Wednesday, April 27, 2011

அதிகமாக வியர்ப்பது பெண்களுக்கா? ஆண்களுக்கா??

 

கோடை காலம் என்றாலே அனைவரும் அலறுவது வியர்வைத் தொல்லைக்குத்தான் அதுவும் பொது இடங்களில் இளைய தலைமுறையினர் படும் பாடு சொல்லி மாளாது.
வியர்வை என்பது அழுக்கு உடல் நலத்துக்கு கேடு என்று அனைவரும் நினைக்கின்றனர்  ஆனால் உண்மையில் வியர்வை என்பது உடல் நலத்தை பேணு வதற்காகவே. வியர்வை என்ற ஒன்று இல்லையானால் மரணம் நிச்சயம். வியர்வை சுரப்பிகள் மிகமுக்கியமாக சிறுநீரகத்தின் வேலைப்பளுவை குறைக்கின்றது.
 
 

வியர்வையின் வேலை
  • உடட்கழிவுகளை வெளியேற்றல்
  • உடல் வெப்பநிலையை சீராக பேணுதல்
  • தோலை ஈரலிப்பாக பாதுகாப்பாக பேணல்
சுரப்பிகள்
  • 2 - 4 மில்லியன் சுரப்பிகள் உடலில் உள்ளன
  • இவை ஒருநாளைக்கு 12 லீற்றர் வியர்வையை சுரக்க வல்லன
  • வியர்வையில் நீர்,உப்பு,சீனி அடங்கியுள்ளது
உருவாக்கம்
  • உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் பகுதி வியர்வைசுரப்பிகளுக்கு Signals களை அனுப்பி தேவைக்கேற்ப வியர்வைவை சுரக்க வைக்கிறது.
வியர்வை சுரப்பி வகைகள்
  • Eccrine
                   உடல் சூடாக உள்ளபோது வியர்வையை சுரப்பவை
  • Apocrine
                    நாம் Emotion அடையும் போது சுரப்பவை

சூழ்நிலை
  • சூடான காலத்தில்,அதிகவேலை/டென்சன் நாளில் சாதாரண நாளை விட 7 மடங்கு நீரை வியர்வையாக இழக்கின்றோம்.
ஆண் - பெண்
  • பெண்களுக்கு ஆண்களை விட அதிக வியர்வை சுரப்பிகள் இருந்தாலும் ஆண்களுக்கு பெண்களை விட 40 % அதிகமாக வியர்க்கின்றது.
வீரியம்
  • சிறுநீரகங்கள் 24 மணிநேரம் வேலை செய்து வெளியேற்றும் உடற்களிவுகளை, Sauna எனும் இடத்தில் 15 நிமிடங்கள் இருந்தால் உடலிலிருந்து வெளியேறும் 1 லீட்டர் வியர்வை வெளியேற்றிவிடும்.
உறுப்பு
  • பாதங்கள் வியர்வைசுரப்பிகள் செறிவாகவுள்ள உறுப்பு
  • பாதத்தில் 25000 சுரப்பிகள் உள்ளன
வியர்வையை தூண்டும் உணவுகள்
  • வெங்காயம்
  • மிளகாய்
  • பூண்டு
விளையாட்டும், ஒருமணிக்கு வியர்க்கும் வியர்வை
  • 2 .43 லீட்டர்    - உதைபந்தாட்டம்
  • 1 .49 லீட்டர்    - ஓட்டம்
  • 1 .25 லீட்டர்    - சைக்கிளோட்டம்
  • 1 .6 லீட்டர்     - கூடைப்பந்தாட்டம்
  • 0 .8 லீட்டர்      - கரப்பந்தாட்டம்
  • ????                 -  விளையாட்டு
வியர்வை நோய்கள்
  • Hyperhidrosis - அதிக வியர்வை
  • Anhidrosis - குறைந்த வியர்வை
  • Prickly heat - வியர்வை தடைப்படல்
விலங்குகளும் வியர்வையும்
  • குதிரை   - அதிகம் வியர்க்கும் விலங்கு
  • பன்றி      - வியர்வைசுரப்பிகளற்றது.
  • மாடு       - மூக்கில் சுரப்பிகள் உண்டு
  • முயல்   - உதட்டில் சுரப்பிகள் உண்டு
  • நாய்       - பாதத்தில் சுரப்பிகள் உண்டு
  • பூனை   - பாதத்தில் சுரப்பிகள் உண்டு
அனைவரும் அதிகமாக தண்ணீர் குடியுங்கள் நிறைய வியர்வையை வெளியேற்றுங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக பேணுங்கள்...

19 comments:

  1. ஆஹா என்ன ஒரு அருமையான தலைப்பு;-))

    ReplyDelete
  2. // ஆர்.கே.சதீஷ்குமார் said...
    ஆஹா என்ன ஒரு அருமையான தலைப்பு;-))

    ஹி ஹி பெண் என்ற வார்த்தை வந்த போதுமே

    ReplyDelete
  3. நல்ல பதிவு பாஸ்! ஆனா தலைப்புத்தான்... :-)

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள் சார் ........

    ReplyDelete
  5. காலத்துக்கு ஏற்ற பதிவு ..

    ReplyDelete
  6. நல்ல தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் அடங்கிய பதிவு நன்றி நண்பா!

    ReplyDelete
  7. தமிழ்மணம் ஏழாவது ஓட்டு என்னுது ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  8. We can use anti-perspirant to control the over sweating. In market there are good brands available.

    ReplyDelete
  9. நல்ல குறிப்புகள் !

    ReplyDelete
  10. பயனுள்ள தகவல் மிகவும் நன்றி .

    ReplyDelete
  11. என்ன சொல்லலாமுன்னு யோசிச்சுதல எதுவும் தோணல.அதனால நல்ல தகவல்ன்னு சொல்லி அபீட்.

    ReplyDelete
  12. வியர்ப்பது நல்லது !!! வியர்த்தவுடன் குளிப்பது இன்னும் நல்லது !!!

    ReplyDelete
  13. அழகான பெண்களை கண்டால் ஆண்களுக்கு வியர்க்கும்.. தனிமையில் இருக்கும்போது அறிமுகம் இல்லாத ஆண் அருகே வந்தால் பெண்ணுக்கு வியர்க்கும்

    ReplyDelete
  14. நல்ல தகவல்கள் தான்..

    அதுக்காக இப்படியா???

    புள்ளிவிவத்தோடு...

    பிஎச்டி குடுக்கலாம் போங்க..

    ReplyDelete