Tuesday, January 7, 2014

இவர்களும் அரசியல்வாதியாக மாறலாம்...

ஆம் ஆத்மி கட்சி ஊடகங்களால் வளர்ச்சியை பெற்ற கட்சி. டெல்லியில் நடந்த பல போராட்டங்களை முன்நின்று நடத்தி அதன் மூலம் ஊடகங்களின் அபரீத ஆதரவினால் இன்று டெல்லி சட்டமன்றத்தில் 28 இடங்களைப்பிடித்து காங்கிரசின் தயவால் ஆட்சியையும் பிடித்துள்ளது.

ஆம் ஆத்மியின் இந்த அபரீத வளர்ச்சி பாராட்டுக்குரியது தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் குறிப்பிட்ட அளவு இலவசமாகவும், மின்சார கட்டணம் பாதியாகவும் குறைப்போம் என்றனர் அதே போல் குறைத்துள்ளனர் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இனி தான் நாம் மிகவும் கவனிக்கவேண்டிய ஒன்று எத்தனை மாதங்களுக்கு இவ்வாறு கொடுப்பார்கள் என்று பார்க்க வேண்டும். மற்ற மாநிலங்களை ஆள்பவர்களுக்கு தெரியும் இது கரைசி வரை நிறைவேறாது என்று.

ஆம் ஆத்மியின் மீது நான் விமர்ச்சனங்களைத்தான் வைப்பேன் இதுவே ஒரு வருடத்திற்குப்பின் அவர்களின் ஆட்சியையும், திட்டத்தையும் முக்கியமாக அதை செயல்படுத்தும் விதம் பற்றி நன்கு தெரியும். அன்றும் இவர்கள் சொன்னதையே செய்து நேர்மையானவர்களாக இருப்பின் அப்போது போடலாம் நம் ஓட்டை ஆம் ஆத்மிக்கு.

எங்கள் மதிய உணவு வேளையில் தினமும் கார சார விவாதம் நடக்கும் அதில் ஆம் ஆத்மிக்கு எதிர்ப்பாகத்தான் நான் பேசுவேன் அப்படி பேசுகையில் சொன்ன ஒன்று "இன்னும் எந்த திட்டத்துக்கும் அவர்கள் டெண்டர் விடவில்லை, டெண்டர் விட்ட பின் தானே தெரியும் அவர்களின் நேர்மை பற்றி".

பணம், புகழ் மற்றும் அதிகாரத்திற்கு மயங்காதவர்கள் மிக மிக குறைவே அவ்வாறு ஆம் ஆத்மியில் இருப்பவர்கள் எல்லாம் ஒரு வருடத்திற்கு பின்  இவ்வாறே இருந்தால் அவர்களின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை.

ஒரு கட்சி ஒரு இடத்தில் ஆட்சியை பிடித்ததும் அந்த கட்சிக்காக இன்று நிறையபேர் ஆள் பிடிக்க கிளம்பிவிட்டார்கள் ஒரு மாநிலத்தில் ஒரு இலட்சம், தமிழகத்தில் 3 லட்சம் பேர் உறுப்பின்ர்கள் என்று எல்லாம் போகிற போக்கில் பிட்டை போட்டுச்செல்கின்றனர். தினமும் பத்திரிக்கையில் நிறைய பிரபலங்கள் ஆம் ஆத்மியில் இணைகின்றனர் என்ற செய்தி வருவது பாராட்டுக்குரியது. சேருபவர்கள் எல்லாம் நேர்மையானவர்களா அவர்கள் இது வரை எத்தனை நல்ல காரியங்களை செய்துள்ளனர் என்று பின்புலத்தை பார்க்கும் போது தான் தெரியும். 

இருக்கறத விட்டுட்டு பறக்கறதை பிடிக்க ஆசைப்படாதே என்பது பழமொழி அது போல போய் சேருகின்றனர்.  சுயநலம் இன்றி சேருபவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகத்தான் இருக்கும். தமிழகத்தில் நாம் முன்னரே இந்த கட்சியில் சேர்ந்து விட்டால் நாளை சீனியர் என்று நமக்கு சீட் கிடைச்சாலும் கிடைக்கும் என்று சேர்பவர்கள் தான் அதிகம் இருப்பர்.

