Monday, April 4, 2011

கும்..கும்..கும்..கும்தலக்கா...


இன்று ஒவ்வொரு இந்தியனும் காலரை தூக்கிக்கொண்டு சந்தோசமாக பேசும் செய்தி நம்மாளுக ஜெயிச்சிட்டாங்க.. நிச்சயம் சந்தோசப்பட வேண்டிய விசயம் தோனியின் பாய்ஸ் ஒவ்வொரு அன்று சிறப்பான பந்து வீச்சையும், சிறப்பா தடுப்புயையும் ஏற்படுத்தி இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கினர்.

நாம் விளையாடும் போதும் ஒவ்வொரு பந்தும் டென்சன் டென்சன் இறுதியில் தேடித்தந்த வெற்றி இந்தியாவிற்கே ஆணந்தக்கண்ணீர்...

இப்போட்டியை காண வந்த ராசபக்சேவை சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது  கடுப்பை ஏற்றினாலும், தோற்கடித்தது சந்தோசத்தைக் கொடுத்தது.

••••••••••••••••••••••••••••••••••


தமிழகத்தில் உச்சகட்ட தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டு இருக்கிறது வழக்காமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஜெவைத் தாக்கும் திமுகவினர் இம்முறை ஜெ வை விட விஜயகாந்தைத்தான் அதிகம் தாக்குகின்றனர். 

அவரிடம் ஓட்டு வங்கி இருக்குது என்பதை அறிந்துதான் அவரை தாக்குகின்றனர். பார்க்கலாம் இவர்கள் தாக்கும் தாக்கு அவர் ஓட்டு வங்கியை சிதறடிக்குமா என்று...

விஜயகாந்த் குடிகாரன் குடித்து விட்டு பேசுகிறான் என்று கூறும் ஆட்சியாளர்கள் அவர்கள் தான் அந்தக்கடையை நடத்துகின்றனர் என்பதை மறந்து விட்டு பேசுகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மார்க்கை மூடிவோம் தமிழ்நாட்டில் விஜயகாந்த் மட்டுமல்ல யாரும் குடிக்க கடை இருக்காது டாஸ்மார்க்கை இழுத்து மூடுவோம் என்று மார்தட்ட முடியுமா???

••••••••••••••••••••••••••••••••••  

இத்தேர்தலில் இரு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை கதாநாயகன், கதாநாயகி என்று வர்ணித்தாலும் உண்மையில் இத்தேர்தலில் கதாநாயகன் தேர்தல் கமிஷன் தான். அனைவருக்கும் கிடுக்குப்பிடி போட்டு இப்படியும் தேர்தலை நடத்த முடியும் என்று அற்புதமாக அவர்கள் பணியை செய்கின்றனர்.

கிராமப்புற மக்கள் கூட என்னப்ப தேர்தல் என்று சொல்றீங்க ரேடியோ சத்ததத்தை காணமே என்று சொல்லம் அளவிற்கு இவர்கள் நடவடிக்கை மக்களிடம் ரீச் ஆகிஉள்ளது.

••••••••••••••••••••••••••••••••••••


வெய்யிலின் தாக்கம் அதிகரித்துள்ளது எத்தனை வெய்யில் அடிச்சாலும் நம் வேட்பாளர்கள் தங்கள் தொகுதியை வியர்க்க விறு விறுக்க ஓட்டு சேகரிக்கின்றனர். ( ஒரு வேளை இந்த 10 நாளைக்கு கஷ்டப்பட்டால் போதும் அப்புறம் 5 வருசத்திற்கு இந்த பக்கம் வரவேண்டியதில்லை என்று கஷ்டப்படுகிறார்களோ )

நேற்று நான் ஒரு டீக்கடை கூட இல்லாத கிராமத்தில் வேட்பாளர் வாக்கு சேகரித்து விட்டு அந்த ஊரில் உள்ள வேப்பமரத்தடியில் வெய்யிலின் உக்கரம் தாக்குதலில் ஒரு 10 நிமிடம் இளப்பாரினர். வேட்பாளரை பார்த்த போது மனுசன் வியர்வையால் நனைந்திருந்தார். (வெற்றி பெற்று விட்டால் ஏசி காரில் தான் இருப்பார்)

•••••••••••••••••••••••••••••••••••

இப்ப திமுகவின் முக்கிய பிரச்சார பீரங்கி வடிவேலு தான் மனுசன் கல கலன்னு கலக்குகிறார். (ரொம்ப பேசி ஓட்டை கலைச்சிறப்போறார்)

••••••••••••••••••••••••••••••••••

கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் பிரபல பத்திரிக்கைகள் எல்லாம் தங்கள் விற்பனையை அதிகரித்துக்கொள்கின்றன கருத்துக்கணிப்புகள் நிஜமாவதில்லை ஆனால் மக்கள் கணிப்பு நிச்சயம் நிஜமாகும் மே 13 வரை காத்திருப்போம் மக்கள் கணிப்புக்கு...

21 comments:

  1. ம்.. வந்தாச்சி.. வந்தாச்சி..

    ReplyDelete
  2. இப்போட்டியை காண வந்த ராசபக்சேவை சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது கடுப்பை ஏற்றினாலும், தோற்கடித்தது சந்தோசத்தைக் கொடுத்தது//
    same feeling

    ReplyDelete
  3. சாட்டையடி சவுக்கடி கேள்வி...

    ReplyDelete
  4. குடுத்த [குடிச்ச] காசுக்கு ஓவரா கூவுரான்ய்யா...

    ReplyDelete
  5. காமெடி சானலுக்கு பதிலா ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கறதை டிவியில் பார்க்கலாம்!

    பதிவு அருமை!

    ReplyDelete
  6. //இப்போட்டியை காண வந்த ராசபக்சேவை சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது கடுப்பை ஏற்றினாலும், தோற்கடித்தது சந்தோசத்தைக் கொடுத்தது//
    :-)

    ReplyDelete
  7. ///கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் பிரபல பத்திரிக்கைகள் எல்லாம் தங்கள் விற்பனையை அதிகரித்துக்கொள்கின்றன கருத்துக்கணிப்புகள் நிஜமாவதில்லை ஆனால் மக்கள் கணிப்பு நிச்சயம் நிஜமாகும் மே 13 வரை காத்திருப்போம் மக்கள் கணிப்புக்கு...////

    நம்மில் எதனை பேருக்கு இது புரிகிறது? :)))))

    ReplyDelete
  8. அருமை திறமையான padaippu

    ReplyDelete
  9. haa haa டைட்டிலும் பதிவும் செம

    ReplyDelete
  10. அடடா, அண்ணன் கும்முன்னு பதிவு போட்டிருக்காரே..//மக்கள் கணிப்பு நிச்சயம் நிஜமாகும் மே 13 வரை காத்திருப்போம் மக்கள் கணிப்புக்கு!// அப்படிச் சொல்லுங்க!

    ReplyDelete
  11. உண்மையில் தேர்தல் கமிஷன் தான் ஹீரோ

    ReplyDelete
  12. கும்மு கும்முன்னு கும்மிட்டீங்க....

    ReplyDelete
  13. இதே “தல” சென்ற முறை லயோலா கருத்துக்கணிப்பை ஏகத்துக்கும் புகழ்ந்தார்... ஏனென்றால், அப்போது அது அவர்களுக்கு சாதகமாக இருந்தது.. இந்த முறை அது பாதகமாக போனவுடன் அதே “தல” மற்றும் கூட்டணியினர் சொல்வது :

    அது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு...

    ஹா...ஹா...ஹா... இப்போ, வர்றவன், போறவன் எல்லாம் கருத்துக்கணிப்பு எடுத்து ஆப்பு வைக்கறாயங்களே....

    ReplyDelete
  14. ( ஒரு வேளை இந்த 10 நாளைக்கு கஷ்டப்பட்டால் போதும் அப்புறம் 5 வருசத்திற்கு இந்த பக்கம் வரவேண்டியதில்லை என்று கஷ்டப்படுகிறார்களோ )////


    சார்ட் டைம் பிசினஸ்!

    ReplyDelete
  15. விஜயகாந்த் குடிகாரன் குடித்து விட்டு பேசுகிறான் என்று கூறும் ஆட்சியாளர்கள் அவர்கள் தான் அந்தக்கடையை நடத்துகின்றனர் என்பதை மறந்து விட்டு பேசுகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மார்க்கை மூடிவோம் தமிழ்நாட்டில் விஜயகாந்த் மட்டுமல்ல யாரும் குடிக்க கடை இருக்காது டாஸ்மார்க்கை இழுத்து மூடுவோம் என்று மார்தட்ட முடியுமா???



    ..... இந்த விழிப்புணர்வு எல்லாம் எல்லோருக்கும் வரணுமே!

    ReplyDelete
  16. இவனுக விக்கற சாராயம் நாறுது அப்பறம் எடுக்கற வாந்தி மட்டும் மணக்குமா..?

    ReplyDelete
  17. நான் இப்போது வெளியூரில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே....

    --

    ReplyDelete
  18. மேட்சுக்கு முன்னாடி திருப்பதி போயிட்டு வந்தாரு ராஜபக்சே, தங்கள் நாடு வெற்றி அடையணும்னு பிரார்த்தனை செஞ்சாதா சொன்னதுதான் மேட்டர்.:))

    ReplyDelete