Wednesday, May 23, 2012

அஞ்சறைப்பெட்டி 24/05/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 7.54 ஏற்றி இருக்கிறார்கள். எப்போது பெட்ரோல் விலையை ஏற்றினாலும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன அதானல் விலையை உயர்த்தினோம் என்கின்றனர் ஆனால் எண்ணெய் நிறுவனங்களில் வருட வருமானம் பார்த்தால் லாபத்தில் தான் இயங்குகிறது...

மக்களை முட்டாள் ஆக்குவதில் சிரமம் இல்லை இவர்களுக்கு...


பெட்ரோல் விலை ஏற்றத்தின் மூலகம் மகத்தான சாதனை படைத்த காங்கிரஸ் அரசு அடுத்து ஆட்சியை பிடிக்க வாய்ப்பு மிக மிக குறைவு...


பெட்ரோல் விலையை 7.54 ஏற்றி இப்பொழுது எதிர்கட்சிகளின் எதிர்ப்பால் 2.54 குறைக்க வாய்ப்பிருக்கிறது... ( இது கரண்ட்டை கொடுத்து பீசை பிடுங்கும் வேலை)


கடந்த 8 வருட ஆட்சியில் காங்கிரஸ் அரசின் மிகபெரிய சாதனையாக பெட்ரோல் விலையேற்றத்தை கூறி பெருமை பீத்திக்கலாம்...


...............................................................................................


காரில் இருக்கு கருப்பு ஸ்டிக்கரை கிழி கிழி என்று முக்குக்கு முக்கு நம்ம போலீசார் நிறுத்தி அபராதம் என்கின்றனர். சென்னையை அடுத்து இப்போது கோவையிலும் ஸ்டிக்கர் இருக்கக்கூடாது கட்டாயம் எடுக்க வேண்டும் என்கின்றனர்.

ஸ்டிக்கர் எடுக்கும் கடைக்கு சென்றால் 500 ரூபாய் கேட்கின்றனர் ஸ்டிக்கர் கிழிக்க....


ஆக எங்க போனாலும் நம்ம கிட்ட புடுங்குவதிலேயே குறியாக இருக்கின்றனர்..... ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் காரை செக் செய்பவர்களே அந்த ஸ்டிக்கரை கிழித்து விட்டால் புண்ணியமாக போகும்...


...............................................................................................

எப்பவும் முதலில் வேட்பாளரை அறிவித்து வெற்றியை பிடிப்பது தான் அம்மாவின் பாலிசி... இடைத்தோர்தல் போல இப்போது ஜனாதிபதி தேர்தலுக்கும் வேட்பாளரை முன்னிறுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்...

இப்ப நடந்த குரு பெயர்ச்சியால் தொட்டதெல்லாம் அம்மாவுக்குத்தான் வெற்றி என்று சித்தோடு ஜோசியர் சொல்லிட்டாருருருரு....

................................................................................................

சிக்னலில் நிற்கும் போது இடதுபுறம் ப்ரி லெப்ட் என்று இருக்கும் ஆனால் சிக்னலில் நிற்கும் நம் மக்கள் அந்த இடது புறவழியையும் அடைத்து தான் நிற்கின்றனர்... 


சாலை விதிகளை கடைபிடிக்காத நமக்கு காவல் துறை அபராதம் விதிக்கும் போது மட்டும் எகிறும் நாம் இது போன்ற சாலை விதிகளை கடைபிடிப்பதன் மூலம் போக்குவரத்து நெறிசலை குறைக்கலாமே.

சாலை விதிகளை சரியாக கடைபிடிக்காததால் தான் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன என்று தெரிந்தும் கடைபிடிக்காத நாம் படித்திருந்தும் முட்டாள்களே...

...............................................................................................

எவ்வளவு தான் படிச்சு படிச்சு சொன்னாலும் நம்மாளுக விடிய விடிய ஐபிஎல் பார்ப்பதை விட மாட்டார்கள்.. அங்கு மேட்சை பிக்ஸ் செய்து விட்டு விளையாடுகின்றனர். இவ்வாறு செய்திகள் வெளியாகி அது உண்மை என வருமானவரித்துறையினர் அங்கு  ரெய்டு நடத்துகின்றனர் என்று தெரிந்தும் மெனக்கெட்டு அந்த மேட்சை பார்ர்பபது வருத்தத்திற்கு உரியது...

அநேகமாக அந்த முறையியும் சென்னை அணி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்று காலையில் நண்பர்கள் பேசிக்கொண்டனர் ஒரு வேளை அவர்கள் அதிகம் பிக்சிங் செய்திருப்பார்களோ??? ##  டவுட்டு


...............................................................................................

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் கிரீன்ஸ் பேட்டையை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் கிரீஷ்குமார் (வயது 25) தொலைதூர கல்வியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கிரீஷ்குமார் சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அரசு வங்கிக்கு வந்தார். அங்கு  செலானை  பூர்த்தி செய்து  ரூ. 1600/-ஐ வங்கியில் செலுத்தினார். ரூபாய் நோட்டுக்களை வாங்கிய வங்கி கேஷியர் ரூபாய் நோட்டுகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

உடனே கிரிஷ்குமாரிடம் கம்ப்யூட்டரில் கோளாறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் உட்காருங்கள் என கூறி விட்டு ரூபாய் நோட்டுகளை  சோதனை செய்தார். அப்போது அது கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்  கணேசன் மற்றும் போலீசார்  விரைந்து  சென்று அந்த வாலிபரை  பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கிரிஷ்குமார் சித்தூரில் ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்து வந்ததும் அந்த அனுபவத்தில் தனது  வீட்டிலேயே  ஸ்கேன் மிஷின் மற்றும் பிரிண்டர்களை கொண்டு  கள்ள நோட்டுகளை  தயார் செய்து  அதனை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து  போலீசார் கிரிஷ்குமாரின் வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வீட்டின் இருந்து லேப்-டாப் நவீன ஸ்கேன் மிஷின் மற்றும் பிரிண்டர்களையும் அங்கிருந்த 100 ரூபாய் கள்ள நோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து  போலீசார்  கிரிஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் கள்ள நோட்டுகள் எங்கெல்லாம்  புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

..................................................................................................

கொழுப்பு அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சத்து ஏற்படும். எனவே சாப்பாட்டில் அவற்றை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  
தற்போதோ அதுமட்டும் ஒரு காரணம் அல்ல. மிகவும் காலதாமதமாக உணவு சாப்பிட்டாலும்கூட உடலில் கொழுப்பு சத்து சேர்ந்து விடும் என கண்டறியப்பட்டுள்ளது.  
இதை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சால்க் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் இந்திய ஆராய்ச்சியாளர் டாக்டர் சச்சிதானந்தா பாண்டே கண்டுபிடித்துள்ளார். இவரது தலைமையிலான குழுவினர் இதுகுறித்து எலிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர். அவற்றுக்கு தாமதமாக தீனி போட்டு சாப்பிட வைத்தனர்.
அவ்வாறு உணவு தின்ற எலிகளுக்கு கொழும்பு சத்து அதிகரித்து இருந்தது. அதே போன்றுதான் மனிதர்களின் உடலிலும் கொழுப்பு சத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓரு குறிப்பிட்ட நேரத்தில்தான் கல்லீரல் மற்றும் குடல் உறுப்புகள் வேகமாக வேலை செய்யும். மற்ற நேரங்களில் அவை அமைதியாக தூக்க நிலையில் இருக்கும். எனவே, அப்போது சாப்பிடும் போது உணவில் இருக்கும் கொழுப்பு சத்து எரிக்கப்படாமல் அப்படியே உடலில் சேர்ந்து விடுகிறது என்று விளக்கம் அளித்துள்ளனர். 
..................................................................................................

குறும்பு செய்த குழந்தையை வாஷிங் மெஷினில் வைத்து தம்பதி அடைத்தனர். வீடுகளில் குறும்பு செய்யும் குழந்தைகளை சில பெற்றோர் அறைகளில் போட்டு பூட்டி வைத்து தண்டனைகளை வழங்குவார்கள். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த தம்பதி தனது குறும்புக்கார குழந்தையை வாஷிங்மெஷினில் அடைத்து வைத்தனர்.

