உள்ளுரில் இருந்து உலகம் வரை........
கடந்த ஞாயிற்றுக்கிழமை இனிமையான ஓர் அனுபவம் கோவையில் எங்களால் அரங்கேற்றப்பட்டது கோவையைச் சேர்ந்த பதிவர்கள் பரஸ்பரம் , அறிமுகம் என்று களை கட்டியது எங்கள் நினைவுகள். கலந்து கொண்ட எங்கள் கோவை வலைப்பதிவர்கள்...
............................................................ .............................. .....
இந்த வாரத்தில் நாடு முழுவதும் நித்தியானந்தாவைப் பற்றிதான் பேச்சு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த வாரத்தில் நாடு முழுவதும் நித்தியானந்தாவைப் பற்றிதான் பேச்சு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
என்னைப் பொறுத்த வரை நித்தியானந்தாவின் மேல் தவறு எதுவும் இல்லை என்பேன்
அவர் நல்லவர் இல்லை என்று அறிந்தும் அவரைச்சுற்றி சுற்றி அவரை சந்திக்க
செல்லும் மக்களைத்தான் குற்றம் சொல்வேன். நீங்கள் இடம் கொடுத்ததால் தான் தவறு செய்கிறான்.
சாமியார்களை நம்பி ஏமாந்தவர்கள் தான் அதிகம் இதை இன்னும்புரிந்து கொள்ளாமல் அவர் பின் சென்றால் கை என்ன காலைத் தூக்கி கூட மேலே வைப்பார்..
எப்படியும் நித்தி விரைவில் வெளியே வரத்தான் போகிறார்.. மீண்டும் சிஷ்யைகள் அவரைச்சுற்றி சுற்றி வரத்தான் போகிறார்கள் நாம் திட்டிக்கொண்டே இருக்கத்தான் போகிறோம்...
சாமியார்களை நம்பி ஏமாந்தவர்கள் தான் அதிகம் இதை இன்னும்புரிந்து கொள்ளாமல் அவர் பின் சென்றால் கை என்ன காலைத் தூக்கி கூட மேலே வைப்பார்..
எப்படியும் நித்தி விரைவில் வெளியே வரத்தான் போகிறார்.. மீண்டும் சிஷ்யைகள் அவரைச்சுற்றி சுற்றி வரத்தான் போகிறார்கள் நாம் திட்டிக்கொண்டே இருக்கத்தான் போகிறோம்...
............................................................ .............................. .....
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று எல்லா கட்சிகளும் தேர்வு செய்ய
திக்குமுக்காடுகின்றன. காங்கிரசும், பாரதியஜனதாவும் சிறிய கட்சிகளின் ஆதரவை
நோக்கி செல்கின்றனர். இம்முறை மாநில கட்சிகளின் விருப்பம் தான் விரைவில்
நிறைவேறும் போல...
............................................................ .............................. ......
கரூர் மாவட்டம் சணப்பிரட்டி எஸ்.வெள்ளாப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த
சிதம்பரம்(லேட்) என்பவரது மகன் மணிகண்டன்(17). அவரது தந்தை சிதம்பரம்
இறந்து விட்ட நிலையில், கட்டிட தொழிலாளியான அவரது தாய் லதாவின் அரவணைப்பில்
வாழ்ந்து வருகின்றார். மணிகண்டன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 480 மதிப்பெண்
பெற்று பலரது புருவத்தையும் உயர வைத்தார்.
இதனையடுத்து நாமக்கல்
மாவட்டம் பரமத்தி வேலூர் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 1ல்
சேர்ந்தார். சமீபத்தில் வெளியான ப்ளஸ் 2 தேர்வில் மணிகண்டன் 1,188
மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றார். அவர் இருதய நோய்க்கு
சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவம் படிக்க விரும்புவதாக
தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மணிகண்டனின் வறுமையை அகற்றவும்,
அவரது கல்விக்கு கை கொடுக்கவும் (கரூர் மாவட்டம்) கிருஷ்ணராயபுரம் தொகுதி
அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ் அவரது 13வது மாத சம்பளத் தொகையான ரூ.
50,000த்தை அந்த மாணவனின் மருத்துவ படிப்பு செலவுக்கு வழங்குவதாக
அறிவித்துள்ளார். காமராஜ் தனக்கு கிடைத்த 12 மாத சம்பளத்தை சமுதாயத்தில்
பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கு வழங்கி உதவி செய்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இவரைப்போல எல்லா எம்எல்ஏக்களும் தங்கள் ஊதியத்தை ஏழை மாணவர்களின் கல்விக்கு செலவிட்டால் அதை விட மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை...
........................................................... .............................. ......
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி,
இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்ற எந்திரன் -
தி ரோபோ, இப்போது ஜப்பானைக் கலக்கி வருகிறது.
இந்தப் படத்துக்கு
ஜப்பானில் கிடைத்துள்ள ஆதரவு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.
ரோபோ என்ற மனித எந்திரங்கள் உற்பத்தியில் உலகின் முதன்மை நாடாகப்
போற்றப்படும் ஜப்பானில், ரஜினியின் ரோபோ திரைப்படம் வெளியாகியுள்ளதை ஒரு
திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர் அந்நாட்டு மக்கள்.
ஆரம்பத்தில் இந்தப் படம் அங்கு சில திரைப்பட விழாக்களில் இரண்டு மணி படமாக எடிட் செய்யப்பட்டு வெளியானது.
அங்கு
பலத்த வரவேற்பு கிடைத்தது. பின்னர் அந்த எடிட் செய்த பிரதியையே, நாடு
முழுவதும் வெளியிட்டனர். எத்தனை தியேட்டர்கள் தெரியுமா... தமிழை விட
அதிகம்... 1300 திரையரங்குகள்!
வெளியிட்ட அனைத்து ஜப்பானிய நகரங்களிலும் ரோபோவின் ராஜ்ஜியம்தான். ரஜினி இன்றைக்கு ஜப்பானின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார்.
படம்
வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகும் கூட்டம் குறையவில்லை.
ரோபோ ரஜினி
முகமூடி அணிந்தபடி இரும்பிலே ஒரு இதயம் பாடலை முணுமுணுத்தபடி, மீண்டும்
மீண்டும் படம் வருகிறார்கள் ரசிகர்கள்.
......................................................... .............................. ........
ஜீன் 12 எப்போதும் காவிரியில் டெல்டா விவசாயிகளுக்காக தண்ணீர்
திறந்து விடும் நாள் இந்நாளைத்தான் அநேக விவசாயிகள் எதிர்பார்த்து
காத்துக்கொண்டு இருப்பர். இந்த வருடம் மழை பொய்த்துப்போனதால் தண்ணீர்
திறக்கவில்லை மக்களும் வானத்தை பார்த்து பெருமூச்சு விட வேண்டிய நிலையில்
உள்ளனர். கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்பதை விட வருணபகவானிடம் கேட்பதே மேல்...
............................................................ .............................. ........
டெங்கு காய்ச்சல் வந்தாலும்
வந்தது கிராமப்புறங்களில் எல்லாம் கொசு மருந்து புகையை அடிக்கின்றனர்.
முன்பு மாநகராட்சி, நகராட்களில் தான் அதிகம் காண முடியும் ஊராட்சியில்
மருந்து அடிப்பது குறைவுதான் இந்த முறை எங்கள் கிராமத்துக்கு
சென்றிருந்தபோது கொசுவை ஒழிக்க புகை அடிப்பதைப்பார்த்ததும் மிக்க
மகிழ்ச்சி..
இந்த புகையினால் கொசு ஒழியுமா என்றால் அது கொசுவிற்கே
வெளிச்சம்...
............................................................ .............................. ........
இந்த வாரம் குடிகமன்களுக்கு வருத்தமான செய்தி பீர் விலையை உயர்த்துவது
தான். என்ன தான் விலையை உயர்த்தினாலும் அந்த பொருளை நாம் வாங்கமல்
இருக்கப்போவதில்லை அது போலத்தான் பீரும்...
விலையை உயர்த்தினால் குடிக்கமா
விட்ருவாங்களா...
............................................................ .............................. ........
............................................................ .............................. ........
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன். இவரது மனைவி சமந்தா. இவர்களுக்கு
நான்சி (8), ஆர்தர் (6) மற்றும் புளோரன்ஸ் (22 மாதம்) ஆகிய 3 குழந்தைகள்
உள்ளனர்.
இங்கிலாந்தில் 200 ஆண்டுகளுக்கு பிறகு
தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் இளமையான பிரதமர் என்ற பெருமையை கேமரூன்
பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு
பக்கிங்ஹாம் சியரில் காஸ்டனில் உள்ள பிளப் இன் என்ற ஓட்டலில் நடந்த மது
விருந்தில் கலந்து கொண்டார்.
