Monday, June 27, 2011

தோழியும், மனைவியும்....


"குட்மார்னிங்"

"ம்... குட்மார்னிங்"

"எப்ப வந்த"

"இப்பதான் வந்தேன், பஸ்ல கூட்டம் கொன்னுட்டானுக, திங்கட்கிழமை காலைல ஆபீஸ் வருவதென்றாலே போர்தான்"

"ஆமாம்"

"ஏன் காலைல பொழம்பற"

"இந்த மேனேஜர் சோடப்புட்டி மெயில் அனுப்பி காலைலியே கொல்றான், இன்னும் ரெண்டு நாள்ள முடிச்சு அனுப்பனுமா பாடாப்படுத்துறான்"

"விடு விடு ஆபீஸ்னா இதெல்லாம் சகஜம் நாம தான் கண்டும் காணாம போயிக்கனும்"

ம்..
"ஆமாம் அப்புறம் நேத்து என்ன பண்டுன"  உன் வருங்கால மனைவிய பார்த்தியா??  ஊர்ல அப்பா அம்மா எல்லாம் சைக்கியமா?

"எல்லாரும் நலம்" அவளைப்பார்த்தேன் கண்ணுலியே பேசறா, அவ கண்ணு பார்க்க பார்க்க பார்க்கனும் போலவே இருந்தது, அப்பறம் ஒரு அரை மணி நேரம் பேசிட்டு வந்துட்டேன்"

"என்ன சொன்னாங்க உங்க ஆசை வருங்கால மனைவி"

"கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் நிறைய பேசலாம் என்றால்"

"ஹா ஹா ஹா லவ்வு, கலக்குடா கலக்கு"

"காலைல வேளையப்பாரு வந்துட்டா வம்பிலுக்க..."

"ஏம்ப்பா நேத்து அவளைப் பார்த்தியே புடவை கட்டி இருந்தாலா சுடுதாரா"

ம்ம்ம் (  காலைல கடுப்பேத்தராலே, நாமும் ஆரம்பிப்போம்)

"புடவை கட்டு ஒரு முழம் மல்லிகை வைச்சுட்டு வந்திருந்தாள்"

"அப்படியா... சூப்பர்... புடவை என்ன கலர்ப்பா"

"மெரூன் கலர்"

"ஓ உனக்கு பிடிச்ச கலர்"

ஐயோ !!!   (கடுப்படிக்கிறாளே)

"சாப்பிட எதாவது கொடுத்தாங்களா"

"ம்... பில்டர் காபி, அவளைப்போலவே இருந்துச்சு"

ஓகோ!!!  "நீ என்ன வாங்கிட்டுப்போன"

"எதுக்குமா இப்படி கேள்வி மேல கேள்வி கேக்கற"

"ஏ நான் கேக்க கூடாதா" (இப்பவாவது சொல்டா நான் சொன்னது பொய் என்று)

"கேக்கலாம் அதுக்காக அவளைப்பத்தியே கேட்டுகிட்டு இருக்கியேன்னு கேட்டேன்.."

"சரி சரி நீ என்ன டிரஸ்ல போன"

"இப்படியே தான் போனேன்" (என்னடி உனக்கு வேனும்)

"குளிக்காமையா ??? "

"மேனேஜர் வர்றான் அடங்கு"


"அது போயிருச்சு உண்மைய சொல்லு, அப்புறம் அவ கிட்ட என்ன பேசுன"

"மனைவிகிட்ட என்ன பேசுனன்னு கேட்டா என்ன சொல்ல??  அது உன்கிட்ட சொல்ல மாட்டேன்"

" என்னம்மோ உயிர் தோழின்னு சொன்ன இப்ப சொல்ல மாட்டிங்கற, எதுவும் உங்கிட்ட மறைக்கமாட்டேன்னு சொன்ன, தினமும் உங்கிட்ட நடக்கறத சொல்லாம இருக்க மாட்டேன்னு சொன்ன போதுன்டா உன் உயிர் தோழி நடிப்பு இனி நீ உன் வேலைய பாரு நான் என் வேலைய பாக்கறன், நீ எங்கிட்ட சொல்லவும் வேண்டாம் பேசவும் வேண்டாம்"


"இல்லப்பா நான் என்ன சொல்ல வர்றேன்னா"

"வேலையப்பாரு பொய் பொய் உயிர் உயிர்ன்னு பொய், வேண்டாம் விடு நமக்கு ஒத்து வராது நீ திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இரு என்ன ஆளை விடு"

(அய்யய்யோ சண்டை போட்டுடாளே, இனி பேசலினா என்ன பன்றது)

(உடனே பாத்ரூத் போய் போனை எடுத்து ரவியிடம் பேசினான்)

"அடேய் பன்னாடை உம் பேச்சக்கேட்டு கல்யாணம் பொண்ணு பார்க்க போனேன்னு அவகிட்ட பொய் பேசி காலய்ச்சு இப்ப இருந்த நட்பும் புட்டுகிடுச்சி மவனே அவ மட்டும் இன்னிக்கு எங்கிட்ட பேசாம இருக்கட்டும் உனக்கு இருக்குதுடி இன்னிக்கு!! "

அடேய் நான் இப்படித்தான் பேசினேன் என் ஆபீஸ்ல எனக்கு பக்கத்துல இருந்த தோழி இப்ப எனக்கு லவ்வராயிருச்சு உனக்கு ஓர்க்கவுட் ஆகல நான் என்ன செய்ய... சரி சரி சோகத்தை தீர்க்க சாயங்காலம் வந்து சரக்கு வாங்கி கொடு..

"வாங்கித் தர்றேன்டா என்டோ சல்பான் வாங்கித்தர்றேன்"

இவங்கிட்ட ஐடியா கேட்டு இப்ப ஐயோ அம்மான்னு அடிச்சுக்ககிட்டு இருக்கேன் இவளத் தோழியா பிடிக்கறதுக்கு ஒரு வருசம் கஷ்டப்பட்டேனே... எல்லாம் போச்சு இந்த பன்னாடையால....

18 comments:

  1. கதை நல்லா இருக்கு. ஆனா ஏன் இவ்வளவு spelling mistakes? எடிட் பண்ணி மறுபடியும் சரியா போடுங்களேன்..

    ReplyDelete
  2. கதை ரொம்ப யதார்த்தமா இருக்கு அருமை :)
    But work out ஆகாம போனது தான் கவலை ..........

    ReplyDelete
  3. பொண்ணுங்ககிட்ட போய் இன்னொரு பொண்ண புகழ்ந்தா வெளங்க்குமா. ஆனா கதை நல்லா இருக்கு சார்.

    ReplyDelete
  4. லேபிலில் முதல்ல அனுபவம்ன்னு தானே போட்டிருக்கு

    இதெல்லாம் ஜகஜமுங்கோ, சீக்கிரம் சரியாய்டும் பாருங்களேன் ...

    ReplyDelete
  5. கதை நல்லா இருக்கு

    ReplyDelete
  6. ஹி ஹி நானும் கதை நல்லா இருக்குன்னு சொல்லி அதை ஆமொதிக்காம இல்லன்னா நான் மனுஷனே இல்லைன்னு நீங்க சொல்ல மாட்டீங்கன்னு தெரிஞ்சா...[[அடிக்க வராதீன்கப்பா]]

    ReplyDelete
  7. கற்பனையா, அனுபவமா-னு கேட்க ஆசைதான். எதுக்கு வம்பு? நல்லாருக்குன்னு எஸ் ஆயிடறதுதான் பெட்டர்! :-)

    ReplyDelete
  8. கற்பனை என்றாலும்,அனுபவம் என்றாலும் கதையோட்டம் அருமை.

    ReplyDelete
  9. அன்பின் சங்கவி - கதை நல்லாத் தான் இருக்கு - படிக்கலாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  10. /கதை நல்லா இருக்கு. ஆனா ஏன் இவ்வளவு spelling mistakes? எடிட் பண்ணி மறுபடியும் சரியா போடுங்களேன்../

    HAHAHA......இது காமடிக்கா இல்லை சீரியஸ்ஸா?

    ReplyDelete
  11. படம் பார்க்கலாம் என்பது போல் கதை படிக்கலாம்

    ReplyDelete
  12. இது சொந்தக்கதை மாதிரி இருக்கே?

    ReplyDelete
  13. அருமையான கதை

    ReplyDelete
  14. கதை நல்லாத்தான் இருக்கு...

    ஆமா இத்தனை எழுத்துப் பிழைகள்... ரொம்ப பிசி?

    ReplyDelete
  15. From the experiences of our friends speak a lot before marriage because we are going to keep silence after marriage......

    ReplyDelete