சம்பவத்தன்று அந்த குழந்தையின் தாய் துவைத்த துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது, அடுக்கிய துணிகளை அவருடைய குழந்தை கலைத்து போட்டது. இதைபார்த்து கோபமுற்ற தந்தை அந்த குழந்தையை தூக்கி அருகில் இருந்த வாஷிங்மெஷினில் உட்கார வைத்தார்.


இதையடுத்து வாஷிங் மெஷினின் தானியங்கி கதவு தானாகவே மூடிக்கொண்டு இயங்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வாஷிங் மெஷினை நிறுத்திவிட்டு, அந்நிறுவனத்துக்கு உடனே தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பழுதை சரிசெய்து அக்குழந்தையை மீட்டு வெளியே எடுத்தனர்.


வாஷிங் மெஷின் இயங்கியதால் குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின் தற்போது குணமாகி உள்ளது. இந்த காட்சி வீட்டில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கேமிராவில் பதிவானது. சமீபத்தில் இது ‘யூ டியூப்’ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.



..................................................................................................

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளரை டெபாசிட் இழக்க களம் இறங்கி உள்ள கட்சியினருக்கு நம் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

தகவல்
ஸ்பெயினில் உள்ள லாசக்ரா வானிலை மைய விண்வெளி நிபுணர்கள் ஒரு எரிகல்லை கண்டுபிடித்தனர். அதற்கு ‘டி.ஏ.14’ என பெயரிட்டுள்ளனர். இந்த எரிகல் 1 லட்சத்து 40 ஆயிரம் டன் எடை உள்ளது.
இது அடுத்த ஆண்டு (2013) பிப்ரவரியில் பூமியை நெருங்கும் என்று தெரிவித்துள்ளனர்.  இது பூமியை நெருங்கும் மோதும்போது பல பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக பூமியை சுற்றி வரும் செயற்கை கோள்களில் மோதி அவை அழியும் வாய்ப்பு உள்ளது. குறைந்தது அவற்றின் தகவல் தொடர்புகள் கூட துண்டிக்கப்படலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ‘நாசா’ விண்வெளி மையமும் கருத்து தெரிவித்துள்ளது. அதாவது ‘டி.ஏ.14’ எரிகல் பூமியை தாக்கும்போது 0.031 சதவீதம் மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த 1908-ம் ஆண்டு இதுபோன்று ராட்சத எரிகல் சைபீரியா காட்டில் விழுந்தது. அப்போது பல நூறு சதுர மைல்கள் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. 
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  நட்புடன் சௌம்யா என்ற பெயரில் தித்திக்கும் நட்பில்.. திகட்டாமல் அன்பு சேர்க்கும்.. பிரியமான தோழி..! என்று அறிமுகமிட்டு எழுதி வருகிறார் சௌம்யா... இவரின் கவிதைகள் அனைத்தும் திகட்டாமல் படித்துக்கொண்டே இருக்கலாம்... நான் நிறைய ரசித்தேன் இவரின் கவிதைகளை... நீங்களும் ரசியுங்களேன்....

http://sowmyathinkings.blogspot.com/


தத்துவம்
புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

முதல் குற்றத்தை சரி என்று சாதிப்பவன், இரண்டாவது குற்றத்தையும் செய்தவனாகிறான்...

ஆயிரம் முறை தோல்வியுற்றாலும் உங்கள் லட்சியத்தில் இருந்து பின்வாங்காதீர்.. போரட்டத்தையும் தவறுகளையும் கண்டு கவலைப்படாதீர்... உங்கள் லட்சியத்தில் வீறுநடைபோடுங்கள் வெற்றி உங்களுக்கே....

புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி.

12 comments:

  1. //பெட்ரோல் விலையை 7.54 ஏற்றி இப்பொழுது எதிர்கட்சிகளின் எதிர்ப்பால் 2.54 குறைக்க வாய்ப்பிருக்கிறது... ( இது கரண்ட்டை கொடுத்து பீசை பிடுங்கும் வேலை)//

    என்ன இப்படி சொல்லிபுட்டீங்க.. 2.54 குறைக்கிறது எவ்ளோ பெரிய்ய்ய்ய விசயம்? ஐந்து ரூபாய் ஏத்துனா எங்களுக்கென்ன?? அதான் இரண்ண்ண்ண்டு ரூபாய் ஐம்ம்ம்பத்து நாஆஆஆலு பைசா குறைக்கப்போறாங்களே.. அது எவ்வ்வ்ளே பெரிய்ய்ய்ய சேவை...
    எங்கள மாதிரியான “புத்திசாலிகள்“ இருக்குற வரைக்கும் மத்திய அரசை யாராலும் அசைக்க முடியாது தெரிஞ்சுக்கங்க..