அதில், பங்கேற்க மனைவி
சமந்தா மற்றும் 3 குழந்தைகளையும் உடன் அழைத்து சென்றார். விருந்து
முடிந்ததும் மனைவி மற்றும் குழந்தைகள் ஆர்தர், புளோரன்சுடன் காரில் பிரதமர்
இல்லம் உள்ள டவுனிங் தெருவுக்கு புறப்பட்டார்.
காரில்
தாயார் சமந்தாவுடன் 8 வயது மகள் நான்சி இருப்பதாக பிரதமர் கேமரூன்
நினைத்தார். அதேபோன்று இவருடன் அவள் இருப்பதாக சமந்தா நினைத்தார். ஆனால்
நடந்ததோ வேறு.
விருந்து முடிந்து திரும்பியபோது இவர்கள் இருவரும் தங்களது மகள் நான்சியை அங்கேயே தவறவிட்டு திரும்பி கொண்டிருந்தனர்.
இந்த
நிலையில் விருந்து நடந்த ஓட்டலின் கழிவறையில் நான்சி மட்டும் தனியாக
நின்று கொண்டிருந்தார். அவளை ஓட்டல் ஊழியர் பார்த்து விசாரித்தார்.
அப்போதுதான் அவளது தந்தை இங்கிலாந்து பிரதமர் கேமரூன் என தெரிய வந்தது.
..............................
எகிப்தில் சர்வாதிகாரி முபாரக்கின் ஆட்சி மக்கள் போராட்டத்துக்கு பின்
வீழ்ந்தது. இதைத் தொடர்ந்து அங்கு அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில்
முபாரக்கின் ஆதரவாளரும் போட்டியிடுகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
கெய்ரோவில் உள்ள தக்ரீர் மைதானத்தில் பொதுமக்கள் உச்சக்கட்ட போராட்டம்
நடத்தி வருகின்றனர்.
இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அப்போது சுமார் 200 ஆண்கள் சேர்ந்து பெண்களுக்கு செக்ஸ் தொல்லையும், கொடுமைகளும் இழைத்தனர். இதை எதிர்ப்பு தெரிவித்து நேற்று தக்ரீர் மைதானத்தில் பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். அதில் 50 பெண்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பு வளையமாக கைகோர்த்தப்படி சில ஆண்கள் சுற்றி நின்றனர். அதையும் மீறி சில ஆண்கள் பெண்களை கேலியும் கிண்டலும் செய்தும், கட்டித்தழுவியும் செக்ஸ் கொடுமை செய்தனர்.
மேலும், கைகளை பிடித்து இழுத்தும், துணிகளை அகற்ற முயற்சித்தும் மானபங்கம் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அருகே இருந்த அகதிகள் முகாம்களில் புகுந்து தங்களின் மானத்தை பாதுகாப்பு கொண்டனர்.

தகவல்
இன்றைய பரபரப்பான விஞ்ஞான யுகத்தில் டென்சன் ஆகாதவர்களே இல்லை என்று
சொல்லலாம். பணிச்சுமை, ஏமாற்றம், எதிர்பார்த்தது கிடைக்காமல் போவது போன்ற
காரணங்களால் டென்சன் உருவாகிறது. நாளடைவில் இதுவே மன அழுத்தம் (டிப்ரஷன்)
நோயில் தள்ளி விடுகிறது.
இந்தியாவில் மன அழுத்தம் நோய்க்காக மனநல டாக்டர்களிடம் சென்றால் ரிலாக்ஸ் ஆக இருக்க கற்றுக் கொள்ளுங்கள், வாக்கிங் செல்லுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள் என்று ஆலோசனை கூறுவார்கள். மன அழுத்தத்தை குணப்படுத்தும் மருந்துகளும் வந்துவிட்டது.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் மன அழுத்த நோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்தது. மன அழுத்த நோய்க்கு மருந்து உட்கொள்தல் தவிர உடற்பயிற்சி செய்தால் குறையுமா என்று லண்டனைச் சேர்ந்த பிரிஸ்டல் பல்கலைக்கழகம், எக்செடர் பல்கலைக்கழகத்தின் மருத்துவ குழு ஆய்வு நடத்தியது.
