உள்ளுரில் இருந்து உலகம் வரை........
வெய்யிலின் தாக்கம் இந்த முறை கொஞ்சம் அதிகமகவே உள்ளது. வெய்யில் குறைவாக அடித்தாலும் வெப்பம் போட்டுத்தாக்குகின்றது. மின்சாரம் எப்ப இருக்கும் என்று சொல்லவே முடியாது. இன்று கிராமப் புறங்களில் எப்ப மின்சாரம் இருக்கும், இருக்காது என்று யாராலும் சரியாக சொல்ல இயலாது குறைந்த பட்சம் 4 மணி நேரம் இருப்பதில்லை. என்ன அப்ப அப்ப மழை பெய்து மக்களின் மனதை குளிர்விக்கிறது.
..............................
சமீபத்தில் சென்னை சென்று திரும்பி வரும் போது ஏசி சிலிப்பர் பேருந்தில் கோவை வந்தேன் எனக்கு கடைசியாக மேலே உள்ள 32 வது சீட். பேருந்து போட்ட ஆட்டத்தால் தூங்காமல் உட்கார்ந்திருந்தேன் அப்பறம் தான் தெரிந்தது சிலிப்பர் கோச் கில்மா கோச்சாக இருந்தது இரண்டு கப்புல்கள் இரண்டு சிங்கிள் பெட், ஒரு டபுள் பெட் எடுத்திருந்தனர் அவர்கள் ஆட்டம் பெரிய ஆட்டம். இதை துணை ஓட்டுநரிடம் என்னய்ய இப்படி எல்லாம் நடக்குது என்றால் இது பரவாயில்ல இதுக்கு மேல சொன்ன அது அதைவிட கொடுமை என்கிறார். (பல்லு இருக்கறவன் பக்கோட சாப்பிடுகிறான்)
..............................
தேர்தல் முடிந்தாலும் முடிந்தது தினமும் அரசியல் கட்சிகள் அறிக்கை போர் நடத்திக்கொண்டுள்ளனர். ஒரு பத்திரிக்கை யார் யார் மந்திரி யாகப்போகிறார்கள் என்று அவர்கள் சார்ந்துள்ள பத்திரிக்கையில் கட்டுரையாக எழுதி தள்ளுகின்றனர். நிச்சயம் இம்முறை தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
..............................
ஓட்டு எண்ணிக்கையில் இந்த தடவை புதிய முறை கடைபிடிக்கப்பட உள்ளது. கடந்த தேர்தல்களில் ஓட்டு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றாக முடிய, முடிய அதன் விபரம் வெளியிடப்பட்டு விடும். இதனால் உடனடியாக முன்னணி நிலவரம் தெரிந்து விடும்.
ஆனால் இந்த தடவை ஒவ்வொரு ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்கப்படும். அவர் ஒப்புதல் கொடுத்த பிறகே, ஓட்டு விபரத்தை வெளியிட முடியும். ஒவ்வொரு தொகுதி ஓட்டுக்களும் தலா 14 மேஜை மீது வைத்து எண்ணப்படும்.
ஒவ்வொரு பகுதி மின்னணு எந்திரங்களை 14 மேஜைகளிலும் வைத்து எண்ணுவார்கள். 14 மேஜை ஓட்டுக்களும் எண்ணி முடித்த பிறகே அந்த சுற்று ஓட்டு விபரத்தை பார்வையாளர் வெளியிடுவார். இந்த புதிய நடைமுறையால் ஓட்டு முன்னணி விபரம் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படலாம்.
தேர்தல் பார்வையாளர் ஒப்புதல் கொடுக்காமல் அடுத்த சுற்று ஓட்டுக்களை எண்ண முடியாது என்பதால் மதியத்துக்கு பிறகே தெளிவான நிலை தெரியவரும் என்று கூறப்படுகிறது.
எப்படியோ நம்மூரு அரசியல்வாதிகளுக்கு BP ஏருவது நிச்சயம் ...
........................................................................................................
ஐபில் கிரிக்கெட் என்னும் பணம் காய்ச்சும் மரம் இம்முறையும் பணத்தை வாரி இறைத்திருக்கிறது. திறமை உள்ள அணி வெற்றி பெருமா?

