த பதிவை படித்து நாம் எதாவது கருத்து சொன்னால் நான் நடுநிலையாளர்களுக்காக எழுதினேன் நீங்கள் அதிமுக என்கின்றனர். அவருக்கு நான் சொல்லிக்கொள்வது நடுநிலையாளர்கள் மட்டுமின்றி அவரின் கட்சிக்காரர்களே ஓட்டு போட்டதால் தான் அதிமுக வென்றது.

இதற்கு ஒரு படி மேலே சென்று அப்பதிவர் எனக்கு வந்த ஓட்டைப்பார்த்தாலே தெரியும் எத்தனை பேர் என் பதிவை விரும்புகின்றனர் என்று அவருக்கு மேலும் சொல்லிக் கொள்வது ஓட்டு போட்டதால் தான் அதிமுக வென்றது அதிமுகவை விரும்பியவர்கள் தானே வெற்றி பெறச்செய்துள்ளனர்...

வெற்றி தோல்வி சகஜம்.. தோல்வியை தாங்கும் மனப்பக்குவம் வேண்டும் நண்பர்களே...

...............................................................................................

சமச்சீர் கல்வி திட்டத்தையும், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தையும் அதிமுக அரசு ரத்து செய்யவில்லை அதை சீர் செய்வோம் என்று தான் அறிவித்துள்ளனர். சமச்சீர் கல்வி திட்டத்தின் மூலம் சிபிஎஸ்சி  பாடத்திட்டதை விட உயர்தரமாக பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும் என்பது என் ஆவல்.
........................................................................................................

கனிமொழியின் ஜாமீன் மனுவை நிராகரித்து தீர்ப்பு அளித்து உள்ளது டெல்லி ஐகோர்ட். அதற்காக நீதிபதி கூறிய காரணம் சாட்சியை கலைப்பார்கள். யார் தவறு செய்தாலம் அவர்கள் நீதிக்கு தலைவணங்கியே ஆகவேண்டும் என்பதை காட்டுகிறது இத்தீர்ப்பு...

........................................................................................................

தயாநிதி மாறன் தன் மேல் அவதூறு கூறிய பத்திரிக்கையின் மேல் மான நஷ்டஈடு கேட்டு வழக்கு போடுவோம் என்று கூறினார். இது வரை வழக்கு போட்டதாக எங்கும் படிக்கவில்லை. விரைவில் சிபிஐயின் அடுத்த அதிரடியை எதிர்பார்க்கலாம்...

........................................................................................................

பாபா ராம் தேவ் உண்ணாவிரதத்தில் புகுந்து போலீசார் அப்புறப்படுத்தியது மிகவும் கண்டனத்துக்குறியது. ஜனநாயக நாட்டில் உண்ணாவிரதம் இருக்க கூட அனுமதி இல்லையா? இவரிடம் எப்படி இத்தனை பணம் வந்தது என்று அமலாக்கத்துறையினர் இப்போது விசாரிக்கின்றனர். இத்தனை நாள் எங்கே போனார்கள் விசாரிக்காமல்..

காங்கிரஸ் அரசு இவ்விசயத்தில் தவறு மேல் தவறு செய்கிறது.. வருகிற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் இப்பிரச்சனை....

........................................................................................................

ஊழல், கறுப்பு பணம் ஒழிப்பு கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த யோகா குரு ராம்தேவுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை கண்டித்து டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியின் அருகே அன்னா ஹசாரே  ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்த அவருக்கு என் வாழ்த்துக்கள்...

........................................................................................................

சென்னையில் எம்பிபிஎஸ் மாணவி பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவரின் காதல் கணவர் திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூரில் எரித்து கொல்லப்பட்டுள்ளார்.

காதல் திருமணத்தை எதிர்க்க ஜாதி வெறி பிடித்த பெற்றோர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்...


ஜாதி இல்லை என்று எவனாவது சொன்னால் இச்செய்தியை பத்திரிக்கையில் முழுமையாக படிக்க சொல்லுங்கள்...

இன்னும் 50 வருசம் ஆனாலும் சாதி ஒழியுமான்னு சொல்ல முடியாது..

........................................................................................................