திட்டங்களை செயல்படுத்துகின்றோம் என்றனர் ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் இல்லாமல் நடந்து கொள்வோம் என்ற சூளுரைகள் எல்லாம் கேட்க இனிதாக இருக்கிறது நாம் பார்க்க இன்னும் நாள் இருக்கிறது.

அக்கட்சி ஆட்சி அமைத்து 1 மாதம் கூட ஆகவில்லை அதற்குள் மக்களவை தேர்தலில் 20 மாநிலங்களில் 300 தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக பத்திரிக்கைகள் கூறுகின்றனர் ஒரு வேளை 300இல் 274ல் ஜெயித்து பிரதமர் ஆகிவிடலாம் என்று கூட நினைக்கலாம். எது எப்படியோ நம் விமர்ச்சனங்களை ஒரு வருடம் ஒத்தி வைப்போம். அதற்கு பின் அவர்களின் ஆட்சியை ஒப்பிட்டு போடுவோம் அவர்களுக்கு சலாம்.

குறிப்பு: எனக்கு அரசியல் கொஞ்சம் தூரம் தான், பட் டீக்கடையில் இப்படித்தான் பேசுவோம் என்பதை பதிவாக்கி உள்ளேன்..

10 comments:

  1. முகத்திலேயே ஒரு அமைச்சர் ஆவதற்கான அறிகுறி, குறியீடு எல்லாம் தெரியும்போது..... நீங்க சொன்னத நம்பிட்டோம் தலை !

    ReplyDelete
  2. Replies
    1. நிச்சயம் பொறுத்திருக்கும்போது தான் நிறைய விசயங்கள் வெளியே வரும்...

      Delete
  3. இதுக்கு முன்னர் ஏதாவது நல்லது செய்திருக்கிறவர்கள்தான் கட்சியில் சேரனுமா நமக்கும் நல்லது நடக்கட்டும் என்று யாரும் சேரக்கூடாதா? உங்கள் வார்த்தையில் ஒரு நியாயம் இல்லையே பாஸ். ஒருமுறை கொடுப்பதுதான் கடினம் நம்ம ஊருல இலவசமா என்னென்னவோ கொடுக்கிறாங்க அவங்களால் குடிக்க தண்ணீர் கொடுக்கமுடியாதா?

    ReplyDelete
    Replies
    1. நமக்கும் (தனக்கும்) நல்லது நடக்கட்டும் என்று தான் பாஸ் நிறைய பேர் சேருவார்கள்...

      பாஸ் அரசியலில் நேர்மை இருக்கும் போது என் வார்த்தையில் நியாயம் இருக்க கூடாதா

      தண்ணீர் கொடுக்கட்டும் நல்ல விசயம் தானே.. எத்தனை மாதத்திற்கு என்று பொறுத்திருந்து பார்ப்போமே...

      Delete
  4. தம்பி!
    தண்ணீர் கொடுக்கனும்; கொடுக்க முடியும்! பாரதியாரை புகழும் தமிழர்கள் ஏன் :"தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்து விடுவோம்' என்ற வாசகம் நினைவுக்கு வருவதில்லை?

    எல்லோரும் [ஒழுங்காக -முறையாக} வரி கட்டினால் எதையும் சாதிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அண்ணே எல்லாரும் வரி கட்டினால் நாம் வல்லரசு ஆகி இருப்போமே... இங்க பிரச்சனையே எப்படி ஏமாற்றலாம் என்பது தானே...

      Delete
  5. பொறுத்திருந்து பார்க்கலாம்.....

    இப்போதே தில்லி அரசாங்கத்தின் அலுவலக வளாகங்களில் ஆம் ஆத்மி தொப்பி போட்டவர்கள் தரும் பிரச்சனைகள் அதிகரித்து விட்டது என தில்லி அரசில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவர் நேற்று புலம்பிக் கொண்டிருந்தார்!

    ReplyDelete