Thursday, June 16, 2011

அஞ்சறைப்பெட்டி 16.06.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
சபாஷ்....

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆனந்த குமார் தன் மகளை ஈரோடு அருகே உள்ள குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2ம் வகுப்பில் சேர்த்து மதிய சத்துணவையும் அங்கேயே சாப்பிட ஏற்பாடு செய்துள்ளார்..

அவருக்கு நம் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

இது ஒரு முன் உதாரணம் இனிமேலாவது அரசு பள்ளியில் தன் குழந்தைகளை சேர்க்க முன்வருவார்களா பார்ப்போம்...


இவர் ஒரு வலைப்பதிவாளர் என்பதில் நமக்கு மிக்க மகிழ்ச்சி...

இதற்கு முன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.ஜெ.சிரு தன் மனைவியை பிரசவத்துக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைப்போல் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மற்ற அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் வழிகாட்டியாக உள்ளனர்.

...............................................................................................

2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.


இந்த மாதிரி இன்னும் எத்தனை ஊழல் இருக்குதோ?? இப்படி ஊழல் செய்து கொண்டு இருந்தால் நம் வல்லரசு ஆக முடியாது வேண்டுமென்றால் வல்லரசு படம் பார்க்கலாம்...

...............................................................................................

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் சமச்சீர்கல்வி பற்றி ஒரு குழு அமைத்து முதல்வர் அறிக்கை தயாரித்துக்கொண்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தில் குழந்தைகளின் எதிர்கால பிரகாசமாக இருக்கும் படி கல்வி இருக்க வேண்டும் என்பது என் ஆவல்.


........................................................................................................

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர் டாக்டர் மார்தா லாகர் தலைமையிலான குழுவினர் மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவர்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வாழும் மனிதர்களின் மண்டை ஓடுகள் மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள குகைகளில் இருந்து மனித மண்டை ஓடுகள் கிடைத்தன. அது கடந்த 1 லட்சம் முதல் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குகை மனிதர்களுடையது என தெரிய வந்தது. அவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இவர்கள் மிகவும் உயரமாகவும், கட்டுமஸ்தான உடலமைப் புடனும் இருந்தது தெரிய வந்துள்ளது.

அதே போன்று அவர்களின் மூளை அளவு பெரிதாக இருந்தது. அவர்களின் உடல் அமைப்பை தற்போது வாழும் மனிதர்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 10 ஆயிரம் ஆண்டுக்குள் ஆதிகால மனிதனை விட தற்போதைய மனிதனின் உயரமும், உடல் எடையும் குறைந்துள்ளது.

அதே நேரத்தில் மூளையின் அளவும் 10 சதவீதம் குறைந்து சுருங்கி இருப்பது கண்டு பிடிக்கப் ட்டுள்ளது. அதற்கு தற்போது உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலை, இதை தொடர்ந்து ஏற்படும் நோய்களும் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

........................................................................................................

இங்கிலாந்தின் `சேனல் 4' தொலைக்காட்சி, போரில் கைது செய்யப்பட்ட தமிழர்களை கொடூரமாக சித்ரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட மேலும் சில காட்சிகளை நேற்று நள்ளிரவில் வெளியிட்டது.

இதைப்பார்க்க பார்க்க மிக கொடூரமாக இருந்தது இப்படி எல்லாம் கொடுமைப்படுத்துவர்களா என்று எண்ணத் தொடங்கியது.

கொடுங்கோலன் ராசபக்சேவிற்கு தண்டணை கிடைத்தால் தான் இரந்த உள்ளங்களின் ஆத்மா சாந்தியடையும்...

........................................................................................................

இங்கிலாந்தை சேர்ந்த தம்பதி டாம்குரூஸ்-கேடி ஹோல் கல். இவரது மகள் சுரி. 5 வயது சிறுமியான இவளுக்கு ஆடம்பர “ஷு"க்கள் மற்றும் ஆடைகளை அணிவதில் அலாதி பிரியம்.

எனவே இவள் விலை உயர்ந்த ஆடம்பர “ஷு"க் களை தனது வீட்டில் வாங்கி குவித்து இருக்கிறாள். இது வரை ரூ.70 லட்சம் மதிப்புள்ள “ஷு"க்களை வாங்கி இருக்கிறாள். அதுவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட “ஷு"க்களே அவளிடம் உள்ளன.

இது குறித்து சிறுமி சுரி கூறும் போது, “நான் இது போன்ற ஆடம்பர டிசைன் “ஷு"க்கள் அணிவது தான் எனது தந்தைக்கு பிடிக்கும். எனவே, அவர் தான் நான் விரும்பும் விதவிதமான “ஷு"க்களை வாங்கி தருகிறார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள்.


நாட்டு நடப்பு

தமிழக முதல்வர் டெல்லி சென்று அங்கு இருந்த இரு நாட்களும் பரபரப்புக்கு பஞ்சமில்லை பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஒன்றரை மணி நேரம் சளிக்காமல் பதில் அளித்துள்ளார்.