வேலூர் அருகே ஆம்னி பஸ் விபத்த்தை பற்றி தொலைக்காட்சியில் பார்த்ததும் கண்ணீர் வழிந்தது. ஆம்னி பஸ்களின் விபத்தை நான் அதிகம் பார்த்ததில்லை அதுவும் கேபிஎன் பணம் அதிகம் வாங்கினாலும் அதில் சேப் இருக்கும் என்பார்கள். இவ்வளவு கோர சம்பவத்தை நிச்சயம் மறக்க இயலாது..
வெளியூரில் வேலை செய்யும் நண்பர்கள் இனி ஆம்னி பஸ்சில் பயணிக்கும் போது நிச்சயம் அவர்கள் குடும்பத்தில் ஒருவர் தூங்காமல் கடவுளை வேண்டிக்கொண்டு இருப்பார். இந்நிகழ்வு நேற்று இரவு என் நண்பனின் வீட்டில் நடந்து என்பதை அதை கண் கூட பார்த்தவன் என்ற முறையில் தகவலை சொல்கிறேன்..
காலை 4 மணிக்கு நண்பன் ஒரு மேசேஜ் அனுப்பி இருந்தான் அப்பதான் எனக்கு நிம்மதி வந்தது...

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் சார்மி முத்துவேல் இவரின் சில பகிர்வுகள்... பார்வைகள் என்ற பெயரில் வலைப்பூ எழுதி வருகிறார்.  இவர் கரூரைச் சேர்ந்தவர் "பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம்'' என்று இவரை அறிமுகப்படுத்தி பல கவிதைகளை எழுதி மீண்டும் மீண்டும் கவிதையை படிக்க வைக்கிறார்...

http://shammisviews.blogspot.com/

தத்துவம்

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே; உலகம் உன்னை விழுங்கி விடும்.



14 comments:

  1. ஜெயா மேடத்துக்கு பாராட்டுக்கள்... தேக்க நிலையில் நிற்காது தொடர வேண்டும்...


    கனிமொழி - நியாயம் இந்த தடவையாவது வெல்ல வேண்டும்

    இன்னும் 50 வருசம் ஆனாலும் சாதி ஒழியுமான்னு சொல்ல முடியாது..- கசப்பான உண்மை ..

    அறிமுக பதிவருக்கு வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  2. ஒரு பதிவில் இத்தனை செய்திகளா/ நிஜமாகவே இது அசத்தல் பேட்டி.

    ReplyDelete
  3. வழக்கம் போல் மிகவும் சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு..!

    ReplyDelete
  4. இந்த வார தத்துவம் அருமை.
    இந்த பரபரப்பான காலகட்டத்தில் அவசியமானதாகும். பகிர்வுக்கு நன்றி தல..!!

    ReplyDelete
  5. இந்தவார அறிமுகப் பதிவரின் பதிவுகளும் பகிர்வுகளும் அருமை..!

    ReplyDelete
  6. அனைத்து செய்திகளும் முக்கியமானவை...பகிர்வுக்கு நன்றி...


    தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

    ReplyDelete
  7. செய்திகள் எல்லாமே அருமை.சாதிவெறி மனதுக்குக் கஸ்டமாக இருக்கிறது !

    ReplyDelete
  8. பல்சுவை விடயங்களைப் பகிர்ந்துள்ளீர்கள். பதிவர்கள் பற்றிய பார்வை- நடு நிலமை, நெத்தியடி...

    அறிமுகப் பதிவர். புதியவராக இருக்கிறார். அறிமுகத்திற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  9. இந்த வார அஞ்சரை பெட்டியில் அரசியல் நெடி தூக்கல் ஆக இருக்கு சங்கவி

    ReplyDelete
  10. அட கமென்ட் மாடரேஷன் எடுத்துடீங்களா? சொல்லவே இல்ல? :)))

    ReplyDelete
  11. மோகன் சொன்னது போல் அரசியல் நெடி அதிகம் வழமையை விட தகவல்கள் சற்று குறைவே..இருப்பினும் அஞ்சறப்பெட்டி போன்ற பதிவுகள் இடுவது சாதாரண பதிவுகள் போல் அல்ல என தெரியும்..

    ReplyDelete
  12. ரொம்ப அருமையா பதிவு செஞ்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete