Thursday, January 16, 2014

தொழில்அதிபர்...



பெயரோ கோடீஸ்வரன் ஆனால் ஊரில் எல்லோரிடமும் கடன். சிறுவயது முதலே கோடீஸ்வரன் ஆகவேண்டும் எண்ணம் உள்ளவன் தினேஷ் அதனால் அவனுக்கு பட்ட பெயர் தான் கோடீஸ், இவன் தான் நம் கதையின் நாயகன், இவன் கோடீஸ் ஆனானா? இல்லையா?

தினேஷ் ஒரு விவசாய கூலி குடும்பத்தில் பிறந்தவன் இவனின் இலட்சியமாக தொழில் அதிபர் கனவு மட்டுமல்ல கொஞ்சம் இல்ல நிறையவே பேராசைக்காரன். போராசை பெரு நஷ்டம் என்பதை அறியாதவன் அல்ல ஆனாலும் கனவு தொழில் அதிபர் ஆச்சே.

இவனுக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது ஆனால் அது தரிசு நிலம் அந்த இடத்தை வாங்க ஆள் இல்லாததால் மழை பெய்தால் கடலை சாகுபடி செய்வார் அவரின் தந்தை மற்றபடி கூலி வேலை தான். நம் கோடீஸ் பால் ஊற்றியே  தொழில் அதிபர் ஆனார்  என ஒருத்தரைப்பற்றி படித்துள்ளான். அடுத்து 4 எருமை வாங்கியே தீரவேண்டும் என குறிக்கோளோடு இருந்தவன் அப்பாவின் தயவில் 2 எருமை மட்டுமே வாங்கினான்.

என்னதான் புண்ணாக்கு, வைக்குபுள் வைத்தாலும் காலை மாலை என மொத்தம் 5 லிட்டர் பாலுக்கு மேல் கொடுக்கவில்லை அந்த எருமை. இப்படியே போன எங்க தொழில் அதிபர் ஆவது என்று 5 லிட்டரை 6 ஆக்கினான் ஆனாலும் போராசை விடவில்லை 5 யை 10 ஆக்கினான் கொஞ்ச நாள் வண்டி ஓடியது இவன் பால் சுத்த தண்ணீர் என உள்ளுரிலும், வெளியூரிலும் பால் வாங்க மறுத்தனர் அப்புறம் என்ன நஷ்டம் தான்.

அடுத்த தொழில் மண் விற்பனை செய்வது என்று முடிவெடுத்து இருக்கற அஞ்சு பத்தை புரட்டி மண் விற்பனை செய்தான் நன்றாக போனது நல்ல முன்னேற்றம் தொழிலில் இரவு பகலாக மண் விற்பனை செய்தவன் தீடீர் என எத்தனை நாளைக்கு அரசாங்கத்திடம் வாங்கி விற்பது நாமே மண் தோண்டினால் என்ன என அவன் தொழில் அதிபர் புத்தி குறுக்கு வேலை செய்ததது ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தது ஆனால் முடிவு தாசில்தார்கிட்ட மாட்டி இருக்கறத எல்லாம் பைன் கட்டி மிச்ச மீதியுடன் விட்டால் போதும் என அங்கிருந்து பறந்தான்.

இதன் பின் தொழிலை மறந்து வேலைக்கு செல்லாம் என்று முடிவெடுத்து பைக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான் தற்காலிகமாக தள்ளி வைத்தன் தொழில் அதிபர் வேலையை. எசக்கு பிசக்காக ஐடியா கொடுக்கும் நண்பர்கள் உடன் பல அறிவுரைகளை சொல்லி நல்ல வசதியாக வீட்டுப்பெண்ணாக திருமணம் செய்து கொள் நிறைய பணம் கிடைக்கும் தொழிலுக்கும் வசதியாக இருக்கும் என ஐடியா கொடுக்க அடுத்து பெண் தேட ஆரம்பித்தான். 10 ஏக்கர் நஞ்சை நிலம் புள்ள சித்தோடு சின்ராசுவிற்கு இரண்டு பெண்கள் எனவும் அதில் ஒன்னை கட்டினால் 5 ஏக்கர் நஞ்சை கன்பார்ம் என கூட இருக்கும் நட்புக்கள் ஏற்றிவிட சரி என்று தாலி கட்டினான் சின்ராசுவின் மகள் துளசிக்கு. துளசி நல்ல பாட்டாளி எல்ல வேலைகளையும் இழுத்து போட்டு செய்பவள்.