ஸ்பெக்ட்ம் விவகாரம் இன்னும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்..


அனைவரும் எதிர்பார்த்த தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்தபாடில்லை...

தகவல்

அதிக நேரம் டிவி பார்ப்பதினால் சர்க்கரை நோய், இதய அடைப்பு மற்றும் இளம் வயதில் மரணம் ஆகியவை ஏற்படும் என்று அமெரிக்காவிலுள்ள "ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்' என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளது.ஒரு நாளில் 2 மணி நேரத்துக்கு அதிகமாக டிவி பார்த்தால் சர்க்கரை வியாதி வரும் என்றும், 3 மணி நேரத்துக்கு அதிகமாக டிவி பார்த்தால் இதய அடைப்பு ஏற்படும் என்றும், அதிக நேரம் டிவி பார்த்தால் இளம் வயதிலேயே மரணம் சம்பவிக்கும் என்றும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் பிராங்க் ஹு மற்றும் கிராண்ட்வெட் ஆகியோர் தெரிவித்தனர். இந்த ஆராய்ச்சிகளின் நோக்கம் உடலுழைப்பை அதிகப்படுத்தச் சொல்வது மட்டுமில்லாமல், டிவி பார்ப்பது போன்ற சோம்பேறித்தனமான செயல்களில் அதிக நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்வதுதான் என்று பிராங்க் தெரிவித்தார். அதிகம் டிவி பார்ப்பதால் சர்க்கரை வியாதியோடு உடல் பருமனும் ஏற்படும் என்று கிராண்ட்வெட் தெரிவித்தார். 1970-லிருந்து 2011 வரை டிவி பார்ப்பது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டே இவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.


அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் வெங்காயம் என்ற பேரில் அரசியல் நிகழ்வுகளை சொல்லி உள்ளார். சமச்சீர்கல்வி, கேபிள் என்று அரசின் திட்டங்களைப்பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். வங்கிக்கடன் பற்றிய பதிவில் தெளிவான விளக்கங்களோடு கல்விக்கு வங்கிக்கடன் எப்படி வாங்குவது என்று குறிப்பிட்டு உள்ளார்.

http://onionplus.blogspot.com/





தத்துவம்

தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்; தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்.


புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம் அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்.

14 comments:

  1. கண்டிப்பாக அந்த மாவட்ட ஆட்சியருக்கு ஒரு சபாஷ் போட வேண்டும்...

    உண்மையில் இதுதான் சமச்சீர் கல்வி...

    ReplyDelete
  2. சானல் 4 காட்சிகள் உண்மையில் மனதை பதபதவைக்கிறது..

    ReplyDelete
  3. இன்றைய அஞ்சறைப்பெட்டி நிறைய தகவல்களுடன்..

    ReplyDelete
  4. ////////
    தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்; தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்.///////

    சரியான தத்துவம்...

    அறிமுக பதிவரான வெங்காயம் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. அரசியல், உலக விடயங்கள், அதிக நேரம் டீவி பார்ப்பதால் ஏற்படும் தீங்குகள் எனப் பல விடயங்களை இப் பதிவில் பகிர்ந்திருக்கிறீங்க.

    அறிமுகப் பதிவருக்கு வாழ்த்துக்களும், உங்களின் இம் முயற்சிக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் சகோ.

    ReplyDelete
  6. ///சபாஷ்..../// நிச்சயமாக சமூகத்தில் உயர் நிலையில் / பொறுப்பில் உள்ளவர்களின் இத்தகைய எடுத்துக்காட்டுகள் மாற்றத்தை உண்டுபண்ணும் என்று நினைக்கிறேன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் ...

    ReplyDelete
  7. ///இதைப்பார்க்க பார்க்க மிக கொடூரமாக இருந்தது இப்படி எல்லாம் கொடுமைப்படுத்துவர்களா என்று எண்ணத் தொடங்கியது.// சிலவற்றை எனக்கு பார்க்க கூட தைரியமில்லாமல் இருந்தது..எவ்வளவு கொடுமை:-(

    ReplyDelete
  8. ஒரே பதிவுல இவ்ளோ விஷயங்களா சூப்பர் சங்கவி. கலெக்டர் வலைபதிவாளர் என்பதில் சந்தோசமே. அவரின் லிங்க் கொடுத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அருமையான தகவல்கள் தொடர்க சங்கவி

    ReplyDelete
  9. அந்த கலெக்டருக்கு ஒரு சல்யூட்டு ///

    ReplyDelete
  10. எப்போதுமே தத்துவம்தான் சிறப்பு !

    ReplyDelete
  11. nice collections sangavi..

    என்னைப் எப்போது அறிமுகப்படுத்த போறீங்க?

    ReplyDelete
  12. yow... Dinamani paper padikura madiri erukku..

    Nalla masala kalndhu summa Kara saramana visayam ellam eluthamum...

    ReplyDelete
  13. About the collector.... It is commendable that he admitted his ward in a Govt.school, but I feel it is not proper to utilize the noon meal, as it is a scheme for the poor. I think it is not correct.

    ReplyDelete