இதற்காக அவர்கள் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்படட 18 வயது முதல் 69 வயதுக்குட்பட்ட 361 பேரை பயன்படுத்தினார்கள். அவர்களை இரு பிரிவாக பிரித்தனர்.
ஒரு பிரிவினர் வழக்கமாக அவர்கள் செய்யும் பணியை எப்போதும் போல் மேற்கொள்ளச் செய்தனர். மற்றொரு பிரிவினரை உடற்பயிற்சியில் ஈடுபடுத்தினார்கள். 12 மாதங்கள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தினமும் அவர்களது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது.
இதில் உடற்பயிற்சியால் அவர்களது மன அழுத்தம் கொஞ்சம்கூட குறையவில்லை என தெரிய வந்தது. உலகில் முதல் முறையாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவுகள் பிரிட்டிஷ் மெடிக்கல் கார்னல் இதழில் வெளியிடப்பட்டுள்ளதாக டெய்லி டெலிகிராப் பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளது.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக பதிவர் மழை கழுவிய பூக்கள் என்ற பெயரில் அதிசயா
என்பவர் எழுதி வருகிறார்.. பெண்ணைப்பற்றியும், அவளின் நட்பு, காதல் பந்தம்
என கவிதைகளில் புகுந்து விளையாடுகிறார்... படியுங்கள் மீண்டும் மீண்டும்
படிக்கத் தூண்டும்...
http://athisaya.blogspot.in/
தத்துவம்
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக்
கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப்
பொருள்.
சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்பவனுக்கு எல்லா கதவுகளும் திறந்திருக்கும்....
பேசும் போது எல்லாவற்றையும் நன்றாக யோசி, ஆனால் யோசிப்பதை எல்லாம் பேசி விடாதே...
சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்பவனுக்கு எல்லா கதவுகளும் திறந்திருக்கும்....
பேசும் போது எல்லாவற்றையும் நன்றாக யோசி, ஆனால் யோசிப்பதை எல்லாம் பேசி விடாதே...
தத்துவ முத்துகள் அருமை! பாராட்டுக்கள் !
ReplyDeleteமுதல் படம் - வடை போச்சே
ReplyDeleteஅஞ்சறைப்பெட்டி அசத்தல் - தகவல்கள் பலே பலே
ReplyDeleteஅணைத்து துளிகளும் அருமை ............மன அழுத்தம் என்பது ஒரு நோய் மற்றவருடன் தன உணர்வுகளை பகிந்துகொள்ள முடியாத போது அவை தேங்கி கிடக்கும் நாளடைவில் அந்த உணர்வுகளின் தளும்பல் அவற்றை வெளியே கொட்ட சரியான இடம் கிடைக்காததால் ஏற்படும் சுமைதான் மனசுமை .....இதற்க்கு தீர்வு என்னவென்று பார்த்தல் நண்பர்கள் மூலமாக எழுத்துகள் மூலமாக எதோ ஒரு வகையில் எண்ணங்களை சரியான முறையில் பகிர்வதுதான் ..........// பேசும் போது எல்லாவற்றையும் நன்றாக யோசி, ஆனால் யோசிப்பதை எல்லாம் பேசி விடாதே...// முத்தான தத்துவம்
ReplyDeleteஅனைத்து தகவல்களும் அருமை :)
ReplyDeleteRobot Film at Japan - very interesting news
ReplyDeleteசெய்திக் கதம்பம் அருமை!
ReplyDeleteசா இராமாநுசம்
செய்தித்தாளை படிப்பதுமாதிரியே இருக்கு.
ReplyDeleteஜப்பானியர்க்கு ரோபோ அவர்களோடு ஒன்றியது இப்போ இந்த படமும்...
ReplyDeleteடென்சனை போக்க வல்லது
நமது யோகா இதில் நிரூபிக்கப்பட ஒன்று. இரண்டாவது உடனடி டென்சன் போக்குவது இசை (மெலடி மற்றும் கிளாசிக்.
நித்யானந்தா குறித்து நீங்கள் கூறியது உண்மைதான். நிதி நிறுவன ஊழல் போல் தான். எத்தனை முறை சிக்கினாலும் புத்தியை மாற்றிக் கொண்டால் தானே. அந்த பகுதியை முகனூலில் இட்டால் பகிர்வதற்கு வசதியாய் இருக்கும்.
ReplyDelete