Wednesday, January 29, 2014

அஞ்சறைப்பெட்டி 30.01.2014


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........

வணக்கம் வலையுக நண்பர்களே...

ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினவிழா சிறப்பு நிகழ்ச்சிகளை அவ்வப்போது பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஒரு சேனலில் 2 படம் 10 திரைக்கு வர இருக்கும், வந்த படங்களின் விமர்ச்சனம், இது தான் இவர்களின் நாட்டுப்பற்று போல. இந்த காலத்தில் நாட்டுப்பற்றை விட பணப்பற்று தான் அனைவருக்கும் அதிகம்.
கோவையின் பிரபல ஷாப்பீங்மாலுக்கு ஞாயிறு மதியம் சென்றிருந்தோம் அங்கு புட் கோர்ட்டில் ஒருவர் சொன்னார் இந்த குடியரசு தினம் திங்கட்கிழமை வராதா? நமக்கு ஒரு நாள் லீவ் கிடைச்ச மாதிரி இருக்கும், வார நாட்களில் ஷாப்பிங் மால் வந்தால் நிறைய பிகர்களும் இருக்கும், இந்த வாரத்தில் இன்னொரு நாளும் கலர் கலரா கண்ணுக்கு குளிர்ச்சியா அனுபவிச்சிருக்கலாம் என அவர் புலம்பினார், அவருடைய கவலை அவருக்கு..

இங்கு எல்லாருக்கும் நாட்டுப்பற்றை விட பணப்பற்று தான் அதிகம் என்று சொன்னால் அது மிகையாகாது.
.......................................


இரண்டு நாள் விடுமுறையில் சனிக்கிழமை  என் மகனின் அன்பு தொந்தரவால் யானை முகாமுக்கு சென்று, யானையை பார்க்கலாம் என்று மேட்டுப்பாளையம் அழைத்துச் சென்றேன்.

யானை முகாமில் 148 யானைகள் இருக்கின்றன அவற்றை எல்லாம் பார்க்கலாம், அது குளிக்கும் போது தண்ணீரை பீச்சியடிக்கும், தண்ணீரில் விளையாடும், அதன் மேல் பாகன் அமர்ந்திருப்பார், அத்தனை யானைகளை ஒன்றாக பார்ப்பது மிக கடினம் என்றெல்லாம் என் மகனுக்கு கதையாக சொல்லி மேட்டுப்பாளையம் வனபத்திகாளியம்மன் கோவில் அருகே உள்ள யானை முகாமிற்கு சென்றோம்.

நாங்கள் சென்ற நேரம் கூட்டமே இல்லை என்பதால் மிக்க மகிழ்ச்சியாக சென்றோம், உள்ளே சென்றதும் ஒரு கம்பி வேலி போட்டு இருந்தானர் அதன் மேல் நின்று பார்த்து விட்டு கிளம்புங்கள் என்று சொல்லி விட்டனர்.

என்ன அவ்வளவுதானா? ஏங்க யானையே தெரியலியே என்று கேட்டோம், கீழே போய் பார்த்தால் உசுருக்கு உத்திரவாதம் இல்லைங்க? என்றனர். அது வரை யானை கதை கேட்டுக்கொண்டு வந்த என் மகன் என்னை கேள்வியால் துளைத்துவிட்டான்.

அங்கு இருந்த கால்நடை மருத்துவர் ஒருவர் எனக்கு உறவினர், அவரிடம் பேசியதில் யானைகள் எப்போதும் போல இருக்காது அதுவும் நிறைய யானைகள் இருக்கும் போது அவைகளே சண்டை இட்டுக் கொள்ளும், அதனால் அருகில் போகக்கூடாது என்றார். தூரத்தில் இருந்தே நாலு யானைகளை பார்த்து விட்டு திரும்பினோம்.

யானை முகாம், யானைகளுக்கு மட்டும் தான் அங்கு யானைகள் புத்துணர்விற்காக வந்துள்ளது அங்கு அதை காட்சிப்பொருளாக பார்க்கப்போனது எங்க தப்பு தான், எல்லாத்துக்கும் காரணம் ஆசைதான் செலவே இல்லாமல் குடும்பத்தை சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை தான் காரணம்...

.......................................

இந்த முறை பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் 3 அணியா அல்லது 4 அணியா என்று இன்னும் குழப்பமாகவே இருக்கிறது அரசியல் பார்வையாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும்.

ஓட்டுக்கள் பிரிய பிரிய பலமான ஓட்டு வங்கி உள்ள கட்சிக்கே ஆதாயம் என்பதில் மாற்று கருத்து இல்லை.

பாமக, பாஜக கூட்டணியில் வந்ததில் ஆச்சர்யம் இல்லை, கூட்டணி இருந்தால் தான்  வெற்றிகள் கிடைக்கும் என்று நன்கு அறிந்தவர் மருத்துவர் ஐயா என்பதை காட்டுகிறது.

மதிமுக விற்கு 6 இடம் என்று தான் பரவலாக பேச்சு அடிபடுகிறது வைகோவும் போதும் என்று நினைப்பார் போல.

காங்கிரஸ் யாருடன் கூட்டு என்று தேர்தலுக்கு முந்தைய வாரம் தான் சொல்லுவார்கள் அது வரை அவர்கள் அணி சஸ்பென்ஸ்...

.......................................