துளசியிடம் தன் கனவை சொல்ல அவளும் நல்ல விசயம் தான் ஆனால் அதற்கு கடுமையாக உழைக்கவேண்டும் என அறிவுரை சொல்ல உங்க அப்பாகிட்ட கேட்டு 5 ஏக்கரை நம் பேருக்கு மாற்றி லோன் வாங்கிக்கொள்ளலாம் என தினேஷ் ஒரு பிட்டை போட இவன் பிட்டை போட்ட அடுத்த வாரத்தில் ப்ளேக் நோயால் சின்ராசு உலகை விட்டு பறந்தான். சின்ராசுவிற்கு இரண்டு பெண்கள் என அறிந்தவனுக்கு இரண்டு பொஞ்சாதி, இரண்டாவதற்கு 4 பெண்கள் என்பதை அறிய மறந்தான், நஞ்சை யாருக்கு என்று எல்லோரும் நீதிமன்றத்தில் நீதி கேட்க புறப்பட்டனர் நம் நாயகன் தலையை தொங்கப்போட்டு இனி ஒழுங்கா வேலைக்கு போகலாம் என்று முடிவு செய்தான்.

கடவுள் கொடுக்க ஆரம்பிச்சிட்டா நிச்சயம் கொடுப்பார் என்பது போல தினேஷ்க்கு அதிஷ்டம் அழைத்தது அவன் மேட்டாங்காட்டின் மேல் நான்கு வழிப்பாதை வருகிறது நிலம் அளந்தனர். அப்படி அளக்கும் போது அவனது அரை ஏக்கர் அரசாங்கத்துக்கு போனது அதில் கொஞ்சம் பணம் அவனுக்கு கிடைத்தது இதை என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் துளசி டெபாசிட் செய்யலாங்க தொழிலை அப்புறம் பார்த்துக்கலாம் என்று கூற சரி என்றான் நம்ம கோடீஸ்..

துளசியின் யோசனையில் வேலையை துறந்தவன் சித்தோடு நான்கு வழிசாலை அருகில் கும்பகோணம் டிகிரி காபி கிடைக்கும் என கடையை அவனது இடத்திலேயே வைத்து வருமானத்துக்கு வழிதேடினான். எதேச்சையாக ஒருநாள் கும்பகோணம் டிகிரியை ருசிக்க இறங்கிய நான் ஏன்டா கோடீஸ் உன் தொழில்அதிபர் கனவு நனவாகும் போது ஏம்ப்பா டீக்கடை வைத்தாய் என்றேன்.. என்னடா சொல்ற, ஆமண்டா பேசாம இந்த இடத்தை ப்ளாட் போட்டு விற்றிருந்தாள் நீ தொழில் அதிபர் ஆகி இருக்கலாமடா என்றேன்.. ஐயா சாமி டிகிரி காப்பி இன்னொன்னு சாப்பிடு காசு வேனா தராதா இந்த ஐடியா கொடுத்து உசுப்பேத்தற வேலைய விடுங்கடா, எனக்கு இதுவே போதும் என்று அடுத்த வந்த ஆடி காருக்கு கும்பகோணம் டிகிரி காபியை இவன் ஆத்த துளசி காசு வாங்கி கல்லாவில் போட்டாள்..


14 comments:

  1. செய்யும் தொழிலே தெய்வம்
    அருமை நண்பரே

    ReplyDelete
  2. பேராசை பிடித்த, திருப்தி அடியாதவர்களுக்கு "நல்ல தண்டனை" கிடைக்கும்...!

    ReplyDelete
  3. டீக்கடை வச்சிருக்கவிங்களும் ஒரு சின்ன தொழில் அதிபர்தானே மக்கா...

    எங்க ஊர்ல [[சாமிதோப்பு]] டீ கடை நடத்திய பாய் ஒருவர் கோடிகள் செலவில் மகளுக்கு சீதனம் கொடுத்து கல்யாணம் செய்து கொடுத்தார், எங்கள் ஊருக்கு வரும் போது பரதேசியாக வந்தவர், இன்னைக்கு எங்கள் நிலங்களை அவர்தான் விலைக்கு வாங்கி வருகிறார்...!

    எல்லாமே உழைப்புதான் இல்லையா...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்... எந்த தொழில் செய்தாலும் அவர் தொழில் அதிபரே...

      Delete
  4. அருமை, சூப்பர், ஆஹா, ஓஹோ

    ReplyDelete
  5. ஒரு நடிகையை கல்யாணம் பண்ணியிருந்தா, ஈஸியா தொழிலதிபர் ஆகியிருக்கலாம்!

    ReplyDelete
  6. நடிகையை கல்யாணம் பண்ணனும்னா தொழிலதிபரா இருக்கணுமே?

    ReplyDelete
  7. டீ கடையும் ஒரு தொழில்தான்! எப்படியோ நண்பரின் கனவு மெய்ப்பட்டது மகிழ்ச்சி! நன்றி!

    ReplyDelete
  8. செய்யும் தொழிலே தெய்வம்....
    டீக்கடையும் ஒரு தொழில்தான்...
    அதற்கு அவரே முதலாளி... அதாவது அதிபர்.
    அதனால் தொழிலதிபராகிவிட்டார் அல்லவா...

    ReplyDelete
  9. அருமையான கதை..இருப்பது போதும் என்ற நிம்மதிக்கு வருவதே புத்திசாலித்தனம்...

    ReplyDelete
  10. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.... எந்தத் தொழில் செய்தாலும் முழுமூச்சோடு இறங்கிச் செய்தால் வெற்றி நிச்சயம்....

    ReplyDelete