உள்ளுரில் இருந்து உலகம் வரை........
3 வருட உத்திரவாதத்துடன் மாணவர்களுக்கு இலவச லேப்டாப், 2 வருட உத்திரவாத்துடன் மிக்சி, கிரைண்டர் இலவசம் கொடுத்தாலும் அதை தரமானதாக தருகிறார்கள் இதற்காகவே வரவேற்கிறேன்...
............................................................ .............................. .....
சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் கண்காட்சிக்கு சீமான் இலங்கை பொருட்களுக்கும், இலங்கை நிறுவனங்களுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது சந்தோசமான விசயம்...
தமிழனை அழிக்க நினைப்பவன் பொருளை தமிழன் ஏன் பயன்படுத்த வேண்டும்.
............................................................ .............................. .....
மீண்டும் இலங்கை தனது வேட்டையை ஆரம்பித்துள்ளது 23 மீனவர்களை கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. முதல்வர் பொருளாதார தடை போட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதும் பழிவாங்குவதற்காகவே கைது செய்துள்ளனர்.
இப்பிரச்சனையில் பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்து மீனவர்களை நோக்கி மீண்டும் துப்பாக்கியை தூக்குவர் சிங்களர்கள்...
............................................................ .............................. ..............
இந்தியாவை சேர்ந்தவர் ரெட்டி ஆலென். இவரது மனைவி டாக்டர் பத்மா ஆலென். இவர்கள் அமெரிக்காவில் புளும்பெர்க் நகரில் தங்கியுள்ளனர்.
புளும்பெர்க் மாநகராட்சியில் சிட்டி டைம் என்ற மிகப்பெரிய திட்டத்தை மேயர் மைக்கேல் தொடங்கியுள்ளார். இந்த திட்டப் பணிகளில் ரெட்டி ஆலெனும், அவரது மனைவி பத்மா ஆலெனும் ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மேன்காட்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் கணவன், மனைவி இருவரும் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும், போலியான ஆவணங்களை தயார் செய்தும் ரூ.2075 கோடி ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நம்ம ஆளுங்க எங்க போனாலும் ஊழலில் தனியா நிக்கறாங்கப்பா....
........................................................................................................
இந்த ஆண்டு தென்மேற்கு பருமழை இன்னும் முழுவதும் பெய்யவில்லை. நிறைய மேட்டுக்காடுகள் எல்லாம் மழையை நோக்கி காத்திருக்கின்றன.
........................................................................................................
கேரளாவில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை தன் வியாபார விருத்திக்காக நிறைய அதிகாரிகளுக்கு அந்த பெண்ணை விருந்தாக்கி உள்ளான் பண வெறி பிடித்த ஒரு மிருகம்.
நாட்டு நடப்பு
இந்த வாரம் கனிமொழிக்கு மீண்டும் ஜாமீன் கிடைக்காததால் டெல்லி சென்று மகளை சந்தித்தார் முன்னாள் முதல்வர்.
சாருநிவேதிதா ஒரு பெண்ணுடன் சாட் செய்ததை தமிழச்சி வெளியிட்டு பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது இணைய உலகம்... இந்த விசயத்தில் யார் மேல் தவறு என விவாதிக்க விரும்பவில்லை . இதில் இருந்து கற்றுக்கொள்வது சாட் செய்யும் போது கவனத்துடன் செய்யுங்க....

தகவல்
சூரிய மண்டலத்தில் தற்போது, பூமி, செவ்வாய், சந்திரன், வியாழன், புதன் சனி போன்ற 9 கிரகங்கள் உள்ளன. இவை சூரியனை சுற்றி வருகின்றன. இது தவிர ஏராளமான சிறிய கிரகங்களும் சூரியனைச்சுற்றி வருகின்றன. சூரிய மண்டலம் பற்றி சர்வதேச விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.
இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இடம் பெற்றுள்ளனர்.அப்போது சூரிய மண்டலத்துக்கு வெளியே 10 கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை பல லட்சம் வருடங்கள் வயது கொண்டவை. இதில் ஒரு கிரகம் சூரிய மண்டலத்தில் உள்ள நெப்டியூன் கிரகத்தைப் போல் இரு மடங்கு பெரிது.
சனி கிரகம் போன்ற மற்றொரு கிரகமும் சூரிய மண்டலத்தின் வெளியே உள்ளது. பிரான்ஸ் நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் சக்தி வாய்ந்த டெலஸ் கோப்பை பயன்படுத்தி இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 10 கிரகங்களில் 7 கிரகங்கள் வெப்பம் அதிகம் நிறைந்தவை.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் சுபாவின் குறிப்புகள் என்ற பெயரில் சுபா என்பவர் எழுதி வருகிறார். உடல் நலம், அழகுக்குறிப்புகள், உணவுகள், உடல் பாராமரிப்புக்கான டிப்ஸ்கள் என்று ஒவ்வொரு பதிவும் அனைவரும் அறிய வேண்டிய பதிவாக எழுதி வருகிறார். இவரின் பதிவுகள் அனைத்தையும் ப்ரிண்ட் எடுத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் படிக்கும் படியான பயனுள்ள பதிவுகள்...
http://subawin.blogspot.com/
தத்துவம்
சிந்திக்காதவன் முட்டாள், சிந்திக்கத் துணியாதவன் கோழை, சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்.
முதல் மழை
ReplyDelete>>. இதில் இருந்து கற்றுக்கொள்வது சாட் செய்யும் போது கவனத்துடன் செய்யுங்க....
ReplyDeleteஆமா எங்கண்ணன் மாதிரி கோட் வோர்ட்ல சேட் பண்ணூங்க.. அந்த பொண்ணூக்கே புரியாது ஹா ஹா
Super shots!
ReplyDelete//சூரிய மண்டலத்தில் தற்போது, பூமி, செவ்வாய், சந்திரன், வியாழன், புதன் சனி போன்ற 9 கிரகங்கள் உள்ளன.//
ReplyDeleteதல ... இப்போ எட்டு. ப்ளுடோ கெரகம் இல்லையாம்.
நல்ல தகவல் தொகுப்பு..
ReplyDeleteபோட்டு தாக்குங்க சங்கவி.
ReplyDeleteஇலவசப் பொருள்களுக்கான இருவர்ட உத்திரவாதத்தை நானும் வரவேற்கிறேன்.
இவ்வளவையும் இலவசமா குடுக்க பணம் எங்கிருந்து வரும் இந்த “முதல்வர்களுக்கு?”
ஒரு பதிவில் இத்தனை விஷயங்களா ?
ReplyDeleteஅருமை நண்பரே..
ஆமாம் நம்ம கடை பக்கம் வருவதில்லை ஏன்?
செமை...
ReplyDeleteபகிர்வு அருமை தோழரே
ReplyDeleteதகவல்கள் அருமை....
ReplyDeleteநல்ல் பயனுள்ள தகவல்கள்.
ReplyDeleteசுருக்கமா நிறைய விஷயங்களை அடக்கியிருக்கு அஞ்சறைப் பெட்டி !
ReplyDelete//விருந்தாக்கி உள்ளான் பண வெறி பிடித்த ஒரு மிருகம்.//
ReplyDeleteyes we are social animal!
u can write these all tings in 3-4 concepts, ) pls add tamil typing widget in comment section)( see mine)
ReplyDeleteDei sharbudeen ... Odha vangarathukku munnadi odi poyidu....
ReplyDeleteபல்சுவை நாளேடு படித்த உணர்வு!
ReplyDeleteAll are short & good information
ReplyDelete