ஆம் ஆத்மியை அனைவரும் பார்த்து கொண்டு இருக்கின்றனர் என்பதை அறியாதவராக இருக்கிறார் கெஜ்ரிவால், தங்கள் அமைச்சர்களுக்கு சொல்லவேண்டாமா? எதைச் செய்தாலும் நிதானமாக யோசித்து செய்யுங்கள், எங்கு சென்றாலும் பார்த்து செல்லுங்கள், நம்மை ஊடகங்கள் மட்டுமல்லாமல் அனைத்து எதிர்கட்சிகளும் காலை வார காத்துக்கிடக்கின்றன என்ற அறிவுரையை கட்சி எம்எல்ஏக்களுக்கும், மந்திரிகளுக்கும் இனிமேலாவது பாடம் நடத்தினால் அவரின் கட்சிக்கு நல்லது.

.......................................  
பரபரப்பாக பேசி அரசியல் ஆதாயம் அடையளாம் அல்லது மக்களுக்கு இப்படி ஒரு தலைவர் இருக்கிறார் என்று அறிவதற்காகவே பேட்டி கொடுத்து பல போராட்டங்கள் உருவாகுவதற்கு காரணமாக இருக்கின்றனர் பல தலைவர்கள். காங்கிரஸ் பேட்டி கொடுத்தால் அதை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்துகிறது. பாஜக பேட்டி கொடுத்தால் அதை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது. ஆக மொத்தம் போராட்டம் நடக்கிறது, பொதுமக்களுக்கு இடையூராக இருக்கின்றது என்பது தான் உண்மை.

.......................................  


அந்தமான் படகு விபத்து மிகவும் வருந்ததக்கது. நமது இந்திய சுற்றுலாவை இன்னும் மேம்படுத்த வேண்டும், முக்கியமாக சட்டதிட்டங்களை நேர்மையாக அதே சமயம் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் சுற்றுலா மையங்களில். விபத்து அனைத்து இடங்களிலும் நடக்க கூடிய ஒன்று தான் ஆனால் அவ்வாறு நடந்தால் எவ்வாறு தப்பிப்பது என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கை நம்ம ஊரில் எந்த சுற்றுலா மையத்திலம் இல்லை என கூறலாம்.

ஆங்கில சேனல் பாக்கிறோம் அதில் கடற்கரையில் குளிக்கின்ற பலர் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர் உடனே அவர்களை மீட்க அங்கே மீட்பு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது அவர்கள் எவ்வாறு மீட்கின்றனர், எவ்வாறு கண்காணிக்கின்றனர் என்று எல்லாம் மிக தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றனர். அதில் ஒரு பகுதியை கூட நாம் செயல்படுத்துவதில்லை எந்த சுற்றுலாமையத்திலும். கண்காணிப்பு இல்லாத பகுதிகளில் நிச்சயம் என்றாவது ஒரு நாள் பெரிய விபத்து ஏற்படத்தான் செய்யும்.

பல பெரிய விபத்துக்கள் நடந்து இருப்பதை பார்த்து கொண்டு தானே இருக்கிறோம். இனியவாது தடுப்பார்க்ளா பொறுத்திருந்து பார்ப்போம்.
.............................. 


பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பல ஜாதிக்கட்சிகள் ஐக்கியமாகின்றன. குறிப்பிட்ட பகுதியில் ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிகமாக இருக்கின்றனர் அதை வைத்து ஜாதிக்கட்சிகள் எல்லாம் கூட்டணியில் சேர்ந்து தங்களுக்கு அதிக சீட் வேண்டும் என்று வேண்டு கோள் வைக்கின்றனர், அது தவறு என்று சொல்ல முடியாது அவர்கள் உரிமை கேட்கிறார்கள். 

திராவிட கட்சிகளுக்கு எதிராக புதிய கூட்டணி அமைத்திருப்பது பெரிய விசயம். ஆனால் மக்கள் வழக்கமான திராவிட கட்சிகளை ஏற்றுக்கொள்வார்களா ? அல்லது ஜாதிக்கட்சிகளை ஏற்றுக்கொள்வார்களா? என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

12 comments:

  1. // நாலு யானைகளைப் பார்த்து விட்டு //

    ஃபோட்டோவுல மிச்ச மூணு யானைகளைக் காணோமே...

    ReplyDelete
    Replies
    1. பாஸ் தனித்தனியாகத்தான் பார்த்தோம் பாஸ்...

      Delete
  2. நம்ம்மக்கிட்ட பாடு படுதுங்கன்னுதானே யானைகளை புத்துணர்ச்சி முகாமுக்கு அனுப்பி இருக்காங்க. அங்கயும் போய் ஏன்யா தொந்தரவு பண்ணுறீங்க!?

    ReplyDelete
  3. எல்லாத்துக்கும் காரணம் ஆசைதான்...!

    ReplyDelete
  4. யானை கோட்டைன்னு குருவாயூரில் ஒரு இடம் இருக்கு..அங்கே நீங்க பையனுக்கு சொன்னதெல்லாம் பார்க்கலாம். பெரிய யானைகளுடன் தும்பிக்கை பிடித்து ஃபோட்டோ கூட எடுக்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. சொல்லீட்டிங்கள்ள... அடுத்த ப்ளானை போட்டுட்டாப்போச்சு...

      Delete
  5. யானைகளுக்கு ஓய்வு கொடுக்க முகாம் நடத்தினா அதையும் சுற்றுலா தளமா மாத்துவது தப்புதான்! ஆம் ஆத்மியின் சாயம் வெளுக்கத்துவங்கிவிட்டது! சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  6. அஞ்சறைப்பெட்டி விஷயங்கள் அருமை
    அன்றாடத் தகவல்களை மிக லேசான
    விமர்சனத்துடன் ஞாபகப்படுத்திப் போவது
    நல்ல யுக்தி
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அஞ்சறைப்பெட்டி - வழமை போல நன்று.

    ReplyDelete