சீன வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள அக்ரோ உயிரி தொழில்நுட்ப பரிசோதனை கூடத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் லீ நிங் மனிதனை போன்று மரபணு செய்யப்பட்ட பசுவை உருவாக்கியுள்ளார்.
அந்த பசுவின் பால் தாய்ப்பால் போன்றது. மற்ற பசுகளின் பாலைவிட முற்றிலும் மாறுபட்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசுவின் பால் தாய்ப்பாலுக்கு நிகரான சத்துக்களை கொண்டது.
அதில் தாய்ப்பாலில் இருப்பது போன்று சக்திமிக்க லேக்டால்புமின், லேக்டோ பெரின், லைசோசும் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் நிறைந்தது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசுக்களில் இருந்து பெறப்படும் தாய்ப்பால் இன்னும் 2 ஆண்டுகளில் சீன கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.
அதற்கான சோதனை சீனாவில் உள்ள நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்றது. அதில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசுவின் பால் தாய்ப்பால் போன்று மிகவும் சத்தானது என நிரூபனமாகியுள்ளது.
எனவே சீன அரசின் வேளாண் அமைச்சகம் அனுமதி அளித்த பிறகு இப்பால் விற்பனைக்கு வரும். இத்தக வலை ஆராய்ச்சியாளர் லீ நிங் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்பு
தேர்தல் முடிந்து ரிசல்டை எந்த அளவிற்கு மக்கள் எதிர்பார்கிறார்களோ அதை விட கோடை விடுமுறையில் சுற்றுலா செல்லத்தான் அதிக அளவில் குழந்தை குட்டிகளோடு எதிர்பார்க்கின்றனர் குழந்தைகளின் விடுமுறை நாளை.
தகவல்
உலகிலேயே சீனாவில் தான் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தற்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அங்கு 60 கோடி பேரிடம் செல்போன் இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜனவரியில் இருந்து மார்ச் வரை உள்ள 3 மாதத்தில் மட்டும் 1 கோடியே 68 லட்சம் பேர் புதிதாக செல்போன் இணைப்பு வைத்து உள்ளனர்.
சீனாவில் ஏற்கனவே “3-ஜி” தொழில்நுட்பம் செல்போன் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் ரசித்த பாடல் என்ற தலைப்பில் வெங்கட் நாகராஜ் என்பவர் எழுதி வருகிறார். அனைத்து பாடல்களும் அவர் ரசித்த பாடல் மமட்டுமல்ல நாமும் ஒவ்வொரு முறையும் மிக ரசிக்கும் பாடலாக இருக்கின்றது...
http://rasithapaadal.blogspot.com/
http://rasithapaadal.blogspot.com/
தத்துவம்
நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
ஊசி முனையில் தவம் செய்தாலும் உன்னதுதான் கிட்டும்.
பல்சுவை பதிவு....
ReplyDeleteசினிமா செய்தி இல்லையோ....
அனுபவம், தகவல், தொகுப்பு என
ReplyDeleteஅனைத்தும் அருமை....
வாழ்த்துக்கள்..
*ஊசி முனையில் தவம் செய்தாலும் உன்னதுதான் கிட்டும்.*
ReplyDeleteஉண்மைபோலத்தான் இருக்கு !
உலகிலேயே சீனாவில் தான் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ///
ReplyDeleteஅங்குதான் ஐநூறு ஆயிரத்திற்கெல்லாம் செல்போன் கிடைக்குமே அதான்
லோகோ மாத்தி இருக்கீங்களே.. என்ன மேட்டரு?
ReplyDelete//சீனாவில் ஏற்கனவே “3-ஜி” தொழில்நுட்பம் செல்போன் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்//
ReplyDeleteஏன் பாஸ் இந்தியால இப்பதான் வந்திருக்கா?
கலவை சாதம் நல்ல ருசி
ReplyDeleteபல்சுவை தொகுப்பு.
ReplyDelete// பாட்டு ரசிகன் } at: April 21, 2011 2:11 AM said...
ReplyDeleteகண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்
http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html///
கையில அம்புட்டா கசாப்பு பண்ணிபுடுவேன்....
நல்ல கலவை!
ReplyDelete