    ReplyDelete
  2. நிறைய நல்ல தகவல்கள்
    அருமை தொடருங்கள் தோழரே

    ReplyDelete
  3. எக்ஸலண்ட் ஸார். ஃப்ரீ லெஃப்டில் திரும்ப முடியாமல் அடைத்துக் கொண்டு இருப்பவர்களைப் பார்த்து நானும் நிறைய எரிச்சல் பட்டதுண்டு. இப்ப உங்க கருத்தைப் பார்த்ததும் கை தட்டி ரசிச்சேன். சூப்பர்!

    ReplyDelete
  4. அடப்பாவிங்களா...! கள்ள நோட்டு அச்சடிக்கறத விட்டுட்டு இப்ப ஸ்கேனர், ப்ரிண்டர்லயேவா..? இந்தப் புத்தி‌யெல்லாம் நல்ல வழில செலுத்தினா... நாடு வளர்ந்திருக்குமே!

    ReplyDelete
  5. நான் கிரிக்கெட் விரும்பிப் பாக்கறதில்ல. நேரத்துக்குச் சாப்பிடறதால எனக்கு கொழுப்பு பிரச்னை வராது. (ஆனாலும் கொழுப்பெடுத்தவளேன்னு அம்மா திட்றது ஏன்னுதான் புரியல) குழந்தைய வாஷிங் மெஷின்ல வெச்ச பெற்றோரோட செய்கையைப் படிச்சதும் கோபம் கோபம் வருது. குழந்தையின் அருமை தெரியாதவங்க!

    ReplyDelete
  6. இந்த அஞ்சறைப் பெட்டியில எல்லாப் பகுதிகளுமே ரசிக்கும்படி இருக்குது. கை கொடுங்க பிரதர்! பிரமாதம்!

    ReplyDelete
  7. யாராச்சும் தப்பித் தவறி போராட்டம் நடத்துனாங்கன்னு வெச்சுக்கங்க... சரி நாங்க வெலைய பாதி கொறைக்கறோம்ன்னு சொல்லி 7.50 லிருந்து 3.50ஆ கொறைப்பாங்க பாருங்க.

    இதுதான் இனி புது ஐடியா. இத இனி எல்லா முதலமைச்சர்களும் கடைபிடிப்பாங்க பாருங்க.

    எடுத்துக்காட்டுக்கு

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானவிலை பாட்டலுக்கு 50 உயருகிறது என்று சொல்லி... மது பிரியர்களின் ஒருநாள் போராட்டத்தால் இத்தன கோடி இழப்பு ஏற்பட்டது என்றுகூறி பாதியா குறைப்பாங்க.

    ReplyDelete
  8. Signal க்கு முன்னால மோசமான சாலை யின் காரண மாக மெல்ல செல்லும் போதும் சிக்னலை மீறிய தாக பைன் எழுதறாங்க. இதுவும் நடக்குது.

    ReplyDelete
  9. ///////தற்போதோ அதுமட்டும் ஒரு காரணம் அல்ல. மிகவும் காலதாமதமாக உணவு சாப்பிட்டாலும்கூட உடலில் கொழுப்பு சத்து சேர்ந்து விடும் என கண்டறியப்பட்டுள்ளது////////////

    புதிய தகவல்., பகிர்வுக்கு நன்றி ..!

    ReplyDelete
  10. எப்பவும் போல அஞ்சறைப் பெட்டி அழகு.

    கொழுப்பு குறித்த பகிர்வு புதிய தகவல்.

    ReplyDelete
  11. அஞ்சறைப்பெட்டி என்பதன் பொருள் புரிகிறது உங்கள் வரிகளில் இழையோடும் வாசம் நுகர்கையில் ........அருமையான பயனுள்ள பதிவு

    ReplyDelete