Thursday, April 14, 2011

அஞ்சறைப்பெட்டி 14.04.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
...............................................................................................

தமிழக மக்கள் இது வரை இல்லாது 76 சதவீத வாக்குகள் அளித்துள்ளனர். மிகவும் மகிழ்ச்சியான செய்தி நேற்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியதில் இருந்து மக்கள் ஆர்வமாக ஓட்டளித்தது சந்தோசமாக இருந்தது. மக்களின் விழிப்புணர்வு நன்றாக தெரிகிறது...

நிறைய புதிய வாக்காளர்கள் ஆர்வமாக ஓட்டளித்தனர். நான் இருக்கும் வார்டில் காலை 11 மணிக்கு வாக்களித்தேன் மாலை எங்கள் வார்டு எத்தனை சதவீதம் என்று கேட்டதும் ஆச்சர்யம் ஆம் 95 சதவீத வாக்குகள் எங்கள் வார்டில் பதிவாகி உள்ளது என்றனர்.  எங்கள் கிராமத்திலேயே 95 சதவீதம் என்றால் தமிழகம் முழுவதும் எவ்வளவு இருக்கும் என்று நண்பர்களுடன் விவாதித்துக்கொண்டு இருக்கும் போது தமிழகம் முழுவதும் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தி காதில் விழுந்தது.


...............................................................................................

தமிழக மக்கள் இவ்வளவு ஆர்வமாக ஓட்டளிக்க மிக முக்கிய காரணம் தேர்தல் கமிஷன் என்றால் அது மிகையாகது. தமிழகம் முழுவதும் தேர்தல் நடப்பதற்கான சுவடே இல்லை தலைவர்களின் பிரச்சாரமும், செய்ததித்தாள், தொலைக்காட்சி விளம்பரம் தான் அதிக அளிவில் இருந்தது. இப்படி அமைதியா இருந்தால் யார் ஓட்டளிக்க வருவார்கள் என்று பார்த்தால் 76 சதவீத மக்கள் ஓட்டளித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கிளியை ஏற்படுத்தி உள்ளனர்.

தேர்தலை அற்புதமாக நடத்தி அதிக மக்களை வாக்களிக்க வைத்த தேர்தல் கமிஷனர் பிரவீன் குமாருக்கு ஓர் சல்யூட்...


........................................................................................................

இது வரை வந்த கருத்து கணிப்புகள் எல்லாம் ஓரளவு சரியாக இருந்தன இது அனைத்து தேர்தலிலும் அறிந்தது ஆனால் இத்தேர்தலில் அதிக வாக்குகள் விழுந்துள்ளது கருத்து கணிப்புகள் பொய்யாகி ஏதோ ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்போகிறது என்பது என் கணிப்பு... காத்திருப்போம் இன்னும் 30 நாட்கள்...

........................................................................................................

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மசினகுடியில் நேற்று நடந்த தேர்தலின்போது இப்பகுதியில் 3,605 பேர் ஓட்டளித்தனர். இதில், 690 பேர், 49(ஓ) விதிப்படி, "யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை' என்று, பதிவு செய்தனர். ஊட்டி தொகுதிக்குட்பட்ட பொக்காபுரம் பகுதியில் மொத்தம் 681 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று தேர்தலின்போது, 543 ஓட்டுக்கள் பதிவாகின. இதில், 385 பேர், 49(ஓ) விதிப்படி, தங்களது கருத்தை பதிவு செய்தனர்.

49 ஓ பற்றி அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் இன்னும் அதிக ஓட்டுக்கள் 49 ஓ விற்கு விழம் வாய்ப்பு அதிகம் உள்ளது. இது வரை நடந்த தேர்தலில் அதிக அளவில் 49 ஓ விற்கு மக்கள் நீலகிரியில் தான் வாக்களித்துள்ளனர்...

அவர்களின் தைரியமான இம்முடிவிற்கு வாழ்த்துக்கள்...


........................................................................................................

உயிர்காக்கும் ஹெல் மட்டை கண்டிப்பாக அணிய வேண்டும் என்று தமிழ்நாடு உள்பட பெரும்பாலான மாநிலங்களில் சட்டமே உள்ளது. ஆனால் நிறைய பேர் ஹெல்மட் அணிவது இல்லை. போலீசாரும் அதை கண்டு கொள்வது இல்லை. 


உத்தரபிரதேச மாநிலம் பரூக்சாபாத் மாவட்டத்தில் அனைவரையும் ஹெல்மட் அணிய வைக்க அந்த மாவட்ட நிர்வாகம் புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. ஹெல்மட் அணியாமல் இருக்கர வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு பெட்ரோல் கொடுக்கப்படமாட்டாது என்று உத்தரவிடப்பட்டுளளது.

இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்தும்படி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சமீப காலமாக பரூக் காயாத் மாவட்டம் முழுவதும் ஹெல்மட் இல்லாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் கொடுக்க மறுக்கிறார்கள்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் இந்த ஒத்துழைப்பால் இந்த புதிய திட்டத்துக்கு வெற்றி கிடைக்க தொடங்கி உள்ளது. பரூக் காயாத் மாவட்டம் முழுவதும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணியும் பழக்கத்துக்கு மாறி உள்ளனர். 

இதை தமிழகத்திலும் அமுல் படுத்தினால் மிக நன்றாக இருக்கும்...
நாட்டு நடப்பு
மக்கள் அனைவரும் ஓட்டுப்போட்டு விட்டு தலைவர்கள் நாங்க தான் வெற்றி பெருவோம் என்று மாறி மாறி பேட்டி அளித்துக்கொண்டு இருக்கின்றனர்... என்ன செய்வது தமிழக மக்கள் இன்னும் ஒரு மாதத்திற்கு இது தான் தலைவிதி கேட்டும், படித்தும் தான் ஆகவேண்டும்...
தகவல்

தற்போது இதய நோய் சர்வ சாதாரணமாகி விட்டது. அந்த நோய் தாக்குமா? என்பதை குழந்தை பருவத்திலேயே கண்டு பிடிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி பெரிய மணிக்கட்டு இருக்கும் குழந்தைகளை அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் இருதய நோய்கள் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என கண்டறிந்துள்ளனர்.

இவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் இருதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.


அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் கோமு என்ற தலைப்பில் கோமதி கோமு என்பவர் எழுதி வருகிறார்.  இவரின் மும்பை டு கோவா என்ற கட்டுரையும் மெஹந்தி பார்ட்டியும் படிக்கத் தூண்டுகிறது...
http://gomathykomu.blogspot.com/

தத்துவம்
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி
அழகான பசி
ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்....

15 comments:

  1. // எங்கள் கிராமத்திலேயே 95 சதவீதம் என்றால் தமிழகம் முழுவதும் எவ்வளவு இருக்கும்//


    ஜனநாயகத்தின் மீது இன்னும் நம்பிக்கையை மக்கள் வைத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அது போக , இந்த முறை வாழ்வா சாவா என்ற நிலையில் தாப் இரண்டு கூட்டணிகளும் இருப்பதால், வாக்களிப்பதில் அதிகம் ஆர்வம் இருந்தது என்றும் சொல்லலாம்..

    ReplyDelete
  2. இந்த முறை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பாராட்டிற்குரியதாக இருந்தது.

    ReplyDelete
  3. அசத்தல் + வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. அருமையா இருக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நானும் 49ஓ போடலாம் என்று இருந்தேன்..
    ஆனால் எமகாதகர்கள் (ஏஜெண்டுகள்) அங்கேயே இருந்தனர்.
    அதனால் கொஞ்சம் சகதி கொறஞ்ச குட்டைக்கு ஓட்டு போட்டு விட்டேன்.

    ReplyDelete
  7. //தலைவர்கள் நாங்க தான் வெற்றி பெறு
    வோம் என்று மாறி மாறி பேட்டி அளித்துக்கொண்டு இருக்கின்றனர்..//



    முடிவு வரும் வரை, இடையில் இருக்கும் ஒரு
    மாதம் சும்மா இருப்பார்களா?

    ReplyDelete
  8. neenga anuppin news ellam romba use full a irunthuchu.romba thanks

    ReplyDelete
  9. தோல்வியின் அடையாளம் தயக்கம்!
    வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
    துணிந்தவர் தோற்றதில்லை!!
    தயங்கியவர் வென்றதில்லை!!


    ...good one.

    ReplyDelete
  10. தத்துவம் உண்மையானது மற்றும் கலக்கல் !!!

    ReplyDelete
  11. வாக்குப்பதிவு அதிகமாக இருந்தாலே அது ஆளுங்கட்சிக்கு எதிராகவே முடியும்

    ReplyDelete