Saturday, April 16, 2011

கோடை வெப்பத்தை தகர்க்க நொங்கு சாப்பிடுங்க


முற்றாத பனங்காயை நுங்கு என அழைப்போம். நுங்கு மிகவும் சுவையான ஒரு பானம்.  நுங்குக்கு என ஒரு நுணுப்பமான பருவம் உள்ளது. இந்தப் பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவநிலை கலந்த திண்ம விதையானது மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும். இந்தப் பருவம் தாண்டி சற்று முற்றி விட்டால் இதன் சுவை குன்றி விடும். 

பெண் பனையின் பாளையிலிருந்து உண்டாகும் இளம் பனங்காய்கள் கொத்தாக குலைகளில் தோன்றும். இவை சில குறித்த மாதங்களிலேயே தோன்றத் தொடங்கும். இக்காய்கள் பொதுவாக மூன்று கண்கள், என அழைக்கப்படும் குழிகளைக் கொண்டிருக்கும். சில இரண்டு கண்களையும் இன்னும் சில ஒரு கண்ணையும் உடையவை.

இவற்றில் ஜெலி போன்ற திரவப்பதார்த்தம் உண்டு. இது நுங்கு அல்லது நொங்கு என்று அழைக்கப்படும். இது சுவைப்பதற்கு ருசியானது. காயை வெட்டி நுங்கை உறிஞ்சிக் குடிப்பார்கள். நுங்கின் மேல்பகுதியில் மூன்று, கோது போன்ற செவியமைப்பையுடைய அமைப்புக்கள் உண்டு. இவை பணிவில் அல்லது பணுவில் என அழைக்கப்படும். நுங்கை குடிப்பதற்கு சிலர் இதனைப் பாவிப்பர். பணிவிலைப் பாவித்து சிலர் கஞ்சி, கூழ் போன்றவற்றையும் குடிப்பது உண்டு.

நுங்கு 10-11% வெல்லத்தையும், 2% புரதத்தையும், கொண்டுள்ளது. காயை நுங்குக்காக வெட்டியபின் சிறிது நேரத்தில் வெட்டிய மேற்பரப்பு மண்ணிறமாக மாறும். இதற்கு காரணம் இதிலுள்ள polyphenols  என்னும் பதார்த்தங்கள் காற்றிலுள்ள ஒக்சிஜனினால் ஒக்சியேற்றப்பட்டு மண்ணிறமான quinone என்னும் பதார்த்தங்களை தோற்றுவிப்பதினால். இவை விருத்தியடைந்து பனம்பழமாகவும் நுங்கு இருந்த பகுதி பனம் விதையாகவும் மாறும்.
நுங்கு சாப்பிட்டபின் மிகுதியாக இருக்கும் பகுதி கோம்பை என அழைக்கப்படும். இதனை சிறு துண்டுகளாக வெட்டி மாடுகளுக்கு உணவாகக் கொடுப்பார்கள்.

நன்கு முற்றி விட்ட பின் இதனை சீக்காய் என்பர். சீக்காய் திரவநிலை குறைந்து இறுக்கமாகக் காணப்படும். இதை உண்பதால் வயிற்றில் உபாதை ஏற்படும் என நம்பப் படுகிறது. சீக்காயை சிறுசிறு துண்டுகளாக்கி ஆடு, மாடுகளுக்கு உணவாகவும் கொடுப்பார்கள்.

சிறுவயதில் நொங்கு சாப்பிடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. நொங்கு இரு முறையில் சாப்பிடலாம் நொங்கை தனியாக எடுத்து தோல் நீக்கி சாப்பிடலாம். இரண்டாவது முறை நொங்கின் மேல் பகுதியை மட்டும் சீவி எடுக்கும் போது 2 அல்லது 3 கண்கள் இருக்கும். இந்த கண்களில் பெருவிரலை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நோண்டி திண்கும்சுவை சொல்லி மாளாது அனுபவித்தால் தான் கிடைக்கும். 

நுங்கு வெய்யிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அருமருந்தாகும். 

எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். 

நுங்கின் நீரை வேர்க்குருவிற்குத் தடவ குணம் கிடைக்கும்.

பனை நொங்கு அம்மை நோயின் வேகத்தைக் குறைக்கும்

நுங்கை நாம்  தொழில் முயற்சியில் பயன்படுத்துவது இல்லை. 2 மில்லியன் பனைமரங்களே இருக்கும் தாய்லாந்தில் இருந்து நுங்கு தகரத்தில் அடைக்கப்பட்டு உலகம் எங்கும் ஏற்றுமதியாக அதிக பனைமர வளத்தை கோண்ட இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து எந்த முயற்சியும் எடுக்கப்படாமை கொசுறு செய்தி.

15 comments:

  1. நம்ம ஊருப்பக்கம் நிறைய இருக்குங்க..

    ReplyDelete
  2. சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு...பகிர்வுக்கு நன்றி...

    இப்ப எல்லாம் canned நூங்கு கிடைக்குது என்று வேள்விபட்டேன்...தேடி பார்க்க வேண்டும்..

    ReplyDelete
  3. நுங்கு + காய்சிய பால் + சக்கரை + ஐஸ் கட்டி


    தேவமிர்தம்

    ReplyDelete
  4. நுங்கு உடம்புக்கு மிகவும் நன்று...

    ReplyDelete
  5. இளம் நுங்குகளை பாத்திரத்தில் இட்டு ப்ரிஜில் வைத்து விட்டு பின்னர் எடுத்து சாப்பிட்டு பாருங்கள்........
    //நுங்கு + காய்சிய பால் + சக்கரை + ஐஸ் கட்டி //
    தேவமிர்தம்

    உண்மைதான்.

    ReplyDelete
  6. ஆகா,ஏன் இந்த கொலை வெறி??
    இந்த நுங்கை மறந்தே போய்விட்டோம் பாஸ்..கிடைத்தர்க்கரிய பொருளாகி விட்டது...
    ஊர் பக்கங்களில் போனால் பார்க்கலாம்...ம்ம்ம்

    ReplyDelete
  7. முதல்ல எல்லாம் நொங்கு சீவுன காய் ஒண்ணு 50 பைசா.. இப்போ ரூ 3 டூ 5

    ReplyDelete
  8. அடடா நுங்கு பற்றி எழுதி ஆசையைக் கிளப்பி விடறீங்களே சங்கவி! இந்த தில்லியில் நுங்குக்கு நான் எங்கே போவேன்? அதன் சுவையை எப்படி அனுபவிப்பேன்! ஹூம்….

    ReplyDelete
  9. அட இன்னைக்கு தாங்க பாட்டி ஊர்ல சாப்பிட்டேன்...
    பதிவிற்கு நன்றிங்க.

    ReplyDelete
  10. படங்களைப் பார்க்கவே ஆசையாயிருக்கு.இங்கு நுங்கு டின்னின் அடைபட்டு வருகிறது.
    ஆனால் அந்தச் சுவை இல்லை !

    ReplyDelete
  11. ஆஹா நுங்கு பால் சேர்த்து நுங்கு ஜூஸ் அருமையாக இருக்குமே,

    போன முறை ஊர் போன போது சாப்பிட்டது

    ReplyDelete
  12. சங்கவி!நொங்கிடுவேன்...சொல்லிப்புட்டேன்:)

    ReplyDelete
  13. எனக்கு ரொம்ப பிடிக்கும் சங்கவி கோடை காலம் வரும்போது கண்டிப்பாக சாப்பிடுவேன்

    ReplyDelete
  14. பனை மரங்களை பாதுகாத்தால்தான் அடுத்த தலைமுறைக்கும் இதன் ருசி தெரியும்..ரியலெஸ்டேட் அரக்கர்கள் முதலில் பலியிடுவது பனையைதான்

    ReplyDelete
  15. பின்னூட்டம் போட்றவங்களுக்கு பார்சல் அனுப்பி வைப்பீங்களா??

    ReplyDelete