Thursday, June 2, 2011

அஞ்சறைப்பெட்டி 02.06.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
மாற்றம் வேண்டும் என்று மக்கள் அளித்த வாக்கை முதல்வர் யாரும் எதிர்பாராவண்ணம் மாற்றத்தை செயல்படுத்தி வருகிறார் அவருக்கு வாழ்த்துக்கள்...

முதல்வராக பதவி ஏற்றதும் அடுத்தடுத்து அமைச்சரவை கூட்டத்தை கூட்டி அமைச்சர்கள், அதிகாரிகளை விட மிக வேகமாக செயல்பட்டு வருகிறார். பத்திரிக்கையாளர்களை வாரம் ஒரு முறை சந்தித்து கேள்விகளுக்க பதில் அளிக்கிறார். மிக முக்கியமாக அமைச்சர்களிடம் நிறைய வேலை வாங்குகிறார்.

நிறைய கழக அபிமானிகள் ஆட்சியில் அமர்ந்த 10 நாட்களிலேயே அதை செய்யவில்லை, இதை செய்யவில்லை என்று பல பதிவுகள் அவர்களுக்கு பதில் சொன்னால் செத்த பாம்பை அடித்தது போல் ஆகிவிடும். அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் எப்படி அமைதியாக இருந்து ஆட்சியை தனி மெஜாரிட்டியுடன் கைப்பற்றினாரோ அதே போல் ஆட்சியில் மக்கள் நினைத்த மாற்றத்தை ஏற்படுத்துவார் நிச்சயமாக.

...............................................................................................
நேற்று நடந்த இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு எந்த ஆராவரமின்றி, தேவையில்லாத செலவுகளை தவிர்த்து, ஆடம்பரமில்லா ஒரு விழாவை நிச்சயம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்...

நினைத்துப்பாருங்கள் கடந்த ஆட்சியில் எத்தனை விழாக்கள், நலத்திட்டம் தொடங்குவதற்கு ஒரு விழா அதற்கு என தனி செலவு என்று நலத்திட்டத்தை விட விழா அதிகமாக நடந்தது என்றால் அது மிகையாகது.

...............................................................................................

ஸ்பெக்ட்ரம் விவசகாரத்தில் ராசா, கனிமொழி அடுத்து யார் என்று கடந்த அஞ்சறைப்பெட்டியில் கேட்டு இருந்தேன் அதற்கான தற்போதைய பதில் தயாநிதி.

இவர் நான் தவறு செய்யவில்லை என்னைப்பத்தி தவறாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கையின் மீது கேஸ் போடுவேன் என்கிறார் எதை நம்புவது.

சிபிஜ அடுத்த மனுதாக்கலின் போது உண்மை தெரிந்து விடும்...
........................................................................................................

விவசாயிகளுக்கும், சாயபட்டறை அதிபர்களுக்கும் நடக்கும் பேச்சு வார்த்தை இன்னும் சுமுக முடிவு ஏற்பட்டபாடில்லை. சாயபட்டறை கழிவால் விவசாயம் பாதிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே.

இது வரை ஆட்சி நடத்தி அரசுகள் சாயப்பட்டறை கழிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை இதனால் சாயதண்ணீரால் இன்று ஒரத்துப்பாளையம் அணை நீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளனர் விவசாயிகள்.

முதல்வர் இப்பிரச்சனைக்காக பல கூட்டங்களை துறை ரீதியாக நடத்தி வருகிறார்.

கூடிய விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டால் திருப்பூரில் தற்போது வேலையின்றி தவிக்கும் 5 இலட்சம் பேருக்கு மீண்டு வேலை வாய்ப்பு கிடைக்கும்..
........................................................................................................

தற்போது சிறந்த வணிகம் எது என்றால் அது வீட்டு மனை விற்பனைதான். வீட்டுமனை விற்பனைக்கு அரசு அனுமதி பெற வேண்டும். அரசு வீட்டுமனை விற்பனை இடத்தை கவனத்தில் கொண்டு இதற்காக ஒரு குழு அமைத்து விவசாய நிலத்தில் வீட்டுமனை அமைத்து விற்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

இன்று முப்போகம் விளையும் பல நிலங்கள் வீட்டு மனைகளாக விற்பனைக்கு இருக்கின்றன. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
........................................................................................................

வானிலை ஆரய்ச்சி மையம் இந்த முறை ஜீன் 1 முதல் பருவமழை தொடங்கும் என்று அறிவித்திருந்தது இம்முறை அது சரியாக நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவாலக மழை பெய்வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.

தற்போது ஜீன் 6 ம் தேதி காவிரியில் நீர் திறந்து விடுவது டெல்டா விவசாயிகளுக்கு மிக்க மகிழ்ச்சியான செய்தி.
........................................................................................................

தனியார் பள்ளி கட்டணம் தொடர்பான பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும் என்று பெற்றோர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

பெற்றோர்களே உங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக தனியார் பள்ளியில் உங்கள் குழந்தைகளை படிக்க வைக்கின்றீர்கள் இதில் ஏன் அரசு தலையிட வேண்டும்?


பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேருங்கள் அங்கு சரியாக பாடம் நடத்தவில்லை என்றால், ஆசிரியர் சரியாக வருவதில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட்டு அரசை கூப்பிடுங்கள் அப்பதான் அரசு பிரச்சனைகளை சரிசெய்யும்.

இன்றைய பெற்றோர்கள் நினைப்பது தங்கள் குழந்தைகள்
படிப்பது தனியார் பள்ளியில் ஆனால் அவர்களுக்கு வேலை மட்டும் அரசு பள்ளியில் வேண்டுமாம் என்ன நியாயம்...

நாட்டு நடப்பு
 
நாளை சட்டமன்றம் கூடுகிறது கவர்னர் உரையாற்ற இருக்கிறார். கவர்னர் உரையை அனைவரும் எதிர்பார்க்க மிக முக்கிய காரணம் முதல்வர் நிருபர்கள் கேட்கும் கேள்விக்கு அளிக்கும் பதில் கவர்னர் உரையில் இருக்கும் என்பது தான் மிகுந்த எதிர்பார்ப்பிற்கான காரணம்.
 
எதிர்பார்க்கும் எதிர்கால திட்டங்கள் இருக்குமா? நாளை தெரியும்.

தகவல்
 
நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாற்றாக, குறுஞ்செய்திகள் அனுப்புதல், ஹெட்போன் பயன்படுத்துவதன் மூலம் இந்த ஆபத்தை தவிர்க்கலாம் என்றும் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு கிளியோமா என்ற மூளை புற்றுநோய் தாக்கக் கூடும் என்றும் இந்த அமைப்பு மேலும் கூறியுள்ளது.
 
அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுகப்பதிவர் வினு இவர் கோவையைச் சேர்ந்தவர் இவரின் கவிதைகள் எதார்த்தமாகவும், அழகிய வரிகளுடன், ரசிக்கக்கூடியதாகவும் இருக்கும்...

http://vinupragadeesh.blogspot.com

தத்துவம்
 
எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.

உன் இதயம் ரோஜா மலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்.

15 comments:

  1. \\\இன்றைய பெற்றோர்கள் நினைப்பது தங்கள் குழந்தைகள் படிப்பது தனியார் பள்ளியில் ஆனால் அவர்களுக்கு வேலை மட்டும் அரசு பள்ளியில் வேண்டுமாம் என்ன நியாயம்...\\\\
    நல்ல நறுக் ....

    ReplyDelete
  2. //பெற்றோர்களே உங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக தனியார் பள்ளியில் உங்கள் குழந்தைகளை படிக்க வைக்கின்றீர்கள் இதில் ஏன் அரசு தலையிட வேண்டும்?


    அப்படிகேளுங்க

    ReplyDelete
  3. //இன்றைய பெற்றோர்கள் நினைப்பது தங்கள் குழந்தைகள் படிப்பது தனியார் பள்ளியில் ஆனால் அவர்களுக்கு வேலை மட்டும் அரசு பள்ளியில் வேண்டுமாம் என்ன நியாயம்...

    சட்டம் போடனும் அரசு பள்ளியில் படித்தால் தான் வேலைன்னு

    ReplyDelete
  4. சித்தார் சிங்கம் கரெக்ட்டா ஆன்லைன்ல என்னை பிடிச்சுடுச்சே? ஹா ஹா

    ReplyDelete
  5. அஞ்சறைப்பெட்டிச் செய்திகள் சூடாகவும் சுவையாகவும் இருந்தன!

    ReplyDelete
  6. எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.

    உன் இதயம் ரோஜா மலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்.//

    தத்துவ மழையை கொட்டுங்க எசமான் கொட்டுங்க.....

    ReplyDelete
  7. இந்த அஞ்சறைப் பெட்டி ரொம்ப காரம்..

    ReplyDelete
  8. thanks bro i didn't expect...


    thanks a lottttt..


    just casually i read your blog.... suddenly my name appears...

    just shocked my surprice...

    oru doubttlaa click pannip paartheannaa paarungaleann...

    you made my day broo

    ReplyDelete
  9. பொதுவா நம் வீட்டு பெரியவர்கள்,அஞ்சறைப்பெட்டியில், உடல் நலனிற்கு தேவையான மருந்து பொருட்களும் வைத்திருப்பர்.நீங்கள், நாட்டு நல்னிற்கு தேவையானவற்றை வைத்துள்ளீர்கள். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  10. :)


    (படிச்சிட்டேன்ன்னு அர்த்தம் பாஸு)

    ReplyDelete
  11. மாப்ள இந்த முறை 50 பெட்டிகளுடன் அருமையாக இருக்கு உங்க பதிவு நன்றி!

    ReplyDelete
  12. நிறையப்பெட்டி .. நிறைய தீனி.. நல்லாருக்குன்னா பதிவு...

    ReplyDelete
  13. இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே...

    ReplyDelete