Wednesday, January 8, 2014

தினமும் சாலையில் ஈர்க்கும் குரல்...


வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மறக்காமல் கடை பிடியுங்கள்

சாலைவிதிகளை கடை பிடிக்கும் போது விபத்தில் இருந்து தவிர்க்கலாம்

சாலை விதி மீறல்களால் தான் விபத்துக்கள் அதிகம் நடைபெறுகின்றன

சரியான பாதையில் வாகனத்தை நிறுத்தும்போது தான் எதிர்த்து வரும் வண்டிகள் சரியாக செல்ல முடியும்

பள்ளி வாகனங்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் சாலை விதிகளை கடைபிடிப்பதில்

பாதசாரிகளுக்கு வழி விட்டு நிற்கும் போது தான் அவர்கள் எந்த தடங்களும் இல்லாமல் செல்ல முடியும்

சிக்னலில் நிற்கும் போது சிக்னலை மட்டும் கவனி

போக்குவரத்து போலீசாரின் வழிகாட்டுதல் படி வாகனத்தை இயக்கினால் நெறிசலை தவிர்க்கலாம்..

என்ன போக்குவரத்து சட்டமா சொல்கிறேன் என்று நினைக்காதீர் முன்பு கோவையில் க்ராஸ்கட் ரோட்டில் போக்குவரத்து போலீசாரால் ஒலிபெருக்கில் இந்த வரிகளை அவ்வப்போது கேட்டு இருக்கிறேன் இப்போது டவுன்ஹால் சிக்னலில் தினமும் கேட்கும் வரிகள்.

போக்குவரத்து போலீசார் டவுன்ஹால் ஏரியாவில் இப்போது வீடியோ கொண்டு கண்காணிப்பதால் அந்த வீடியோவைப்பார்த்து ஒருவர் மைக்கில் பேசும் வார்த்தைகள் தான் இவை.

இவரின் குரல் மணிக்கூண்டு வரை ஒலிக்கும் தினமும் நான் இந்த பாதையில் செல்வதால் இந்த குரல் எனக்கு பரிச்சயமாக ஒன்று. தினமும் இவர் போக்குவரத்தை சரி செய்யும் பாங்கு மகத்தானது.

சிக்னலில் ஒரு நாள் வெள்ளை கோட்டை தாண்டு அதிக தூரம் சென்று விட்டேன் என்னை வீடியோவில் பார்த்தவர் அந்த வெள்ளை சட்டைக்காரால் ரொம்ப முன்னாடி வந்து விட்டார் வாழ்க்கையில் முன்னுக்கு வந்தால் மிக பாராட்டலாம் ஆனால் சாலையில் முன்னுக்குவருவதால் போக்குவரத்துக்கு பாதிப்பும் விபத்தும் தான் ஏற்படும் என்றார். உடனே நான் என்னை சொல்வதை அறிந்து கொண்டு வேகமாக பின் வந்தேன் பின்னே போகும் போது இன்னும் மெதுவாக போங்க உங்க தவறை உணர்ந்தால் சரி, தவறு செயவது மனித குணம் அதை திருத்திக்கொள்வது தான் மனப்பக்குவம் என்றார்.

உண்மையிலேயே போக்குவரத்து விதிகளை ஓரளவு கடைபிடிப்பேன் சிட்டிக்குள் செல்லும் போது குறிப்பிட்ட வேகத்தைல் செல்வேன் என்ன மஞ்சள் லைட் போட்டதற்கு பின் சிக்னலை கடக்கும் தவறை இப்போது செய்வதில்லை.

டவுன்ஹால் தாண்டி செல்பவர்களில் நிறைய பேர் என்னைப்போல மைக்கில் அறிவுரை வாங்கி இருப்பார்கள் போல அந்த இடத்தில் இப்போது ஓரளவு அனைவரும் சாலை விதிகளை மதிக்கின்றனர் எனத் தெரிகிறது. மணிக்கூண்டில் பேசும் அவரின் குரல் வசீகரமானது உண்மையில் நிறைய பேர் அவர் பேச்சை கேட்கின்றனர் என்பது யாராவது தவறாக முன் சென்று விட்டால் அவர் அவர்களை குறிப்பிட்டு சொல்லும் போது பின் உள்ளவர்கள் எல்லாம் சிரிப்பார்கள் அதில் இருந்தே தெரிகிறது மக்கள் கவனிக்கிறார்கள் என்பதை.

போக்குவரத்தை தன் குரல் மூலம் சரி செய்யும் அவருக்கு நம் பாராட்டுக்கள் ஆனால் அவரை நாம் பாராட்டுவதை அவர் நிச்சயம் விரும்பமாட்டார். தவறுகளை திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்கள் நாம், நம் தவறுகளை திருத்தி சரியான சாலை விதிகளை கடைபிடிப்பது தான் அவருக்கான மிகச்சிறந்த பாராட்டாக இருக்கும் என்பது என்கருத்து.

8 comments:

  1. Antha sakothararukku vaazhthukkal..

    ReplyDelete
  2. "சாலை விதிகளை கடைபிடிப்பது தான் அவருக்கான மிகச்சிறந்த பாராட்டாக இருக்கும் " மிகவும் சரி.

    ReplyDelete
  3. என்றும் பாராட்டப்பட வேண்டியவர்... முடிவில் சொன்னது மிகச் சரி...

    ReplyDelete
  4. போலீஸார் இதே மாதிரி நடந்து கொண்டால் நிறைய பேர் மாறிவிடுவார்கள்! அந்த காவலருக்கு வாழ்த்துக்கள்! மனம் திறந்து பாரட்டிய உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  5. இது ஒரு டெக்னிக்னு நினைக்கிறேன், நல்லது தான்.... பொதுவா நாமே தெரிஞ்சிக்கணும்... இங்க அவர் செய்றார்..

    ReplyDelete
  6. இதுபோன்று விரும்பிக் கடமையைச் செய்பவர்கள்
    குறைந்து வரும் வேளையில் இது போன்றும்
    சிலர் இருப்பது மனதிற்கு தெம்பளிக்கின்றது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அவரின் வழிகாட்டிக்குரல் வாழ்க.

    ReplyDelete
  8. நல்ல மனிதர் - அவருக்கு வாழ்த்துகள்.....

    ReplyDelete